Tuesday, January 29, 2019

அதிகாரிகளின் தடையை மீறி கல்வி உதவித்தொகை வழங்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா - ஜார்கண்ட்


பாகூர் ஜார்கண்ட்:

ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா வழங்கும் விழாவை ஜனநாயகத்துக்கு விரோதமாக தடுத்து நிறுத்திய ஜார்கண்ட் மாநில அதிகாரிகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியா ஏழு வருடத்திற்கு மேலாக  இந்த தலையாய பணியை செய்து வருகிறது.

பாகூர் டவுன் ஹாலில், ஜார்கண்ட் பாப்புலர் ஃப்ரண்ட்  இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது, ஓ.ம்.எ ஸலாம் தேசிய துணை தலைவர் மற்றும் முஹம்மது அலி ஜின்னாஹ் தேசிய பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்த நிழ்ச்சி கடைசி நிமிடத்தில் தடை செய்யப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்றாக படிக்கக்கூடிய 86  மாணவர்களுக்கு சுமார் 4  லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்க நேர்முகத்தேர்வு ஏற்படு செய்யப்பட்டு இருந்தது, அவர்கள் முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தது குறிப்பிட தக்கது.

ஹால் புக்கிங் மற்றும் போலீஸ் அனுமதி போன்ற எல்லா சட்ட ரீதியான நடவடிக்கையும் முன்னதாகவே எடுக்கப்பட்ட இந்த திட்டத்தை தோல்வியடைய செய்யும் முகமாக (உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக) மாணவர்கள் ஹாலுக்கு நுழய அதிகாரிகள் தடை விதித்தனர்.

இருந்த போதிலும் மைதானத்தில் வைத்து உதவித்தொகையை வழங்கிவிட்டோம், மாநில அரசு சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட எங்கள் அமைப்பின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து எதிர்மறையான அணுகுமுறையுடன் தொடர்வது துரதிஸ்டவசமானது.

மாநில அரசானது மக்களையும் மக்களின் உரிமையையும் காக்காமல் ஆளும் கட்சியின் கைப்பாவையாக திகழ்கிறது.


ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் நடவடிக்கைகளை தடைசெய்ய மாநில அரசு முயன்று நீதிமன்ற உத்தரவால் முகத்தில் கறியை பூசிக்கொண்டு நிகழ்வு எல்லோருக்கும் நினைவிருக்கலாம். மேலும் மாநில அரசு மற்றும் அதிகாரிகள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் இயற்கை நீதிகளை ஆதரித்து, எதிர்மறையான மனோபாவத்தை விட்டுக்கொடுக்கவும், கல்வி மற்றும் சமூக ரீதியாக அபிவிருத்தி செய்ய மக்களின் முயற்சிகளை ஆதரிக்கவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும் ஜார்க்கண்ட் மக்களை அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் இயற்க்கை நீதி மறுக்கப்படுவதற்கு எதிராகவும் ஒன்றிணைய பாப்புலர் ஃப்ரண்ட்  அழைக்கிறது.

(Released in press conference held on 21 January 2019 at Pakur, Jharkhand)
Press conference attended by:

1. O.M.A. Salam (Vice Chairman, Popular Front of India)
2. Mohammed Ali Jinnah (Gen Secretary, Popular Front of India)
3. MoulanaKaleemullaRashadi (Zonal President, Bihar Jharkhand Zone)
4. MoulanaHanzalaShiekh (State President, Jharkhand)
5. Abdul Wadood (State Gen Secretary, Jharkhand)

http://www.popularfrontindia.org/?q=thu-01242019-1052

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...