Friday, July 9, 2021

வந்தேறி மார்க்கமும் (இஸ்லாம்), நாம் தமிழர் கட்சியினரின் நிலைப்பாடும்

[நாம் தமிழர் கட்சியினர் வைக்கும் வாதம் : இஸ்லாம் வந்தேறி மார்க்கம், இறக்குமதி செய்யப்பட மார்க்கம், அதனால் நாங்கள் முஸ்லிம்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதைவிட தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்வதையே பெருமையாக (?) நினைக்கிறோம். நாம் தமிழரில் பயணிக்கும் சில முஸ்லிம்கள் தங்களது பெயரை தமிழ் பெயராக மாற்றிக்கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் அடையாளமே பெயர் தான், அதையே மாற்றிக்கொள்ள நினைப்பது வேதனை அளிக்கிறது. பெயரளவில் முஸ்லிம்கள் என்று கூட சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது].

ஈருலக வெற்றி முஸ்லிமாய் வாழ்வதில் தான் உள்ளது என்பதை முஸ்லிம்களே நம்பாத நிலைதான் இன்று சமுதாயத்தில் உள்ளது. 

1. இஸ்லாம் என்ற ஆதி மார்க்கம்.

மதம் என்பதே மக்களின் அறியாமையால் வந்த வார்த்தை என்றுதான் சொல்வேன், காரணம் மதம் என்பதே உலகில் இல்லை. மதம் என்று சொல்லக்கூட்டிய ஹிந்து, முஸ்லீம், சீக்கியம், கிறிஸ்துவம் மற்றும் யூதம் இத்யாதி எதுவும் மதம் என்று அவர் அவர்களின் வேத புத்தகங்களில் குறிக்கப்படவில்லை. இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் என்று குர் ஆன் தெளிவாக எடுத்து இயம்புகிறது. குர் ஆன் தவிர வேறு எந்த வேத புத்தகமும் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் அல்லது மதம் இது தான் என்று பறைசாற்றவில்லை. ஆக யாரெல்லாம் இறைவன் ஒருவன் என்றும் அவனின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) என்று ஒப்புக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். மற்றவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள்.

முஸ்லீம் அல்லாதவர்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனை உருவ வழிபாடு செய்பவர்களாகவும், ஏசுவை இறைவனின் மகன் என்றும், கடவுளே இல்லை என்ற நாத்திகவாதிகளாகவும் இருக்கின்றார்கள். 

இஸ்லாத்தின் அடிப்படையில் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் முதல் இஸ்லாம் உலகில் உள்ளது, அதாவது உலகின் முதல் மனிதனே முஸ்லிம்தான். இதை கிருத்துவம், யூதம் தொட்டு ஹிந்து மதம் கூட ஒத்துக்கொள்கிறது. 

2. இஸ்லாம் இறக்குமதி செய்யப்பட மார்க்கமா?

இன்று பல முஸ்லிம்களின் நிலைப்பாடு இஸ்லாம் அராபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சில தலைமுறைகளுக்கு முன்னர் நாங்களும் ஹிந்துக்கள் தான்.

ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், இஸ்லாம் உலக முதல் மனிதன் தொட்டு உள்ள மார்க்கம். மனிதர்களை வழிப்படுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத்தூதர்களை இறைவன் அனுப்பி மக்களை நல்வழிப்படுத்தினான். இஸ்லாத்தில் இருந்து மாறுபட்ட மக்களாக நமது முன்னோர்கள் இருந்து இருக்கலாம் அதற்காக எங்கள் முன்னோர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள், அராபியாவில் இருந்து வந்த இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்பது வாதம் தவறானது. 

ஆக இஸ்லாம் ஒன்றும் இறக்குமதி செய்யப்பட அல்லது வந்தேறி மார்க்கம் அல்ல, அது மண்ணிற்க்கான மார்க்கம், இயற்கையான மார்க்கம் மேலும் உலக மக்கள் அனைவருக்குமான மார்க்கம். 

(மேலும் வரலாறை அறிய, ஆதம் பாலம், இலங்கையில் ஆதமின் காலடி சுவடு மற்றும் லெமூரியா கண்டம் வெள்ளத்தில் மூழ்கிய வரலாறை படிக்கவும்).

3. இஸ்லாம் பற்றிய நாம் தமிழர் கட்சியின் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.

