Friday, March 15, 2019

இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் நாம் தமிழர் கட்சி(யின் கொள்கை)


இந்தியாவில் கட்சிகளுக்கு பஞ்சமே இல்லை, குறிப்பாக தமிழ்நாட்டில் புற்றீசல் போல் நான்கு பேருக்கு ஒரு கட்சி என்று கூட உண்டு, பல கட்சிகள் லெட்டர் பேடு கட்சிகளாக உள்ளதும் தமிநாட்டின் சாபக்கேடே. பல கட்சிகளுக்கு பல கொள்கைகள் உண்டு அதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இஸ்லாமியர்களுக்கு அரசியல் தேவை என்பது காலத்தின் கட்டாயம், அதே சமயம் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் கொளகையை உடைய கட்சிகளில் இஸ்லாமியர்கள் அங்கம் வகிப்பது ஷிர்க் அல்லது குபிராகும்.

உதாரணமாக பிஜேபி என்ற கட்சியின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான ராமர் கோவில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் கட்டுவோம் என்பது இஸ்லாத்திற்கு எதிரானது, இந்துத்வம், பகவத்கீதை என்று பல விஷயங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது, ஆகையால் உண்மை முஸ்லீம் பிஜேபி யில் அங்கம் வசிக்கமாட்டான்.

சிவ சேனாவும் இந்துத்வா கொள்கையை ஆதரிக்கிறது, ஆகையால் அதிலும் முஸ்லீம் சேருவது உகந்தது அல்ல.

அந்த வரிசையில் தமிழகத்தில் நாம் தமிழர் என்ற கட்சியின் சில கொள்கைகள் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமல்ல, அடிப்படைக்கே ஆப்பு வைப்பது போல் உள்ளது.

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு வெளியிட்ட நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.

1. பக்கம் 18 ல் கீழே உள்ள படம் வரப்பட்டுள்ளது, இதுதான் தமிழ்த்தாய் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது, தமிழ் என்பது ஒரு மொழியே தவிர அதில் வேறு எந்த சிறப்பும் இல்லை, உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை தவிர வேறு எதுவும் இல்லை, இது எல்லா மொழிக்கும் பொருந்தும், அப்படி இருக்க, தமிழை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, மொழியை தன உயிருக்கு நிகர் என்று கூறும் பாரதிதாசன் பாடலை முன்னிறுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானதே. இஸ்லாத்தை பொறுத்தவரையில் உயிருக்கு நிகர் உயிரே தவிர, மொழி அல்ல.




2. தமிழை வழிபாட்டு மொழியாக அறிவிப்பார்களாம், வழிபாட்டில் மொழியை திணிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இஸ்லாம் தொழுகையை அரபியில் தான் தொழ சொல்கிறது, இவர்கள் அதை தமிழில் மாற்றிவிடுவார்களா? இதை ஏன் அந்த கட்சியில் உள்ள ஒரு முஸ்லீம் கூட எதிர்த்து கேட்கவில்லை? Page 248



3. மக்களின் வரிப்பணத்தில் நடிகர்களுக்கு ( அதாவது கூத்தாடிகளுக்கு) நினைவு மண்டபம் கட்டப்படும், இஸ்லாத்திற்கு எதிரான சினிமாவில் காலம் முழுக்க நடித்த இந்த நடிகர்களால் இஸ்லாமிய சமுதாயம் அடைந்த நன்மை என்ன? தமிழ் சமுதாயம் அடைந்த நன்மைதான் என்ன? கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சமுதாயத்தில் தீமையை விதைத்துத்தான் சினிமாவின் அதிகபட்ச பங்களிப்பு.


4. கட்சி என்பது பொதுவாக இருக்கவேண்டும், அங்கே மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கொள்கைக்கோ இடம் இருக்கக்கூடாது. ஆனால் நாதக வின் கோவில் கட்டுவது, கடவுள் கொள்கையை சொல்வது போன்றவற்றில் தலை இடுகிறது, இதை எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமியன் ஏற்கமாட்டான். 



5. ஏற்கனவே சொன்னது போல் இறைவன் விஷயத்திலும் வழிபாடு விஷயத்திலும் அரசியல் கட்சி தலையிடாமல் இருப்பது சாலச்சிறந்தது, ஆனால் இங்கே பிரபாகரனை இறைவனாக ஏற்கவேண்டும் என்றும், அவன் வழியே பாடுபடவேண்டும் என்றும் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக சொல்லப்படுகிறது. இதை தவறு என்று அவர்கள் ஏற்று நீக்கும் பட்சத்தில் புலம்பெயர்ந்த இலங்கை மக்களின் உதவி கிடைக்காது, அதனால் இஸ்லாமியர்கள் இந்த கட்சியில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுக்குறேன்.



நா த க பற்றி சொல்லும் பொது திமுக நாத்திக கட்சி அதனால் நாத்திகத்தை ஆதரிக்கிறோமா? என்று கேட்கிறார்கள், இங்கே நுட்பமாக சிந்திக்கவேண்டிய விடயம் என்னவென்றால், திமுக எங்கேயும் தன் கட்சி கொள்கையாக நாத்திகத்தை முன் நிறுத்தவில்லை.


6. எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கட்சியின் நிகழ்வுகளுக்கு முன்னர் விடுதலைக்கு உயிர்நீத்தவருக்கு வணக்கம் செலுத்தவேண்டும், அதாவது வணங்க வேண்டும் என்பது கட்சியில் உறுதிமொழி.



ஆக கட்சியின் பல கொள்கை கோட்பாடு இஸ்லாத்திற்கு எதிராக உள்ளது, இதையெல்லாம் களையாமல் கட்சியில் பயணிப்பது தவறாகும், இஸ்லாத்தை விட்டுவிட்டு கட்சியில் இருப்பது தவறாகும், நாம் தமிழர் கட்சியின் முஸ்லீம் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்வார்களா?.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...