Tuesday, June 29, 2021

காங்கிரசின் தோல்வியும் பிஜேபி யின் பி டீம் என்ற வாதமும் - உத்திரபிரதேச தேர்தல் ஒருபார்வை


403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசத்தில் வருகிற 2022  பிப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2012 ஆக இருக்கட்டும் 2017 ஆக இருக்கட்டும் பிஜேபி க்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்கப்படவில்லை. 2012 ல் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி பார்ட்டி 2017 ல் ஆட்சியை இழந்தது, காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. 2012 ல் 47 இடங்களை பெற்ற பிஜேபி 2019 ல் 312 இடங்களை பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. தனது வெற்றிபெற்ற இடத்தை 85% ஆக ஐந்து வருடத்தில் அதிகரித்துள்ளது. காரணம் SP மட்டுமல்ல, பகுஜன் சமாஜ்வாதி, கம்ம்யூனிஸ்ட் & சிவசேனா போன்ற கட்சிகள் 2012 ல் போட்டியிடவில்லை, ஆனால் 2017 ல் களமிறக்கப்பட்டது. இன்று உவைஸி 2022 ல் போட்டியிடப்போகிறார் என்று தெரிந்தவுடன் காங்கிரசின் வெற்றியை பறிக்க போகிறார் என்று துணிந்து பொய் சொல்லும் நமக்கு தெரியுமா? காங்கிரஸ் கடந்த முறை 7 சீட்டை மட்டுமே பெற்றது என்று?



ஏற்கனவே 2017  ல் உவைசியின் AIMIM  38  இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கூட வெல்லவில்லை, வரும் தேர்தலில் 100  இடங்களில் நிற்போம் என்றதும் பிஜேபி யின் பி டீம் என்ற ஓட்டை காரணத்தை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள் அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள், அதற்க்கு ஒத்து ஊதுவதும் முஸ்லிம்களே. காலத்திற்கும் திமுக, காங்கிரஸ் ன்னு ஆதரவு தந்துகொண்டே இருக்கவேண்டும், காங்கிரஸ் வெற்றிபெற்று பணம் வாங்கிக்கொண்டு பிஜேபி க்கு சென்றுவிடுவார்கள், நாம் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு நடுத்தெருவில் CAA  க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கவேண்டும். 

பிஜேபி யின் கெடுதல்கள் தெரிந்த பின் பிஜேபி யை தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளையும் காங்கிரஸ் ஒன்றிணைக்கவேண்டும். 60 வருடம் இந்தியாவை ஆண்ட கட்சியால் தனக்கான தலைவரை கூட தேர்தெடுக்கமுடியாத நிலையில் இருக்கும் காங்கிரசுக்கு இது சாத்தியமில்லை என்றால் தேர்தலில் நிக்காமல் இருப்பதே நல்லது. தேர்தலில் நின்றால் ஓட்டுப்பிரியும், பிஜேபி வந்துவிடும். ஒருவேளை வெற்றிபெற்றால் காங்கிரசின் MLA  க்கள் பிஜேபி க்கு சென்றுவிடுவார்கள். 

தன் இயலாமையை மறைக்க மற்றவரை பிஜேபி யின் பி டீம் என்று சாடுவதை எல்லா கட்சிகளும் நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லையென்றால் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். 

இனியாவது அரசியலை படியுங்கள், விளங்குங்கள், எல்லோரும் சொல்வதால் நாமும் சொல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, நமக்கு இறைவன் அறிவை கொடுத்துள்ளான், ஆராய்வோம், முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக நாமே செயல்படவேண்டாம். 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...