நாம் தமிழர் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதையே பெருமையாக நினைக்கிறார்கள். காரணம் தமிழ் மொழி தமிழர் கலாச்சாரம் இஸ்லாமிய கலாச்சாரத்தை விட உயர்ந்தது(?) என்றும், தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்த மூத்தகுடிகளால் பேசப்பட்ட மொழி என்றும் (கல்லும் மண்ணும் தோன்றாத போது மனிதன் எப்படி தோன்றியிருப்பான்?) இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னாள் வந்தது என்றும் நம்புகின்றனர். நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் முஸ்லிம்கள் தங்களின் பெயரை தமிழ் பெயர்களாக மாற்றிக்கொண்டுள்ளனர், தமிழ் வழி திருமணம் செய்துகொள்கின்றனர். இதெல்லாம் சொல்வது இஸ்லாத்தைவிட தமிழ் கலாச்சாரம் உயர்ந்தது என்பதையே.

4. எது உயர்ந்தது? இஸ்லாமா? தமிழ் கலாச்சாரமா?

ஏற்கனவே சொன்னதுபோல இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்று குர் ஆன் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்கிறது. உலகில் பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் தங்களின் கலாச்சாரத்தை உயர்வாக நினைக்கலாம், தவறில்லை. ஆனால் அந்த கலாச்சாரங்களின்  பெருமையால் மறுமை வாழ்வில் வெற்றியடைய முடியாது. எந்த சூழ்நிலையிலும் உண்மையான முஸ்லீம் இஸ்லாத்தை குறைவாக மதிப்பிடமாட்டான். 

5. மற்றகலாச்சாரங்களை இஸ்லாம் ஏற்குமா?

இஸ்லாத்தை பொறுத்தவரை மற்றவர்களின் கலாச்சாரங்களை ஏற்பதில் தவறில்லை. ஆனால் அந்த கலாச்சாரங்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்தால் (முக்கியமாக இறை வழிபாட்டு விடயத்தில்) ஏற்க கூடாது. இதைத்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் மற்றவரின் கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள் என்று சொல்லியுள்ளார்கள்.

குலதெய்வம், முன்னோர்களை வணங்குவது போன்ற தமிழ்கலாச்சாரங்களை இஸ்லாமியர்கள் ஏற்கமுடியாது. அதே சமயத்தில் சித்தர்களின் மருத்துவமுறை போன்றவற்றை ஏற்கலாம்.

6. முஸ்லிம்கள் நாம் தமிழரின் பயணிக்க என்ன தடைகள்?

நாம் தமிழர் கட்சியாக மக்களின் பிரச்சனைகளை பற்றியும் தீர்வையும், பொருளாதார மேம்பாடு பற்றியும், நல்லதொரு நிர்வாக ஆட்சியையும் மட்டும் பற்றி பேசினால் முஸ்லிம்கள் பயணிக்க தடை இல்லை. பிரபாகரன் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் போன்ற கட்சிக்கு அவசியம் இல்லாத இணைவைப்பு விடையங்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்காது. இஸ்லாத்திற்கு எதிரான விடயங்களை களைந்தால் இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சியில் பயணிக்க தடை இல்லை என்பதே எனது கருத்து.

7. இறுதியாக 

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்த மொழியை பேசினாலும் இஸ்லாம் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழி என்பதை மனதார நம்பி ஏற்று பின்பற்றவேண்டும். தமிழர்களாய் ஒன்றிவதையோ தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. தமிழ் கலாச்சாரம் இஸ்லாத்தைவிட உயர்ந்தது என்று முஸ்லிம்கள் நினைப்பது முழுக்க முழுக்க வழிகேடு ஆகும், இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.

உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வு, முஸ்லிம்களாய் வாழ்வோம், ஈருலகத்திலும் வெற்றிபெறுவோம்.

சில எடுத்துக்காட்டுகள் 

1. நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு முஸ்லீம் தஞ்சை பெரியகோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு தமிழில் பூசை (?) நடக்கும் இடத்திற்கு சென்று மாலையுடன் காட்சியளித்தது. இவரை அங்கு இழுத்துச்சென்றது நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பதே உண்மை.

2. தமிழர் வழியில் திருமணம் - முஸ்லிமாகிய ஒருவர் தமிழர் வழி திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துகொண்டார். உண்மையிலேயே அதுதான் தமிழர் வழி திருமணமா? என்றால் இல்லை என்பது வேறு விவாதம், ஆனால் அது இஸ்லாமிய வழிமுறை இல்லை என்பதே திண்ணம். 

