Wednesday, April 15, 2020

தப்லீக் ஜமாத்தினர் திட்டமிட்டு பரப்பிய கொரோனா - பயோ ஜிஹாத்



காலம் காலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை பல வழிகளில் எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள், முடிவு அவர்கள் வாயை மண்ணைக்கொண்டே இறைவன் மூடி இருக்கான் என்பது வரலாறு. காய்த்த மரம் கல்லடிப்படும் என்பதுபோல, இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதால் ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களுக்கு இஸ்லாத்தை விமர்சித்து கொண்டே இருக்கிறார்கள்.



அவர்களின் விமர்சனங்களால் வெற்றிபெற முடியாத போது அவதூறை கைலெடுக்கிறார்கள். பன்னெடுங்காலமாக அவர்கள் இஸ்லாத்தோடு நடத்தும் போரில் முக்கிய போர் அறிவுப்போர், இதில் இஸ்லாமிய எதிரிகள் பல வெற்றிகளை கண்டுள்ளனர். அதில் முக்கியமானது ஜிஹாத், அது லவ் ஜிஹாத் , பயோ ஜிஹாத் என்று நீண்டு கொண்டு போகிறது.



1800 ல் இருந்து 1950 வரை 60,000 புத்தகங்களை இஸ்லாத்திற்கு எதிராக எழுதியுள்ளனர், அந்த மூடர்களுக்கு தெரியவில்லை இஸ்லாம் என்ற ஜோதியை வாயால் ஊத்தி அணைக்கமுடியாது என்று.



இன்று தப்லீக் ஜமாத்தால் மட்டுமே இந்தியாவில் கொரோனா பரவியதாக கட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் வெற்றிபெற்று விட்டனர், ஆனால் உண்மை அதுவல்ல. பாசிஸ்டுகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இதை நம்பலாம், தங்களின் கையாலாகாத தனத்தை மூடி மறைக்கலாம், அனால் உண்மை ஒருபோதும் தூங்காது.



கொரோனா இந்தியாவுக்கு வந்த பாதையை அறிந்துகொண்டால் எப்படி, யாரால் இந்தியாவில் கொரோனா பரவியது என்பதை எளிதில் அறியலாம்.



1. முதல் கரோனா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாள் - 17-11-2019 – South Morning China Post. (Source: https://www.livescience.com/first-case-coronavirus-found.html)




2. நாம் இப்போதே கொரோனாவை தடுக்க ஆயத்தமாகவேண்டும்
இது தான் சரியான நேரம், பயப்படவேண்டாம்,
இது அறிவியலுக்கான நேரம், வந்தந்திகளுக்கான நேரம் அல்ல,
இது ஒற்றுமைக்கான நேரம், களங்கத்திற்க்கான நேரம் அல்ல என்று – 30-01-2020 - Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) - Director-General of the World Health Organization கூறினார். (Source: https://news.un.org/en/story/2020/01/1056372)
இந்த நேரத்தில் CAA விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தியது.


3. முதல் கரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டது 30-01-2020 (Source: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/coronavirus-crisis-heres-total-number-of-confirmed-cases-in-india-as-per-health-ministry/articleshow/74589499.cms?from=mdr)



4. கரோனா வைரஸ் காரணமாக ஏர்போர்ட்டுகளில் பரிசோதனைகளை தொடங்கியது - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன்.



5. 28,529 நபர்களை சந்தேகித்து, கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் சொன்னது – 05-03-2020.


6. 288 பேரை பரிசோதித்ததில் 5 பேருக்கு கொரோனா உள்ளது என்று கேரளா அரசு சொன்னது – 28-01-2020.


7. இந்தியாவில் 23 நோயாளிகளை கண்டறிந்ததாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாள் 04-03-2020.


8. 3 நாட்களுக்கு முன் டெல்லியில் ஒருவரையும் தெலுங்கானாவை சேர்ந்த மற்றொருவரையும் கொரானா தாக்கியதை கண்டுபிடித்தோம், ஒருவர் இத்தாலியில் இருந்தும் மற்றொருவர் துபாயில் இருந்தும் வந்தனர் என ஹர்ஷ் வர்தான் சொன்னது 05-03-2020.


9. மேலும் ஆக்ராவை சேர்ந்த ஆறுபேரை பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்கள் டெல்லியில் இருந்து தொற்றை பெற்றனர். இத்தாலியில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலாவுக்கு வந்த கணவன் மனைவிக்கு இருந்த கொரோனா பஸ் ஓட்டுநர் முதல் கொண்டு 14 பேர்களுக்கு பரவியது.



10. நாங்கள் எல்லா வகையிலும் கொரோனாவை முறியடிக்க தயார் நிலையில் 17-01-2020 ல் இருந்து உள்ளோம் என்று ஹர்ஷ் வரதன் என்று சொன்னார்.


Source: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/govt-taking-all-measures-to-prevent-spread-of-coronavirus/articleshow/74494313.cms?from=mdr).



ஆக இந்தியா 17-01-2020 அன்று தொட்டே கொரோனாவை கட்டுக்குள் வைக்க எல்லா நடவடிக்கையும் எடுத்துவிட்டது, பிறகு எப்படி கொரோனா இந்தியா முழுக்க பரவியது? காரணம் தப்லீக் ஜமாத் அப்படித்தானே. உண்மையா பொய்யா என்பதை ஆராய்வோம்.




