நீங்கள் முட்டை சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிறது?
இந்த கேள்வி உங்களுக்கு நகைப்பையோ ஆச்சரித்தையோ தரலாம், ஆனால் முட்டை சாப்பிட்டு ஒரு வருடம் ஆகிறது என்றும் எப்போது டூத் பிரஷ்ஷை மாற்றினார் என்பது நினைவில் இல்லை என்றும் சொல்லக்கூடிய மக்கள் வடமாநிலங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியா பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் கிராம மக்கள் தன்னிறைவு அடைய ரிஹாப் இந்தியா பவுண்டஷன் (https://www.facebook.com/rehabfoundation/?ref=page_internal) செய்துகொண்டு இருக்கிறது.
https://www.vinavu.com/2019/11/15/delhi-family-not-having-eggs-because-of-an-income-squeeze/
வட இந்தியாக்களில் குறிப்பாக ஒரிஸ்ஸா, பீஹார் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள கிராமங்களை தத்தெடுக்கிறது, அவர்களின் முக்கிய நோக்கம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது. மீன் புடிச்சி கொடுப்பதை விட அவர்களுக்கு மீன் பிடிக்க கத்து கொடுப்பது. இவர்கள் தேர்ந்தெடுக்கும் கிராமத்தில் எல்லா மத சாதியையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
கல்வி: முதன் முதலில் கல்வியை மக்களிடம் கொண்டு செல்ல ஸ்கூல் சலோ என்ற முறையை வருடா வருடம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
https://www.facebook.com/schoolchalo/
பொருளாதாரம்: இந்த மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வயல்களை குத்தகைக்கு எடுத்து கொடுத்து விவசாயம் செய்யவைப்பது, ஆடு மாடுகளை வாங்கி கொடுத்து வளர்த்த பிறகு அவர்களே (Rehab India Foundation - RIF) திரும்பவும் வாங்கி குர்பானி போன்றவற்றிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிறு குறு தொழில்கள் செய்ய கடன் உதவி தருதல், கைத்தொழில்களை கற்றுக்கொடுப்பது போன்றவை மூலம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன.
ரிஹாப் மூலம் பயனடைந்தவர்கள் மாணவர்கள் : 7,919
பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் திரும்பவும் பள்ளிக்கு சென்றவர்கள்: 2,398
சுய உதவி குழுக்களின் எண்ணிக்கை: 566
இதுவரை கொடுக்கப்பட்ட பொருளாதார உதவி: INR. 41,40,462
கிராமத்தை தத்தெடுத்தன் மூலம் பயன்பெற்றவர்கள்: 70,182
டியூஷன் மைய்யங்களின் எண்ணிக்கை: 175
சுகாதாரம் மூலம் பயன்பெற்றவர்கள்: 3,284
புதிய மாணவர்கள் சேர்க்கை: 7,919.
No comments:
Post a Comment