3. தமிழ்மொழியில் தங்களின் பெயரை மாற்றிக்கொள்வது, அல்லது ------ என்கிற ----------- என்று தமிழ்ப்பெயரை முன்னிறுத்தி பெருமைகொள்வது போன்றவையும் இஸ்லாத்திற்கு எதிரானதே.

Thursday, July 8, 2021

RSS ஐ கொண்டு எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தை மோகன் பகவத் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

 புது தில்லி, 6 ஜூலை 2021: RSS தலைவர் மோகன் பகவத்தின் அறிக்கை RSS இன் உள்ளரங்கத்தில் விவாதிக்கப்பட்டு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K.Faizy அவர்கள் கூறியுள்ளார். 

பகவத்தின் பேச்சை ஒரு அறிக்கையாக மட்டும் பார்க்காமல், RSS சித்தாந்தம் எந்த அளவுக்கு மக்களிடையே விதைக்கப்படுகிறது என்றும் எந்த அளவுக்கு மக்களை கட்டுக்குள் வைத்துள்ளது என்றும் பார்க்கப்படவேண்டும். 

ஃபைஸி அவர்கள், பகவத்தின் கூற்றை சுட்டிக்காட்டி, அடித்துக்கொள்ளுதல் என்பது இந்துத்துவாவுக்கு எதிரானவர்களால் நடத்தப்படுகிறது என்றும், நாடுமுழுவதும் உள்ள சங்கபரிவாரர்களின் சாதாரண செயல்களில் உள்ள ஒன்றாகும் என்றும் கூறுகிறார். 

பசு அல்லது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பெயரில் முஸ்லிம்களைத் தாக்கி, கொள்ளையடித்து, கொலை செய்யும் ஆயிரக்கணக்கான ‘கோ ரக்ஷக் சங்கங்கள்’ நாட்டில் தீவிரமாக செயல்படுகின்றன. இதனால் இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது போன்று காட்டப்படுகிறது என்ற பகவத்தின் பேச்சை RSSன் உள்ளரங்கிலேயே சரிபார்க்கப்பட வேண்டும் என்று ஃபைஸி கூறினார்.

முஸ்லிம்களை எதிரிகளாகவும், நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டிய தீயவர்கள் என்றும் சங்க உறுப்பினர்களை வழிநடத்தும் ‘இந்துத்துவ சக்தியின் தலைவர் கோல்வால்கர் கோட்பாட்டை பகவத் நன்கு அறிவார். ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த சித்தாந்தம் அதன் உறுப்பினர்களுக்கு அதன் பயிற்சி முகாம்கள், ஷாகாக்கள், இலக்கியங்கள், உரைகள் போன்றவற்றில் மூலம் இன்று வரை கர்ப்பிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மனதில் கோல்வால்கர் கோட்பாட்டை ஊக்குவிக்க ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் ஆயுத பயிற்சி மற்றும் மூளை சலவை செய்து அதை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது. 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளும் தங்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் அனைத்து இந்தியர்களுக்கும் பயன்படும் வகையிலும், மற்றவர்கள் மீது வெறுப்பில்லாமல், மற்றவர்களை நோவினை செய்யாமல் வாழும் வகையில் மாற்றவேண்டும். 

இந்து முஸ்லீம் ஒற்றுமைதான் இந்த நாட்டின் உண்மையான பலமும் ஒருமைப்பாடும் என்றும் பரந்த மற்றும் துடிப்பான முற்போக்கு சிந்தனையில் மூலம் இந்த தேசத்தை கட்டியெழுப்பவேண்டும் என்றும் பைஸி கூறினார். ‘தர்மம்’ (மதம்) மற்றும் பேரினவாதம் போன்றவரை மூலம் மக்களை பிளவுபடுத்துவதும் முயற்சி நாட்டின் அழகையும் சகோதரத்த்துவத்தையும் அழிக்கும்.

BHAGWAT MUST REALIZE HIS ASSERTION IN RSS’S HELM OF AFFAIRS – Social Democratic Party of India (sdpi.in)

Wednesday, July 7, 2021

நீங்கள் முட்டை சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிறது?

நீங்கள் முட்டை சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிறது?

