Thursday, January 10, 2019

6. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பலதாரமணம் செய்தது ஏன்?


எதிரிகளும் நடுநிலையாளர்களும் (?) இஸ்லாத்தை விமர்சிக்கும்  விடயங்களில் ஒன்றுதான் முஹம்மது ஸல் அவர்கள் ஏன் பல மணங்களை  முடித்தார்கள்? அதிலும் குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களை ஆறு வயதில் திருமணம் முடித்த விடயம்.

முஹம்மது ஸல் அவர்களின் மனைவிமார்களின் விபரம்:

நபி (ஸல்) அவர்களுக்கு மனைவியர் பன்னிரண்டு பேர்களாவர். அன்னார் மரணித்த போது அவர்களில் பத்து பேர் உயிருடன் இருந்தார்கள். கதீஜா (ரலி), செய்னப் (ரலி) இருவரும் ஏற்கெனவே மரணித்து விட்டார்கள்.


  1. கதீஜா பின்த் குவைலித் (40)
  2. சவ்தா பின்த் சzமாஹ் (55)
  3. ஆயிஷா பின்த் அபி பக்ர் (6)
  4. ஹப்fஸா பின்த் உமர் (25)
  5. செzய்னப் பின்த் குஸைzமா (25)
  6. உம் சலாமா ஹின்த் பின்த் உத்பா (32)
  7. ​செzய்னப் பின்த் ஜஹ்ஷ் (25)
  8. ஜுவைரியா பின்த்அல் ஹாரித்
  9. ஸபிய்யா பின்த் ஹுயெய் இப்ன் அக்தாப்
  10. உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபி ஸுபியான்
  11. எகிப்து நாட்டின் மரியா பின்த் ஷமூன்
  12. மயிமுனா பின்த் அல் ஹாரித்



மேலே உள்ள 12  மனைவிகளில் ஆயிஷா (ரலி) மாத்திரமே கன்னியாக இருந்தார்கள். ஏனையவர்கள் விதவைகள் அல்லது விவாகரத்து செய்தவர்கள்.

நபியவர்கள் பல பெண்களை திருமணம் செய்ய காம இச்சை (நவூதுபில்லாஹ்) தான் காரணமா?

1. நபி (ஸல்) அவர்கள் தனது 25 வயதில் முதன் முறையாக திருமணம் முடித்தார்கள்
2. 40 வயதான, இரு முறை விதவையான கதிஜா (ரலி)வை நபியவர்கள் முதன் முறையாக திருமணம் செய்துக்கொண்டார்கள். அவர்களுக்கு பிள்ளைகளும் இருந்தனர். கதிஜா (ரலி) வின் மரணம் வரை 25 வருடங்கள் இருவரும் அன்புடன் சேர்ந்து வாழ்ந்தனர். கதீஜா (ரலி) வின் மரணத்தின் பின்பும் இரு வருட காலம் எவ்வித சம்பந்தமும் இன்றி அன்னார் வாழ்ந்தாரகள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது 52.
3. 52 முதல் 60 வயது வரை,  அரசியல், சமூக தேவைக்காக  பல முறை மணமுடிக்கும் அவசியம் ஏற்பட்டன. இங்கு காம இச்சைக்கு எவ்வித காரணமும் இல்லை. இரு வருடங்கள் தனி மனிதனாக வாழ்ந்த பின் இஸ்லாத்தின் முதல் விதவை 80 வயதான சவ்தா (ரலி)வை கௌரவிக்கும் நோக்கத்தில் திருமணம் செய்தார்கள். காம இச்சைக்கு இங்கும் சந்தர்ப்பமே இல்லை.

இஸ்லாத்தை பரப்ப உடலாலும் சிந்தனையாலும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் 52  வயதில்,  திடீரென காம இச்சை தலை தூக்கியது என்று குற்றம் சாட்டுவது எவ்வகையிலும் பொருத்தமில்லை.


ஆயிஷா (ரலி) அவர்களை ஆறு வயதில் திருமணம் செய்ய காரணம் என்ன?

அல்லாஹ்வின் விருப்பம் என்பதை கேட்டுக்கொண்டு சரி என்றால் அதிக விளக்கம் தேவை இல்லை, ஆனால் பலரின் ஏன் சில இஸ்லாமியர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை, சிறுமியை திருமணம் செய்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றுதான் பலர் விமர்சிக்கின்றனர்.

