அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க
அதிகாரம்; சாதக, பாதகம்.
1.
நாட்டில்
உலவும் தேச விரோத சக்திகளை அடியோடு அழிக்கலாம்.
2.
வங்கி
கணக்குகளையும் கொஞ்சம் ஆழமாக ஆராய முடியும்.
3.
வெளிநாடுகளில்
பணம் பதுக்குவதையும் தடுக்கமுடியும்.
4.
நம்முடைய
ரகசியங்களை கூகுள் வைத்திருக்கும்போது, மத்திய அரசாங்கம் வைத்திருப்பதில் தவறு என்ன
இருக்கிறது.
5.
கம்ப்யூட்டர்களை
கண்காணிப்போம் எனக் கூறுவதால் மக்கள் மாற்று வழிகளை சிந்திக்கஆரம்பித்து விட்டால்
அரசுக்குத்தான் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற அச்ச உணர்வு பகிரங்கமான
தகவல் பரிமாற்றத்தை தடுத்துவிடும். ஏற்கெனவே அனைத்து தகவல் பரிமாற்றங்களும்
அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வரும் போது இந்த உத்தரவு
அரைவேக்காட்டுத்தனமானது.
6.
முதலில்
இந்த 10 அமைப்புகளும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படாமல் நடுநிலைமையுடன் செயல்பட
வேண்டும்.
7.
இந்தியா
ஒரு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வி எழுகிறது.
8.
பாஜக
அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு குளறுபடிகளை வைத்துக்கொண்டு
தற்போது பாதுகாப்பு என்ற பெயரில் தனிமனித உரிமை, தனி மனித சுதந்திரத்தில் தலையீடு செய்வது
சரியல்ல.
9.
ஹேக்கர்கள்
போன்ற நவீன திருடர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவே தகவல் தொழில்நுட்ப
சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அரசாங்கமே சட்ட ரீதியாக தகவல்களைத் திருடும்
என்பது எந்த வகையில் நியாயம்.
10. சினிமா, நீதித்துறை, பெண்களின் அந்தரங்கம், பத்திரிகை, தேர்தல், அரசியல்கட்சிகளின்
அனைத்து விஷயங்களையும் எளிதாக கண்காணித்து இடைமறிக்க முடியும் என்பது மீண்டும்
ஆங்கிலேயர்களின் காலத்தைத்தான் காட்டுகிறது.
11. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அரசுக்கு எதிராக
யார் கருத்துப்பதிவு செய்தாலோ அல்லது தகவல்களைச் சேகரித்தாலோ அவர்களை தொந்தரவு
செய்யலாம் என்பது இன்னும்மொரு ஜனநாயகப் படுகொலையாகத்தான் பார்க்க முடியும்.
டிஜிட்டல்மயம் எனக்கூறி மக்களை ஏமாற்றியது இதற்காகத்தானா என்ற சந்தேகமும்
எழுகிறது.
No comments:
Post a Comment