இந்த கேள்வி உங்களுக்கு நகைப்பையோ ஆச்சரித்தையோ தரலாம், ஆனால் முட்டை சாப்பிட்டு ஒரு வருடம் ஆகிறது என்றும் எப்போது டூத் பிரஷ்ஷை மாற்றினார் என்பது நினைவில் இல்லை என்றும் சொல்லக்கூடிய மக்கள் வடமாநிலங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியா பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் கிராம மக்கள் தன்னிறைவு அடைய ரிஹாப் இந்தியா   பவுண்டஷன் (https://www.facebook.com/rehabfoundation/?ref=page_internal) செய்துகொண்டு இருக்கிறது.  


https://www.vinavu.com/2019/11/15/delhi-family-not-having-eggs-because-of-an-income-squeeze/

வட இந்தியாக்களில் குறிப்பாக ஒரிஸ்ஸா, பீஹார் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள கிராமங்களை தத்தெடுக்கிறது, அவர்களின் முக்கிய நோக்கம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது. மீன் புடிச்சி கொடுப்பதை விட அவர்களுக்கு மீன் பிடிக்க கத்து கொடுப்பது. இவர்கள் தேர்ந்தெடுக்கும் கிராமத்தில் எல்லா மத சாதியையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

கல்வி: முதன் முதலில் கல்வியை மக்களிடம் கொண்டு செல்ல ஸ்கூல் சலோ என்ற முறையை வருடா வருடம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

https://www.facebook.com/schoolchalo/

பொருளாதாரம்: இந்த மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வயல்களை குத்தகைக்கு எடுத்து கொடுத்து விவசாயம் செய்யவைப்பது, ஆடு மாடுகளை வாங்கி கொடுத்து வளர்த்த பிறகு அவர்களே (Rehab India Foundation - RIF) திரும்பவும் வாங்கி குர்பானி போன்றவற்றிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிறு குறு தொழில்கள் செய்ய கடன் உதவி தருதல், கைத்தொழில்களை கற்றுக்கொடுப்பது போன்றவை மூலம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன. 



சுகாதாரம்: மக்களுக்கு சுகாதார அறிவை பெருக்க பல வகைகளில் உதவுகிறது. கொரோனா காலங்களில் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை தந்தது. ஆம்புலன்ஸ் மூலம் அவர்களுக்க சுகாதார தேவையை பூர்த்திசெய்துகொண்டு இருக்கிறது RIF.



ரிஹாப் மூலம் பயனடைந்தவர்கள் மாணவர்கள் : 7,919

பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் திரும்பவும் பள்ளிக்கு சென்றவர்கள்: 2,398

சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை: 566

இதுவரை கொடுக்கப்பட்ட பொருளாதார உதவி: INR. 41,40,462 

கிராமத்தை தத்தெடுத்தன் மூலம் பயன்பெற்றவர்கள்: 70,182

டியூஷன் மைய்யங்களின் எண்ணிக்கை: 175

சுகாதாரம் மூலம் பயன்பெற்றவர்கள்: 3,284

புதிய மாணவர்கள் சேர்க்கை: 7,919.




தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் நாம் இறைவனின் உதவியால் ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்துள்ளோம், ஆனால் வடஇந்தியாவில் பல மாநிலங்களில் மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் மிகவும் பரிதாபக்கோடா வழியில் உள்ளது. நமது உதவிகள் கட்டாயம் தேவையானவர்களுக்கு பயன்படவேண்டும். வல்ல இறைவன் அதற்க்கு உதவி செய்வானாக.

Monday, July 5, 2021

டெல்லி யமுனா விஹாரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து சட்ட உதவிகளை வழங்கிய SDPI

 


டெல்லியின் யமுனா விஹாரின் 2021 ஜூன் 11 இரவு வன்முறையால் படுகாயமடைந்தவர் வீட்டிற்கு 14 ஜூன் 2021 அன்று SDPI யினர்  வருகைபுரிந்தனர்.

நான்கு சகோதரர்களின் குடும்பங்கள் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து வசித்து வருகின்றனர். சகோதரர்களின் அம்மா கடுமையான நோய்வாய்பட்டிருந்ததால் நான்கு கும்பத்தை சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் அந்த தாயை காண ஒரே வீட்டில் குழுமியிருந்தனர். 

1 மணிக்குப்பிறகு வெளியில் வெளியில் தவறான பேச்சுக்குரல் கேட்டதை அடுத்து இரண்டு சகோதரர்கள் வெளியே விரைந்து சென்று பார்த்தபோது ஒரு கும்பல் காலனியின் பாதுகாப்பு காவலரை தாக்க முற்பட்டனர், காரணம் அந்த காவலர் காலனியின் கதவை திறக்கமுடியாது என்று சொன்னதால்.  

