Saturday, March 23, 2019

6. சமஸ்கிருதம் கிளப்பிய சர்ச்சை - இந்துத்வ இயக்க வரலாறு-6

49. இந்துக்களை ஒன்றிணைக்க முயன்ற தயானந்த சரஸ்வதி



50. உருவ வழிபாட்டை எதிர்த்து மக்களிடம் தானே சென்று பிரச்சாரம் செய்த தயானந்தர்


51. பசுவதையை தடைசெய்ய தூண்டிய தயானந்தர்



52. இஸ்லாத்தையும் கிருஸ்துவத்தையும் எதிர்த்த தயானந்தர்


53. சீக்கியர்களை விட்டுவைக்காத தயானந்தர் 



54. தாய் மதம் திரும்பும் சுத்தி


Friday, March 22, 2019

என்ன செய்தார் எம்.பி? - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை) - 38/100 - ஜூனியர் விகடன் - 19 Dec, 2018

சட்டவிரோதக் கட்டடங்களால் திணறும் போக்குவரத்து
#EnnaSeitharMP
#MyMPsScore
தி.மு.க-வின் கோட்டை, மத்திய சென்னை தொகுதி. முரசொலி மாறன், தயாநிதி மாறன் எனத் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார்கள். வி.வி.ஐ.பி தொகுதியாக இருந்த மத்திய சென்னையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக அ.தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு வாக்களித்த மக்கள் மாற்றத்தைக் கண்டார்களா? தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? 

தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை,  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் என முக்கியக் கேந்திரங்கள் மத்திய சென்னை தொகுதியில்தான் அடங்கியிருக்கின்றன.

எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமாரிடம் பேசினோம். “போக்குவரத்து நெரிசல்தான் முக்கியமான பிரச்னை. சாலையைக் கடந்து எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் நடைமேம்பாலமோ, சுரங்கப்பாதையோ இல்லை. இதனால், ரயில் நிலையம் வரும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்” என்றார்.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். ‘‘அரசியல் கட்சியினரும் அவர்களின் பினாமிகளும் சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட அரசின் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். தொகுதி முழுக்கவே சட்டவிரோதக் கட்டடங்கள் அதிகம். இதனால்தான் மத்திய சென்னை போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. நடைபாதைகள் இல்லை. லாட்ஜ், ஹோட்டல் எனப் பெரும்பாலான மக்கள் வந்துபோகும் இடங்களில் பார்க்கிங் வசதிகள் இல்லை. குடிநீருக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், குழாயில் தண்ணீர் வருவதில்லை. தொகுதி மக்களின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளும் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் மட்டும் எம்.பி தீவிரம் காட்டுகிறார்” எனக் கொதிக்கிறார்.
தொகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் பேசினோம். ‘‘மத்திய அரசின் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தால் ‘கூவம் ஆற்றின் நீர் ஓட்டம் தடைப்படும்’ என்று சொல்லி அந்தத் திட்டத்துக்குத் தடை போட்டார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், சென்னையின் புறவழிச்சாலையில் இருந்து துறைமுகத்துக்குச் சரக்குகளை எளிதாகக் கொண்டுபோயிருக்க முடியும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சொல்லி, இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை’’ என்றார்கள்.

