Friday, June 11, 2021

நீட் தேர்வு கடந்து வந்த பாதை

நீட் தேர்வு

2012 ஆம் ஆண்டு நீட் தேர்வு மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலை படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்படவேண்டும் எண்டு CBSE மற்றும் இந்திய மருத்துவ கழகம் (Medical  Council  of  India) என்று சொன்னது. 

05-May-2013 அன்று நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. 

உச்சநீதி மன்றத்தில் 115 வழக்குகள் நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 18-Jul-2013 அன்று மூன்று நீதிபதிகளின் அமர்வில் அல்தாமஸ் கபீர் என்ற நீதிபதியின் தலைமையில் விக்ரம்ஜித் சென் என்ற நீதிபதியின் ஒப்புதலோடு நீட் தேர்வு இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்ற தீர்ப்பு வெளியானது. அதே நேரத்தில் மூன்றாவது நீதிபதி அணில் ஆர் தாவே தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றில் இரண்டு பேர் எதிர்த்ததால் நீட் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பு வெளியானது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் NEET  தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தேர்வின் பாடத்திட்டம் CBSE ல் இருந்து எடுக்கப்படுகிறது, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இது சிரமத்தை உண்டாக்கும் மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் உள்ளது என்றும் மாநிலங்கள் எதிர்த்தன. 

நீட் தேர்வின் ரத்துக்கு எதிராக 11-April-2016 அன்று மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. ஐந்து பேர்கொண்ட நீதிபதிகளுக்கு தலைமை தாங்கிய அணில் ஆர் தாவே ( SK Singh and AK Goel) நீட் தேர்வு தேவை என தீர்ப்பு வழங்கினார். ஏற்கனவே நீட்டை எதிர்த்த நீதிபதி விக்ரம்ஜித் சென் 30-12-2015 அன்று ஓய்வு பெற்றிருந்தார்.

[2016 மே மாதம்  தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று கடிதம் எழுதினர், அந்த கடிதத்தில் பெயரில் 2016 ஆண்டு மட்டும் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அடுத்த வருடத்துக்குள் பாடத்திட்டத்தை மாற்றவேண்டும், மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் அடுத்த வருடம் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.]

அவசர சட்டமாக நீட் தேர்வின் சட்டம் நிறைவேற்றப்பட்டு 24-May-2016 அன்று குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். 16-July-2016 அன்று சட்டமாக அரசிதழில் அறிவிக்கப்பட்டது. 

சொன்னது போலவே 26-May-2017 அன்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆங்கிலத்திற்கும் மாநில மொழிக்கும் இடையே வினாத்தாள்களில் பிழைகளும் மொழிபெயர்ப்பு தவறுகளும் இருந்தன. இருந்தும் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவை அறிவிக்கக்கூடாது என்று வழக்கு போடப்பட்டது. உயர்நீதிமன்றமும் முடிவை அறிவிக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு 12-Jun-2017 அன்று தடைவிதித்தது. (தடைக்கு தடை). தேர்வின் முடிவுகள் வெளியாயின.

அதன்பிறகு தமிழக அரசு சட்டமன்றத்தில் 25-Jul-2017 அன்று மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதை மத்திய அரசு ரத்து செய்தது.(பாடத்திட்டத்தை மாற்ற கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டதால்). அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி அவர்களை சந்தித்து நீட் தீவு விலக்கு தமிழகத்துக்கு தேவை என்று கோரிக்கைவிடுத்தார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிறகு நிர்மலா சீதாராமன் அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் உள்ள அரசு சீட்டிற்கு விலக்கு அளிப்போம் என்று சொல்லி பிறகு முடியாது என்று சொல்லவிட்டார். 

14-Aug-2017 அன்று விலக்கு வேண்டி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் 22-Aug-2017 அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து முடிவுகளை வெளியிட்டு மருத்துவர்களின் சேர்க்கை நடக்க உத்தரவிட்டது. 23-Aug-2017 அன்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன, 01-Sep-2017 அன்று அனிதா என்ற மாணவி 1176 மதிப்பெண் (NEET 12.33 percentile while she scored 86/720 marks.) பெற்று மருத்துவம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார். 04-Sep-2017 அன்று சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டது.  


இந்தியா முழுக்க நீட் தேர்வு எழுதிவர்கள் : 14,10,755

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,97,042

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் : 1,23,078

தேர்ச்சி பெற்றவர்கள் : 59,785

26 அரசு கல்லூரிகளில் உள்ள இடம் : 3250

தனியார் கல்லூரியில் உள்ள அரசு இடம் : 3600

மொத்தம் : 6850

7.5% இடஒதிக்கீட்டால் பயன்பெற்ற மாணவர்கள் : MBBS 313, BDS 92 Total 405.

மாநிலம் விட்டு மாநிலத்திற்கு தேர்வுக்கான இடத்தை ஒதுக்கியது, 18% GST வரி விதித்து விண்ணப்பத்தின் தொகையை அதிகரித்தது. சோதனை என்ற பெயரில் மாணவர்களை மனரீதியாக தாக்கியது என்று எல்லா வகையிலும் பாவப்பட்ட மாணவர்களை எப்படியாவது மருத்துவம் படிக்கவிடாமல் செய்ய மத்திய அரசு முயன்றது. முடிவில் பணம் இருந்தால் மட்டுமே படிக்கமுடியும் என்ற நிலைக்கு நீட் தேர்வையும் மருத்துவத்தையும் ஆக்கிவிட்டது.

கடந்த தடவை விண்ணப்பம் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் நூறு கோடி.

ஆக நீட் தேர்வின் மூலம் பணமுள்ளவர்களுக்கும் பார்ப்பன பணியாகும்பலுக்கும் மருத்துவ சீட்டை தாரைவார்க்கும் செயல்தான் இது. முடிவாக நீட் சமூகநீதிக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரானது.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...