Saturday, February 12, 2022

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை - இதுவரை நடந்தது என்ன? - 12/02/2022

பாசிச பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த 7 வருடங்களாக சிறுபான்மையினரை ஒடுக்குவதில் மும்முரமாக செயல்படுகிறது, இந்து ராஷ்டிரம் அமைக்க முதல் முட்டுக்கட்டை முஸ்லிம்கள் என்பதால் முஸ்லிம்களை திட்டமிட்டு அழிக்க அல்லது அவர்களின் கலாச்சாரத்தை அழிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அஜெண்டாவாக செயல்படுத்திகொண்டுவருகிறது. அந்த அஜெண்டாக்களில் ஒன்றுதான் முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பது அல்லது தனி அடையாளத்தை பறிப்பது. கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை. 

(வட மாநிலங்களில் அடித்துகொல்லுதல், தென் மாநிலங்களில் கலாச்சாரத்தை அழித்தல் )

உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி இந்த சர்ச்சை ஆரம்பித்தது. நம் ஊரில் இருக்கும் பிளஸ் 1, பிளஸ் ஆகிய மேல்நிலை வகுப்புகளை கர்நாடகாவில் பி.யூ  கல்லூரியில் படிக்கிறார்கள் மாணவர்கள். பெயர்தான் கல்லூரி என்றாலும்பள்ளி வயது மாணவர்களே இங்கு படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் ஹிஜாப்  அணிந்து வருவதற்கு முதல்வர் ருத்ர கவுடா  அனுமதி மறுத்ததாகச் சொல்லி முஸ்லிம் மாணவிகள் கல்லூரியின் வாசலில் போராட்டம் நடத்தினர்.

 

இதுதான் ஹிஜாபுக்கான பிரச்சனையின்  ஆரம்ப புள்ளி. ஆரம்ப புள்ளி என்று சொல்வதைவிட பிப்ரவரி 5 ம் தேதி வெளியிடப்பட்ட கர்நாடக மாநில கல்வித்துறையின் அரசாணையில்  முன்னோட்டம்.

 

ஆம் பிப்ரவரி 5 ம் தேதி பாசிச கர்நாடக அரசின் கல்வித்துறை ஒரு அரசாணையை  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்புகிறதுஅதன் விவரம் பின்வருமாறு

 

1.    கர்நாடக கல்விச் சட்டம்-1983 இன் 133 (2) இன்படி கர்நாடகா மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிமாணவர்கள் ஒரே மாதிரியான ஆடையை அணியவேண்டும்.

 

2.    மாநில அரசுபல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள்கல்லூரியின் வளர்ச்சி வாரியம் (CDC - College's Development Board) முடிவு செய்த ஆடையை அணிய வேண்டும். ஒரே மாதிரியான ஆடையை அணியவில்லை  என்றால்சமத்துவம்ஒருமைப்பாடு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்காத விதத்தில் ஆடைகளை அணியலாம்.

 

இதற்கிடையில் pre - University இயக்குநர் ஆர் சினேகல் IAS உடனடியாக மாற்றப்பட்டு (எந்த பொறுப்பும்  இல்லாமல்) அவருக்கு பதில்  பிதார் மாவட்ட நிர்வாகி ராமச்சந்திரன் IAS (தமிழ்நாட்டை சேர்ந்த) இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

 

இதற்கிடையில்சனிக்கிழமையன்றுகாங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா மற்றும் அவரது ஆதரவாளர்கள் "பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்" என்று  கலபுர்கி மாவட்ட Deputy Commissioner அலுவலகத்தை சுற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

திடீர் கட்டுப்பாடுகளுக்கு என்ன காரணம் என்றும் "ஏன் திடீரென்று எங்களைத் தடுக்கிறார்கள்புர்கா  ஒன்றும் புதிதல்ல" என்றும் அதே பிப்ரவரி 5ம் தேதி செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

 

சீருடையுடன் ஹிஜாபின் நிறத்தை மாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்ஆனால் எங்களால் அதை விட்டுவிட முடியாது. சட்டசபைக்கும் நான் ஹிஜாப் அணிந்து செல்கிறேன்அவர்களால் முடிந்தால் என்னை தடுக்கட்டும்முடிந்தால் முதல்வரிடம்  பிராது கொடுங்கள்பின்னர்  உடுப்பியில் போராட்டம் நடத்துவோம்" என்றும் செய்தி நிறுவனம் ஏஎன்ஐ க்கு தெரிவித்தார்.

