புது தில்லி, 6 ஜூலை 2021: RSS தலைவர் மோகன் பகவத்தின் அறிக்கை RSS இன் உள்ளரங்கத்தில் விவாதிக்கப்பட்டு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K.Faizy அவர்கள் கூறியுள்ளார்.
பகவத்தின் பேச்சை ஒரு அறிக்கையாக மட்டும் பார்க்காமல், RSS சித்தாந்தம் எந்த அளவுக்கு மக்களிடையே விதைக்கப்படுகிறது என்றும் எந்த அளவுக்கு மக்களை கட்டுக்குள் வைத்துள்ளது என்றும் பார்க்கப்படவேண்டும்.
ஃபைஸி அவர்கள், பகவத்தின் கூற்றை சுட்டிக்காட்டி, அடித்துக்கொள்ளுதல் என்பது இந்துத்துவாவுக்கு எதிரானவர்களால் நடத்தப்படுகிறது என்றும், நாடுமுழுவதும் உள்ள சங்கபரிவாரர்களின் சாதாரண செயல்களில் உள்ள ஒன்றாகும் என்றும் கூறுகிறார்.
பசு அல்லது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பெயரில் முஸ்லிம்களைத் தாக்கி, கொள்ளையடித்து, கொலை செய்யும் ஆயிரக்கணக்கான ‘கோ ரக்ஷக் சங்கங்கள்’ நாட்டில் தீவிரமாக செயல்படுகின்றன. இதனால் இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது போன்று காட்டப்படுகிறது என்ற பகவத்தின் பேச்சை RSSன் உள்ளரங்கிலேயே சரிபார்க்கப்பட வேண்டும் என்று ஃபைஸி கூறினார்.
முஸ்லிம்களை எதிரிகளாகவும், நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டிய தீயவர்கள் என்றும் சங்க உறுப்பினர்களை வழிநடத்தும் ‘இந்துத்துவ சக்தியின் தலைவர் கோல்வால்கர் கோட்பாட்டை பகவத் நன்கு அறிவார். ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த சித்தாந்தம் அதன் உறுப்பினர்களுக்கு அதன் பயிற்சி முகாம்கள், ஷாகாக்கள், இலக்கியங்கள், உரைகள் போன்றவற்றில் மூலம் இன்று வரை கர்ப்பிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மனதில் கோல்வால்கர் கோட்பாட்டை ஊக்குவிக்க ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் ஆயுத பயிற்சி மற்றும் மூளை சலவை செய்து அதை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளும் தங்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் அனைத்து இந்தியர்களுக்கும் பயன்படும் வகையிலும், மற்றவர்கள் மீது வெறுப்பில்லாமல், மற்றவர்களை நோவினை செய்யாமல் வாழும் வகையில் மாற்றவேண்டும்.
இந்து முஸ்லீம் ஒற்றுமைதான் இந்த நாட்டின் உண்மையான பலமும் ஒருமைப்பாடும் என்றும் பரந்த மற்றும் துடிப்பான முற்போக்கு சிந்தனையில் மூலம் இந்த தேசத்தை கட்டியெழுப்பவேண்டும் என்றும் பைஸி கூறினார். ‘தர்மம்’ (மதம்) மற்றும் பேரினவாதம் போன்றவரை மூலம் மக்களை பிளவுபடுத்துவதும் முயற்சி நாட்டின் அழகையும் சகோதரத்த்துவத்தையும் அழிக்கும்.
No comments:
Post a Comment