Sunday, March 12, 2023

சாக்லேட் (கரப்பான் பூச்சி) நூடுல்ஸ் & பழச்சாறு (நீரிழிவு) மற்றும் முட்டை (ரசாயன உப்புகள்)

 சாக்லேட்டில் கரப்பான் பூச்சியா?

அரனத்து குழந்ரதகளுக்கும் மிகவும் பிைியமான விஷயம் சாக்லேட். பிறந்த நாள் முதல் அனைத்து  விஷயங்களுக்கும் சாக்லேட் வாங்கி குவிக்கிறோம். வெளிநாடு சென்றுவரும் உறவினர்களும் கிலோ கணக்கில் சாக்லேட் வாங்கி வருகின்றனர். சரி சாக்லேட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம்சாக்லேட் தயாரிக்க தேவையான கோகோபீன்ஸ் பூமத்தியரேகை அருகில் அமைந்து இருக்கும் சில நாடுகளில் மட்டும் பயிரிப்படுகிறது. அது வளர தேவையான தட்ப வெப்ப நிலை அமைந்திருக்கும் அந்த இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும்  ஏற்றுமதி செய்யப்படுகிறது.  கோகோ பீன்ஸ் வறுக்கப்பட்டு பின் நொதிக்கவைக்கப்படுகிறது. அப்பொழுது அதில் இருந்த மிகுந்த துர்நாற்றம் ஏற்படும். அதில் மாவுசக்கரை மற்றும்  மணமூட்டிகள் சேர்க்கப்பட்டவுடன் மிகுந்த நறுமண   பொருளாக மாறிவிடும். இந்த நறுமணம் லட்சக்கணக்கான கரப்பான் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். 
சாக்லேட்  தயாரிப்பு கலன்களில் விழுந்து கிடக்கும் இந்த கரப்பான் 
பூச்சிகளை முற்றிலுமாக அகற்ற இயலாததால்  உணவு  ஆராச்சி  கழகம்  
4% பூச்சிகளின் பாகம் இருப்பது  ஏற்புடையது என அறிவித்தது.

இதன் பொருள் என்னவென்றால் நாம் 100 gm சாக்லேட் சாப்பிட்டால் அதில் 4 கிராம் கரப்பான் பூச்சியின் பாகங்கள் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச  பிரச்சனைகளுக்கு காரணமாகும். இந்த பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவரை அணுகினால் அவர் உறிஞ்சி/இன்ஹாலரை பரிந்துரைப்பார். இதில் இருப்பதும் கேடு விளைவிக்கும் 
ஊக்க மருந்தாலே இன்றி வேறில்லை. குழந்தைகள் பருமன் ஆவதற்கும் இது ஒரு காரணமாகும். சாக்லேட்டில் இருப்பது பால்மைதாமுட்டைடால்டா 
மற்றும் சக்கரை. இவை அனைத்தும் தீது விளைவிக்கும் பொருட்டாக்களின் 
கூட்டணி போல தெரியவில்லையாஇது மட்டும் அல்லாமல் சிறிய 
வயதிலிருந்து அதிக இனிப்புடைய சாக்லேட் உண்ணும் குழந்தைகளுக்கு 
ஆரோக்கியமாக வீட்டில் தயாரிக்கும் கடலை உருண்டையும்
எள் உருண்டையும் கசக்கத்தான் செய்யும்.

நூடுல்ஸ்
 
குழந்தைகள் அடுத்து விரும்பி உண்பதுஅப்பா அம்மா தேவையின்றி இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் . இதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் முதன்மை பொருள் வெள்ளிவீசமான மைதா.
கோதுமையில் இருக்கும் சிறிய அளவிலான நார் சத்தை நீக்கி,  
அலாக்சான்(Alloxonஎன்ற வேதிப்பொருளை பொருளை சேர்த்து வெண்மைப்படுத்துவதே மைதா. இந்த வேதிபொருள் நேரடியாக நமது கணையத்தை பாதிக்கக்கூடியது.  முதியவர்களுக்கு வந்துகொண்டிருந்த நீரிழிவு நோய் குழந்தைகளுக்கும் வர காரணம் மைதா. அது மட்டுமன்றி 
கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் மீண்டும்மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டுவதற்காகவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் பலவித நோய்கள் உருவாகிறது. செய்வதற்கு  சுலபமாக இருப்பதாலும் சுவையாக இருப்பதாலும் இத்தையக பொருட்களை நாடி செல்கிறோம். நாம் அறியாமலே நமது 
குழந்தைகளை நீரிழிவு நோயாளியாக ஆக்குகிறோம்.
 