‘‘குடிசைப் பகுதிகளில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம். இதனால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தின் தலைசிறந்த அரசு மருத்துவமனைகள் இங்கே இருந்தும் தொற்றுநோய்களால் இங்கு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நவீன ஆய்வகங்கள்கூட அரசு மருத்துவமனைகளில் இல்லை. புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு ரத்த மாதிரிகளை அனுப்புகிறார்கள். இதனால் காலவிரயம் ஆகிறது. சென்னையில் நவீன ஆய்வகங்களைக் கொண்டுவர எம்.பி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் ஊழல் தாண்டவமாடுகிறது.  துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. வில்லிவாக்கம் பகுதியில் ரயில் பாதைகளைக் கடக்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் கிடப்பில்தான் உள்ளன. தமிழகத்தில் முதன் முறையாக மத்திய சென்னையில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மிஷின் கொண்டுவந்திருக்கிறார்கள். டாஸ்மாக் மட்டும்தான் டிஜிட்டல் மயமாக இருக்கிறது” என்றார்கள் முக்கியப் பிரமுகர்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகனிடம் பேசினோம். “மத்திய சென்னையின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்-தான் இருக்கிறார்கள். அதனால், அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை விடுத்தாலும், அதைத் தீர்க்க மாநில அரசும் எம்.பி-யும் ஆர்வம் காட்டுவதில்லை. தொகுதி நிதியை எந்த அளவுக்கு அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய்கள்தான் இன்னும் இருக்கின்றன. அவற்றை மாற்ற எந்த நடவடிக்கையையும் எம்.பி எடுக்கவில்லை. எட்டு வருடங்களாக அ.தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. பறக்கும் ரயில் சாலைகள் அருகே கஞ்சா விற்பது போன்ற சட்டவிரோதச் செயல்கள் அதிகம் நடக்கின்றன. ‘இருண்டு கிடக்கும் மெரினா கடற்கரையை மேம்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள்?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. கடற்கரையைச் சுத்தப்படுத்தி உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். இதைப் பற்றியெல்லாம் எம்.பி-க்கு அக்கறை இல்லை” என்றார்.

‘‘எழும்பூர் - சென்ட்ரல் ரயில் நிலையம் இணைப்புக் கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி எம்.பி ஆர்வம் காட்டவில்லை. பூங்கா நகர், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் பாதை, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ரயில் நிலையம், அரசுப் பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி, ரிப்பன் பில்டிங், தெற்கு ரயில்வே அலுவலகம் என்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகள், மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் உள்ளன. அண்டர் கிரவுண்டு பார்க்கிங், பாதசாரிகளுக்கு நடைபாதை ஆகியவற்றை உள்ளடக்கி, போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த வசதியை உருவாக்குவது பற்றி பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள். ஆனால், அதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு மணி நேரத்தில் சுமார் 15 ஆயிரம் பாதசாரிகள் கடக்கும் நெரிசல் மிகுந்த பகுதியாகத் திகழும் இந்த இடத்தில் பூங்கா நகர், சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றை இணைத்து ஓர் உயர்மட்ட நடைபாதைப் பாலம் ரூ.39 கோடி மதிப்பில் கட்டப்படும் என 2011-ல் தமிழக அரசு அறிவித்தது. இப்போது வரை அது அறிவிப்பாகவே இருக்கிறது. ரயில் பயணிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் உட்பட சாலையைக் கடப்பவர்களுக்குச் சுரங்கப்பாதை இருந்தும் அது போதவில்லை. மக்கள் எளிதில் செல்லும் வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதிகளை இணைத்து 1,600 மீட்டர் தூரத்துக்கு நீண்ட ஆகாய நடைபாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதுவும் செயல்வடிவம் பெறவில்லை. ரயில்வே துறையை அணுகி சென்ட்ரல் ஏரியாவில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க எம்.பி நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம். நான்கரை ஆண்டுகள் வீணானதுதான் மிச்சம்’’ என்றார்கள் அந்தப் பகுதி வியாபாரிகள்.

எம்.பி விஜயகுமாரைச் சந்தித்தோம். “அறுபது அரசுப் பள்ளிகளுக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேசை நாற்காலிகள், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆடிட்டோரியம்,
திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடி ரூபாயில் பள்ளிக் கட்டடம், அரசுப் பள்ளி நூலகங்களுக்கு 25 லட்சம் மதிப்பீட்டில் புத்தகங்கள், அரசு நூலகங்களுக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு நூல்கள், 50 லட்ச ரூபாய்க்கு விளையாட்டு உபகரணங்கள், 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குக் குடிநீர் சுத்திகரிப்பு வசதிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க ஒரு கோடி ரூபாய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 1.3 கோடி ரூபாய், சேத்துப்பட்டு மற்றும் வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தார் சாலைகள், ஐந்து கோடி மதிப்பீட்டில் மழைநீர் உட்புகாமல் இருப்பதற்குச் சுற்றுச்சுவர், 13 இடங்களில் நிழற்குடைகள் என 25 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியை நூறு சதவிகிதம் செலவழித்திருக்கிறேன். 