கூட்டத்தில் இருந்த ஒருவர் காவலரை தவறான வார்த்தைகளால் பேசி காவலரின் தாடியை பிடித்து வம்புக்கு இழுத்து வாழ்நாளில் மறக்கமுடியாத படி பாடம் புகட்டுகிறோம் ன்னு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் பொய் விட்டனர் என்பதால் இரண்டு சகோதரர்களும் தங்களின் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டனர். ஆனால் முப்பது நிமிடங்களுக்குள், சுமார் இரண்டு டஜன் இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல் குச்சிகள், ஹாக்கி, இரும்பு கம்பிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்தனர், அவர்கள் இந்த வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். கண்மூடித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு அனைத்து நபர்களையும் தாக்கினார்கள். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மொத்தம் பத்து பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்டவர்களை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். காவல்துறையினர் பாதுகாப்பு காவலர் (செக்யூரிட்டி கார்ட்) சார்பில் FIR  ஆரை பதிவு செய்தனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

கடந்த ஐந்து நாட்களாக சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்தை அப்பகுதியின் உயர் போலீஸ் அதிகாரியிடம் சந்தித்து விவரித்தனர். யமுனா விஹார் பகுதி பிரபலமற்ற வடகிழக்கு டெல்லியின் ஒரு பகுதியாகும், இது பிப்ரவரி 2020 இல் மிகப் பெரிய வன்முறையில் வீழ்ந்தது, இதில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பெஞ்சின் கடுமையான உத்தரவு இருந்தபோதிலும் பெயரிடப்பட்ட குற்றவாளிகளை  இன்னும் கைது செய்யவில்லை. மேலும், வகுப்புவாத வன்முறைக்கு பலியானவர்கள், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உள்ளவர்கள் போலி மற்றும் தவறான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட சமூகத்தின் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் இந்த வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.  வெறுப்பு மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் அரசியல் உதவிகளையும் வழங்குவதற்காக SDPI யின் பிரதிநிதிகள் குழுவில் துணைத் தலைவர் ஷர்புதீன் அஹ்மத் வழக்கறிஞர் திரு.நவேத் அஸிம் அஃப்ரிடி, ஹபீஸ் முகமது ஹாஷிம், முகமது இலியாஸ், டாக்டர் ஷாமூன் மற்றும் பலர் அந்த குடும்பத்தை சந்தித்தனர். குடவாலிக்கு தாக்க தண்டனையை வாங்கி தர எல்லா உதவிகளையும் செய்வோம் என்று எஸ்.டி.பி.ஐ உறுதியளித்தது.

டெல்லி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் வகுப்புவாத சம்பவங்களின் கேந்திரமாக மாறியுள்ளன, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுக்கிறது. மேலும் குற்றவாளிகள் அரசியல் மற்றும் மத காரணங்களால் தண்டிக்கப்படாமல் காவல்துறையால் பாதுகாக்கப்படுகின்றனர்.

Source : DELEGATION OF SDPI VISITS MUSLIM FAMILY OF YAMUNA VIHAR, DELHI TO OFFER LEGAL AND POLITICAL HELP TO VICTIMS – Social Democratic Party of India

மேவாத் ஆசிப் கானை அடித்துக்கொன்ற சம்பவத்தில் நடந்தது என்ன?

 SDPI துணைத்தலைவரும் பிற தலைவர்களும் 2021 ஜூன் 10 ஆம் தேதி மேவாட்டில் உள்ள மறைந்த ஆசிப் கானின் குடும்பத்தினரை சந்தித்தனர்.



புது தில்லி, 20 ஜூன் 2021: ஆசிப் கான் வயது 27, உடற்பயிற்சி கூட பயிற்சியாளர். அவர் ஹரியானாவின் மெவாட்டில் உள்ள நுஹ் என்ற இடத்தில் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்தார். 

ஆசிப்க்கானை கடத்தி கொல்ல ஐந்து வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஒரு டஜன் ஐ கொண்ட கும்பல் திட்டமிட்டு இருந்தது. இவர்கள் அப்பகுதியில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வன்முறை போன்ற கொடூரமான குற்றங்களின் காலங்களில் ஈடுபட்டுவந்தனர். டைபாயிடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிப்க்கான் அதற்க்கான மருந்துகளை வாங்கிக்கொண்டு 2021 மே 16 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சோஹ்னாவிலிருந்து கெரா கலில்பூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிச் செல்லும் வழியில் கடத்தப்பட்டார்.

