Friday, April 1, 2022

காஷ்மீர் ஃபைல்ஸ்

 காஷ்மீர் ஃபைல்ஸ்




காஷ்மீரில் நடப்பது வெறும் இந்து முஸ்லீம் பிரச்சனையோ அல்லது பாகிஸ்தான் இந்தியா பிரச்சனையோ அல்ல, அது 400 வருட கால பிரச்சனை. காஷ்மீரிகள் உரிமை பிரச்சனை. 1586 ல் அக்பரின் ஆட்சியின் கீழ் இருந்த காஷ்மீரை அக்பருக்கு பிறகு ஆப்கானியர்களும் சீக்கியர்களும் தொடர்ந்து ஆண்டனர். காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்த சீக்கிய மன்னர் ஜித் சிங்க் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார், ஜித் சிங்க்கை ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்தார் குலாப் சிங். ஜித் சிங்க் போரில் தோற்றார், காஷ்மீர் பிரிட்டிஷ் வசமாயிற்று. பிறகு பிரிட்டிஷ் 75 லட்ச ரூபாய்க்கு காஷ்மீரை குலாப் சிங்க் க்கு விற்றது. இது போக ஆண்டுக்கு 20 பாஸ்மினா ஆடுகள், 3 காஷ்மீர் ஆடுகள் மற்றும் 1 குதிரை வருட வாரியாக குலாப் சிங்க் பிரிட்டிஷாருக்கு கட்டிவந்தார். குலாப் சிங்க் இறந்ததும் அவரின் மகன் ஹரிசிங் ஆட்சிக்கு வந்தார், இந்தியா சுதந்திரம் அடைந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு

டோக்ரா வம்ச ஆட்சியில் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு பங்கோ, மதிப்போ இருக்கவில்லை; மாறாக அவர்கள் துன்பங்களுக்கு ஆளாயினர் என்ற அதிருப்தி இருந்தது. எனவே டோக்ரா வம்ச ஆட்சிக்கு எதிராக ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி போராடி வந்தது. அப்போது காஷ்மீரை டோக்ரா வம்சத்துக்கு விற்ற அமிர்தசரஸ் உடன்படிக்கை கையெழுத்தாகி 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. காஷ்மீரை டோக்ரா வம்சத்தினருக்கு பிரிட்டாஷார் விற்ற அந்த உடன்படிக்கை செல்லாது என்று கூறி தேசிய மாநாட்டுக் கட்சி போராடிவந்தது.

அத்துடன் பிரதிநிதித்துவ ஆட்சி ஒன்று அமைந்து அந்த ஆட்சிதான் காஷ்மீரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவேண்டும் என்று ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தி வந்தது.

இந்தப் பின்னணியிலும், மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் சேருவதா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதா அல்லது, தனித்திருப்பதா என்பது பற்றி தடுமாற்றத்திலேயே இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் 4 சமஸ்தானம் இந்தியாவோடும் பாகிஸ்தானோடும் சேர மறுத்தன, 1. திருவாங்கூர் சமஸ்தானம் - கேரளா, 2. ஜூனாகத் - குஜராத், 3. ஹைதராபாத் நிஸாம் - தெலுங்கானா, 4. காஷ்மீர்.

 திருவாங்கூர் சமஸ்தானம்

ஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அளிக்க முடிவு செய்த போது, திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இருக்கும் என்றார், பிறகு அவரை ஹிந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஆக்கி பொன்னும் பொருளும் தந்து இந்தியாவுடன் திருவாங்கூரை சேர்த்துக்கொண்டார் பாசிச படேல்.

ஜுனாகத் குஜராத்

குஜராத்தை சேர்ந்த ஜூனாகத்தை ஆண்டது ஒரு முஸ்லீம் ஆனால் பெரும்பான்மை மக்கள் ஹிந்துக்கள், மன்னனின் விருப்பம் பாகிஸ்தான், ஆனால் மக்கள் விரும்பியது இந்தியாவை. மன்னன் பாகிஸ்தானுக்கே சென்றார், மக்களும் மண்ணும் இந்தியாவோடு சேர்ந்துவிட்டது.