 

 

இது இப்படி இருக்க டிசம்பர் மாதம் 27 ந்தேதி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாத மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம்

 

“கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து  வருவதற்குத் தடை இல்லை. ஆனால்வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஹிஜாப்பை அகற்றிவிட வேண்டும்.  வகுப்பறையில் எல்லோரும் சமமே. கல்லூரி சேர்க்கையின்போதே இதைத் தெளிவாகக் குறிப்பிட்டு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறோம்'  என்று முதல்வர் ருத்ர கவுடா சொன்னார்.”

 

ஆனால்போராட்டம் நடத்திய மாணவிகள் இதை மறுத்தனர். சேர்க்கையின்போது கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில்   'யூனிபார்ம் அணிய வேண்டும்அடையாள அட்டை அணிய வேண்டும்என்று இருந்ததே தவிரஹிஜாப் பற்றி எதுவும் இல்லை என்பது அவர்களின் வாதம். எங்களின் சீனியர்கள் பலரும் ஹிஜாப் அணிந்து வகுப்பறையில் பாடங்களை  கவனித்தார்கள். இப்போதுதான் புதிதாகத் தடை விதிக்கிறார்கள் என்றனர் அவர்கள். மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து ஜனவரி முதல் தேதி கல்லூரி வளர்ச்சிக் குழு கூடி விவாதித்தது. வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதிக்க முடியாது என்று கல்லூரி முடிவெடுத்தது. மாணவிகளின் போராட்டம் தொடர்ந்தது.

 

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட், ''ஹிஜாப் விவகாரத்தை SDPI கட்சியே தூண்டி விடுகிறது'' என்று குற்றம்சாட்டினார். ஒடுக்கப்பட்டவருக்கான கட்சியான SDPI மற்றும் அனைத்து மாணவர்களுக்குமான Campus Fron of India (CFI) என்ற அமைப்பு இஸ்லாமிய மாணவிகளைத் தூண்டிவிடுகிறார்கள்என்பது எம்.எல்.ஏ-வின் குற்றச்சாட்டு.

ஆனால் இது பிஜேபி யின் செயல்திட்டத்தில் ஒன்றாகும்வருகிற 2023  மே மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றிப்பெற பிஜேபி செய்யும் அரசியல் சூழ்ச்சியாகும் என்று SDPI  கட்சி குற்றம் சாட்டுகிறது. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அநீதி இழைக்கும் பாசிச பிஜேபி அரசு தன கையாலாகாத தனத்தை மறைக்க மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்வதை அனுமதிக்கமுடியாது. இந்த நாட்டில் எல்லோரும் அவரவர் மத சுதந்திரத்தின்படி வாழ இந்திய அரசியல் அமைப்பு சாசனம் வழங்கும் உரிமையை பாசிச அரசு தடுத்தால் அதை ஜனநாயக முறையில் எதிர்த்து போராடி வெல்வோம் என்று SDPI சூளுரைக்கிறது.

 

கர்நாடகக் கல்லூரிகளில் கல்லூரி வளர்ச்சிக்  குழு என்ற அமைப்பு இருக்கிறது. கல்லூரி தொடர்பான முடிவுகளை எடுக்கும் இந்தக் குழுக்களில் உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட் எம்.எல்.ஏ- முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். எனவேகல்லூரிகளின் சார்பில் உடுப்பி  எம்.எல்.ஏ ரகுபதி பட் பேசுகிறார்கள் என்றும்பாசிச அரசின் திட்டங்களை கல்வித்துறையில் நிறைவேற்ற இந்த எம்.எல்.ஏ வை பிஜேபி அரசு பயன்படுத்துகிறது என்றும் SDPI குற்றம் சாட்டுகிறது.