எதிர்பாராமல் உறவினரான ரஷீத் கான், 23 மற்றும் பக்கத்துவீட்டுக்காரர் அசிஃப் 25, அவரோடு காரில் லிப்ட் கேட்டு பயணித்தனர். கடத்தல்காரர்களின் இலக்கு ஆசிப் கான் தான் என்றாலும் கடத்தல்காரர்கள் மூவரையும் கடத்தி  மற்ற நபர்களையும் தாக்கினார்கள். மூவரையும் ஸ்கார்பியோ காருக்கு மாற்றப்பட்டு தொலைதூர வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆசிப் கான் மட்டும் மீண்டும் குச்சிகள், இரும்பு கம்பிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கப்பட்டனர். அவரது விரல்கள், கைகள், கால்கள் மற்றும் விலா எலும்புகளில் பல எலும்பு முறிவுகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டது. அவர் இறக்கும் வரை கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது முகம் கூட சேதமடைந்து சிதைந்தது. ஆசிப் கானை தாக்கிக்கொண்டு இருக்கும் வேளையில் அவரோடு பயணித்த சிறுவன் அங்கிருந்து நழுவி தப்பித்து தாக்குதல் மற்றும் ஆசிப் கான் கடத்தல் குறித்து அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். குடும்பத்தினர் அப்பகுதியின் பொலிஸாருக்கு தெரிவித்தனர், ஆனால் ஒரு வழிப்போக்கரின் தகவலின் பேரில், அதே இரவில் சுமார் 10 மணியளவில் சோஹ்னா காவல்துறையினரால் ஆசிப் கானின் சடலமாக மீட்கப்பட்டார். 

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரை பெயரிட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, பின்னர் அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியின் எம்.எல்.ஏ தலைமையிலான பாஜக தலைவர்கள், குன்வர் சஞ்சய் சிங் கிராமங்களில் தொடர் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் வகுப்புவாத நடவடிக்கைகளைத் தொடங்கினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வகுப்புவாதத்தை செய்தார். மே 23 ஆம் தேதி ஒரு மகாபஞ்சாயத்துக்கு கர்ணி சேனாவின் தலைவர் சூரஜ்பால் சிங் அமு முக்கிய விருந்தினராக அழைக்கப்பாட்டார். அவர் வெறுக்கத்தக்க, கொடூரமான மற்றும் வன்முறையான தூண்டக்கூடிய வகையில் பேசி மக்களிடையே விரோதத்தை விதைத்தார். 

சட்டவிரோதமாக பல இடங்களில் பகிரங்கமாக இனவாத விஷத்தை இவர் பரப்பினார். இது 144 சிஆர்பிசி பிரிவை மீறும் செயலாகும். மகாபஞ்சியத்தில் இவர் ஆற்றிய உரைகள் வீடியோக்களாக பரப்பப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படாவிட்டால், காவல் நிலையத்தையும் காவலர்களையும் எரித்து கொள்வேன் என்று மிரட்டி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் அழுத்தத்தையும் பயத்தையும் உண்டாக்கினார். இதனால் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்கள் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாமல் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நிரபராதிகள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

குஜார் இனம் ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஒரு இடைநிலை சாதி ஆகும், முஸ்லிம்களுக்கு எதிரான வரலாற்று பகை இல்லை. எந்தவொரு பெரிய புகாரும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக சுல்த்தான் ஆட்சி காலத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களை அனுபவித்து வருகின்றனர். குஜார் சாதி அண்மையில் சங்கபரிவார்களால் அசிங்கங்களால் தூண்டப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவைக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். டெல்லியில் 2020 பிப்ரவரி குடியுரிமை கலவரத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றினார். 

மேவாத்தில் முஸ்லிம்கள் 85 % இருந்தபோதிலும் பல சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டு இருக்கின்றன. ஆசிப் கான் மீதான தாக்குதலில் குஜார்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற நிகழ்வுகளைப் போலவே, முஸ்லீம்கள் மீதான ஒவ்வொரு கூட்டு மற்றும் இலக்கு தாக்குதல்களும் இனவாதத்திற்கு வித்திடுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இந்துத்துவ அமைப்பினர் வீரர்களாக சித்தரிக்கின்றனர். 

