Friday, January 18, 2019

9. தலாக் தலாக் தலாக்


இறைவனுக்கு பிடிக்காத பல செயல்களில் முக்கியமானது தலாக் என்ற மணமுறிவு. பல்வேறு கட்டங்களில் கணவன் மனைவிக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை பேசி சரி செய்து வாழவேண்டியது கணவன் மனைவி இருவருக்கும் உண்டான கடமை.

கணவனை பார்த்து இஸ்லாம் சொல்கிறது, நீ உன் மனைவியிடம் அதிருப்தியடைய சில விஷயங்கள் இருந்தால் சந்தோசப்பட சில விஷயங்களை இருக்கும், அந்த சந்தோசமான விஷயத்தை வைத்து அதிருப்தியான விஷயத்தை விட்டுவிடு என்று.

இனிமேல் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலை வரும் போது பிரிந்துவிடவே இஸ்லாம் சொல்கிறது, அதற்கும் வழி முறைகளை வகுத்துள்ளது. மற்ற சமுதாயம் போல் அல்லாமல் இஸ்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் விவாகரத்து செய்யும் உரிமையை கொடுத்துள்ளது.

கணவன் விவாகரத்து செய்தால் அதற்க்கு தலாக் என்றும், அதே மனைவி செய்தால் குலா என்றும் சொல்லப்படுகிறது.

தலாக்

2:228 தலாக் விடப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை (தம் கணவருக்காக) காத்திருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் தங்கள் கர்பப்பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை (குழந்தை உருவாகி இருந்தால்) மறைப்பது ஆகுமானதல்ல. அவர்களின் கணவர்கள் (இத்தாவிலிருக்கும் தம் மனைவியோடு சேர்ந்துக் கொள்ள) நல்லிணக்கத்தை நாடினால் (அந்த கால கெடுவுக்குள்) அழைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.

2:229 (இத்தா கால கெடுவுக்குள் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ள) இத்தகைய தலாக் இரண்டுத் தடவைகள்தான். இந்த வாய்ப்புகளில் அவளுடன் அழகிய முறையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகிய முறையில் அவளை விட்டு விடலாம்.

2:230 பின்னர்(மூன்றாவதாகவும்)தன் மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் திருமணம் முடிக்காத வரை முதல் கணவனுக்கு அவள் அனுமதிக்கப் பட்டவளாக ஆகமாட்டாள். (இப்போது இரண்டாம்) கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் (அதன் பிறகு முதல் கணவனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால்) அவ்விருவரும் இறைவனின் வரம்பை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (திருமணத்தின் மூலம்) மீண்டும் இணைந்துக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிவுள்ள சமூகத்தாருக்கு இறைவன் இவற்றை தெளிவு படுத்துகிறான்.


65:4 ”கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்.


மூன்று தடவை தலாக் சொல்லலாம், ஒரு தடவையில் இருந்து இன்னொரு தடவைக்கு மூன்று மாதம் கெடு உள்ளது, மொத்தம் மூன்று தாக்கும் சேர்த்து 9  மாதம், இதில் 9  மாதத்திற்கு  முன் ஒருவன் மீட்டுக்கொண்டு மனைவியுடன் சேரலாம். 9 மாதம் முடிந்துவிட்டால் அதவாது மூணாவது தடவை தலாக் சொல்லி 3 மாதம் நிறைவடைந்துவிட்டால் பிரிந்துதான் ஆகவேண்டும்.

முத்தலாக்

இன்று இஸ்லாத்தின் எதிரிகள் இந்த வார்த்தையை பயன்படுத்து இஸ்லாத்தை அழித்துவிடலாம் என்று (பூனை கண்ணைமூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் கதையாக) நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மூன்று தவணை வழக்கப்பட்டதே முறித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், அதை அறியாத மூடர்கள் இஸ்லாமிய பெண்ணுக்கு நன்மை செய்கிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

தலாக் சொல்லும்முன்

ஒரு கணவன் அவன் மனைவியை தலாக் சொல்லும்முன் அறிவுரை வழங்கவேண்டும், பிறகு அவர்கள் வீட்டாரை வைத்து பேசிப்பார்க்கவேண்டும், படுக்கையில் இருந்து விலக்கவேண்டும் போன்ற செயல்களுக்கு பிறகே தலாக் என்று சொல்லவேண்டும்.

மாறாக சப்பாத்தி கருகுவதுக்கு எல்லாம் தலாக் சொல்வது கூடாது, உண்மையில் கணவன் தான் மனைவிக்கு உணவு தரவேண்டும், மனைவி சமைக்கமுடியாது என்றால் கணவன் அவளை தண்டிக்கமுடியாது, இன்று பல மனைவிகள் புண்ணியத்துக்காக சமைத்து கொடுக்கிறார்கள். ஓசிக்கு கிடைத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்க்கக்கூடாது.

