Thursday, January 10, 2019

7. இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?-1


உலகில் தோன்றிய மதம் அல்லது சமுதாயத்தில் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று பார்த்தால் எப்படி இஸ்லாம் பெண்களை உயர்வு படுத்துகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

கிரேக்கர்கள்:

கிரேக்கர்கள்  பெண்களை விற்பனைப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே வழங்கப்பட்டன. அங்கு பெண்களுக்கு சொத்துரிமை, கொடுக்கல் வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன.
அவர்களில் பிரபல்யமிக்கவராகத் திகழ்ந்த சோக்ரடீஸ் என்பவர், 'பெண்கள் இருப்பது உலகின் மிகப் பெரிய அழிவிற்கு மூல காரணம். நிச்சியமாக பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கிறது என்றும், அதிலுள்ளதை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டவுடனேயே மரணித்து விடுகின்றன' என்றார்.

இந்தியர்கள்:

 பெண்களின் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கணவன் மரணித்து விட்டால் அவனோடு சேர்த்து அவனது மனைவியும் எரித்து விடுவார்கள். இதற்கு 'உடன்கட்டை' ஏறுதல் எனப்படுகிறது.
அதேபோல், கணவன் இறந்து விட்டால் போதும்! விதவைப் பெண்ணுக்கு, சமுதாய மக்கள் மொட்டையடித்து விடுவர். வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில், மூளி என்று முடக்கி வைத்தனர். பாயில் படுக்க விடாமல், கூலாங் கற்களில் படுக்க வைப்பார்கள்.ருசிகரமான உணவும் உடுத்த உடையும் வழங்காமல் இருட்டறையில் அடைத்துவிடுவார்கள்.
ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலிளூ தாலி அறுத்தவள். நல்ல காரியத்திற்குச் செல்வோருக்கு முன்னால் அவள் குறுக்கே வந்து விட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்ட சகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை செய்கின்ற கொடுமை இந்திய நாட்டில் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
மொட்டை அடித்து, வதை செய்யும் கொடுமையுடன் நின்று விடுவதில்லை. இறந்த கணவனை எரிக்கும் போது அந்த நெருப்பி(சிதையி)ல் மனைவியையும் தள்ளி விட்டு, உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் கொழுந்து விட்டு எரியச் செய்து சாம்பலாக்கிவிடுவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.
தன்னைக் காப்பாற்றும்படி கதறிய கதறல், மவ்ட்டீக சிந்தனையில் ஊறிப் போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை. மறுமணம் புரிந்து மறு வாழ்வு காண வேண்டிய ஒரு மலர் குருட்டு நம்பிக்கையின் கோரத் தீயில் பலியாகிப் போகின்றாள். புத்திரிகைகள் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடித்துக் காட்டின. பாரதீய ஜனதா கட்சி மட்டும் அப்போது இந்த அநியாயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

உடன்கட்டை ஏறவில்லை என்றால், கணவனை இழந்த கைம்பெண் இப்படிச் சாகவில்லை என்றால், அவளைச் சாகடிப்பதற்குச் சமுதாயம் வேறொரு முறையைக் கையாளும்.
ஆண்களோ அல்லது திருமணம் முடித்த பெண்களோ பார்க்காதவாறு விதவைப் பெண் ஒரு கருப்புத் திரையில் மூடப்பட்ட, ஆட அசைய முடியாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தனியறையில் அடைக்கப்படுவாள்.
நாள் முழுவதும் தரையில் தான் உட்கார வேண்டும். அதுவும் தன் இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து குத்த வைத்து உட்கார வேண்டும். ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். இதிலேயே அவள் மெலிந்து சாக வேண்டும். இதுவும் ராஜஸ்தானில் நடைபெறும் கொடுமையாகும்.
இவை விதவைப் பெண்கள் அனுபவிக்கும் விதவிதமான கொடுமைகள். ஏற்கனவே கணவனை இழந்து தவிக்கும் அவளுக்குச் சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக, அரங்கேற்றும் அக்கிரமங்கள், இழைக்கும் அநியாயங்கள் இவை.
உடன் கட்டை ஏற்றி, உயிருடன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை இந்திய நாட்டில் பார்ப்பனிய மதத்தில் உள்ள நடைமுறையாகும்.

சீனர்கள்:

பண்டைய கால சீனர்கள் பெண்களை விற்கவும், உயிரோடு எரிக்கவும் செய்தனர்.

யூதர்கள்:

 யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர்.இச்சிந்தனைக்கு பைபிள்தான் காரணம். பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், வீட்டையும் பாத்திரங்களையும் அவள் தொட்டால் அசுத்தமாகி விடும் என்று கருதி ஒதுக்கி வைத்தனர்.

யூத மதத்தில் விதவையின் பரிதாப நிலை

யூத மதம் மிகவும் மோசமாகப் பெண்னை நோக்ககிறது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்குக் குழந்தை இல்லையெனில் அவள் கண்டிப்பாகக் கணவனின் தம்பியைத் திருமணம் முடித்தாக வேண்டும் என்று அந்த மதம் நிபந்தனை விதிக்கிறது. கணவனின் சந்ததி தழைப்பதற்காக இந்த ஏற்பாடு! இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் பார்க்கக் கூடியதாக உள்ளது.
'அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
ஆதியாகாமம் 38:8
இதில் வேடிக்கை என்னவெனில், இறந்தவனின் சகோதரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அவன் தன் அண்ணியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். விதவையான அந்தப் பெண்ணிடம் சம்மதம் கூடப் பெறப்படாது. காரணம், அவள் இறந்தவனின் மனைவியாக, ஒரு பெண்ணாக நடத்தப்படமாட்டாள். மாறாக, அவள் இறந்தவனின் சொத்தாகவே கருதப்படுவாள்.

அது மட்டுமன்றி விதவை களையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் யூத உயர் குலத்தோர் மற்றும் மத குருமார்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது.
கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம் பண்ண வேண்டும்.விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம் பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம் பண்ணக் கடவன்.
அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாகளூ நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.' லேவியராகமம் 21:13-15
இவ்வாறு யூத மதம் விதவைப் பெண்களுக்கு அநீதி இழைக்கிறதுளூ கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

கிறிஸ்தவர்கள்:

 கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் 'ஏஜண்ட'; எனக் கருதினர். கிறிஸ்தவ பாதிரியொருவர், 'பெண் மனித இனத்தைச் சேராதவள்' எனக் கூறினார். செம்பூனா, பென்தாரா என்ற கிறிஸ்தவன் 'நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். ஆவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதாதீர்கள். நிச்சியமாக நீங்கள் காண்பது ஷைத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் சத்தம் பாம்பின் சீற்றம்தான்' என்றான்
.
அதேபோல் பைபிளின் உன்னதப்பாட்டு பெண்ணைக் கேவலப்படுத்தி, கள்ள உறவை ஆதரிக்கிறது. டொரண்டோவில் ஒரு கிறிஸ்தவன் பைபிளின் எசக்கியேல் என்ற அத்தியாயத்தை அச்சிட்டு விற்றான்.உடனே அவனை காவல் துறை மஞ்சல் பத்திரிகை வெளியட்டதாக கைது செய்தது. அவன் நீதி மன்றத்தில் இது எனது கைச்சரக்கல்ல.பைபிள் வாசகங்கள் என்றவுடன் நீதி மன்றம் வெட்கித் தலை குனிந்து அவனை விடுதலை செய்தது.

ஆங்கிலேயர்:

 19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்படவில்லை.

ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம்:

 1567ம் ஆண்டு ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாது என்று சட்டமியற்றியது. இவ்வாறே 8வது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமான இருப்பதர் பிஞ்சிலே படிப்பது கூடாது என்று சட்டமியற்றியது.

பிரஞ்சு நாட்டவர்: 

பிரஞ்சு நாட்டவர் 1586ம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். 1805ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் என்றே உள்ளது. மேலும், மனைவியின் விலையை 6 பென்ஷி, அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள். பெண்ணடிமைத்தனம் உலகம் முழுதும் இவ்வாறு கோலோச்சிக் கொண்டிருந்தது.

பெண்ணினம் மீதான அரேபிய ஆணாதிக்கம்

அரபுக்கள் திருமணம் என்ற பெயரால் விபச்சாரம் புரிந்து வந்தனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அறிவிக்கும் பின்வரும் செய்தி அறியாமை சமூகத்தின் ஆணாதிக்கத்தை அப்பட்டமாக அடையாளப்படுத்தகிறது.
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.
அவை:

 முதல் வகை –
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ, அல்லது அவரின் மகளையோ பெண் பேசி 'மஹர்' (விவாக (மண)க் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

 இரண்டாம் வகை -
 ஒருவர் தம் மனைவியிடம், 'நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தொடமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகை
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது', என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) 'இவன் உங்கள் மகன், இன்னாரே!', என்றே விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபரிடம் வழங்கப்படும்;. அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகை
 அதிகமான ஆண்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை லி பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.