உடனடி பழச்சாறுகள்(Instant Juices)

அடுத்ததாக நாம் ஆரோக்கியம் என எண்ணி குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது பாக்கட்டில் வரும் உடனடி பழச்சாறுகள். பழச்சாறு என்ற பெயரில் மிகுதியான சக்கரையை தான் நாம் புகட்டுகிறோம்.  தொலைக்காட்சியில் 
வரும் விளம்பரங்கள் மூலம் ஹார்லிக்ஸ் காம்பிளான் போன்ற 
ஊக்கப்பணங்கள் நம் குழந்தைகளை பலசாலிகளாகவும் புத்திசாலியாகவும் மாற்றும் என்று கனவு காண்கிறோம். ஆனால் ராகியிலும் தினையிலும்  
இருக்கும் ஊட்டச்சத்து நமக்கு தெரியவில்லை.
 
முட்டை

அதன் பின்னர் நமக்கு சத்தான உணவாக தோன்றுவது முட்டை. இன்று 
முட்டையும் தயாரிக்கத்தான் படுகிறது. பண்ணையில் ஊசி மூலம் 
உருவாக்கப்பட்டு பின் கோழிகளுக்கு சிறிய மின் அதிர்ச்சி 
கொடுக்கப்படுகிறது. அந்த அதிர்வின் மூலம் முட்டை வெளிவருகிறது. 
கோழிக்கு முட்டை போட்ட உணர்வு கூட ஏற்படுவதில்லை. வேகமாக வளர்வதற்கு கோழிக்கு ஊக்கமருந்துகள் மற்றும் ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கப்படுகிறது. அந்த மருந்துகளின் தாக்கம் முட்டையில் 
இருக்கும். இயற்க்கைக்கு முரணாக விளைவிக்கப்படும் அனைத்துமே கெடுதல் தான். இந்த முட்டை மிகுந்த ஆரோக்கியம் நிறைந்ததாக அரசாங்கம் மூலம் விளமபரப்படுத்தப்படுவது அறிவீனத்தின் உச்சம்.
 
நாம் பாசம் மிகுதியால் வாங்கி கொடுக்கும் கைபேசிகள் அவர்களின் கண்களை கெடுப்பதை உணர்ந்தாலும் தடுக்க வழியின்றி இருக்கிறோம். இன்றிய காலகட்டத்திற்கேற்ப கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்வதால் துரித உணவுகளையும் உடனடி உணவுகளையும் நம் இல்லத்தில் சமைக்கும் 
உணவுக்கு மாற்றாக கருதினால் நமது குழந்தைகள் நோயாளியாக 
மாறுவதில் ஐயமில்லை.
 
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
ஆழ்ந்த உறக்கம் வேண்டுமானால் இருண்ட அறை அவசியம். தொலைக்காட்சி பெட்டி மற்றும் தொலைபேசிகளை அருகில் வைத்துக்கொண்டு உறங்கும் போது அத்தைகைய ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தின் போது தான் செரோடோனின் என்ற என்ற ஹார்மோன்  சுரக்கும். இதுவே நமது உடம்பின் நோய் எதிை்ப்பு சக்திக்கு இன்றியமையாதது ஆகும். இரவில் கண் விழித்து படிப்பதால் புத்திசாலி ஆவதற்கு பதிலாக நமது குழைந்தைகள் நோயாளிகளாக மட்டுமே மாறுவர்.
 
உடனடி பழச்சாறுகள் போலவே குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி உண்ணும் ஜாம் வகைகளில் எந்த பழங்களும் சத்துக்களும் இல்லை. பதிலாக
மிதமிஞ்சிய சக்கரை மட்டுமே உள்ளது. எனவே கூடிய மட்டும் நாம் நமது இல்லத்தில் தயாரிக்கும் உணவுகளையே  குழந்தைகளுக்கு அளிக்க
வேண்டும். சிறிய குழந்தைகளை மாற்றுவது எளிது. சற்று பெரிய 

குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு இதனால்  விளையும் 

தீமைகளை எடுத்து சொல்லி புரிய வைக்கலாம். ராக்கட் ஆராய்ச்சி 

செய்வதைவிட நமது தட்டில் என்ன இருக்கிறதுஅது எப்படி 

தயாரிக்கப்படுகிறது என புரிந்து கொள்வது மிக அவசியமானது.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...