Tuesday, January 8, 2019

4. இஸ்லாமிய தீவிரவாதம்/பயங்கரவாதம்


இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி சமாதானம் என்றே பொருள், இஸ்லாத்தில் சொல்லக்கூடிய முகமனின் அர்த்தமே உங்கள் மீதி சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக என்பதுதான். 

அப்படியிருக்க எப்படி இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கவாதத்தையும் போதிக்கும்?

அப்பாவிகளை கொல்வது முழு மனித சமுதாயத்தையும் கொல்வது போல் என்று குரான் சொல்கிறது 

5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

ஆனால் குரான் காபிர்களை கொல்லச்சொல்கிறது என்று தவறான வாதம் கட்டியமைக்கப்படுகிறது அதற்க்கான ஆதாரமாக கீழே உள்ள குரான் ஆயத்தை சொல்கிறார்கள்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

ஆனால் வசதியாக அதற்க்கு மேலே உள்ள வசனங்களை மறைத்து விடுகின்றார் இந்த நடுநிலையற்றவர்கள்.

ஆனால் 9 :5 க்கு முன்னும் பின்னும் அழகாக இறைவன் இறைமறுப்பாளர்களையும் இனைவைப்பாளர்களையும் பாவிக்கும் முறைகளை சொல்லித்தத்திருக்கிறான்.


9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

ஆக குரான் எந்த இடத்திலும் அப்பாவிகளை கொல்வதையோ, கொடுமைப்படுத்துவதையோ விரும்பவில்லை என்பதை விட தடுக்கிறது என்பதே உண்மை.


பிறகு ஏன் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்று கருத்து முன்வைக்கப்படுகிறது?

ஏனென்றால் சாத்தானின் சூழ்ச்சிகள் இதுவும் ஒன்று, யூத, கிருத்துவ மற்றும் சங்க பரிவார பாசிஸ்டுகள் மக்களை வழிகெடுக்க, இஸ்லாத்தை பார்த்து வெருண்டோட செய்த நாடகங்களே இஸ்லாமிய தீவிரவாதம்.

இதற்க்கு இவர்கள் முக்கியமாக வைக்கும் ஆதாரம் ஷியா சுன்னி போர்கள், உண்மையில் குரானிலோ ஹதீஸிலோ ஷியா சுன்னி என்று இல்லை, மேலும் ஒருவரை ஒருவர் கொல்லவேண்டும் என்று குரானோ ஹதீஸோ எங்கேயும் சொல்லப்படவில்லை.

உலகில் எல்லா மதங்களும் தன் தவறான கொளகையை பரப்ப போர் புரிந்தார்கள், ஆனால் இஸ்லாம் மட்டுமே தன் இருப்பை பாதுகாக்க போர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.


இனி ஒவ்வொரு மதங்களும் எப்படி தீவிரவாதத்தை செயல்படுத்தியது என்று பார்ப்போம்.


இந்து மத தீவிரவாதம்:

நாம் இங்கே சொல்லக்கூட்டிய இந்து மதம் என்பது பார்ப்பன மதமே, உண்மையில் இந்தியர்களின் மதம் இஸ்லாமே, பார்ப்பனர்கள் தான் கட்டுக்கதைகளை கட்டி சமைத்து இது தான் இந்து மதம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 13  நாட்கள் தொடர் போர்  நடந்தது என்று சொல்லப்படுகிறது, இது ஒரு பெண்ணுக்காக நடந்தது, எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று விவரம் இல்லை என்றாலும் 13  நாட்கள் நடக்கவேண்டிய அவசியம் என்ன? 

மஹாபாரதத்தில் நடந்த பாரதப்போர் எதற்கு நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும், சாதாரணமாக இரண்டு குடும்பங்களுக்கு மத்தியில் நடந்த சீட்டு ஆட்டத்தின் பெயரில் 39 ,36 ,588 உயிர்கள் கொல்லப்பட்டது, 
ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு
முதன்மைக் கட்டுரை: அக்குரோணி
ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.[3][4].

குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்
கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். ஆதாரம் கீழே 



ஆக மேலே நடந்த இரு போர்களே போதும் பார்ப்பன மதத்தின் தீவிரவாதத்தை சொல்வதற்கு, இதெல்லாம் கற்பனை என்று அவர்கள் சொல்வார்களாயின் அவர்களின் கடவுளும் கற்பனை என்றாகிவிடும்.

