எங்களின் முக்கிய தத்துவமானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதும், வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக செயல்படுவதும் ஆகும் : எம்.கே. பைஸி, தேசிய தலைவர் SDPI கட்சி.
முஸ்லீம், தலித் மற்றும் ஓபிசி சமூகங்கள் இருந்த பகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம். இதுவரை பாரம்பரியமாக மதச்சார்பற்ற கட்சிகளின் மீது இருந்த விசுவாசத்தை மக்கள் இப்போது SDPI மேல் காட்டுகிறார்கள் என்று SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. பைஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உங்கள் கட்சி மாநில மற்றும் தேசிய ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது? இந்த உயர்வு பற்றி உங்கள் கருத்தென்ன?
கடந்த சில ஆண்டுகளாக, SDPI பற்றிய செய்திகளை முக்கிய டிவி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் தவறாக பரப்பிவந்தன, அதன் காரணமாக SDPI கட்சியின் நோக்கத்தை மக்கள் அறிய முற்பட்டனர். அந்த தவறான பரப்புரைகளில் மிக முக்கியமானது அமித் ஷாவின் மே 2018 கர்நாடகா பரப்புரை ஆகும்.
பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் SDPI பற்றி குறிப்பிடுகிறார் என்றால் என்ன காரணம் என்று மக்கள் அறிய விரும்பினார்கள். இது SDPI பற்றி மக்கள் அறிய மிக முக்கிய காரணம் ஆகும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், 2698 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 8 தேசிய கட்சிகள், 52 மாநில கட்சிகள். மீதமுள்ள 2638 கட்சிகள் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள். SDPI அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட காட்சியாகும். SDPI தவிர்த்து மற்ற பதிவு செய்யப்படாத இந்த கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு பரிச்சயமானவை அல்ல.
மீடியாக்கள் (SDPI) எங்களை பற்றி எதிர்மறையான தோற்றத்தை முன்வைத்த போதிலும், எங்களின் சேவை, சந்திப்பு மற்றும் எங்களைப் பற்றிய செய்திகள் பற்றி நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டுதான் இருக்கிறது.
SDPI கட்சி மக்களை தன் பக்கம் ஏற்கவும், மக்களால் பெரிதும் விரும்பப்படவும் காரணம் என்ன?
அண்மையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் நூற்றுக்கணக்கான இடங்களை வென்றோம். கேரளாவில், 113 இடங்களை வென்றது, அங்கு முக்கிய கட்சிகள் என்று அழைக்கப்படும் பல (பத்து ஆண்டுகளாக வெற்றியடைந்த) அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பண்டிதர்களையும் ஆச்சரியப்படுத்தின. கர்நாடகாவில், SDPI 4 கிராம பஞ்சாயத்துகளில் தெளிவான பெரும்பான்மையுடன் 228 பஞ்சாயத்து இடங்களை வென்றது. மேலும், கர்நாடகாவில், பல சிட்டி கார்ப்பரேஷன் மற்றும் டவுன் முனிசிபல் கார்ப்பரேஷன் வார்டுகளில் வென்றோம். தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உ.பி.யில் கூட, SDPI பல பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் ஜில்லா பஞ்சாயத்து இடங்களில் வெற்றி பெற்றது.
முஸ்லீம், தலித் மற்றும் ஓபிசி சமூகங்கள் இருந்த பகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம். இதுவரை பாரம்பரியமான மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படுவதற்கு மாற்றாக அவர்கள் மீது இருந்த விசுவாசத்தை மக்கள் எங்கள் மீது இப்போது காட்ட தொடங்கியுள்ளனர்.
நீதி மற்றும் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போராடுவது, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பது மட்டுமல்லாமல் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது போன்ற காரணங்களால் எங்களை மக்கள் நம்புகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட பேரழிவு காலங்களில் SDPI கட்சியின் சேவையை பாராட்டும் வகையில் அப்படி என்ன சேவைகளை செய்கிறீர்கள்?
சுனாமி, வெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின் போது, மதம், சாதி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். , இதில் முக்கியமானவை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இறந்த உடல்களை தகனம் செய்தல் போன்றவை. தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும், SDPI செயல்வீரர்கள் மக்களின் சேவையில் உள்ளனர். இரத்த தானம், கிராமங்களின் சுகாதாரம், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், ஏழைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க உதவுதல், ரேஷன் பொருட்கள் கிடைக்க உதவுதல், கல்வி போன்ற சேவைகளால் எதிர்க்கட்சிகளும் எங்களை பாராட்டுகிறார்கள்.
எஸ்.டி.பி.ஐயின் முக்கிய அரசியல் நிலைப்பாடு என்ன?
முஸ்லிம் எதிர்ப்பு / தலித் எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிரான SDPI யின் இடைவிடாத போராட்டம் முஸ்லிம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து, சமூகம் இனவாதக் கட்சிகளாலும் அரசாங்கத்தின் அநீதி, அட்டூழியங்கள், பாகுபாடுகள் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டது. பேரணிகள், கிளர்ச்சிகள், தர்ணாக்கள், சட்ட போராட்டங்கள் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிரான சிவில் பாதுகாப்பு மூலம் மக்களின் உரிமைகளை பெற்றுத்தர விரும்பிய காரணத்தால் மக்கள் SDPI ஐ ஆதரிக்கிறார்கள். ஏனெனில் இதெல்லாம் மக்களின் தேவையாக இருக்குறது.
சமகால இந்திய பிரச்சினைகளுக்கு உங்கள் கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன?
SDPI ஒரு மாற்று. மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகள் இன்று மென்மையான இந்துத்துவத்தைப் பின்தொடர்கின்றன அல்லது ஊழல்கள், குடும்ப அரசியல், தகுதி இல்லாதவருக்கு பதவிகளை வழங்குதல் மற்றும் முதலாளித்துவத்தில் ஈடுபடுகின்றன. அந்தக் கட்சிகளின் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது. எனவே, சட்டத்தை உருவாக்கும் சட்டமன்றத்தில்/நாடாளுமன்றத்தில் பொது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், வெளிப்படையான மற்றும் மக்கள் நட்புரீதியான நிர்வாகத்தை வழங்குவதற்கும், மாற்று SDPI ஆகும்.
SDPI வலுவான உள் ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. தற்போது, இந்திய அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகள், பணக்காரர்கள் மற்றும் வலிமைமிக்கவர்களால் நடத்தப்படுகின்றன. பொது மக்கள் தேர்தலில் போட்டியிட கட்சி சீட்டுகளை தருவதில்லை. வேட்பாளர்கள் தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர். SDPI அதன் செயல்வீரர்களுக்கு அரசியல் என்பது ஒரு சேவை தானே தவிர அதுவே வாழ்க்கை இல்லை என்றும் ஒவ்வொரு பைசாவும் பொதுமக்களின் நலனுக்காகவும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கற்பிக்கிறது. மற்றொரு முக்கியமான காரணி அரசியலமைப்பைக் காப்பாற்றுவதாகும். மத்தியிலும் சில மாநிலங்களின் ஆளும் பாஜக அரசியலமைப்பு சட்டங்களை மதிக்காமல் மனுவாதத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றன.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, நீர், சுகாதாரம், சாலைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை உண்டாக்கி கொடுப்பதே கட்சியின் நோக்கம். SDPI சமத்துவம், நிலையான வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் தற்சார்பு பொருளாதாரம் ஆகியவற்றால் நாட்டை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment