Tuesday, January 1, 2019

2. பலதாரமணம்


பலதாரமணம் இன்று ஏதோ ஒரு கிரிமினல் குற்றமாகவும், அதே நேரத்தில் வெறுக்கத்தக்க விஷயமான விபச்சாரம் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாக மட்டுமல்லாமல், உயர்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மனிதர்கள் தவறான பாதையில் உள்ளார்கள் என்பதற்கு இதை விட வேறு எதுவும் சாட்சியம் வேண்டாம்.

உலகில் உள்ள எல்லா மதத்திலும், எல்லா வேத புத்தகத்திலும் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது இன்று இஸ்லாமியர்களுக்கான சொத்தாகவே பார்க்கப்படுகிறது. ஏதோ வெறுக்கத்தக்க விஷயமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

ஹிந்து மதத்தில் பலதாரமணம்:

1. கடவுளாக சித்தரிக்கப்படும் ராமனின் தந்தை தசரதனுக்கு 3 மனைவிகள், சில குறிப்புகளில் மனைவி என்று சொல்லப்படுகிறது.

2. கடவுளாக சித்தரிக்கப்படும் கிருஷ்ணாவுக்கு 16,100 மனைவிகளோடு 8 மனைவிகள்.

3.  கடவுள் கிருஷ்ணாவின் தந்தை வாசுதேவுக்கு 14 மனைவிகள்.

4. சந்திர கடவுளான சோமனுக்கு 27 மனைவிகள்.

5. ருத்ரனுக்கு 11 மனைவிகள்.

6. கணேஷுக்கு 2 மனைவிகள்.

7. அக்னிக்கு 2 மனைவிகள்.

8. விஷ்ணுவுக்கு 2 மனைவிகள்.

9. பிரம்மாவுக்கு 2  மனைவிகள்.

10. யமராஜாவுக்கு 10 மனைவிகள்.

11. கருடாவுக்கு பலமனைவிகள்.

12. மனுவுக்கு 10  மனைவிகள்.

என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது

சரி இதெல்லாம் கடவுளுக்கு மனிதனுக்கு? என்று நீங்கள் கேட்டால், மநுஸ்மிருதி படி

பிராமிணன்4 மனைவிகளையும், ஷத்ரியன் 3 மனைவிகளையும், வைசியன் 2 மனைவிகளையும், சூத்திரன் 1 மனைவியையும் திருமணம் செய்யலாம் என்று உள்ளது.

மேலதிக விவரங்களுக்கு கீழே சுட்டவும்.


கிருஸ்துவத்தில் பலதாரமணத்தை பற்றி பார்ப்போம். 


பழைய ஏற்பாட்டின் படி 40  க்கும் அதிகமானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை கொண்டுள்ளனர், ஒரு சாலமனுக்கு 700  மனைவிகள் இருந்தது என்று பைபிள் கூறுகிறது. ஆனால் இன்று திருச்சபைகள் இறைவன் அனுமதித்த பலதார மணத்தை எதிர்த்தும், அதே நேரத்தில் தடுக்கப்பட்ட பன்றிக்கறியை ஆதரித்தும் தீர்ப்புகள் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை. 

மேலதிக விபரங்களுக்கு கீழே சுட்டவும்.




எந்த நாட்டிலும் இல்லாத கலாச்சாரமான ஒரு பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் முடிப்பதும் இந்து மதத்தில் உள்ளது உதாரணம், பாஞ்சாலி.

இப்படி எல்லா வகையிலும் பலதாரமணம் ஆதரிக்கப்பட்டாலும் இன்று அது ஏதோ ஒரு பாவம் போல பார்க்கப்படுகிறது.

சரி இதெல்லாம் புத்தகங்களில் தானே உள்ளது நடைமுறையில் ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் பலதாரமணம் செய்துள்ளார்களா? என்றால் ஆம், முஸ்லிம்களை விட அதிகம் செய்துள்ளது ஹிந்துக்களே என்று ஆதாரம் கூறுகிறது.






1961  மற்றும் 1974 ஆகிய வருடங்களில் எடுத்த கணக்குப்படி, முஸ்லிம்களை விட ஹிந்துக்களே அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்துள்ளனர். 


சரி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவதைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

உலகத்திலேயே குரான் என்ற வேதபுனித நூல் மட்டுமே ஒரு திருமணம் போதும் என்றும் தேவை ஏற்படின் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்யலாம் என்றும் சொல்கிறது.

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

பலதாரமணம் புரிந்தால் எல்லா மனைவிகளையும் ஒருபோல பாவிக்கவேண்டும் என்றும், மஹர் கொடுத்து மணம் முடிக்கவேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது, ஆக சல்லாபம் செய்வதற்காக இஸ்லாத்தில் மணம்முடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.


இன்றிய சூழ்நிலையில் பலதாரமணம் புரிவது அவசியமா என்றால் அதற்கான விடை ஆம் என்பதாகும். காரணம் கீழே

பல நாடுகளில் 100  பெண்களுக்கு 100  க்கும் குறைவான ஆண்களே உள்ளனர்(ஆதாரம் கீழே ), இந்த நேரத்தில் சில அல்லது பல ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் முடித்தால் மட்டுமே எல்லா பெண்களுக்கும் திருமணம் நடைபெறும்,

https://photius.com/rankings/2017/population/sex_ratio_total_population_2017_1.html

ஒருபெண்ணுக்கு கணவன் கிடைக்காக போது இரண்டு வழிகளே உள்ளது, ஒன்று திருமணமான ஆணை திருமணம் செய்து எல்லா சலுகைகளையும் பெறுதல் அல்லது பொது சொத்தாக ஆகுதல் (பொது சொத்து என்றால் என்ன என்று விளக்க தேவை இல்லை என்று நினைக்கிறேன்). இதில் முதல் வழியே கண்ணியமான இஸ்லாம் காட்டித்தந்த வழியாகும்.

அறிவுள்ள சமுதாயம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஏற்கும்.

ஆனால் இந்தியா போன்ற பாம்பாட்டிகளின் தேசத்திற்கு இது பொருந்தாது, ஏனெனில் 108  ஆண்களுக்கு 100  பெண்களே உள்ளனர் (2016  ன் படி), காரணம் வரதட்சணை கொடுமை, அதற்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வு.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...