ஒவ்வொரு கிரிமினல் வழக்குகளிலும் நீதி முழுமையாக வழங்கப்படுவதில்லை, மேவாத் மக்கள் வாழும்  இது ஹரியானா, ராஜஸ்தான், உ.பி. மற்றும் டெல்லி போன்ற நான்கு மாநிலத்திலும் இவர்களை மதரீதியாக இலக்கு வைத்து தாக்குகின்றனர். இவர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்படுகின்றனர், அரசியல் ரீதியாகவும் பலர் கொள்ளப்பட்டு வருகின்றனர். 

மியோ மக்களும் மேவாத் பிராந்தியமும் பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பிரதேசமாக உள்ளது. இதன்மூலம் இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் பல வடிவங்களில் வன்முறைகள் தங்களின் மீது ஏவப்படுவதை அன்ஹட்ட மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். மற்றொரு நம்பிக்கைக்குரிய இளைஞரான புன்ஹன்னாவைச் சேர்ந்த ஜுனைத் மே 12 அன்று காவல்துறையின் வன்முறைக்கு இரையாகிவிட்டார். மேவாத் மக்கள் மீதுள்ள வெறுப்பால் அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதில்லை. 

Source : ASIF KHAN LYNCHING: A FACT SHEET – Social Democratic Party of India (sdpi.in)

இந்திய அளவில் மதசார்பின்மை கட்சியாக வளர்ந்துவரும் SDPI

எங்களின் முக்கிய தத்துவமானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதும், வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக செயல்படுவதும் ஆகும் : எம்.கே. பைஸி, தேசிய தலைவர் SDPI  கட்சி.

முஸ்லீம், தலித் மற்றும் ஓபிசி சமூகங்கள் இருந்த பகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம். இதுவரை பாரம்பரியமாக மதச்சார்பற்ற கட்சிகளின் மீது இருந்த விசுவாசத்தை மக்கள் இப்போது SDPI மேல் காட்டுகிறார்கள் என்று SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


உங்கள் கட்சி மாநில மற்றும் தேசிய ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது? இந்த உயர்வு பற்றி உங்கள் கருத்தென்ன? 

 கடந்த சில ஆண்டுகளாக, SDPI பற்றிய செய்திகளை முக்கிய டிவி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் தவறாக  பரப்பிவந்தன, அதன் காரணமாக SDPI கட்சியின் நோக்கத்தை மக்கள் அறிய முற்பட்டனர். அந்த தவறான பரப்புரைகளில் மிக முக்கியமானது அமித் ஷாவின் மே 2018 கர்நாடகா பரப்புரை ஆகும்.

 பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் SDPI பற்றி குறிப்பிடுகிறார் என்றால் என்ன காரணம் என்று மக்கள் அறிய விரும்பினார்கள். இது SDPI பற்றி மக்கள் அறிய மிக முக்கிய காரணம் ஆகும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், 2698 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 8 தேசிய கட்சிகள், 52 மாநில கட்சிகள். மீதமுள்ள 2638 கட்சிகள் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள். SDPI அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட காட்சியாகும். SDPI தவிர்த்து மற்ற பதிவு செய்யப்படாத இந்த கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு பரிச்சயமானவை அல்ல.

மீடியாக்கள் (SDPI) எங்களை பற்றி எதிர்மறையான தோற்றத்தை முன்வைத்த போதிலும், எங்களின் சேவை, சந்திப்பு மற்றும் எங்களைப் பற்றிய செய்திகள் பற்றி நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது.

SDPI கட்சி மக்களை தன் பக்கம் ஏற்கவும், மக்களால் பெரிதும் விரும்பப்படவும் காரணம் என்ன?

அண்மையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் நூற்றுக்கணக்கான இடங்களை வென்றோம். கேரளாவில், 113 இடங்களை வென்றது, அங்கு முக்கிய கட்சிகள் என்று அழைக்கப்படும் பல (பத்து ஆண்டுகளாக வெற்றியடைந்த) அரசியல் கட்சிகளின் தலைவர்களையும்  பண்டிதர்களையும் ஆச்சரியப்படுத்தின. கர்நாடகாவில், SDPI 4 கிராம பஞ்சாயத்துகளில் தெளிவான பெரும்பான்மையுடன் 228 பஞ்சாயத்து இடங்களை வென்றது. மேலும், கர்நாடகாவில், பல சிட்டி கார்ப்பரேஷன் மற்றும் டவுன் முனிசிபல் கார்ப்பரேஷன் வார்டுகளில் வென்றோம். தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உ.பி.யில் கூட, SDPI பல பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் ஜில்லா பஞ்சாயத்து இடங்களில் வெற்றி பெற்றது.

