Wednesday, January 16, 2019

4. உச்சநீதிமன்ற தடையை மீறி தர்காவை இடித்து முஸ்லிமை காரோடு எரித்த BJP/RSS/ VHP பயங்கரவாதிகள் - குஜராத் பரோடா தர்கா கலவரம் 2006


கலவரம் செய்து ஆட்சியை பிடித்தவுடன், ஆட்சியை தக்கவைக்க அல்லது அகண்டபாரதம் அமைக்க முஸ்லீம் அடையாளங்களை அகற்றி முஸ்லிம்களை கொல்வது போன்ற ஆர் எஸ் எஸ் பிஜேபி யின் செயல்பாடுகளின் வரிசையில் உள்ளதுதான் தர்கா கலவரம்.

தர்கா கலவரம்

2006  ல் வதோதரா என்ற பரோடாவில் நடந்த கலவரத்தின் மற்றொரு பெயர் தர்கா கலவரம், 200 -300  வருடங்கள் பழமையான சயீத் சிஸ்தி ரஷீதுதீன் என்ற சூபியின் தர்காவை முனிசிபாலிட்டி அப்புறப்படுத்த முடிவு செய்தது, இதனால் ஏற்பட்ட கலவரத்தால் 6 -8  பேர் கொல்லப்பட்டனர், 42  பேர் காயமடைந்தனர்.

2006 ல் மேயர் சுனில் சோலங்கி தலைமையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 20  கோவில்களும் 3  தர்க்காக்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஏப்ரல் 2  ந்தேதி குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்தியாகவேண்டும், அதற்க்கு இடையூறாக இருப்பவர்களை கைதி செய்வோம். ஆனால் ஏப்ரல் 4  ந்தேதி அந்த தீர்ப்புக்கு தடை வாங்கப்பட்டது.

சோலங்கி எப்படியாவது அந்த தர்காவை அப்புறப்படுத்தவேண்டும் என்றார், ஆனால் போலீஸ் கமிசனர் உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி இடிக்கமுடியாது என்றார். ஆனால் சோலங்கி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களின் பஜ்ரங்தள் பையன்கள் செய்வார்கள் என்று சூளுரைத்து தர்காவை இடிக்க முயன்றார்.

அதனால் ஏற்பட்ட கலவரத்தில் 18  பேர் காயமடைந்தனர், 38  பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணீர் புகையை கொண்டு கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாத காவல்துறை சுட உத்தரவு இட்டது, இதனால் பஜ்ரங்க்தள் பயங்கரவாதிகள் மே 2  ம் தேதி ஹிந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டினார். கலவரத்தை கட்டுப்படுத்தமுடியாத காரணத்தால், மே 3  ம் தேதி மாநில அரசு கூடுதல் காவலர்களை கேட்டது. அந்த நேரத்தில் 1500  பேர்கள் கொண்ட பயங்கவாத கும்பல் காருடன் சேர்த்து ஒரு முஸ்லிமை எரித்து கொன்றது. பாதுகாப்புக்காக மக்கள்  அஜாப்தி மில்லில் தங்கவைக்கப்பட்டனர்.

பின்விளைவு 

பிரண்ட்லைன் பத்திரிக்கையின் படி, இது 2002  நடந்தது போன்ற கலவரம் இல்லை, இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலே இது. இரண்டு பக்கமும் அப்பாவிகள் காயம்பட்டனர், கொல்லப்பட்டனர். 2002 இனப்படுகொலை என்பது முன்கூட்டியே திட்டமிட்ட, மாநிலத்தில் உதவியால் நிகழ்த்தப்பட்டது.

கலவரத்திற்கு பிறகான ஆய்வுப்படி காவலர்கள் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கப்பட்டார்கள்.

ராணுவத்தின் உதவியால் 5 மாவட்ட கலவரம் கட்டுக்குள் வந்தது என்று  குஜராத்தின் அன்றைய உள்துறை அமைச்சரான அமித்சா கூறினார்.

மேலும் சில தகவல்கள்

  1. 1969  ல் பிஜேபி ஆர் எஸ் எஸ் ஹிந்து மகா சபை பயங்கவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த தர்கா சேதமடைந்தது. அதன் பின்னால் அது சரிசெய்யப்பட்டது.
  2. சுமார் 3 .5  சதுர  மீட்டர் தர்காவே சாலையில் இருந்தது. 
  3. முஸ்லிம்கள் மேயர் சோலங்கியிடம் தர்காவை இடிக்கவேண்டாம் என்றும், இதை பாதுகாக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
  4. பிஜேபி ஆர் எஸ் எஸ் பலமுறை அந்த தர்காவை இடிக்கமுற்பட்டனர், ஆனால் அதை சுற்றி முஸ்லிம்கள் வசித்ததால் அவர்களால் முடியவில்லை.
  5. தர்காவை நீங்கள் அப்புறப்படுத்தாவிட்டால், நாங்கள் அப்புறப்படுத்துவோம் என்று விசுவ ஹிந்து பரிஷத் பகிரங்கமாக காவல்துறைக்கு கடிதம் எழுதியது.
ஆதாரங்கள்



No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...