இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவனின் கட்டளை (குரான்) நபி முஹம்மது ஸல் அவர்களின் வழிமுறை, இறைவன் பல மொழிகளில் கட்டளைகளை பல நபிமார்கள் மூலம் வழங்கியுள்ளான்,
தவ்ராத் - ஹீப்ரு மொழியிலும்,
சபூர் - அரபி மொழியிலும்,
இன்ஜீல் - கிரேக்க மொழியிலும்,
குரான் - அரபி மொழியிலும் வழங்கப்பட்டுள்ளது,
அதே போல ரிக் யஜுர் சாமம் மற்றும் அதர்வண வேதங்களும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை பொறுத்தவரையில் நபி முஹம்மது ஸல் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் தான் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும், அது மலசலம் கழிப்பதில் இருந்து ஆட்சி அமைப்பது வரை, தொழுகை முதல் ஹஜ் வரை. ஆக ஸல் அவர்கள் தொழுகையின் போது அரபியில் தான் குரான் வசனங்களை ஓதியுள்ளார்கள், அதனால் அப்படியேதான் நாமும் ஓதவேண்டும், தொழுகை முடிந்தவுடன் அல்லது தொழுகையில் கேட்க்கும் இறைஞ்சுதல் (துவா) எந்த மொழியில் வேண்டும் என்றாலும் கேட்கலாம். அதில் தடை இல்லை.
தமிழ் மொழியில் வழிபட்டால் இறைவனுக்கு புரியாதா?
மொழியை படைத்தவன் இறைவனே, ஆகையால் எல்லா மொழியையும் அறியும் ஆற்றல் உடையவன் தான் இறைவன், தமிழில் வழிபட வேண்டும் என்றால் யாருடைய மொழிபெயர்ப்பை எடுப்பது என்ற சிக்கலை விட அது இறைத்தூதர் ஸல் காட்டித்தராத வழி என்பதே சரியான காரணம் ஆகும்.
அரபி மொழி உயர்ந்த மொழியா?
குரானிலோ ஹதீஸிலோ அரபி மொழி உயர்ந்ததாக எங்கேயும் சொல்லப்படவில்லை, மாறாக பிராமிணர்கள் பேசக்கூடிய சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்லப்படுகிறது.
மேலும் குரானில், உலக மக்கள் அனைவரும் சமம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
அராபியர்களை விட அரபியர்கள் அல்லாதோரே, அராபியர் அல்லாதோரை விட அரபிகளோ சிறந்தவர் இல்லை, இறைவனிடம் பயபக்தி உடையோர் சிறந்தவர் என்று இஸ்லாம் சொல்கிறது.
சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீச பாஷை
வள்ளலார் இருந்த காலத்தில், அன்றைக்கு இருந்த சங்கராச்சாரியார், 'உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்; சேய் மொழிதான் தமிழ்' என்றார். வள்ளலாரோ உடனடியாக, 'சமஸ்கிருதம் தாய் மொழியாக இருக்குமானால், தமிழ் தந்தை மொழி!' என்றார்.
https://www.vikatan.com/news/tamilnadu/114680-sankara-mutt-is-always-against-tamils-slams-tamilaruvi-manian.html
சென்ற ஆண்டு திரு. காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியாரவர் கள் "குறளை சென்றோதோம்" என்னும் ஆண்டாள் கூற்றிற்கு "குறளைச் சென்றோதோம்" என்று திரித்து ஓரிடத்திற் பொருள் கூறியதுபற்றி ஆட்சி மொழிக் காவலர் திரு. கி. இராமலிங்கனார் (எம்.ஏ.) வினவச் சென்றிருந்தபோது, ஆச்சாரியாரவர்கள் (தமிழறிந்திருந்தும்) வடமொழி யில் விடை இறுக்க அதை அவர்களது அணுக்கத் துணைவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினராம். அதன்பின், ஆட்சி மொழிக் காவலர், "ஐயா! அடிகளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமே! அங்ஙனமிருந்தும் ஏன் வடமொழியில் விடை இறுக்க வேண்டும்?" என வினவ, அணுக்கத் துணைவர், "ஆச்சாரியார் சுவாமிகள் பூஜை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை," என மறுமொழி தந்தனராம்!
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=196&pno=78
ஆக சமஸ்கிருதத்தை போல அரபியை யாரும் எங்கேயும் தூக்கிப்பிடிக்கவில்லை, மேலும் மற்ற மொழியை இஸ்லாம் ஒருபோது தாழ்வாக பார்க்கவில்லை, குரான் அரபியில் வந்ததால் அரபியில் வேறு மொழியில் வந்திருந்தால் வேறு மொழியில் அவ்வளவே.
மநுஷ்யனுக்கும் ஸம்ஸ்காரத்தைச் செய்கிறது. தேவ பாஷையிலிருந்து உண்டானதால் திவ்ய சக்திகளின் அநுக்கிரஹத்தைப் பெறும் படியாகச் செய்கிறது. ஸம்ஸ்கிருத சப்தங்கள் உத்தமமான நாடி சலனங்களால் நல்லது செய்வதோடு nervous system -ஐ [நரம்பு மண்டலத்தை] க்கூட வலுவாக்கி, ஆரோக்யம் தருகிறது என்கிறார்கள்.
http://www.kamakoti.org/tamil/Kural75.htm
சொர்க்கம் செல்லவேண்டுமானால் உங்கள் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கவேண்டும் என்றும், சமஸ்கிருத மந்திரங்களால் கடவுளையே கட்டுப்படுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது, ஆனால் எங்கேயும் மற்ற மொழியை தாழ்த்தி இஸ்லாம் சொல்லவில்லை.
திராவிட இயக்கங்கள் தமிழில் பூசை செய்ய சொல்ல வலியுத்துவத்தின் காரணம் பல சமஸ்கிருத மந்திரங்கள் தவறான அர்த்தத்தை கொண்டது என்று சொல்லப்படுகிறது, அனால் குரானுக்கு ஹதீஸுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு தாளாரமாக கிடைக்கிறது.
No comments:
Post a Comment