ஹைதராபாத் நிஜாம்

தனி நாடாக இருக்கவிரும்பிய ஹைதராபாத் நிஜாமோடு பாசிச பட்டேல் போர் புரிந்தார், 40,000 மக்களை கொண்டு குவித்து ஹைதராபாத்தை இந்தியாவோடு சேர்த்துக்கொண்டார்,

காஷ்மீர்

மக்கள் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள், மன்னன் சீக்கிய மதத்தை சேர்ந்த ஹரிசிங். மக்களின் விருப்பமும் மன்னனின் விருப்பமும் தனி நாடுதான், ஆனால் இந்தியாவின் கணக்கு தவறானதாக இருந்தது. மக்கள் முஸ்லிம்களாக இருப்பதால் பாகிஸ்தானோடு சேர்ந்துவிடுவார்களோ என்று இந்தியா பயந்தது.

சூஃபி மரபின் செல்வாக்கு நிலவிய காஷ்மீர் முஸ்லிம்கள் தங்கள் ராஜ்ஜியம் பாகிஸ்தானுடன் செல்வதை விரும்பவில்லை, ஷேக் அப்துல்லாவுக்கும் அப்படி ஒரு விருப்பம் இருக்கவில்லை.

இந்து ராஜ்ஜியமான காஷ்மீர், மதச்சார்பற்ற இந்தியாவில் சேர்வதை ஜம்முவில் இருந்த இந்துக்களே விரும்பவில்லை என்பதோடு, அப்படி சேரவேண்டும் என்று கோரியவர்களை இந்து விரோதிகள் என்றும் அவர்கள் வருணித்தனர் என பிரபல காஷ்மீர் விவகார வல்லுநரும், 'காஷ்மீர் டுவார்ட்ஸ் இன்சர்ஜன்சி' என்ற நூலின் ஆசிரியருமான பால்ராஜ் புரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது போர் தொடுத்து வந்தனர். கொலை, கொள்ளை, தீயிட்டு கொளுத்துதல், பாலியல் வல்லுறவு... என அவர்கள் எதிர்பட்ட அனைத்து மதத்தினரையும் (முஸ்லிம்கள் உள்பட) தாக்கினார்கள். இதை எதிர்கொள்ள முடியாத மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் ஓடோடி வந்தார். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நேரு அரசுகாஷ்மீர் இணைப்புஎன்பதை நிபந்தணையாகக் கொண்டு ராணுவத்தை அனுப்பி பஸ்தூன் பழங்குடிகளை விரட்டி அடித்தது. ஆனாலும் கூட குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது. (அதுவரைக்கும், அதற்குப் பின்னர் சில வருடங்கள் வரையிலும் கூட, காஷ்மீருக்கு முதல்வரோ, ஆளுனரோ கிடையாது. பிரதமரும், ஜனாதிபதியும்தான் இருந்தார்கள்.) அந்த ஒப்பந்தம் கூட காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவில்லை. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இந்திய அரசிடம் அளிக்கப்பட்டன. அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பதுகாஷ்மீர மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்என்பதுதான். பிரதமராக இருந்த நேருகாஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்என்று அப்போது வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிற்பாடு இந்தியா, தானாகவே முன்வந்து இந்தப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் சென்றபோது .நா. மன்றமும் வாக்கெடுப்பையே வலியுறுத்தியது. இந்தியாவும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது. எனினும் நேரு காலம் தொடங்கி இன்றுவரை அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஏன்? இதைப்பற்றி தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் 13 பேர் இணைந்து நடத்திய முக்கியத்துவம் வாய்ந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். ‘‘அப்போது பிரதமராக இருந்த நேரு இந்த வாக்கெடுப்பை வெளிப்படையாக ஆதரித்தார். ஆனால் உண்மையில் அவர் அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்துவதை விரும்பவில்லை. நேரு, எழுதிய கடிதங்களில்இந்தியாவின் நலனில் இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தர முடியாது. ஆனால் இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம்தான் முக்கியமானது. அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிவது என முடிவு எடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதை வாக்கெடுப்பின் மூலம் தீர்மாணிக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. காஷ்மீரத்தின் இன்றைய தலைமையைதான் நாம் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்என்கிறார். ஆக வாக்கெடுப்பு என்ற ஜனநாயக முழக்கத்தை சும்மாவேனும் சொல்லிக்கொண்டே, காஷ்மீரில் தன் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்துவதும், பிறகு அந்த தலைமையின் கருத்தையே காஷ்மீர மக்களின் கருத்தாக முன்வைத்து தொடர்ந்து இந்திய நலன்களை சாதித்துக்கொள்வதும்தான் நேருவின் நோக்கம்.’’ என்கிறது அந்த குழுவின் அறிக்கை. இப்படி, நேரு பொதுவில் தனது ஜனநாயக முகத்தைக் காப்பாற்றிக்கொண்டு அடிமனதில் தேசியவெறியுடன் காஷ்மீரத்தை கையாண்டார். அதன் பின்வந்த யாருமே வாக்கெடுப்பு நடத்தவே இல்லை.