தயாநிதி மாறன் எம்.பி-யாக இருந்தபோது திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், 7.5 கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெறமுடியாமல் இருந்தது. அதை வட்டியுடன் சேர்த்துப் பெறுவதற்கு முயன்று வருகிறேன். காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். ஏ.டி.எம்., பார்க்கிங், மருத்துவமனை உள்ளிட்டவற்றுடன் எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும், எழும்பூர் - சென்ட்ரல் ரயில் நிலையங்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அதிகக் கேள்விகள் கேட்ட எம்.பி-க்களில் நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கப் பரிந்துரை செய்திருக்கிறேன். தொகுதி மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களிருந்து அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வருபவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். எனது தொகுதியில் கிராமங்கள் இல்லாததால் காஞ்சிபுரம் தொகுதியில் லத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொடூர் கிராமத்தின் வளர்ச்சிக்காக 25 லட்சம் கொடுத்திருக்கிறேன். மத்திய சென்னைத் தொகுதியில் குற்றங்களைக் குறைக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கவுள்ளோம். மத்திய சென்னை தொகுதியில் கூவம் கரையோரம் வசித்த சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற இடங்களில் மாற்று இடம் கொடுத்து, தங்க வைத்துள்ளோம்” என்றார். 

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- பா.ஜெயவேல், தமிழ்ப்பிரபா

ஓவியம்: கார்த்திகேயன் மேடி




எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது பெரியமேடு பகுதியில் எம்.பி அலுவலகம் திறந்தார். அதைத்தான் எஸ்.ஆர். விஜயகுமார் பயன்படுத்துகிறார். ‘எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் சிரமம் இல்லாமல் வெளியேற நடைமேம்பாலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகர் மனு அளித்தார். இதுபற்றி ராஜசேகரிடம் பேசியபோது, “மனு கொடுத்ததும் என்னைத் தொடர்பு கொண்ட எம்.பி., ‘குறுகலாகச் சாலை இருப்பதால் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். வேறு சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்து வருகிறோம்’ என்று சொன்னார்” என்றார்.


Thursday, March 21, 2019

5. ஆரிய சமாஜத்துக்கு அடித்தளம் - இந்துத்வ இயக்க வரலாறு - 5

5. ஆரிய சமாஜத்துக்கு அடித்தளம்

43. மூர்க்கத்தனத்தின் மொத்த உருவம் ஜேம்ஸ் நீல்


44. தூக்குமேடையாகிய மரங்கள்


45. தென்னிந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சிப்பாய் புரட்சி



46. சிப்பாய் புரட்சியை முதல் சுதந்திர போராட்டம் என்ற சாவர்க்கர்


47. சிப்பாய் புரட்சி தோல்வியடைய காரணம் பிரிட்டிஷாரின் வசம் இருந்த இந்திய சிப்பாய்களே



48. ஆரிய சமாஜம்



Monday, March 18, 2019

4. சிப்பாய்கள் கொளுத்திய புரட்சித்தீ - இந்துத்வ இயக்க வரலாறு - 4

4. சிப்பாய்கள் கொளுத்திய புரட்சித்தீ 

 37. பன்றி மற்றும் பசு கொழுப்பு பூசப்பட்ட தோட்டாக்களின் உறை


38. ஹுயுசன் ஐ சுட்ட மங்கள் பாண்டே

39. சிப்பாய்கள் மதச்சின்னம் அணிய தடை 


40. கிருஸ்துவராக மதம் மாற்ற முயற்சித்த ஆங்கிலேயர்கள்


42. சிப்பாய் கலகம்


Sunday, March 17, 2019

3. தயானந்தர் தேடிய குரு - இந்துத்வ இயக்க வரலாறு - 3


3. தயானந்தர் தேடிய குரு

31. உருவ வழிபாட்டை எதிர்த்த தயானந்தர்.


32. தயானந்தரின் குறு விரஜானந்தர்க்கும் பூஜை புனஸ்காரங்கள் பிடிக்காது.