1. அன்றைய காலக்கட்டத்தில், இன்றுபோல் கம்ப்யூட்டரே மற்ற சாதனங்களோ பதிவு செய்வதற்கு இல்லை, ஏன் பேப்பர் கூட அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை, குரான் எலும்புகளின் விலங்குகளின் தோலில் தான் எழுதப்பட்டுள்ளது, அப்படி இருந்த காலகட்டத்தில் மொத்த நபி மொழியில் 1/3  நபிமொழிகளை அறிவித்தவர் தான் ஆயிஷா (ரலி), இது எப்படி சாத்தியம் என்றால் பசுமாரத்தாணிபோல் என்ற பழமொழிக்கொப்ப, சிறுவயதில் எளிமையாக மனனம் செய்தார்கள்.

2. பல குரான் வசனங்களுக்கு வரலாற்று ஆதாரத்தோடு விளக்கம் அளிக்கும் வல்லமை பெற்றவர் ஆயிஷா (ரலி)

3. பல ஹதீஸ்களை வல்லுநர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்ற அளவுக்கு பாண்டித்தியம் பெற்றவர்கள் ஆயிஷா (ரலி)

4. இஸ்லாம் எல்லா விஷயத்திலும் வரைமுறைகளை வகுத்துள்ளது, பெண்கள் சம்பந்தமான மாதவிடாய், உடலுறவு, கர்ப்பகாலத்தீட்டு, நபி (ஸல்) அவர்களின் அன்றாட வாழ்வியல் முறைகளை என்று பல சட்டங்களை அவர்கள் மூலம் தான் இந்த இஸ்லாமிய சமுதாயம் அடைந்தது.

இன்னும் சொல்லவேண்டும் என்றால் தன் வாழ்நாளை இஸ்லாத்திற்க்காக அர்ப்பணித்தவர் தான் ஆயிஷா (ரலி),

எல்லோருக்கும் (விமர்சிப்பவர்களுக்கு) அவர்கள் மீது பரிதாபம் வரும்,  காரணம் அவர்களை ஆறுவயதில் ஸல் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்று, ஆனால் முஸ்லிம்கள் அவர்களின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியம் அடைகிறார்கள்.

முஹம்மது (ஸல்) க்கு ஓய்வு நேரம் இருந்ததா?

சாதாரணமான ஆட்களே நான் ரொம்ப பிசி, நேரமே இல்லை எனும்போது, உலகமக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக வந்த முத்து முஹம்மது (ஸல்) அவர்கள் எப்போதும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொருநாளும் கடமையான தொழுகை, உபரித்தொழுகை, இரவு நேரங்களில் ஒருநாள் கூட விடாமல் (அதாவது ராமாலினிலும் ரமலான் அல்லாத காலத்திலும்) நீண்ட நேரம் தொழக்கூடியவராக இருந்தார்கள்.

இதன் இடையில் குரானை ஓதுதல், நோயாளிக்கு காணுதல், மக்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்தல், மக்களிடையேயான பிணக்குகளை தீர்த்தல், உமரா, ஹஜ், பலப்பல போர்கள் என்று கணக்கிலடங்காத செயல்களை தொடர்ந்து செய்துகொண்டிருந்த நபி ஸல் அவர்களுக்கு எங்கே நேரம் இருந்திருக்கும்?.

எப்பொழுதும் நபி ஸல் அவர்களை மக்கள் சூழ்ந்துகொண்டு பல கேள்விகளை கேட்டவாறு இருந்த போது, அல்லாஹ்வே, உங்கள் தூதரை ஸல் கொஞ்சம் ஓய்வெடுக்க அனுமதியுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக உழைத்த உத்தமனை பார்த்து இன்று பல பதர்கள் அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமா சிறு வயது பெண்ணை திருமணம் செய்தார்கள்?