 ஆயுத போராட்டம்

காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றிசுதந்திர காஷ்மீர்கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள். 50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்தது. இந்த இடத்தில்தான் பாகிஸ்தானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் தொடங்குகிறது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான். அதன்பிறகு போராட்டமானது தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. காஷ்மீரில் விதம்விதமான பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. தாலிபான் வரைக்கும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியது. அந்த அழகியப் பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இதுதான். காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த பாகிஸ்தான் மெல்ல, மெல்ல அந்த போராட்டத்தின் முகத்தையே சிதைத்துவிட்டது.

காஷ்மீர்

காஷ்மீரை 5 ஆக பிரிக்கலாம், 1. காஷ்மீர் பள்ளத்தாக்கு, 2. ஜம்மு, 3. லடாக், 4. தனி காஷ்மீர் மற்றும் 5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்.

இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பவுத்தர்கள் என்ற நான்கு மதத்தினர்  வாழும் காஷ்மீரில் இந்துக்களும் இந்தியர்களும் பெரும்பான்மையினர்.

காஷ்மீரி  இந்துக்களும் முஸ்லிம்களும் மத வேறுபாடு இல்லாமல் தான் வாழ்கிறார்கள், அவர்களிடம் எந்த வேற்றுமையையும் நான் காணவில்லை என்று காந்தி ஒருமுறை சொல்லியுள்ளார். காஷ்மீரிகளை பொறுத்தவரையில் தங்களை மதத்தினராக அடையாளப்படுத்துவதை விட காஷ்மீரிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள்.

காஷ்மீரில் சூபிகள் ஆதிக்கம் உண்டு, அவர்கள் அளவுக்கு அதிகமான அமைதியை விரும்பக்கூடியர்கள். இன்று இந்துக்களால் கொண்டாடப்படும் அமர்நாத் பனிலிங்கம் ஒரு ஆடுமேய்க்கும் முஸ்லிமால் கண்டறியப்பட்டது தான்.

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் காஷ்மீருக்கு பொருந்தும், மீதமுள்ள 135 சட்ட பிரிவுகளை ஒத்த சட்டங்கள் காஷ்மீர் மாநில அரசால் பின்பற்றப்படுகிறது, மொத்தத்தில் நாவில் வாக்கு கொடுத்தபடி வாக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவின் ஒரு பாகமாகவே காஷ்மீர் கணக்கிடப்படுகிறது.

சிதைந்து போன அன்றாட வாழ்க்கை

438,317 சதுர கிலோமீட்டர் உள்ள ஈராக்கை ஆக்கிரமித்தபோது அமெரிக்க நிறுத்திய படைகளின் எண்ணிக்கை 1.65 லட்சம்,

652,860 சதுர கிலோமீட்டர் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது நிறுத்தப்பட்ட படைகளின் எண்ணிக்கை 67 ஆயிரம்,

இந்தியா 222,236 சதுர கிலோமீட்டர் காஷ்மீரில் நிறுத்திவைத்திருக்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 6.67 லட்சம். மாநில காவல்துறை இதில் அடங்காது.

இத்தனை ராணுவத்தினரை இந்திய அரசு நிறுத்துவதற்கு காரணம் தீவிரவாதிகளை பிடிக்க, இந்திய அரசின் கணக்குப்படி தீவிரவாதிகளின் 

எண்ணிக்கை 660 பேர் மட்டுமே. ஆனால் 2008 ன் கணக்குப்படி காஷ்மீரில் 

உள்ள விதவைகளின் எண்ணிக்கை 37,400 மற்றும் அனாதைகள் 97,200 பேர்கள்.

 

இங்கு தினசரி இயல்பு வாழ்க்கை என்பது மிகவும் கொடூரமானது

  • ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958
  • பதற்றப்பகுதி சட்டம் 1976
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் 1978
  • தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கை சட்டம் 1985
  • பொடா 2002 
என பல ஆள்பிடி சட்டங்கள் காஷ்மீரில் உள்ளன. இதில் மிக மோசமானது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம். இதன்படி எந்த ஒரு வீட்டுக்குள்ளும் ராணுவம் நுழையலாம்யாரையும் கைதுசெய்யலாம்,   விசாரணை என்ற பெயரில் கொலை செய்யலாம். அதை எதிர்த்து வழக்குப்போடும் உரிமை கூட மக்களுக்கு கிடையாது.