33. மதுராவில் விரஜானந்தர்.



34. சமஸ்கிருதத்தை படிக்க கட்டாயப்படுத்திய விரஜானந்தர்.

35. வேதகால மதமே உண்மையான இந்துமதம், உருவ வழிபாடு கூடாது என்ற விரஜானந்தர்.


36. வேதகாலத்துக்கு திரும்புதல் மற்றும் இந்து மத ஒற்றுமை - குருதட்சணையாக கேட்ட விரஜானந்தர்.


2. எலிகள் எழுப்பிய கேள்விகள் - இந்துத்வ இயக்க வரலாறு-2

2. எலிகள் எழுப்பிய கேள்விகள்


25. மூலசங்கரும் சிவராத்திரியும்


26. தன்னையே காப்பாற்றிக்கொள்ளமுடியாத லிங்கத்தால் எப்படி மக்களை காப்பாற்றமுடியும்.


27. லிங்கத்தை வழிபட விரும்பாத மூலசங்கர்


28. சிவலிங்கத்தை வழிபடமாட்டேன், ஆனால் சிவபெருமானை வழிபடுவேன் - உருவ வழிபாட்டை எதிர்த்த மூலசங்கர்


29. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதிதான் மூலசங்கர்


30. இந்து மகா சபை, ஆர் எஸ் எஸ், ஜனசங்கம், பிஜேபி ஆகிய இந்துத்வ சக்திகளின் மூலம் ஆரிய சமாஜம்


Saturday, March 16, 2019

1. வரலாறு அழைக்கிறது - இந்துத்வ இயக்க வரலாறு-1

1. வரலாறு அழைக்கிறது




19. அத்வானியின் ஆனந்தம்



20. ஆர் எஸ் எஸ் அடையாளத்தை துறக்கவேண்டும்


21. ஆர் எஸ் எஸ் அடையாளம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கி எறியுங்கள் அல்லது தூர விலகுங்கள்



22. ஜனசங்கத்தினர் ஆர் எஸ் எஸ் அடையாளத்தை துறந்தால் மட்டுமே முஸ்லிமின் வாக்கு கிடைக்கும்



23. ஆர் எஸ் எஸ் அடையாளத்தை துறக்காததால் உருவான கட்சிதான் பிஜேபி 


24. இந்துத்வத்தின் தலைவர்கள்


Friday, March 15, 2019

இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் நாம் தமிழர் கட்சி(யின் கொள்கை)


இந்தியாவில் கட்சிகளுக்கு பஞ்சமே இல்லை, குறிப்பாக தமிழ்நாட்டில் புற்றீசல் போல் நான்கு பேருக்கு ஒரு கட்சி என்று கூட உண்டு, பல கட்சிகள் லெட்டர் பேடு கட்சிகளாக உள்ளதும் தமிநாட்டின் சாபக்கேடே. பல கட்சிகளுக்கு பல கொள்கைகள் உண்டு அதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இஸ்லாமியர்களுக்கு அரசியல் தேவை என்பது காலத்தின் கட்டாயம், அதே சமயம் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் கொளகையை உடைய கட்சிகளில் இஸ்லாமியர்கள் அங்கம் வகிப்பது ஷிர்க் அல்லது குபிராகும்.

உதாரணமாக பிஜேபி என்ற கட்சியின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான ராமர் கோவில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் கட்டுவோம் என்பது இஸ்லாத்திற்கு எதிரானது, இந்துத்வம், பகவத்கீதை என்று பல விஷயங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது, ஆகையால் உண்மை முஸ்லீம் பிஜேபி யில் அங்கம் வசிக்கமாட்டான்.

சிவ சேனாவும் இந்துத்வா கொள்கையை ஆதரிக்கிறது, ஆகையால் அதிலும் முஸ்லீம் சேருவது உகந்தது அல்ல.

அந்த வரிசையில் தமிழகத்தில் நாம் தமிழர் என்ற கட்சியின் சில கொள்கைகள் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமல்ல, அடிப்படைக்கே ஆப்பு வைப்பது போல் உள்ளது.

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு வெளியிட்ட நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.