 

அதன் பிறகு உரிமைக்காக போராடும் உடுப்பி கல்லூரி மாணவிகள்மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து இஸ்லாமியப்  பிரதிநிதிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சு நடத்தியது. 'மாணவிகள் வகுப்பறைக்குள்ளும் ஹிஜாப் அணியலாம். ஆனால்ஆசிரியர் பாடம் நடத்த உள்ளே வந்ததும் ஹிஜாப்பை அகற்றிவிட வேண்டும். அரசு முறையாக ஓரு வழிகாட்டுதல் தரும்வரை இந்த நிலை தொடரும்என்று முடிவெடுக்கப்பட்டது. இது எங்களின் உரிமைகளை பறிக்கிறது என்று உடுப்பி மாணவிகள் ஆறு பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

இதற்கிடையில் மேலே சொன்னபடி பிப்ரவரி 5ம் தேதி (கர்நாடகாவில் சில கல்லூரிகளில் யூனிஃபார்ம் கட்டாயம்சில கல்லூரிகளில் இல்லை) கர்நாடக அரசு ஓர் உத்தரவை வெளியிட்டது. 'கல்லூரி வளர்ச்சிக்  குழு பரிந்துரைக்கும் சீருடையை மாணவமாணவிகள் கட்டாயம் அணிய வேண்டும். சமத்துவம்கண்ணியம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகள் அணிவது  தடை செய்யப்படுகிறதுஎன்று அதில் கூறப்பட்டிருந்தது. ஹிஜாப் அணிவதை இந்த உத்தரவு மறைமுகமாகத் தடை செய்தது. இந்த அரசு உத்தரவை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டது.

 

அதன் பின்னர் ஹிஜாப் தடை மேலும் சில கல்லூரிகளிலும் பரவியது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்துத்வ (இந்து மாணவர்கள் அல்ல) மாணவமாணவிகள் தங்கள் சீருடைக்கு மேல் காவித் துண்டு அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வந்தனர். பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இதன் பின்னணியில் இருந்தது வீடியோ  ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களில் 'விஷ்வ ஹிந்து பரிஷத்  மற்றும் பஜ்ரங் தள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். முதல்வரும்உள்துறை அமைச்சரும் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் பயப்பட வேண்டாம்என்று சொல்லி அவர்கள் காவித்துண்டுகளை அணிவிக்கும்  காட்சிகள் வெளியாகின. ஹிந்து ஜாகரன வேதிகே என்ற அமைப்பும்  இந்த தேசவிரோத செயல்களுக்கு  பின்னால் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

ஹிஜாப் போராட்டம் நடத்தும் மாணவிகளுக்கு எதிராக காவித்துண்டுடன் இந்து மாணவர்கள் திரண்டதால் பல கல்லூரிகளில்  சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. உடுப்பிகுந்தாப்புராபாலகாடி,   கொப்பாமங்களூரு என ஐந்து கல்லூரிகள் இதனால் ஹிஜாப்பை தடை செய்தன. இவற்றில் மூன்று அரசு கல்லூரிகள்இரண்டு தனியார் கல்லூரிகள். தட்சின கன்னடாஉடுப்பி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதைத் தாண்டியும் பல பகுதிகளுக்கு  இந்த சர்ச்சை பரவியது.

அதன் பின்னர் உலகமே உற்றுநோக்கிய சம்பவம் நடந்தேறியது.

மாண்டியாவில் முஸ்கான் கான் என்ற மாணவி கல்லூரிக்குள் நுழைந்தபோது காவித்துண்டுடன் பல மாணவர்கள்  அவரை பின்தொடர்ந்து 'ஜெய் ஶ்ரீராம்என்று முழக்கமிட்டதும்பதிலுக்கு அவர் 'அல்லாஹு அக்பர்என்று முழக்கமிட்டதும் உலகம் முழுக்க வைரலானது. ''இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இருக்கிறது. என் பண்பாட்டை நான் பின்பற்றுகிறேன். அவர்கள் பண்பாட்டை அவர்கள் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களின் நம்பிக்கைகளை நான் கேள்வி கேட்பதில்லை. அதேபோல என் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஹிஜாப் அணிவது என் உரிமை'' என்றார் முஸ்கான்.

