நாசகார ஆர் எஸ் எஸ் ன் அரசியல் பிரிவு பிஜேபி:
ஆர் எஸ் எஸ் என்ற நாசகார அமைப்பின் அரசியல் பிரிவுதான் பிஜேபி,
கலவரம் செய் ஆட்சியை பிடி
கலவரம் செய் ஆட்சியை தக்கவைத்து கொள்
என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம் (அமித்ஷா பார்முலா).
இருந்தும் தென் மாநிலங்களில் இவர்களின் கொடூர அரசியல் அந்த அளவுக்கு எடுபடவில்லை, ஆனால் படிப்பிலும், கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய வடமாநிலங்களில் ஆட்சியை பிடிக்க அமித்ஷா பார்முலா பயன்பட்டது. இந்த கட்டுரை தொடரில் சங்கபரிவார பாசிச கும்பல் எப்படி கலவரம் செய்து ஆட்சியை பிடித்தது என்று பார்ப்போம்.
பிஜேபி யின் அரசியல் வரலாறு:
1954 ல் பாரதிய ஜன சங்கம் என்று ஆரம்பித்த கட்சி, 1980 ல் பிஜேபி யாக உருவெடுத்து 1984 ல் நடந்த பொதுத்தேர்தலில் வெறும் 2 இடங்களை கைப்பற்றியது, ஆனால் வளர்ச்சி என்ற பொய் பிரச்சாரத்தின் மூலம் 2014 ல் 282 இடங்களை அறுதி பெரும்பான்மையோடு பெற்றது.
இவர்கள் ஆட்சியை பிடித்தால் ஒன்று கலவரம் நடக்கும் அல்லது பிடித்தபின் கலவரம் நடக்கும் என்று நாளொரு கலவரம் பொழுதொரு மக்கள் விரோத அரசாக இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கின்றனர்.
இவர்களின் ஆட்சியில் நடந்த கலவரங்களை மாநிலவாரியாக பார்ப்போம். இந்த கட்டுரையில் 1969 ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
அமித் ஷா ஜீ நியூஸுக்கு அளித்த பேட்டி:
நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறோம்? 27 ஆண்டுகளாக குஜராத்தை ஆள்கிறோம். ம.பி., சட்டிஸ்கரில் 15 ஆண்டுகளாக ஆள்கிறோம். எங்களை மதவாத கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மதக்கலவரம் கூட நடக்கவில்லை. மத்திய பிரதேசத்திலும் சரி, சட்டிஸ்கரிலும் சரி ஒரு மதக்கலவரம் கூட நடக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் எங்கள் ஆட்சி அமைந்தவுடனே மதக்கலவரங்கள் நின்று விட்டன.” (அமித் ஷா, நவ 23, 2018 அன்று ஜீ நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறியது)
ஆனால் உண்மை என்பது வேறு, இவர்களின் மூலதனத்தின் முக்கிய ஒன்று பொய், பொய், பொய்யை தவிர வேறில்லை. அதிலும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் பொய் சொல்லக்கூடியவர் தான் இந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மட்டுமல்ல, தலைவர்களுமே.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசுக் குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுக்காத நாள் இல்லை. ஏதேனும் ஒரு முகாந்திரத்தை வைத்து சிறுபான்மை மக்கள் மீது அன்றாடம் இந்து வெறியர்கள் தாக்குதல் நடத்தும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்த போதிலும் இப்படி ஒரு பொய்யைத் துணிந்து சொல்வதற்கு அமித் ஷா சிறிதும் தயங்கவில்லை. அதனை அப்படியே ஒளிபரப்புவதற்கும் ஜீ தொலைக்காட்சி தயங்கவில்லை.
“Factchecker ஃபாக்ட் செக்கர்” என்ற இணையதளம் அமித் ஷாவின் இந்தப் பொய்யை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.
1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568. 2014 -16 காலத்தில் மட்டும் மதவெறித் தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ (NCRB) வெளியிட்டிருக்கும் கணக்கு
மோடி ஆட்சிக்காலத்தில் 2002-ல் நடைபெற்ற படுகொலையின் போது அரசு கணக்கின்படியே 1044 பேர் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2500 பேர் படுகாயம் அடைந்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த கணக்கு. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம் என்பதே பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடு.
குஜராத் கலவரம் - 19 -24 செப்டம்பர் 1969:
செப்டம்பர் 18 , 1969 ல் அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் உள்ள புஹாரி சாஹிப் என்ற தர்காவில் கடைசிநாள் உர்ஸ் நடந்துகொண்டிருந்த போது ஜெகன்நாத் மந்திரின் பசுக்களை சாதுக்கள் உர்ஸ் நடக்கும் தெருவின் வழியாக ஓட்டிக்கொண்டு வந்தனர் (எப்படி தலித்துகள் பகுதிக்கு செல்லாத விநாயகர், முஸ்லிம்கள் பகுதிக்கு மட்டும் செல்வாரோ அதுபோல்), அப்பொழுது அந்த பசுக்கள் முட்டியதால் பல பெண்கள் காயம் அடைந்தனர், பல கடைகள் சேதமடைந்தன. அதனால் இரண்டு தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் மூண்டது, பிறகு பலர் கொல்லப்பட்டனர், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
- 19 -24 செப்டம்பர் வரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 514 .