மூன்று தடவை சொன்னாலும் ஒரே தடவை சொன்னது போல் தான்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர்(ரலி) அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (முஸ்லிம், அஹ்மத்)

ருகானா என்பவர் தம்மனைவியை ஒரு இடத்தில் வைத்து மூன்று தலாக் சொல்லி விட்டார் பிறகு வருந்தினார் இதை அறிந்த நபி-ஸல்- அவர்கள் உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். அதற்கு அவர் நான் என் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டேனே என்றார். அதை நான் அறிவேன் நீ உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்)

ஒரு மனிதர் தம் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்ன செய்தியைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் பெரும் கோபம் அடைந்து, நான் உயிரோடு உங்கள் மத்தியில் இருக்கும் போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா.. என்றுக் கேட்டார்கள்.(நஸயீ).


எதெற்க்கெல்லாம் தலாக் கூடாது

சமீபத்தில் பத்திரிகை செய்திகளில் படித்ததுபோல் (இன்றைய பத்திரிகை செய்திகள் எப்படிப்பட்டவை என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்) தோசை கருகிவிட்டது, சப்பாத்தி கருகிவிட்டது, சமமாக நடந்து வந்ததால், வரதட்சணை வேண்டி என்று இஸ்லாம் அனுமதிக்காத காரணங்களுக்காக எல்லாம் தலாக் கூடாது.

குலா

கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது,

கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று நடுவர்களும் அஞ்சும் போது,

மனைவியானவர் கணவனிடமிருந்து பெற்றதை திரும்பக் கணவனிடமே கொடுக்கச் செய்து பிரித்து விடுவதில் தவறில்லை

என்பதை குர்ஆன் 2:229 மூலம் அறிய முடிகிறது.

இப்படிக் கணவனிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கணவனிடமே கொடுத்துத் திருமண ஒப்பந்தத்தை தானாகவே முறித்துக் கொள்ள முன் வருவது தான் குலா என்பதாகும்.

அல்குர்உ, குல்உ, குலா என்று கூறப்படும் சொல்லுக்கு அகராதியில் கழற்றிவிடுதல் என்பது பொருளாகும். மனைவியிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்து விடுவதற்குக் கணவன் சம்மதம் தெரிவிப்பதையே வழக்கத்தில் “”குலா” என்பர்.

கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திரும்பக் கொடுத்தோ அல்லது மஹராக கொடுக்க ஒப்புக் கொண்டதை விட்டுக் கொடுத்தோ, மேலும் புதிதாக ஒரு தொகையையோ, பொருளையோ கொடுக்க சம்மதித்து பிரிவினையைக் கோருவதே “”குலா” என்பதாகும்.


ஆக மேற்கண்டவற்றில் இருந்து இஸ்லாம் விவாகரத்துக்கு அறிவான அழகான சட்டங்களையே வகுத்துள்ளது. இன்று நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகள் பல ஆண்டுகள் காரணம் இல்லாமல் இழுக்கும் நிலையும், வேறு வழி இல்லாமல் பெண்ணை தவறானவளாக சித்தரித்து விவாகரத்து பெறவேண்டிய கொடூரமும் நடந்தேறுகிறது.

அதைவிட அறிவுக்கு முரணான சட்டம்  ஜீவனாம்சம், பிடிக்காத மனைவி தன்னைவிட்டு பிரிந்தபிறகும் அவளுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், சிலபெண்கள் ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு வேறு திருமணம் செய்துகொள்ளாமல் மற்ற ஆண்களுடன் ஜாலியாக இருப்பததற்கு இந்த சட்டம் பயன்படுகிறது. ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை ஜீவனாம்சம் இல்லை. இலை வயது பெண் என்றால் வேறுமணம் முடிக்கவேண்டும், வயது முதிந்தவர் என்றால் அவரின் பிள்ளைகள் பார்த்துக்கொள்ளவேண்டும், பிள்ளைகள் இல்லையென்றால் அவர் சார்ந்த பள்ளியின் பைத்துல்மால் என்ற பொதுப்பணத்தில் இருந்து அவரை பாதுகாக்கவேண்டும்.

தன் மனைவியை தலாக்கும் விடாமல் சேர்ந்தும் வாழாமல் இருப்பவர்கள் எதற்கு அடுத்த பெண்களைப்பற்றி கவலைப்படுகிறார்கள்?


https://www.islamkalvi.com/?p=403

http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6090:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...