 

மாதத்தின் பாதிநாட்கள் ஊரடங்கு, 7 மணிக்கு மேல் காஷ்மீர வீதிகள் எப்படி இருக்கும் என்று காஷ்மீரிகளுக்கு தெரியாது. அங்கே வாழும் மக்களுக்கு மட்டுமல்ல ராணுவத்தினருக்கு விடுதலை தேவைஆம்மன உளைசல் 

காரணமாக 2002 முதல் 2009 வரை தற்கொலை செய்துகொண்ட   ராணுவத்தினரின் எண்ணிக்கை  169.


 

மரணப்பள்ளத்தாக்கு


உலகின் அழகிய பள்ளத்தாக்குகள் நிறைந்த இடம் காஷ்மீர்ஆனால் இன்று அது மரணப்பள்ளத்தாக்குகளின் இடமாக மாறியுள்ளதுகாணாமல் போனவர்களின்   பெற்றோர்கள் என்ற அமைப்பையே உருவாக்கும் அளவுக்கு மக்கள் இங்கே காணாமல் போயுள்ளனர். 2008 மார்ச் 29 தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் படி  உரி மாவட்டத்தில் 18 கிராமங்களில் 940 சடலங்கள் புதைகுழியில் 

இருந்து  கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது. காணாமல் 

போனவர்கள் இன்றுவரை கிடைக்கவில்லை காரணதீவிரவாதி என்று சந்தேகத்தில் பேரில் கொன்று  புதைக்கப்பட்டது தான் காரணம்.

 

உலகமனிதஉரிமைகள்மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் அமைப்பு காஷ்மீர்  மரண 

படுகுழி  பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. பாராமுள்ள மாவட்டத்தில் 1122 

புதைகுழிகளும்,            குப்வாரா மாவட்டத்தில் 1453 புதைகுழிகளும்

பந்திபோரா மாவட்டத்தில் 155  புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. இந்த மாவட்டத்தில் கொத்துகுழிகளில் இருந்து மட்டும் 2943 சடலங்கள் 

மீட்கப்பட்டன. அந்த அளவுக்கு மக்களை ராணுவம் கொலை செய்துள்ளது.

 

பாராமுள்ள மாவட்டம் கிச்சாமா என்ற ஊரை சேர்ந்த பெரியவர் 

230 சடலங்களை  புதைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சிறு கிராமத்தில் மட்டும் 165 மரணக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளது.

 

பண்டிட்டுகளுக்கு நடந்தது என்ன?


1990 ல் காஷ்மீரின் இரண்டாவதாக பொறுப்பேற்ற ஆளுநர் ஜக்மோகன் அழகிய 

பள்ளத்தாக்கான காஷ்மீரை பூலோகத்து சொர்க்கம்என்ற வர்ணிப்பதை 

விட்டுவிட்டு தேள்களின் பள்ளத்தாக்கு என்று வர்ணித்தார். இவர் ஆளுநராக 

இருந்த போது ஆயுதப்படைகளின் துப்பாக்கிகள் தனக்கு தடையின்றி இயங்கின. 

தொடர்ச்சியான இந்திய மேலாதிக்கம்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை

கொலைகள்நிம்மதியற்ற வாழ்க்கைகண்காணிப்பு எல்லாம் சேர்ந்து 

காஷ்மீரிகளை சோர்வுற செய்தது. மக்களை மத ரீதியாக பிரிக்கும் 

வேளையில் ஜக்மோகன் ஈடுபட்டார். 90 களில் ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் சில பண்டிட்டுகளை கொலைசெய்ததுஅந்த நேரத்தில் காஷ்மீரை கட்டுக்குள் 

கொண்டுவருவதற்கு பதில்பண்டிட்டுகள் வெளியேறவேண்டும்அவர்களுக்கு எங்களால் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்று ஜக்மோகன் சொன்னார்.

 

டெல்லிக்கு வந்த பண்டிட்டுகளுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள்


1. முக்கிய பகுதிகளில் கடைகளும் வீடுகளும் ஒதுக்கப்பட்டது,

2. அரசு ஊழியர்களுக்கு வேலையே பார்க்காத சூழ்நிலையில் முழு ஊதியம் வழங்கப்பட்டது,

3. வேறு எந்த உள்நாட்டு அகதிகளுக்கும் வழங்கப்படாத வசதிகள் அவர்களுக்கு 

வழங்கப்பட்டது.

 

காஷ்மீர் முஸ்லிம்களை பிரித்தது யார்?

