வடோலி கலவரம்:
11 ந்தேதி அக்டோபர் 2008 ஆம் ஆண்டு இன்றைய தெலுங்கானாவில் உள்ள வடோலி என்ற ஊரில் ஹிந்து வாஹினி என்ற அமைப்பினரால் நடத்தப்பட்ட கலவரம் தான் வடோலி கலவரம்.
காரணம்:
11 அக்டோபர் 2008 ன் முந்தைய நாளான வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் போது, தண்ணீரின் கரைக்க துர்கா தேவியின் சிலையை பள்ளிவாசல் வழியாக கொண்டுசென்று பிரச்னையை ஏற்படுத்தினார்.
(நாம் பலதடவை சொன்னதுபோல், ஹிந்து சாமிகளின் சிலைகள் தலித்துகள் என்ற ஹிந்துவின் தெருவழியாக செல்லாமல் சம்பந்தம் இல்லாமல் முஸ்லிம்கள் தெரு வழியாகத்தான் செல்லும், காரணம் கலவரம் ஏற்படுத்தி ஹிந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் லாபம் பெற)
அதேபோன்ற நிகழ்வுதான் இதுவும், இதில் சாதாரண ஹிந்துக்கள் ஈடுபடவில்லை, ஹிந்து வாஹினி என்ற பயங்கவாதக்கும்பல் தான் இதில் ஈடுபட்டுள்ளது.
உயிர்சேதம்:
இந்த சம்பவத்தை காரணம் காட்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த மஹபூப் கான் (55), சபியா கான் (50), ரிஸ்வானா பேகம் (22), அரசும் கான் (6), நுமான் கான் (3) மற்றும் ஸபத் கான் (2) ஆகிய 6 முஸ்லிம்களை விடியற்காலையில் 2 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உயிரோடு எரித்து கொன்றது இந்த பயங்கரவாத கும்பல்.
இந்த கலவரத்தில் நீட்சியாக பைன்சா என்ற இடத்தில் மூவர் அடித்தே கொல்லப்பட்டனர், 25 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் 2018 ல் கைதுசெய்யப்பட்ட சரியான ஆதாரம் சிபிஐ ஆல் சமர்பிக்கமுடியாத காரணத்தால் துர்கா வாஹினியை சேர்ந்த 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். உண்மையான குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை, எரிந்துபோன குடும்பத்திற்க்கான நியாயமும் கிடைக்கவில்லை.
ஆதாரங்கள்:
https://www.indiatoday.in/latest-headlines/story/4-killed-in-communal-riots-in-andhra-town-31377-2008-10-10
https://www.indiatoday.in/latest-headlines/story/curfew-in-andhra-town-after-communal-violence-31389-2008-10-11
https://en.wikipedia.org/wiki/Vatoli_communal_violence_2008
https://timesofindia.indiatimes.com/india/6-burnt-alive-in-riot-hit-Andhra-area/articleshow/3586738.cms
https://www.siasat.com/news/9-hindu-vahini-accused-freed-2008-bhainsa-riot-case-where-muslim-family-burnt-alive-1343374/
No comments:
Post a Comment