Monday, January 21, 2019

10. சொர்க்கத்தில் பெண்கள் கிடைப்பார்களா? ஹிந்துவேதம் சொல்வதென்ன?



உலகில் தோன்றிய மதங்களின் மூலம் இஸ்லாம் மட்டுமே, மனிதர்களால் சிலபல மாறுதலுக்கு உள்ளாகி இன்று இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைபோல் காட்சியளிக்கிறது, குரானில் உள்ள பல விஷயங்களில் மற்ற வேத நூல்கள் ஒத்துப்போகிறது, இந்த கட்டுரையில் மிக சுருக்கமாக மறுமை, சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி பார்ப்போம்

மறுமை


5. அக்னிஎங்கள் காணிக்கையுடன் உம்மிடம் பிரவேசித்தவரை பிதாவிடம் அனுப்புஅவர் புதிய வாழ்க்கையை ஆரம்பித்து சந்ததியை பெருக்கட்டும்.

சொர்க்கம்



17. சொர்க்கத்தின் இறைவனே நீ எங்களை வழி நடத்துவாயாக, மேலும் எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் வழிநடத்துவாயாக

26. பரிசுத்தமான அழகுடையவர்கள் நம்மை சுவர்க்கத்தில் வழி நடத்துவார்கள்

42. சுவர்க்கம் மூன்றுபகுதிகளாக உள்ளது, அது ஒன்று மற்றொன்றுபோல் தோற்றமளித்து எங்களை குழப்புகிறது.


 2. நேர்மையாக நடந்துகொண்டவர்கள், ஏழைகளுக்கு தருமம் செய்தவர்கள், இறைவனின் வழியில் தியாகம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்லுங்கள்.

4. யார் இறைவனுக்காக அறுத்து பலியிடுகிறார்களோ அவர்களுக்கு அமிர்தமும் உணவும் நிறைந்த சுவர்க்கம் கிடைக்கும்.

10. இறைவனுக்காக அறுத்து பலியிடுபவர்கள் இறைவனோடு சொர்க்கத்தில் இருப்பார்கள், அங்கு உணவருந்தி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.


இஸ்லாத்தின்படி சொர்க்கத்தில் ஆறுகள் உண்டு என்று சொல்லும்போது நம்மைப்பார்த்து பரிகாசித்தவர்களுக்கு அவர்களின் வேதங்களிலும் அப்படியே உள்ளது என்று தெரிந்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்களா?

என்னென்ன சொர்க்கத்தில் கிடைக்கும்.


குரானில் சொல்வதுபோல் பாலாறு தேனாறு ஹூருலீன்கள் என்று எல்லாமே கிடைக்கும் என்று வேதங்கள் சொல்கிறது


 6. தேனை கரையாக (தடுப்பாக) கொண்ட வெண்ணை ஏரிகள் இருக்கும், அங்கே மதுவும், பாலும், தயிரும் மற்றும் சுவை மிகுந்த நீரும் ஓடிக்கொண்டு இருக்கும்.

7. எங்கும் இனிமையாக இருக்கும் இந்த சொர்க்கத்தில் உள்ள மலர்கள் நீரோடைகளை தாண்டி உன்னை நெருங்கும் அல்லது வரவேற்கும்.


5. அக்னி, சொர்க்கவாசிகளை விருந்துக்கு அழை, அவர்களுக்கு தேவையானதை சாப்பிட கொடு, அவர்கள் பெண்களோடு சந்தோஷமாக இருக்கட்டும், நல்லவிதமாக உறங்கட்டும். மேலும் அந்த பெண்கள் தூய்மையானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இங்கே பெண்கள் கிடைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர அவர்கள் ஹூருலீன்களா என்று தெரியவில்லை, எப்படி குரானும் வேதமும் பல விஷயங்களில் ஒத்துப்போகிறது, அதில் இதுவும் ஒன்று.


18. தேவனே உன்னை வணங்கியவர்களுக்கு சொர்க்கத்தை தா, அவர்கள் அதில் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.


நரகம் பற்றி தனி பதிவில் பார்ப்போம்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...