Friday, January 18, 2019

பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் 10% இட ஒதுக்கீடு ஜனநாயக படுகொலை - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டனம்


பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்க்கு வழங்கப்படும் 10 % இட ஒதிக்கீடு என்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் மட்டுமல்லாது சமூக நீதியை ஒழித்துக்கட்டும் செயலும் ஆகும் என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சேர்மன் இ அபூபக்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆர்டிகிள் 15  மற்றும் 16  ன் படி இட ஒதுக்கீடு என்பது சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்காத்தான். ஆனால்  பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களுக்கும் இட ஒதிக்கீடை தரும் வண்ணம் மத்திய அரசு அதில் சில திருத்தங்களை செய்துள்ளது. இது போன்ற திருந்தங்களால் இட ஒதிக்கீட்டையே ஒழிக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் பொதுப்பிரிவினரின் வறுமை ஒழியாது. ஆயிரக்கணக்கான வருடம் அடிமைப்பட்டு இருந்த சமுதாயம் கொஞ்சம் முன்னேறிவரும் இந்த நேரத்தில் இது போன்ற சட்டங்களால் அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே திரும்பக்கூடிய அபாயம் உள்ளது.

பொருளாதாரம் என்பது சமூகம் மற்றும் சாதி போன்று மாறாத விஷயம் இல்லை, பொருளாதாரம் மாறக்கூடியதே. அதனால் தான் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒரு தவறான விஷயம். இன்னும் நமது நாட்டில் வறுமை என்பது சமூகம் அல்லது சாதி சார்ந்ததாகவே உள்ளது.

பொருளாதார இட ஒதுக்கீடு 1992  ல் உச்ச நீதிமன்றத்தால் இந்திரா சவ்னி வழக்கில் தள்ளுபடி செய்யப்பட விஷயம் ஆகும். சாதி மதம் பார்க்காமல் வறுமையில் வாடுபவருக்கு தேவையான நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும், அப்படி எடுக்கப்படும் நடவடிக்கை ஏற்கனேவே உள்ள இட ஒதிக்கீடை நீர்த்துப்போகசெய்யாமல் இருப்பது அவசியம்.

இந்த செயல் பொதுப்பிரிவினரின் வாக்கை பெறவும், 4 .5 ஆண்டு ஆட்சியில் செய்த மூடத்தனத்தை மறைப்பதற்கான வேலையே. மேலும் காங்கிரசும் கம்ம்யூனிஸ்டும் இதை ஏற்பதற்கு காரணம் அதில் உள்ள தலைவர்கள் பெரும்பாலானோர் பொதுப்பிரிவினர் என்பதே என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சேர்மன் இ அபூபக்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

http://popularfrontindia.org/?q=tue-01082019-1559

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...