நான்கு பேர் கொண்ட குழு ஹனுமான் கோவில் மீது மாட்டுக்கறியை வீசி, கோவில் சுவற்றில் பச்சை வண்ணத்தை அடித்து ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையில் கலவரம் செய்ய முயன்றதை ஹைதராபாத் போலீஸ் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரீனி மற்றும் நிரஞ்சன் ஒரு உணவகத்தில் மது அருந்திவிட்டு இந்த தித்தத்தை தீட்டி, நாகராஜ், கிரண் குமார், ரமேஷ் மற்றும் தயாநிந்த் சிங் ஆகியோரை வைத்து திட்டத்தை நிறைவேற்றினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாகராஜ், கிரண், ரமேஷ் மற்றும் தயானட் ஆகியோர் சாம்பேட்டேயில் ஒரு மது கடையில் கூடி, கோவிலில் மாட்டுக்கறியை எறிவதை பற்றி கலந்துரையாடி, பிறகு மதுபானம் சாப்பிட்டனர். பிறகு அங்கிருந்து வெளியேறி நாகராஜூ மற்றும் ரமேஷ் மாட்டுக் கால்கள் இரண்டு துண்டுகள் மற்றும் ஒரு பெயிண்ட் பாட்டில் வாங்கினர். அவர்கள் கோவிலுக்கு சென்று கோயில் சுவர்களில் பச்சை வண்ணத்தை பூசினார், மாட்டுக்காலை கோவிலுக்குள் வீசிவிட்டு சென்றனர்.
இதனால் நடந்த கலவரத்தால் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், கோவில் சேதமடைந்தது. இந்த கலவரத்திற்கு முன்னும் பின்னும் பிரவின் தொகாடியா வந்துபோனது குறிப்பிடத்தக்கது. தொகாடியா ஹைதராபாத்துக்கு வந்து மாநில அரசை விமர்ச்சித்துவிட்டு சென்றவுடன், கலவரம் ஹைட்ரபாத் மற்றும் செக்கந்தராபாத் பகுதியில் கலவரம் அதிகமானது, மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிஜேபி யினர் அந்த மதவெறியர்களை விடுவிக்குமாறு தர்ணா நடத்தினர்.
https://www.news18.com/news/india/4-held-for-old-city-communal-riots-469243.html
http://www.ummid.com/news/2012/April/29.04.2012/4_held_in_hyderabad_case.htm
No comments:
Post a Comment