பெட்ரோல் விலை
பெட்ரோலின் விலை கச்சா எண்ணெய்க்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பெட்ரோல் விலை ஏறுகிறது, ஆனால் குறையும் போது குறைவதில்லை. தன் பங்குக்கு கலால் வரியையும் மத்திய அரசு குறைப்பதில்லை.
மக்கள் வாங்கும் அளவுக்கு தான் விலையை நிர்ணயித்து உள்ளோம் என்று சொல்லும் பிஜேபி யினருக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவான விஷயம். மேலும் விலையை குறைத்தால் நிறைய வாங்கி மாசை அதிகப்படுத்துவார்கள். விலையை குறைக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் பாசிச அரசு சொல்லும் சாக்கு தான் இந்த காற்றை மாசுபடுத்தும் சொல்.
பாசிச அரசு உண்மையிலேயே மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால் பெட்ரோல் விலையை குறைத்து மக்களுக்கு நல்லது செய்யலாம். கூடுதலாக மக்கள் வாங்காமல் இருக்க வண்டியின் எண் ஐ பயன்படுத்து ரேஷன் முறையில் பெட்ரோலை விற்கலாம். இன்று எவ்வளவு விற்பனை ஆகிறதோ அதே அளவு விற்பனையை குறைந்த விலைக்கு ரேஷன் முறையில் வழங்கினால் மக்களும் சந்தோசமாக இருப்பார்கள். மேலும் காற்றும் மாசுபடாது.
மதுவிலக்கு
பல நாடுகளில் sin commodity என்று சிகரெட் மற்றும் மதுக்களை அழைப்பார்கள். அதிகமான வரிகளை போட்டு மக்கள் வாங்குவதை குறைப்பார்கள். விலை அதிகம் ஆகும் போது மக்கள் வாங்காமல் விடவும் சாத்தியமுண்டு. அதை போல தமிழகத்தில் பின்பற்றப்படவேண்டும். வரியால் அதிக பணமும் கிடைக்கும், மக்களும் குடிப்பதை குறைப்பார்கள்.
ஆக பெட்ரோலுக்கு வரியை குறைத்தும் சாராயத்திற்கு வரியை அதிகப்படுத்தியும் மக்களை நிம்மதியாக அரசுகள் வாழவிடவேண்டும்.
No comments:
Post a Comment