Sunday, January 13, 2019

3. முஸ்லீம் இன அழிப்பு - குஜராத் கலவரம் 2002


பிஜேபி யை பொறுத்தவரை கலவரம் செய்து ஆட்சியை பிடிப்பார்கள், கலவரம் செய்து ஆட்சியை தக்கவைப்பார்கள், கலவரம் செய்து முஸ்லீம் மற்றும் தாழ்த்தப்பவர்களை கொல்வார்கள், அதுதான் அவர்களின் அகண்டபாரத நோக்கம்.

மொத்தத்தில் அவர்களின் தொழில் கலவரம்,  கலவரம், கலவரம்

உலக அரங்கில் இந்தியாய் தலைகுனியவைத்த சம்பவங்களின் மிக முக்கியமான சம்பவம் குஜராத்தை கலவரம் 2002 .
1969  ல் ஆரம்பித்த கலவரத்தின் விளைவாக முஸ்லிம்கள் தனியாக வாழத்தொடங்கி இருந்தனர், முஸ்லிம்கள் தனியாக வாழத்தொடங்கியதன் விளைவு, எளிதில் அவர்கள் கொன்று குவிக்கலாம், இதுதான் இந்துத்துவ பாசிச பிஜேபி ஆர் எஸ் எஸ் குறிக்கோள்.

காரணம்

2002  பிப்ரவரி 27  ம் தேதி அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த சபர்மதி விரைவுவண்டியின் S2 கோச்சை  கோத்ரா என்ற இடத்தில் தீக்கிரையாக்கினார். எரித்தவர்களை இன்றுவரை முஸ்லிம்கள் என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் எதற்க்காக அவர்களை முஸ்லிம்கள் எரிக்கவேண்டும் என்று இதுவரை சொல்லவில்லை.

எரிந்த கோச்சை கழட்டிவிட்டு விட்டு ரயில் பரோடா சென்றது, பரோடா சென்ற ரயிலில் இருந்து இறங்கிய ஒருவரை கட்டையால் அடித்து கொன்றனர், மற்றவரை அடித்து காயப்படுத்தினர் ஆர் எஸ் எஸ் பிஜேபி கலவரக்காரர்கள். மேலும் ஆண்ட்ரே இரண்டு பேருந்துகளை எரித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். நாட்டு மக்கள் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டி கொண்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை, ராமர் கோவில் கட்டுவதை தவிர்க்குமாறு வாஜ்பாய் மற்றும் அத்வானி வலியுறுத்தினர்.எனினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணியை 15 மார்ச் அன்று தொடங்கப்போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது. இதற்காக 3000 உதவி ராணுவ அணிகள் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர்.

70,000 காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாநிலமெங்கும் அமர்த்தப்பட்டனர் அன்று இரவே, கோத்ரா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா வன்முறையை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார். இதில் கண்டவுடன் சுட உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இடங்களில் அமல்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார். மற்றும், இந்து - முஸ்லிம்கள் ஒன்றாக வாழும் இடங்களுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டது. கடைகளைச் சூறையாடிய மற்றும் வீடுகளை தீயிட்டு கொளுத்திய கும்பலின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது வாலிபர் மரணமடைந்தார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்வண்டி எரிப்பு நிகழ்வை கண்டித்தார். இவரைத் தவிர, வேறெவரும் அந்நிகழ்வை கண்டிக்கவில்லை. குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திலும் எச்சரிக்கை எழுப்பப்பட்டது.

காங்கிரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் உமேஷ் சந்திரா பனர்ஜீயின் வாக்குப்படி, ரயில் உள்ளிருந்து எரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதன்பின்னர் ரயிலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்கள் 11  பேருக்கு தூக்கும், 20  பேருக்கு ஆயுள் தணடனையும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் அன்றைய முதல்வராக இருந்த இந்நாள் பிரதமர் மோடி, எரிந்த பிணத்தை ஊர்வலமாக மக்களிடம் எடுத்து செல்ல உத்தரவிட்டார், ஹிந்துக்களை கொன்ற முஸ்லிம்களை பழிவாங்க உத்தரவு இட்டார். உங்களுடன் நான் இருக்கிறேன் இன்றைய நாட்கள் உங்களோடது என்று அவர்களுக்கு ஆர்வமூட்டினார்.

ஆர் எஸ் எஸ் இந்த 2000  க்கும் அதிகமான யூனிட்டுகள் இந்த கலவரத்தில் பங்குபெற்றனர். அதிகமான தலித்துகள் இந்த கலவரத்தில் பயன்படுத்தப்பட்டனர்.

கோத்ரா ரயிலை எரித்தவர்ககளை(?) பழிவாங்க ஆர் எஸ் எஸ் பிஜேபி பயங்கரவாத கும்பல் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 3000.

வீடுகளையும் கடைகளையும் இழந்த மக்கள் 5000  க்கும் மேல், சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் மக்களின் எண்ணிக்கை 50,000  க்கும் மேல்.

கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்களின் நிலையை பற்றி கேட்டபோது மோடி சொன்னது அவர்களுக்கு என்ன அகதிகள் முகாமில் இனப்பெருக்கம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்ற கேவலமான பதிலை சொன்னார், மனைவியை வைத்து காப்பாற்ற வக்கற்ற மோடி.

மிகவும் கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக பெண்களை கற்பழித்தனர், கொன்று குவித்தனர், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து தீயிலிட்டு கொளுத்தினர்.

3 நாட்களுக்கு மேலாக கட்டுக்குள் கொண்டுவரப்படாத இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, சொந்த கட்சியை சேர்ந்த வாஜ்பாயே மோடியைப்பார்த்து ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்றார்.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகிவந்தனர், ஆனால் ஆர் எஸ் எஸ் ஆல் வெறியூட்டப்பட்ட அதே ஹிந்துக்கள் பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்.

காங்கிரசை சேர்ந்த இஹஷான் ஜாப்ரி என்ற MP உடலுறுப்புகள் வெட்டப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார், அதுவும் அவரின் மனைவியின் முன்னாலே, காரணமான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோருக்கும் அதிகம் தெரிந்த கலவரம் என்பதால் அதிகம் விவரிக்கத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

3 முக்கிய விடை தெரியாத கேள்விகள்.


  1. ஏன் முஸ்லிம்கள் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ரயிலை எரித்தார்கள்? காரணம் என்ன?
  2. எரித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தர தகுதியற்ற மோடி ஏன் பினத்தை வைத்து அரசியல் செய்து அப்பாவிகளை கொல்ல காரணமாக இருந்தார்?.
  3. ஏன் மோடி மூன்று நாட்களுக்குள் கலவரத்தை கட்டுப்படுத்தவில்லை?


கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கே தண்டனை, ஆனால் இந்த இன அழிப்புக்கு காரணமான மோடியை ஏன் நீதிமன்றம் தண்டிக்கவில்லை?.


பிரெட்லைன் பத்திரிக்கைப்படி பரவலாக்கப்பட்ட, மாநிலத்தால் நடத்தப்பட்ட, திட்டமிட்ட இனப்படுகொலை தான் 2002  படுகொலை.

https://www.quora.com/What-was-Narendra-Modis-role-in-Godhra

http://edition.cnn.com/2002/WORLD/asiapcf/south/05/15/gujarat.camps/index.html

https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_riots

https://timesofindia.indiatimes.com/india/Atal-Bihari-Vajpayees-2002-letter-returns-to-haunt-Narendra-Modi/articleshow/10011704.cms

https://frontline.thehindu.com/politics/modi-is-accountable/article6185289.ece

https://en.wikipedia.org/wiki/2006_Vadodara_riots

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...