1. ராமனுக்கு 12  வயதிருக்கும் போது 6  வயதான சீதாவை கல்யாணம் முடித்தகாக பல குறிப்புகள் சொல்கின்றன.
2. 15  வயதான ராதையை 11  வயதே ஆனா கிருஷ்ணன் திருமணம் முடித்தார்.
3. வேதங்களிலும், மனுஸ்மிருதியிலும் வயதுக்கு வந்தவுடன் திருமணம் முடிக்கவேண்டும் என்றும், சில இடங்களில் வயதுக்கு வராமலே திருமணம் செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. பைபிளிலும் பல இறைத்தூதர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நபி ஸல் அவர்களுக்கும் ஆயிஷா ரலி அவர்களுக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு விமர்சிப்பது தவறானது. குழந்தை திருமணம் தவறு என்றால் ராமன், கிருஷ்ணன் மற்றும் பைபிளில்  செய்ததும் தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும், இல்லை என்றால் முஹம்மது ஸல் அவர்கள் செய்தததை ஆதரிக்கவேண்டும்.

கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறவேண்டும் என்றது போல் இல்லாமல் விதவை திருமணத்தையும் செய்தது இஸ்லாம் தான், அதற்க்கான முன்னோடி முஹம்மது ஸல் அவர்களே. நபி ஸல் அவர்களின் 12 மனைவிகளில் 11 மனைவிகள் மறுமணம் புரிந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்த வரலாறு:

ஜைத் என்பவர் முஹம்மது ஸல் அவர்களின்  முன்னாள் வளர்ப்பு மகனாவார். உங்களால் வளர்க்கப்படுபவர்கள் உங்கள் பிள்ளைகளாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கட்டளையிட்ட பின் ”ஸைத், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன்" என்று கூறுவதை நபித்தோழர்கள் நிறுத்திக் கொண்டனர்.

இவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மாமி மகள் ஸைனபை மணமுடித்துக் கொடுத்திருந்தனர். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற சூழ்நிலையில் அவரை ஸைத் விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக இவ்வசனம் (33:37) கூறுகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகனை, மகன் எனக் கருதி மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி வந்தது.

வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் மீது ஆசைப்பட்டு, ஸைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆசை இருந்திருந்தால் கன்னிப் பருவத்திலேயே ஸைனபை அவர்கள் திருமணம் செய்திருக்க முடியும். ஏனெனில் அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். அவர்கள் தான் ஸைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.

எனவே இறைவனின் நாட்டப்படியே இத்திருமணம் நடந்தது. இளமையோடு இருக்கும்போது அவரை மணந்து கொள்ளாமல், பல வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

மிக முக்கியமாக வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தால் சமுதாயம் என்ன சொல்லும் என்று முஹம்மது ஸல் அவர்கள் பயந்தார்கள், இருந்தாலும் இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.


முஹம்மது ஸல் அவர்களின் மனைவியர்கள் ஏன் மூமின்களின் தாய்?

ஒரு பெண்ணின் இரண்டாவது கணவன் முதல் கணவனை விட சம அந்தஸ்தில் அல்லது உயர்ந்த அந்தஸ்த்தில் தருவேன் என்ற இறைவனின் வாக்குப்படி, முஹம்மது ஸல் அவர்களுக்கு சமமாகவோ அல்லது உயர்ந்தவராகவோ இவ்வுலகில் இல்லை என்ற காரணத்தாலும், ஸல் அவர்களின் மனைவிமார்களை துன்புறுத்த யாருக்கும் உரிமை இல்லை என்ற காரணத்தாலும், அவர்களை மற்றவர்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டது, ஆகையால் அவர்கள் மூமின்களின் தாய்கள் ஆவார்கள்.

பெண்களை கவுரவித்த இஸ்லாம்:

இஸ்லாம் மட்டுமே பெண்களுக்கு கல்வியை கட்டாயம் ஆகியது, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்தது, மஹர் என்ற மணக்கொடையை வாங்கிக்கொள்ள உரிமையை கொடுத்தது, சொத்தில் பங்கு, மறுமணம், தாயின் காலடியில் சொர்க்கம் என்று பலவிதத்தில் பெண்களை கவுரப்படுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக வழிபாட்டு தளத்தில் சம உரிமையை (ஆண் பெண் கலப்பு இல்லாமல்) கொடுத்தது, அப்படி இருக்கும் போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மட்டும் எப்படி இஸ்லாம் துரோகம் செய்யும்?

அறிவுடையோர் சிந்திப்பீராக.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...