தப்லீக் ஜமாஅத் மாநாடு நடக்க திட்டமிட்ட தேதிகள் மார்ச் 10, 12-13  மற்றும் 18. முதல் ஊரடங்கு மார்ச் 23 அன்றுதான் போடப்பட்டது, ஆக ஊரடங்கை மீறி இந்த கூட்டம் நடக்கவில்லை, இந்த மாநாடு நடந்தது குற்றம் என்றால் இதற்க்கு முன்னும் பின்னும் பல கூட்டங்கள் நடந்தது அது குற்றம் ஆகாதா? அதன் மூலம் கொரோனா பரவாதா? எல்லா வகையிலும் தோல்வியுற்ற கையாலாகாத அரசு தப்லீக் ஜமாத்தை குற்றம் சுமத்துகிறது.




முதல் கொரோனா கேரளாவில் 30-01-2020 அன்று கண்டறியப்பட்ட உடன் ஏன் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கல? இத்தாலியில் இருந்து சுற்றுலாவுக்கு வந்தவர்கள் மூலம் டெல்லியில் கொரோனா பரவியபோது அரசு என்ன செய்து கொண்டு இருந்தது?


கொரோனாவின் அச்சம் இருந்த போது நமஸ்தே ட்ரம்ப் என்று ட்ரம்பை February 24  அன்று குஜராத் அழைத்துவந்து, 100  கோடிக்கு கட்டிய குட்டி சுவரை காட்டியது இந்திய அரசு. அதில் மொத்தம் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 லட்சம் வரை.


கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி (Feb-21 ) விழாவில்   கலந்துகொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 150. மொத்தம் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சம். இதன் மூலம் ஏன் கொரோனா பரவி இருக்க வாய்ப்பில்லை?




1. உலக பெண்கள் தினம் குடியரசு மாளிகையில் கடந்த மார்ச் 8  அன்று நடந்தது,




2. 10  நாட்கள் நடக்கும் ஆட்டிங்கள் பொங்கல் கேரளாவில் 10  லட்சம் அளவிற்கு பெண்கள் கூடி நடந்தது, அடுத்தடுத்த நாட்களில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43  ஆக உயர்ந்தது.



3. 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்த அடுத்த நாளே  உத்திர பிரதேச மாநில முதல்வர் தடையை மீறி ராம நவமியை நடத்தினார்.



4. கூட்டம் கூடக்கூடாது என்று கர்நாடகா மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பின்பும் சட்டமன்ற உறுப்பினர் மஹன்ட்ஸ்  க்வாட்கிமத் அவர்களின் மக்களின் திருமணத்திற்கு கர்நாடகா முதல்வர் சென்று கலந்துகொண்டு தடையை மீறினார்.



5. கொரோனாவில் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் உடன் பிறந்த நாள்    (Mar 20) விழா கொண்டாடிய முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவரின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங்
 


6. பஞ்சாபி சீக்கிய கண்காட்சியில் மார்ச் 10 -12  வரை 40,000  வரை மக்கள் கலந்து கொண்டார்கள், அதை முன்னின்று நடத்திய 70  வயது பிரச்சாரகர் மார்ச் 26  ந் தேதி இறந்து விடுகிறார்.



7. உகாதி என்ற தெலுங்கு (March 25) வருடப்பிறப்பு நாடெங்கிலும் தெலுங்கர்களால் கொண்டாடப்பட்டது, முக்கியமாக ஆந்திரா கர்நாடகா மற்றும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இந்த விழாவை நடத்தினார்கள்.


திருப்பதி முதல் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் தர்க்காக்கள் சர்ச்சுகள் மூடப்படவில்லை, பெரிய பெரிய வணிக வளாகம் முதல் மார்க்கட் வரை திறந்தே இருந்ததன. இப்போதெல்லாம் பரவாத கொரோனா தப்லீக் ஜமாத்தால் தான் பரவியது என்றால் எப்படி சரியாகும்.

 இதிலெல்லாம் பரவாத கொரோனா தப்லீக் மாநாட்டால் மட்டும் பரவியது என்று இஸ்லாம் மீது வெறுப்பை இந்திய ஊடகங்கள் பரப்பிக்கொண்டு இருக்கின்றன. பொய்யை  விட, பாதி உண்மை மிகவும் மோசமான விஷயம்.


 ஊடங்கள் நடுநிலை தவறும்போது சமுதாயத்தில் பல மோசமான விளைவுகளை உண்டாக்கும், ஒரு சமுதாயத்தையே குற்றப்படுத்தி உங்கள் வயிறை மோசமாக நிரப்பக்கூடிய இழிநிலைக்கு இந்த அரசு உங்களை தள்ளியுள்ளது என்றால் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அரசை, மாறாக நீங்களே ஒரு சமுதாயத்தை குற்றப்படுத்தி சுய இன்பம் அடைகிறீர்கள்.


 இதே நிலை நீடித்தால், குறித்துவைத்துக்கொள்ளுங்கள் இனியும் பல மோசமான தண்டனைகளை இறைவனிடம் இருந்து பெறுவீர்கள். எப்பொழுதெல்லாம் சமுதாயம் நடுநிலை தவறுகிறது அப்பொழுதெல்லாம் தண்டிக்கப்படும்.



















மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...