13% குடிகாரர்களை கொண்ட தமிழகம்
தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களில் 75% பேர் ஆண்கள்; 25% பேர் பெண்கள்.
5,426 மதுக்கடைகள் தமிழகத்தில் இயங்குகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக
125 கோடி ரூபாய்க்குத் தமிழகத்தில் மது விற்கிறது.
2020-21-ல் 33,811 கோடி,
2021-22-ல் 36,013 கோடி,
2022-23-ல் 45,000 கோடி
என ஆண்டுக்காண்டு மது வருவாய் அதிகரித்துக்கொண்டே போகிறது.
6,715 சூப்பர்வைசர்கள்,
15,000 விற்பனையாளர்கள்,
3,090 துணை விற்பனையாளர்கள்,
நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மது விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.
மேலை நாடுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இன்னும் அபாயமாக, 16-25 வயதுள்ள இளைஞர்கள் மது அருந்துவது கணிசமாக உயர்ந்துவருகிறது.
2021-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில்
55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 10 சதவிகித்துக்கும் மேற்பட்ட விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்டவை. குடிகாரர்கள் உயிரிழப்பது, காயம்படுவது தாண்டி சாலையில் செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில்
2020-ல் 9,169 பேரும்
2021-ம் ஆண்டில் 10,500 பேரும்
போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் தெரிவிக்கிறது,
தேசிய குற்ற ஆவணக் காப்பகம். இந்தப் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது, தமிழகம்.
2021-ல் தமிழகத்தில் போதைப்பழக்கத்தால்
1,319 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.
குடி, போதைக்கு அடிமையானவர்கள் மிகுந்த மனச்சோர்வோடு இருப்பார்கள். குடித்தால் மேலும் மனச்சோர்வு அதிகமாகும். அதனால் மற்றவர்களைவிட அதிகமாக இவர்கள் தற்கொலை முடிவை எடுப்பார்கள் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
2019-ல் AIIMS செய்த ஆய்வின்படி 18-24 வயதுக்குட்பட்ட சிறைக்குச் செல்லும்
74% பேர் மது அல்லது ஏதோவொரு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு கல்லீரல் சீக்கிரமே பாதிக்கப்படும். அடிமையாகும் வாய்ப்பும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம்.
முன்பெல்லாம் 3-4 மாதங்களுக்கு ஓரிரு பெண்கள் சிகிச்சைக்கு வருவார்கள். இப்போது எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் டாஸ்மாக்
சமீபத்தில் இந்த விதியைத் தளர்த்தி, ‘குவார்ட்டர், பீர், ஆஃப் எல்லாம் கொள்முதல் செய்யலாம்' என்று அனுமதித்துவிட்டார்கள். அதனால், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மதுக்கடைகளைப் போல இயங்க ஆரம்பித்துவிட்டன. சுமார்
1,000 மனமகிழ் மன்றங்களுக்குத் தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
மது எல்லா தீமைக்கும் ஆணிவேர் முஹம்மது (ஸல்), முஹம்மது (ஸல்) வழிநடப்போம், மதுவில்லா வாழ்வை வாழ்வோம்.
No comments:
Post a Comment