Sunday, March 12, 2023

அடியானின் இயற்கை மீதான கடமை - உணவே மருந்து மருந்தே உணவு

உணவே மருந்து

உணவே மருந்து மருந்தே உணவு உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் சொன்ன சொல். இன்றும் மனிதகுலம் மாண்புற வழிகாட்டும் மந்திரச் சொல் ஆகிறது. வளமான வாழ்வுக்கு நலம் நிறைந்த உடல் தேவை. உடலைப் பேணினால், உயிரைப் போற்றியதாகும். ஆனால் இன்றைய உணவுகள் உடலை வளர்க்கிறதா? சிதைக்கிறதா? நமது உடல் ஒரு அமானிதம், அதை பேணி காத்து வாழ்வது நமது கடமை என்கிறது இஸ்லாம், அதனால் தான் உடலுக்கு தீங்கிழைக்கும் விடயங்களை இஸ்லாம் தவிர்க்கச்சொல்கிறது. 

மூன்று விதமான நீதிமன்றங்கள்

மறுமை நாளில் மூன்று விதமான நீதிமன்றங்கள் இருக்கும், 
 1. அடியானுக்கும் இறைவனுக்கும் உண்டான கணக்கை தீர்க்க, 
 2. அடியானுக்கும் அடியானுக்கு இடையே உள்ள கணக்கை தீர்க்க, 
 3. அடியானுக்கும் இயற்கைக்கும் இடையேயான கணக்கை தீர்க்க. 

 ஆனால் பெரும்பான்மை மக்கள் 3 வது விடயத்தை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்வதில்லை. 

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார். (புகாரி: 2320) 

பாதையோரங்களிலும் நிழல் தரும் இடங்களிலும் மலசலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவதையிட்டும் நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இவ்வாறே நீர் நிலைகளுக்கு அருகில் மலசலம் கழிப்பதையும் நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவதையும் நபி(ச) அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். மேலே குறிப்பிட்ட நபி மொழிகள் இயற்கையை எப்படி காக்கவேண்டும் என்று எடுத்து இயம்புகிறது. 

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் அதற்கு முன்னால் கிரேக்க, ரோமாபுரி, பாரசீக ஆதிக்க சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய காலத்திலும் போர்களில் நெருக்கடியான தாக்குதல் முறை எதுவென்றால், நெருப்பால் தாக்குவதுதான்! எதிர் நாட்டுக்குள் படைகள் நுழைந்தவுடன், அந்நாட்டு விளைநிலங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் தீயிட்டு அழித்தனர். உலகெங்கிலும் இந்த தாக்குதல் முறை இருந்திருக்கிறது. 

பண்டையத் தமிழகத்திலும் இந்த முறை உண்டு என்பதை, “நாடு கெட எரி பரப்பி..” என்ற புறநானூற்றுத் தொடர் உறுதி செய்கிறது. 

விளை நிலங்கள் முதலானவைத் தீயிட்டு அழிக்கப்படும் போது, தங்கள் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அம்மக்கள் போராடுவர். அப்போது அந்நாட்டுள் நுழையும் படைக்கு அதிக எதிர்ப்பு இன்றி வெற்றி வசப்பட்டு விடுகிறது. அதுபோன்றே நெருப்பு அம்புகளையும் நெருப்பு பந்துகளையும் வீசி எதிர்ப்படைகளை அழித்தனர். வீசப்பட்ட நெருப்பு அம்புகளாலும் நெருப்புப் பந்துகளாலும் எதிர்ப்படைகளில் உள்ள குதிரைகளும், யானைகளும் கட்டுக்கடங்காமல் மிரளும், போர்த்தளவாடங்கள் தீப்பற்றி எரியும், வீரர்கள் நெருப்பில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள உயிர் காக்கும் போராட்டம் நடத்துவர். இச்சூழலில் எய்தவனுக்கு வெற்றி எளிதாகி விடுகிறது. நெருப்பால் தாக்குதல் என்ற போர்முறை வெற்றியை விரைவாக்கியது. ஆனால், அங்கு மனிதமும் உயிர் நேயமும் கருகிப் போனது! 

நெருப்புக்குத் தடை! 

 போர்ச்சூழலில் நெருப்பால் தாக்குதல் உலகமயமாக இருந்த காலத்தில், இஸ்லாம் நெருப்பால் தாக்குதல் நடத்துவதையும் நெருப்பைக் கொண்டு தண்டனை கொடுப்பதையும் தடை செய்கிறது. “நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது” (நூல்: அபுதாவூத்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 

நெருப்பைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே, அதைக் கொண்டு தண்டனை வழங்க உரிமை உண்டு என்று நபிகளாரின் அறிவிப்பு சிந்தனைக்கு உரியது. நபிகளாரின் உத்தரவுகள்! “நெருப்பால் தாக்குதல் இல்லை” என்பதன் மூலம் மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இஸ்லாம் உத்திரவாதம் தருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்கு வீரர்களை அனுப்பும் போது இட்ட கட்டளைகளுள் ஒன்று, “

போரின் போது எதிரிகளின் விளைநிலங்களையோ, உடமைகளையோ தீயிட்டு அழிக்காதீர்!’ ஏன் எறும்புப் புற்றைத் தீயிட்டு அழிப்பதையும், கோவேறு கழுதைகளுக்குச் சூடு போடுவதையும் கூட தடுத்து நிறுத்தினார்கள்! 

இப்படி போரின் போது எல்லோரும் செய்த கொடுமைகளை இஸ்லாம் முற்றிலும் தடைவிதித்தது, அந்த அளவுக்கு இஸ்லாம் சுற்றுசூழல் விஷயத்தில் எச்சரிக்கை செய்கிறது. ஆனால் இன்று பணத்திற்க்காக மனிதன் சுற்றுசூழலை நாசமாக்கி வருகிறான். அதன் விளைவு மக்கள் பலவித கொடூர நோய்களால் துன்புறுகிறான். இதற்கு என்ன வழி? இயற்கை வழியில் வாழ்வதே வழி. எப்படி இயற்கை வழியில் வாழ்வது என்று இந்த கட்டுரையில் என்னால் ஆனா வரை சுருக்கமாக விளக்கியுள்ளேன். 

இயற்கையான உணவு

இயற்கை உணவு பற்றி ஒவ்வொரு கட்டுரையாக இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன், படித்து பயன்பெறுங்கள். 

இந்த கட்டுரையில் இடம்பெற்றவைகள் பல முனைவர் காதர் என்பவரின் பேச்சுக்களை கேட்டு புத்தமாக ராஜலக்ஷ்மி சுப்பிரமணியன் எழுதிய செல்வ தானியங்கள் என்ற புத்தகத்தில் உள்ளவைகளே. புத்தகத்தை படிக்க கீழே உள்ள லிங்க் ஐ தொடவும். 




No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...