 முஸ்லீம், தலித் மற்றும் ஓபிசி சமூகங்கள் இருந்த பகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம். இதுவரை பாரம்பரியமான மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படுவதற்கு மாற்றாக அவர்கள் மீது இருந்த விசுவாசத்தை மக்கள் எங்கள் மீது இப்போது காட்ட தொடங்கியுள்ளனர். 

நீதி மற்றும் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போராடுவது, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பது மட்டுமல்லாமல் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது போன்ற காரணங்களால் எங்களை மக்கள் நம்புகின்றனர். 

எதிர்க்கட்சிகள் கூட பேரழிவு காலங்களில் SDPI கட்சியின் சேவையை பாராட்டும் வகையில் அப்படி என்ன சேவைகளை செய்கிறீர்கள்?

  சுனாமி, வெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின் போது, மதம், சாதி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். , இதில் முக்கியமானவை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இறந்த உடல்களை தகனம் செய்தல் போன்றவை. தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும், SDPI  செயல்வீரர்கள் மக்களின் சேவையில் உள்ளனர். இரத்த தானம், கிராமங்களின் சுகாதாரம், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஏழைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க உதவுதல், ரேஷன் பொருட்கள் கிடைக்க உதவுதல், கல்வி போன்ற சேவைகளால் எதிர்க்கட்சிகளும் எங்களை பாராட்டுகிறார்கள்.

எஸ்.டி.பி.ஐயின் முக்கிய அரசியல் நிலைப்பாடு என்ன?

  முஸ்லிம் எதிர்ப்பு / தலித் எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிரான SDPI யின் இடைவிடாத போராட்டம் முஸ்லிம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து, சமூகம் இனவாதக் கட்சிகளாலும் அரசாங்கத்தின் அநீதி, அட்டூழியங்கள், பாகுபாடுகள் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டது. பேரணிகள், கிளர்ச்சிகள், தர்ணாக்கள், சட்ட போராட்டங்கள் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிரான சிவில் பாதுகாப்பு மூலம் மக்களின் உரிமைகளை பெற்றுத்தர விரும்பிய காரணத்தால் மக்கள் SDPI ஐ ஆதரிக்கிறார்கள். ஏனெனில் இதெல்லாம் மக்களின் தேவையாக இருக்குறது.

சமகால இந்திய பிரச்சினைகளுக்கு உங்கள் கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன?

 SDPI ஒரு மாற்று. மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகள் இன்று மென்மையான இந்துத்துவத்தைப் பின்தொடர்கின்றன அல்லது ஊழல்கள், குடும்ப அரசியல், தகுதி இல்லாதவருக்கு பதவிகளை வழங்குதல் மற்றும் முதலாளித்துவத்தில் ஈடுபடுகின்றன. அந்தக் கட்சிகளின் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது. எனவே, சட்டத்தை உருவாக்கும் சட்டமன்றத்தில்/நாடாளுமன்றத்தில் பொது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், வெளிப்படையான மற்றும் மக்கள் நட்புரீதியான நிர்வாகத்தை வழங்குவதற்கும், மாற்று SDPI ஆகும்.

SDPI வலுவான உள் ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. தற்போது, ​​இந்திய அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகள், பணக்காரர்கள் மற்றும் வலிமைமிக்கவர்களால் நடத்தப்படுகின்றன. பொது மக்கள் தேர்தலில் போட்டியிட கட்சி சீட்டுகளை தருவதில்லை. வேட்பாளர்கள் தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர். SDPI அதன் செயல்வீரர்களுக்கு அரசியல் என்பது ஒரு சேவை தானே தவிர அதுவே வாழ்க்கை இல்லை என்றும் ஒவ்வொரு பைசாவும் பொதுமக்களின் நலனுக்காகவும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கற்பிக்கிறது. மற்றொரு முக்கியமான காரணி அரசியலமைப்பைக் காப்பாற்றுவதாகும். மத்தியிலும் சில மாநிலங்களின் ஆளும் பாஜக அரசியலமைப்பு சட்டங்களை மதிக்காமல் மனுவாதத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றன.

 ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, நீர், சுகாதாரம், சாலைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை உண்டாக்கி கொடுப்பதே   கட்சியின் நோக்கம். SDPI சமத்துவம், நிலையான வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் தற்சார்பு பொருளாதாரம் ஆகியவற்றால் நாட்டை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...