தலாக் சொல்வதில் முறைகேடு 

ஆரம்ப மக்கள் தம் மனைவியை எவ்வளவு தடவை தலாக் விட விரும்பினார்களோ அத்தனை தடவை தலாக் கூறி வந்தனர். இத்தாவில் இருக்கும் போதே அவளை மீட்டிக்கொண்டால் அவள் அவளது மனைவியாக நீடிப்பாள். இவ்வாறு நூறு தடவை அலலது அதை விட அதிகமான தலாக் கூறினாலும் சரியே. அப்போது ஒரு மனிதர் தன் மனைவிடம், 'நீ என்னிடமிருந்து பிரிந்து செல்லும் விதமாக தலாக் கூறவும் மாட்டேன். உன்னோடு வாழவும் மாட்டேன்', என்றார். 'அது எப்படி முடியும்?', என்று அவரது மனைவி கேட்ட போது, 'உன்னை தலாக் விடுவேன் உன் இத்தா முடியும் தருவாயில் உன்னை மீட்டிக்கொள்கிறேன்', என்று அவர் கூறினார். உடனே அப்பென் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து இதை தெரிவித்தார்கள். நுபி(ஸல்) அவர்களும் மவுனமாக இருந்தார்கள். அப்போது பின் வரும் வசனம் இறங்கியது.

தலாக் என்பது இரண்டு தடவைதான். அதன் பிறகு நல்லமுறையில் மீட்டிக்கொள்ள வேண்டும் அல்லது நல்ல முறையில் விட்டு விட வேண்டும். இதன் பிறகு ஏற்கனவே தலாக் விட்டவர்களும் விடாதவர்களும் பழைய கணக்கை எடுத்துககொள்ளாமல் புதிதாக கணக்கு கொள்ளானார்கள்.
அறிவிப்பவர்: உர்வா (ரழி) (நூல் : திர்மிதி 1113)

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர்

'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, 'நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது' என்பதே. பெற்றோருக்கு  உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (திருக்குர்ஆன் 6: 151)

அரேபியாவில் அருதலிகளின் அவல நிலை

பண்டைய காலம் முதல் அரபியர்களிடம் விதவைகளை மணம் முடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. எனினும், அவர்கள் ஒரு கொடுமையை அரங்கேற்றி வந்தனர்.
சகோதரர்களின் மனைவிகளை சொத்துக்களைப் போல் பாவிப்பது யூதர்களின் நடைமுறை என்றால், அரபியர்கள் தங்கள் தந்தையரின் மனைவியரைச் சொத்தாகப் பாவித்து அவர்களைக் கட்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு விதவைகள் மற்றும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் விஷயத்தில் உலக மதங்கள் அனைத்தும் அநீதியையும், அக்கிரமத்தையும் இழைப்பதைப் பார்க்கிறோம். அல்குர்ஆன் இறங்கி அந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்ளூ அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

கைவிடப்பட்ட கைம்பெண்களை திருமணம் முடித்து வைக்க இந்த வசனம் சொல்கிறது. யூத, கிறித்தவ, இந்து மதங்கள் போன்று விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் சாபக்கேடுகளாக, சமுதாயச் சுமைகளாக இஸ்லாம் கருதவில்லை.

கைம்பெண்களின் சம்மதம் கேட்காமலேயே அவளைக் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கும் பழக்கத்தை யூத மதம் கொண்டிருப்பதைக் கண்டோம். கணவனின் சொத்துக்களில் ஒன்றாக அவளையும் பாவிக்கும் பொழுது, அந்தப் பெண்ணிடம் எப்படி சம்மதம் கேட்கச் சொல்ல முடியும்?
இதோ இஸ்லாம் மார்க்கத்தின் இனிய தூதர், இது தொடர்பாக வழங்கும் உரிமை முழக்கத்தைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'கன்னி கழிந்த பெண்ணை அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று சொன்னார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹன்ஸா பின்த் கிதாம்(ரலி) நூல்: புகாரி 5136
எவ்வளவு பெரிய விடுதலை உணர்வை இஸ்லாம் வழங்குகிறது என்று பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணம் முடித்த பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விதவையர் தான் என்றால், விதவைகளின் மறு வாழ்வுக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இறந்து விட்ட தந்தையின் மனைவியரை, தந்தையின் சொத்தாகப் பாவித்து, பிள்ளைகள் மணமுடிக்கும் இழிந்த வழக்கம் அரபியர்களிடம் இருந்ததைக் கண்டோம். இந்த இழிவான பழக்கத்தை அல்குர்ஆன், அரபியர்களிடமிருந்து அடியோடு வேரறுத்து எறிந்து விடுகின்றது.

'உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.' (அல்குர்ஆன் 4:22)


மாதவிடாய்

மாதவிடாய் என்பது மாதந் தோறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கைக் கூறாகும். கரு முட்டைகள் உடைந்து வெளிவரும் கழிவாகும்.
பெண்களுக்கு இவ்வாறு மாதவிடாய் ஏற்படும் போது மக்கள், அப்பெண்ணைத் தீண்டத் தகாதவளாகப் பார்க்கின்றனர். அவர்களைத் தீட்டுப்பட்டவர்கள் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. வீட்டுக்குத் தூரமானவர்கள் என்றும் குறிப்பிட்டு, அவ்வாறே நடத்தவும் செய்கின்றனர். அப்படி ஓர் அருவருப்பான தோற்றத்தை மதங்கள் மக்களிடம் உருவாக்கி விட்டிருக்கின்றன.

யூத மதம் இதில் முன்னிலை வகிக்கின்றது.அதற்கான ஆதாரத்தை அவர்களின் வேதநூலே விவரிக்கிறது.
 'சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்ளூ அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.
அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக் கொள்ளுகிறாளோ எதின் மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.'
லேவியராகமம் 15:19-23


யூத மதத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு அமைந்த பார்ப்பன மதத்தின் மனு தர்மமும் இது போன்றே குறிப்பிடுகின்றது.
சண்டாளன், விலக்கானவள், பிணம், பிணத்தைத் தொட்டவர் ஆகியவர்களைத் தொட்டால் நீராடுக! தீட்டுக்கு மாற்று என்ற தலைப்பின் கீழ் 111வது வசனத்தில் மனு தர்மம் இதைக் கூறுகின்றது.

இஸ்லாம் தான் இந்தக் கொடுமைகளைக் களைந்து எறிகின்றது. இது பற்றி திருக்குர்ஆன் கூறுகின்றது.

'மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். 'அது ஓர் தொல்லை. எனவே, மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:222)

இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகிவிட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,

'மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!'  (அல்குர்ஆன் 2:222)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடலுறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் (நபி (ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை' என்று பேசிக் கொண்டனர்.... அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 455, அபூதாவூத் 225


மாதவிடாய் பெண்களிடம் இல்லறத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆகும் என்று அறிவித்து, பெண்களின் மீது பூட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலிகளை இஸ்லாம் உடைத்தெறிகின்றது.

இப்படி இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களும், சமுதாயமும் பெண்களை இழிவாகவோ அல்லது பொருளாகவோ மட்டுமே பார்க்கிறது, இஸ்லாம் மட்டுமே பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறது.

இஸ்லாம் எப்படி பெண்களை பெருமைப்படுத்துகிறது

1. எவர் ஒருவர் இரண்டு பெண்குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து கொடுக்கிறாரோ அவரும் நானும் சொர்க்கத்தில் நெருக்கமாக இருப்போம் என்று இரு விரல்களை காட்டினார்கள் நபி (ஸல்)

2. வயதுக்கு வந்த பெண் எல்லா வணக்க வழிபாடுகளையும் கட்டாயமாக செய்ய வேண்டும்.

3. மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் தொழத்தேவை இல்லை, ஆனால் நோன்பை மற்ற நாட்களில் நோற்று பூர்த்தி செய்யவேண்டும்.

4. மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு, மணமாகப்போகும் பெண் ஒப்புதலோடுதான் திருமணம் நடக்கும்.

5. மணமுடிக்கப்போகும் ஆணிடம் மஹர் தொகையை கேட்டு பெற இஸ்லாம் வலியுறுத்துகிறது.

6. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.

7. ஒரு மனிதன் மிகவும் நேசிக்கக்கூடியராக அம்மா தான் இருக்கவேண்டும், பிறகு தான் அப்பா.

 8. கடமை அல்லாத தொழுகையின் போது அம்மா அழைத்தால் முறித்துவிட்டு போகவேண்டும்.



தாயைப்பற்றி இஸ்லாம் 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல் குர் ஆன் -31:13.

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அல் குர் ஆன் -46:15.

எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ  இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்;-

நான் கேட்டேன்:இறைவனின் தூதரே!!!பெண் மீது யாருக்கு
                                  அதிகமான உரிமை இருக்கின்றது?”

அண்ணல் நபிகளார் கூறினார்கள்: அவளுடைய கணவனுக்கு’.

நான் கேட்டேன்: ஆண் மீது யாருக்கு அதிகமான உரிமை இருக்கின்றது?’’

அண்ணல் நபிகளார் விடையளித்தார்கள்;அவனுடைய தாய்க்கு’’
ஹாகிம்-7244


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து,
இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.
புகாரி-5971.

அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். புகாரி-5975.

மனைவியை பற்றி இஸ்லாம் 

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல் குர்ஆன்- 30:21.

அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
அல்குர் ஆன் -4:19.

முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அல் குர் ஆன் -4:129 

உங்களில் எவர் தம் மனைவியிடம் நல்லவராக 
இருக்கின்றாரோ அவர்தாம் உங்களில் நல்லவர். திர்மிதீ-1195.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...