1. பக்கம் 18 ல் கீழே உள்ள படம் வரப்பட்டுள்ளது, இதுதான் தமிழ்த்தாய் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது, தமிழ் என்பது ஒரு மொழியே தவிர அதில் வேறு எந்த சிறப்பும் இல்லை, உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை தவிர வேறு எதுவும் இல்லை, இது எல்லா மொழிக்கும் பொருந்தும், அப்படி இருக்க, தமிழை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, மொழியை தன உயிருக்கு நிகர் என்று கூறும் பாரதிதாசன் பாடலை முன்னிறுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானதே. இஸ்லாத்தை பொறுத்தவரையில் உயிருக்கு நிகர் உயிரே தவிர, மொழி அல்ல.




2. தமிழை வழிபாட்டு மொழியாக அறிவிப்பார்களாம், வழிபாட்டில் மொழியை திணிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இஸ்லாம் தொழுகையை அரபியில் தான் தொழ சொல்கிறது, இவர்கள் அதை தமிழில் மாற்றிவிடுவார்களா? இதை ஏன் அந்த கட்சியில் உள்ள ஒரு முஸ்லீம் கூட எதிர்த்து கேட்கவில்லை? Page 248



3. மக்களின் வரிப்பணத்தில் நடிகர்களுக்கு ( அதாவது கூத்தாடிகளுக்கு) நினைவு மண்டபம் கட்டப்படும், இஸ்லாத்திற்கு எதிரான சினிமாவில் காலம் முழுக்க நடித்த இந்த நடிகர்களால் இஸ்லாமிய சமுதாயம் அடைந்த நன்மை என்ன? தமிழ் சமுதாயம் அடைந்த நன்மைதான் என்ன? கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சமுதாயத்தில் தீமையை விதைத்துத்தான் சினிமாவின் அதிகபட்ச பங்களிப்பு.


4. கட்சி என்பது பொதுவாக இருக்கவேண்டும், அங்கே மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கொள்கைக்கோ இடம் இருக்கக்கூடாது. ஆனால் நாதக வின் கோவில் கட்டுவது, கடவுள் கொள்கையை சொல்வது போன்றவற்றில் தலை இடுகிறது, இதை எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமியன் ஏற்கமாட்டான். 



5. ஏற்கனவே சொன்னது போல் இறைவன் விஷயத்திலும் வழிபாடு விஷயத்திலும் அரசியல் கட்சி தலையிடாமல் இருப்பது சாலச்சிறந்தது, ஆனால் இங்கே பிரபாகரனை இறைவனாக ஏற்கவேண்டும் என்றும், அவன் வழியே பாடுபடவேண்டும் என்றும் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக சொல்லப்படுகிறது. இதை தவறு என்று அவர்கள் ஏற்று நீக்கும் பட்சத்தில் புலம்பெயர்ந்த இலங்கை மக்களின் உதவி கிடைக்காது, அதனால் இஸ்லாமியர்கள் இந்த கட்சியில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுக்குறேன்.



நா த க பற்றி சொல்லும் பொது திமுக நாத்திக கட்சி அதனால் நாத்திகத்தை ஆதரிக்கிறோமா? என்று கேட்கிறார்கள், இங்கே நுட்பமாக சிந்திக்கவேண்டிய விடயம் என்னவென்றால், திமுக எங்கேயும் தன் கட்சி கொள்கையாக நாத்திகத்தை முன் நிறுத்தவில்லை.


6. எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கட்சியின் நிகழ்வுகளுக்கு முன்னர் விடுதலைக்கு உயிர்நீத்தவருக்கு வணக்கம் செலுத்தவேண்டும், அதாவது வணங்க வேண்டும் என்பது கட்சியில் உறுதிமொழி.



ஆக கட்சியின் பல கொள்கை கோட்பாடு இஸ்லாத்திற்கு எதிராக உள்ளது, இதையெல்லாம் களையாமல் கட்சியில் பயணிப்பது தவறாகும், இஸ்லாத்தை விட்டுவிட்டு கட்சியில் இருப்பது தவறாகும், நாம் தமிழர் கட்சியின் முஸ்லீம் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்வார்களா?.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...