Monday, December 24, 2018

சீக்கிய படுகொலையில் ஆர் எஸ் எஸ் ன் பங்கு


சீக்கிய படுகொலையில் ஆர் எஸ் எஸ் ன் பங்கு
984-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வாஜ்பாயின் ஏஜெண்டாக இருந்த பாஜக பிரமுகரும் ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவருமான ராம்குமார் ஜெயின் - ஆதாரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2002 பிப்ரவரி 2 தேதி வெளியான சிறப்பு கட்டுரை.
சீக்கியர் படுகொலை குறித்த ஜெயின் கமிஷன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 14 வழக்குகள் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினர் மீது 1992-94 காலக்கட்டத்தில் பதியப்பட்டிருக்கிறது.
கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி, வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுதல், ஆயுதங்களை பயன்படுத்துதல் என பல பிரிவுகளின் கீழ், டெல்லியைச் சேர்ந்த ஆர்.எஸ். எஸ். – பாஜக குண்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ப்ரீதம் சிங், ராம் குமார் ஜெயின், ராம் சந்தர் குப்தா, ரத்தன் லால், கிலான் லால் ஜெயின், பிரதீப் குமார், பாபு பால், வேத் மனிபால் சர்மா, பதம் குமார் ஜெயின், சுரேஷ் சந்திர ஜெயின் ஆகியோர் போலீசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
சீக்கியர் படுகொலை வழக்குகளில் மிகப் பெரியதாக 1993-ஆகஸ்டில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவைச் சேர்ந்த ராம் குமார் ஜெயின், ஷர்னி லால் குப்தா, வேத் மணிபால் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.  கலவரத்தில் தனது மொத்த சொத்துக்களையும் இழந்த ஹர்தியால் சிங் என்பவரால் பதியப்பட்ட வழக்கு இது என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். 
இவர்களின் பெயர்களை மறைக்கும் விதமாக பிஜேபி செயல்பட்டதாக பயனீர் நாளிதழ் தெரிவிக்கிறது
சீக்கிய படுகொலை நடந்தபோது அதை நியாயப்படுத்தி 1984 ல் ஆர்.எஸ். எஸ். தலைவர் நானா தேஷ்முக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இந்திரா காந்தியின் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டாரை’ வரவேற்ற இந்த ஆர்.எஸ். எஸ். காரர்தேச துரோகிகளுகளை இப்படித்தான் கையாள வேண்டும் என்கிறார்.  ‘சீக்கியர்கள்தான் வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணம்.  இந்து வேர்களிலிருந்து தங்களை துண்டித்துக்கொண்ட சீக்கிய அறிவுஜீவிகளே இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்’ எனவும் அவர் எழுதியிருக்கிறார்.  இந்த நாடு உடையாமல் பார்த்துக்கொண்டவர் இந்திரா காந்தி ஒருவரால்தான் முடியும், அப்படிப்பட்டவரை கொன்றதற்காக சீக்கியர்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என ஆர்.எஸ்.எஸ். விசத்தை கக்கியிருக்கிறார்.

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை, படுகொலைகள் குறித்து ராஜீவ் காந்தி ‘ஒரு பெரிய மரம் கீழே விழும்போது, நிலத்தில் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்’ என்றார். ராஜீவ் காந்தியின் கருத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேஷ்முக் பாராட்டுகிறார்.
ஆதாரம் வினவு

https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2018/12/RSS-BJP-hands-in-sikh-riots_02-400x273.jpg

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...