- சேதப்படுத்தப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை 6 ,123.
- இந்த கலவரத்தை முன்னின்று நடத்தியது ஆர் எஸ் எஸ், ஹிந்து மகா சபை மற்றும் ஜனசங்கம் என்று காங்கிரஸ் அமைத்த நீதிபதி ரெட்டி கமிசன் சொல்கிறது.
இந்துத்துவ ஆட்களால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லீம், உங்களை பழிக்கு பழி வாங்குவேன் என்று சூளுரைத்திட்டார், அதை தங்கி கொள்ள முடியாத ஒரு சங்கி அந்த முஸ்லிமை ஜெய் ஜெகன்நாத் என்று சொல்ல வற்புறுத்தினார், ஆனால் அந்த முஸ்லிமோ ஜெய் ஜெகன்நாத் சொல்வதை விட இறப்பதே மேல் என்றார், கூட்டம் கூடியது, அந்த முஸ்லீம் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டார், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, முனிசிபல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட முதல் நாளில் 3 மணி நேரத்தில் 30 பேர் கொல்லப்பட்டார்கள்.
கீழே உள்ள லிங்கின் படி 15 ,000 லிருந்து 20 ,000 பேர் கொல்லப்பட்டனர்.
http://manvenrakesh.blogspot.com/2011/09/who-would-apologise-for-1969-and-1985.html
பின்விளைவுகள்:
1971 ல் நீதிபதி ஜகன்மோகன் ரெட்டியின் அறிக்கை குஜராத் உள்துறையால் வெளியிடப்பட்டது, அந்த அறிக்கையின் சாராம்சம்.
- போலீஸ் நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள ஆறு இடங்களின் வாழும் முஸ்லிம்களை கலவரக்காரர்களிடம் இருந்து போலீஸ் பாதுகாக்கவில்லை, போதுமான போலீஸ் இல்லாத காரணம் என்று காவல்துறை அறிவித்தது.
- 37 பள்ளிகள் 50 தர்காக்கள் 6 மையவாடியில் மற்றும் 3 கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
- 3 நாட்கள் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறை இந்துத்துவாவிற்கு உதவி செய்தது என்று பத்திரிக்கையாளர் அஜித் பட்டாச்சாரியார் குற்றம் சாட்டினார். மேலும் இது காவல்துறையின் மெத்தனப்போக்கு அல்ல மாறாக இது அவர்களின் கொள்கை என்றும் சாடினார்.
- பெயர் சொல்லவிரும்பத காங்கிரஸ்காரரின் வாக்குப்படி, அடுத்த தேர்தலில் ஜனசங்கம் பதவிக்கு வந்த எங்களை பழிவாங்கிவிடுவார்கள் என்று காவல்துறையினர் பயந்தார்.
- எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் Achyut Yagnik என்பவரின் கூற்றுப்படி 1969 ல் நடந்த இந்த கலவரம் தான் ஹிந்து முஸ்லீம் பிரிவினைக்கும், சகிப்பு தன்மை குறைவதற்கும் முக்கிய புள்ளியாக இருந்தது, மேலும் 1992 -93 மற்றும் 2002 கலவரத்திற்க்கான விதையாகவும் இருந்தது.
- 1969 கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்கள் தனியாக வாழத்தொடங்கியதும் ஆரம்பித்தது.
- இந்துத்வ சக்திகள் வலிமைப்பெற செய்யப்பட கலவரம் தான் இது என்று அன்றைய முதலமைச்சர் ஹிதேந்திர தேசாய் சொன்னது இங்கே குறிப்பிடத்தக்கது.
- ஜக்மோகன் அறிக்கைப்படி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100, இருந்து துரதிஷ்டமாக அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இந்த கலவரத்திற்கு காரணமான ஆர் எஸ் எஸ், ஹிந்து மகா சபை மற்றும் ஜனசங்கம் அமைப்பினரை தண்டிக்கவில்லை.
ஆதாரங்கள்
http://www.gujaratriots.com/index.php/2008/09/gujarats-bloody-history-of-violence/
https://en.wikipedia.org/wiki/1969_Gujarat_riots
https://www.outlookindia.com/website/story/history-of-communal-violence-in-gujarat/217988
https://www.outlookindia.com/website/story/hindutva-the-growth-of-violent-hindu-nationalism/217969
https://factchecker.in/fewer-riots-minorities-safer-under-modi-regime-kiren-rijiju-data-right-on-riots-but-claim-on-safer-minorities-without-foundation/
https://www.vinavu.com/2019/01/11/amith-shah-lied-about-communal-violence/