யூத தீவிரவாதம்: 

உலகிலேயே ஒரு நாட்டையே திருடி அந்த மக்களை கொன்றொழித்த தீவிரவாத செயல் செய்யப்பட்டது யூதர்களால் தான். 

1948  ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 5,100,000  பாலஸ்தீனர்களை யூத பயங்கரவாதம் கொன்றது மட்டுமல்லாது, அவர்களின் நிலங்களையும் வீடுகளையும் பிடுங்கிக்கொண்டு உலகம் முழுவதும் ஏதிலிகளாக இருப்பதற்கு காரணமே யூத பயங்கவாதமே. ஆதாரம் கீழே 




62,600  கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி 3000 மக்களை கொன்று குவித்த 9 /11 சம்பவம் யூதர்களால் இஸ்லாத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நாடகம்.  சம்பவம் நடந்த அன்று மட்டும் 1000 க்கும் மேற்பட்ட யூதர்கள் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கிருத்துவ தீவிரவாதம்:

முதல் உலகப்போர் ஒன்றில் சுமார் 15 -19  மில்லியன் மக்கள் இறந்தனர் மேலும் 23  மில்லியன் மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் ஒன்றில் சுமார் 70 - 85  மில்லியன் மக்கள் இறந்தனர் இது அன்றைய உலக மக்கள் தொகையில் 3 %.

மேலும் உலகம் முழுவதும் கிறிஸ்த்துவத்தின் பெயரால் பல மக்கள் கொண்டு குவிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க இரண்டு குண்டுகளை ஜப்பான் மீது வீசியது, அதன் தாக்கம் இன்றளவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  
சிலுவைப்போரினால் கொல்லப்பட்ட மக்கள் 1 .7  மில்லியன். ஆக கிறிஸ்த்துவர்கள் உலகம் முழுக்க கொன்று குவித்த மக்கள் கணக்கில் அடங்காதவை. இருந்தும் யாரும் கிருஸ்துவ தீவிரவாதம் என்று சொல்வதில்லை.

புத்த தீவிரவாதம்

ஈழப்போரில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 1.3 மில்லியன் மக்கள் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டுள்ளனர். இருந்தும் யாரும் புத்த தீவிரவாதம் என்று குறிப்பிடுவதில்லை.

இந்துத்வ தீவிரவாதம்:

1925  ல் ஆரம்பித்த ஆர் எஸ் எஸ் என்ற தேச விரோத கும்பலால் இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டி இந்திய முஸ்லிகளை எப்படியாவது கொன்று குவிக்கவேண்டும், இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல கலவரங்களை செய்தனர், அதில் குறிப்பிட தக்க கலவரங்கள் கீழே







பல நூற்றுக்கணக்கான கலவரங்களை செய்து இந்துமுஸ்லிம் சகோதரத்துவத்தை பிரிக்க படாத பாடுபடுகின்றனர். தேசம் முழுவதும் பன்னிரெண்டுக்கும் மேற்ப்பட்ட குண்டுவெடிப்புகளை நடத்தி மக்களை படுகொலை செய்த தீவிரவாத கூட்டம், பசுவின் பெயரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 24 . 12  தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் தான் என்று கண்டுபிடித்த ஹேமந்த் கர்க்கரேவை கொல்ல அஜ்மல் கசாபை கொண்டு நாடகம் நடத்தினார்கள். அதுதான் தாஜ் ஹோட்டல் தாக்குதல், இவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலவரம் என்றால் அதற்க்கு முழுக்க முழுக்க இவர்களே காரணம்.

1893 இல் முசுலிம் பண்டிகையான பக்ரீத்திற்கு மாடு அறுத்ததற்க்காக பஞ்சாப், வங்காளம், மும்பை போன்ற இடங்களில் வன்முறை பரவியது. இந்துக்களின் பசு பாதுகாப்பு குழுவினரால் பஞ்சாப்பில் 100 நபர்கள் கொல்லப்பட்டனர். என்று சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே இந்த கேவலச்செயலை செய்துவருகின்றனர். 2010 -2017 நடத்தப்பட்ட கலவரங்களின் எண்ணிக்கை 63 .

மோடி ஆட்சிக்கு வந்த 11 வார காலத்திற்குள்ளாகவே நாடு முழுவதும் 600 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் 17 % இருந்த மதக்கலவரங்கள் பிஜேபி ஆட்சியில் 28 % உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.உத்தர பிரதேசத்தில் 450 கலவரங்களும், மத்யபிரதேசத்தில் 270  மதக்கலவரங்களும் நடந்துள்ளது. 


வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத கேவலங்கள் 2014  ல் இருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு ஜீவிகள், நீதிபதிகள், நடுநிலைவாதிகள், எதிர்கருத்தை உடையவர்கள் என்று கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தேசத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வேன் என்ற கலவர நாயகன் மோடி மக்களை கொன்றொழிப்பதிலும், வாழ்வாதாரத்தை நாசமடைய செய்வதிலும் முன்னோடியாக இருக்கிறார்.

தமிழகத்தில் சைவ வைணவப்போர்கள் நடைபெற்றன, அதில் பல சைவ வைணவர்கள் கொல்லப்பட்டனர், பல புத்த மடாலயலங்கள் இடிக்கப்பட்டு ஹிந்து கோவில்களாக மாற்றப்பட்டன என்பதெல்லாம் தீவிரவாதத்தின் ஒரு பகுதி.

இதை எழுதிக்கொண்டிருக்கும் வாரத்தில் நடந்த நிகழ்வு, சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று வழக்கு தொடுத்தது ஆர் எஸ் எஸ், ஆனால் இன்று பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று பந்த நடத்தி பலரின் வாழ்வை வீணாக்கியவர்கள், கேரளாவின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றனர். 

ஆக உலகம் முழுவதும் பல காரணகளுக்காக மக்கள் கொல்லப்பட்டாலும், இஸ்லாமியன் பெயரை கொண்டவன் செய்தால் முஸ்லீம் தீவிரவாதி என்றும் அதே மற்றவர்கள் கொன்றால் பிரமுகர் என்றும் தொடர்ந்து ஊடகங்களும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு இருக்கிறது.

காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்யும் கலவரங்களையும் இங்கே பதிவு செய்யவேண்டும். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் தீவிரவாதிகள் என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கில் காணாமல் போன வரலாறும் உண்டு, நாட்டில் நடக்கும் பெரும்பான்மை கலவரங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டாலும் கைது செய்யப்படுவதும் இஸ்லாமியர்களே பழியை சுமப்பதும் இஸ்லாமியர்களே. 

இஸ்லாம் கூறும் ஜிஹாத்:

ஜிஹாத் என்றால் புனிதப்போர் என்று ஒரு அட்டூழியம் கட்டவிழ்த்துவிடப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது, ஆனாலும் அதிலும் இஸ்லாமிய எதிரிகள் மூக்குடைபட்டு கேவலப்பட்டே நிற்கிறார்கள். ஜிஹாத் என்ற வார்த்தைக்கு the spiritual struggle within oneself against sin என்று அர்த்தம் அதாவது ஆன்மீக ரீதியாக உன்னை தீமையில் இருந்து தற்காத்து கொள்ள நீ  செய்யும் செயல் அல்லது போராட்டம், ஆனால் இன்று புனிதப்போர் என்றும் அது இஸ்லாமியர்களை தவிர மற்றவரை கொன்றொழிக்கவேண்டும் என்றும் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இஸ்லாத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளது, ஒவ்வொரு போரும் இறைவனின் கொளகையை காப்பாற்றுவதற்க்கே தவிர, மக்களை துன்புறுத்த இல்லை. போரின் போது கூட பல வரையறைகளை இஸ்லாம் சொல்கிறது, 
1. பொருட்களை சேதப்படுத்தக்கூடாது
2. மக்களை மீதோ விவசாய பயிர்கள் மீதோ தீயிடக்கூடாது
3. மக்களின் உரிமைகள் பாதிக்கப்படவேண்டும் (முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும்).

போன்ற பல விதிமுறைகளை இஸ்லாம் வகுத்துள்ளது. 



ஆக இஸ்லாம் எந்த விதத்திலேயும் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும்  போதிக்கவில்லை என்பது மட்டுமல்லாது வேறு எந்த மதமும் அதை சொல்லவில்லை என்பதே முக்கிய செய்தி. ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் குண்டு வைத்தால் ஆர் எஸ் எஸ் பிரமுகர் என்பதும்,அதே இஸ்லாமிய பெயர்தாங்கி செய்தால் முஸ்லீம் தீவிரவாதி என்பதும் அருவருவறுக்கத்தக்க ஊடக தர்மம்.

இஸ்லாம் என்றால் சாந்தி, அமைதி மற்றும் முஸ்லீம் என்பவன் தன் கரத்தாலும் நாவினாலும் பிறருக்கு நோவினை செய்யாதவன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேர்க்கை

உலகளாவிய தீவிரவாத தாக்குதலில் சில 









No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...