கர்நாடகாவின் பல கல்லூரி வளாகங்களில் இப்படி பிரச்னை ஏற்பட்டது. ஒரு கல்லூரியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக இருந்த கொடிக்கம்பத்தில்  காவிக்கொடியை மாணவர்கள் ஏற்றினர். பிரச்னை மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்ககல்லூரிகளுக்கு 16ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் சர்ச்சை தொடர்பான ஐந்து வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித்இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்தார். 'அரசியல் சாசனம் தொடர்பான பல கேள்விகளை அடக்கிய வழக்கு இது. பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் இதில் சுட்டிக்  காட்டப்பட்டுள்ளன. எனவேகூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்திநீதிபதி கிருஷ்ண திட்சித்நீதிபதி ஹாஸி ஜைபுன்னிசா மொஹியுதின் ஆகிய மூன்று நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் 10 ந்தேதி விசாரணைக்கு வந்தது. அதில் வாய்மொழி தீர்ப்பாக காவி துண்டோ பர்தாவோ இறுதி தீர்ப்பு வரும் வரை அணியக்கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் பிப்ரவரி 16 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

18 மாணவிகள் சார்பில் தொடுக்கப்பட்ட 5 வழக்குகளை மொத்தமாக இந்த அமர்வு விசாரிக்கும். ஹிஜாப் அணிவது அரசியல் சட்டப்படி வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாசீருடை தொடர்பான கர்நாடக அரசின் உத்தரவு செல்லுமா ஆகிய கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு பதில் சொல்லும். இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கும் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால்அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும்.

கர்நாடகக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்கடலோர கர்நாடக. மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். 'கல்வி நிலையங்களில் மத வெறுப்பு பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும்என்று அக்கறையுள்ள பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். ''இந்தப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் போராடியபோது  அவர்களுக்கு ஆதரவு மட்டுமே தெரிவித்தோம்'' என்கிறார் கேம்பஸ் ஃபிரன்ட்  ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலத் தலைவர் அதாவுல்லா  புஞ்சல்கட்டே.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் தேசிய செயலாளர் ஹர்ஷ நாராயணன், ''பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத நடைமுறைகள்  எதுவும் இருக்கக்கூடாது. மத அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சொல்லட்டும். அப்படி அவர்கள் சொன்னால்நாங்களே அந்த அமைப்பில் சேரத் தயார்'' என்கிறார்.

ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் விரும்பிய ஆடையை அணிய அரசியல் சாசனம் (ஹிஜாப் விடயத்துக்கு) அனுமதி தந்திருக்கும் போது, யார் இந்த பாசிச சக்திகள் அதை தடுக்க?

அரசியல்வாதிகள் தேர்தலைப் பார்க்கிறார்கள். மாணவர்கள் தேர்வைப் பார்க்கிறார்கள். தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.

வரும் 16 ந் தேதி மீண்டும் இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதுபொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று. 

 

பிகு. கர்நாடக கல்விச் சட்டம்-1983. இந்த சட்டம் ஜனதா பார்ட்டிஜனதா பார்ட்டி (செகுலர்)லோக்தள்இந்திய தேசிய காங்கிரஸ் (ஜெகஜீவன்) மற்றும் ஜன் மோர்ச்சா என்ற ஐந்து காட்சிகளையும் ஒன்றாக இணைத்து வி பி சிங்க் ஆல் உருவான ஜனதாதள் (மட்டன்சிக்கன்மாட்டுக்கறிஎல்லாவற்றையும்  மோரோடு சேர்த்தது போல ஒரு கூட்டணி)கட்சியின் முதல்வராக இருந்த (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) தேவ கவுடாவால் முதல்வராக 1995 ல் இருந்த போது திருத்தப்பட்ட சட்டம் தான் இந்த கர்நாடக கல்விச்சட்டம் - 1983. ( இந்த சட்டம் முதன் முதலில் 1983 ல் கொண்டுவரப்பட்டு, 1995 ல் திருத்தப்பட்டது).

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...