நாம் ஏற்கனவே சொன்னதுபோல கலவரம் செய்து ஆட்சியை பிடிக்க பிஜேபி ஆல் நடத்தப்பட்ட கலவரம் தான் 1985 ல் அகமதாபாத்தில் நடந்த கலவரம். ஏதாவது ஒரு சிறிய காரணம் கிடைத்தாலும் அதை பெருசாக்கி எப்படியாவது ஆட்சியை பிடித்து மக்களை கொடுமைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் பிஜேபி 1985 ல் கையிலெடுத்த விஷயம் இட ஒதுக்கீடு. காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி ஆட்சியை பிடித்தவுடன் ஷத்ரியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினார். அதை பொறுத்துக்கொள்ளாத ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி ஷத்ரியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிராக செய்த கலவரம் தான் இது.
கலவரத்திற்க்கான காரணங்கள்.
- ) தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீட்டை 10 % ல் இருந்து 28 % ஆக ஆக்கியது.
- ) குஜராத் சட்டமன்றத்தில் 20 மந்திரிகளின் 14 மந்திரிப்பதவி ஷத்ரியர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
- முதலில் இந்துக்களின் பிரிவுகளுக்கு இடையேயான கலவரம் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியது. முதலில் அரசின் சொத்துக்களை செத்தப்படுத்திய ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல் பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்த தொடங்கியது.
- 1981 ல் இதே காரணத்துக்காக தலித்துகளுக்கு எதிராக ஒரு கலவரம் நடத்தப்பட்டது. அந்த கலவரத்தில் தக்குதலுக்கு உட்பட்ட பிஜேபி யை சேர்ந்த இந்த கலவரத்தில் தலித்துக்கு உதவிசெய்தனர் எதற்கு என்றால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த.
- கடைசியில் இந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
பிப்ரவரி 1985 ல் ஆரம்பித்த இந்த கலவரம் அக்டோபர் 1986 ல் தான் முடிந்தது, கிட்டத்தட்ட 21 மாதங்கள் இந்த கலவரம் நடந்தது.
இழப்பு
275 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் அதிகமாக காயமடைந்தனர், 10 ,000 க்கும் அதிகமானோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் பற்றிய தகவலை திரட்ட கமிசன் எதுவும் அமைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல், வாசிப்பாளர்கள் இதுபற்றி தகவல் அறிந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.
ஆதாரம்
https://www.academia.edu/21910721/Bootlegging_politics_and_corruption_state_violence_and_the_routine_practices_of_public_power_in_Gujarat_1985-2002_
https://www.thehindu.com/2000/11/09/stories/02090004.htm
https://en.wikipedia.org/wiki/1985_Gujarat_riots
https://www.revolvy.com/page/1985-Gujarat-riots
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/186461/16/15%20chapter%208.pdf
No comments:
Post a Comment