 

நேரிடையான பதில் இந்துத்துவ சக்திகள். 1952 ல் டோக்ரா மன்னன் உதவியுடன் RSS காஷ்மீரில் நுழைந்து ஜம்மு பிரஜா பரிஷத் என்ற அமைப்பை 

உருவாக்கியது. 370 வைத்து சட்டப்பிரிவை நீக்கவேண்டும் வாக்கெடுப்பது 

நடத்தக்கூடாது என்று தொடர் பிரச்சாரம் செய்து வந்தனர்.

 

அதை நேரு அறிந்திருந்தார், 1953 ஜூன் 29 ஆண்டு நேரு மேற்கு வாங்க முதல்வர் பி.சி. ராய் க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ஜம்மு பிரஜா பரிஷத் 

ஆரம்பிக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் நிலை மிகவும் சிக்கலாகி விட்டது என்று குறிப்பிடுகிறார். RSS ஆல் காஷ்மீர மக்கள் இந்தியாவை 

வெறுக்கத்தொடங்கிவிட்டார்கள்அவர்களுக்கு என இயக்கங்களை 

தொடங்கிவிட்டார்கள்பாகிஸ்தான் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறது 

என்று அக்கடிதத்தில் நேரு குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கான விலை என்ன?

 

  • கார்கில் போரில் இந்தியா செலவிட்ட தொகை 3200 கோடிகள்,
  • தினந்தோறும் ராணுவத்திற்கு செலவிடப்படும் தொகை 6 கோடிகள்,
  • பனிமலை சிகரமான சியாசனுக்கு மட்டும் 2190 கோடிகள் வருடத்துக்கு   செலவிடப்படுகிறது,
  • கார்கிலில் படையை நிறுத்திவைக்க தினமும் 10 கோடிகள்வருடத்திற்கு   3650  கோடிகள் செலவு,
  • கட்டுப்பாட்டுக்கோட்டில் உள்ள ராணுவத்தினருக்கு 10000 கோடிகள்   வருடத்திற்கு செலவு,
  • இது போக ராணுவ வீரர்களின் சம்பளம்ஒய்வு ஊதியம் தனி.
இவ்வளவு செலவு செய்தும் காஷ்மீரிகள் அன்பை இந்தியா பெறவில்லை காரணம், கட்டுப்பாடுகளால் அன்பை வளர்க்கமுடியாது. 

 

காஷ்மீரிகள் விருப்பம் என்ன?


1) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களின் ஆக்கிரமிப்பை 

விட்டுவிட்டு காஷ்மீரில் இருந்து வெளியேறவேண்டும்,

2) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களின் விருப்பத்திற்க்கான தனி நாட்டை கொடுக்கவேண்டும்,

3) 74% மக்கள் காஷ்மீரி அடையாளத்துடன் வாழவிரும்புகிறார்கள் 

(அவுட்லுக் 2000 ல் நடந்த கருத்துக்கணிப்பு)

4) 16% மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்கிறார்கள்,

5) 2% மக்களின் விருப்பத்தை (பாகிஸ்தானுடன் இணைய விருப்பம்) கண்டுகொள்ளாமல் விடவேண்டும்ஆனால் இந்தியா அதை தான் பெரிதாக கேட்டுக்கொண்டு இருக்கிறது.

 

தீர்வுகள்


1. வாக்கெடுப்பு நடத்துவது,

2. ஆயுதப்படிகளை திரும்ப பெறுவது,

3. சுயாட்சியை அந்தஸ்தை திருமா வழங்குவது,

4. காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை வெள்ளை அறிக்கை மூலம் வெளிக்கொணருவது,

5. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது,

6. பண்டிட்டுகளை மீள் குடியேற்றம் செய்வது,

7. தவறிழைத்த ராணுவத்தினருக்கு உரிய தண்டனை வழங்குவது,

 

இதையெல்லாம் நடத்திக்கொடுக்கவேண்டியது இந்திய அரசின் தலையாய கடமைஆனால் இந்த பாசிச அரசு இதை செய்யுமாஎன்றால் செய்யாது. ஆக என்று பாசிசம் மண்ணோடு மண்ணாகுமோ அன்றுதான் காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் நல்லகாலம் பிறக்கும்.


முடிவாக காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை மேலும் அதிகப்படுத்தி அடுத்த இன ஒழிப்புக்கான திட்டமிடலே அல்லாமல் வேறில்லை.


காஷ்மீரில் நடந்த, நடக்கும் மனித உரிமை மீறலை பற்றி பேசாமல் அவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது ஒரு பக்க சார்பான அய்யோக்கியத்தனம். 

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...