Wednesday, January 2, 2019

3. இந்துமதத்திலும் பர்தா


ஆள் பாதி ஆடைபாதி
மனிதனுக்கும் விலங்குக்கு உள்ள வேறுபாடுகளில் ஒன்று ஆடை
போன்றவை ஆடைக்கான முக்கியத்துவத்தை காட்டுகிறது, நாகரிகமான மனிதனுக்கு மிக முக்கியம் ஆடை.
ஆடை என்பதே அவயங்களை மறைப்பதற்காகத்தானே தவிர, மானத்தை வெளிக்காட்ட இல்லை, ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால் வரை மூடவேண்டும் என்றும் பெண்கள் தலை முதல் கணுக்கள் வரை மூடவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் பர்தாவை வலியுறுத்துகிறது.


ஹிந்து மதத்தில் பர்தா




ரிக் வேதத்தில் பர்தாவைப்பற்றியும் பார்வையை பேணுவத்தைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது (பார்க்க - வசனம் 19 http://www.sacred-texts.com/hin/rigveda/rv08033.htm)

1. உன் பார்வையை தாழ்த்து, உன் கால்களை நெருக்கமாக வைத்துக்கொள், நீ அணிந்திருக்கும் ஆடையை பார்க்காதவண்ணம் பர்தா அணிந்துக்கொள்.

2. பரசுராம் வருவதைக்கண்ட ராமன், தன் மனைவி சீதாவிடம் உடலை மூடிக்கொள், மேலும் உன் ஆடையை கால்வரை இறக்கிவிடு என்கிறார். (Maha veera Chritra Act 2 page on 71).


 கிருஸ்துவத்தில் பர்தா:


Image result for veil in christianity

வசனம் 5 -6
தலையை துணியால் மூடாமல் இருப்பது மொட்டையடிப்பதை விட மோசமானது, அதாவது மொட்டையடிப்பதை வெட்கமாக நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தலையை மூடவேண்டும் என்று பர்தாவை வலியுறுத்துகிறது.

https://www.bible.com/bible/1/MAT.5.KJV  வசனம் 28  ல் பெண்களை காம இச்சையோடு பார்த்தால், விபச்சாரம் செய்த்தக பாவத்திற்கு சமம் என்று கூறுகிறது, பர்தா இல்லாமல் அவயங்களை காண்பித்தால் இச்சையோடு தான் பார்க்க நேரிடும். அது விபச்சாரம் செய்ததுக்கு சமம் என்று பைபிள் கூறுகிறது.

இஸ்லாத்தில் பர்தா

ஆனால் இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் பார்வையை தாழ்த்த சொல்கிறது, ஆதாரம் கீழே 

24:30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.


மேலும் இஸ்லாம் வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் தனித்திருக்க தடைவிதிக்கிறது, ஒரு பெண் வெளியே செல்லவேண்டும் என்றால் நான்கில் ஏதாவது ஒரு ஆண் துணையுடன் செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

பர்தா அணியாதது சிலரின் விருப்பம் என்றால், அணிவது அவர்களின் விருப்பம் அதில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை, இஸ்லாமிய பெண்கள் தங்கள் மானத்தை மறைக்க அவர்களாகவே விரும்பி அணியும் ஆடைதான் பர்தா.

மாவீரன் திப்பு மேலாடை அணிய தடை விதித்திருந்ததை தடுத்து மேலாடை அணிய சட்டம் இயற்றினார், மேலும் மலபார் கடற்கரைக்கு வந்த அராபிய வாணிப கூட்டம் தலையை தாழ்த்தியே பெண்களிடம் பேசியது காரணம் அந்த பெண்களிடம் பர்தா முறை இல்லாததால், இதையே காரணம் காட்டி அந்த பெண்கள் அராபியர்களை திருமணம் செய்ய முற்பட்டனர், இஸ்லாம் கண்ணியமான மார்க்கம், மக்களையும் கண்ணியமாக வாழ வழி வகுக்கும் மார்க்கம். அறிவுடையோர் சிந்திப்பார்கள்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...