Sunday, December 23, 2018

பசுக்குண்டர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய ஜார்கண்ட் நீதிமன்றம்



ஜார்கண்ட் மாநிலம், லதிகரில் மார்ச் மாதம் 2016 ல் கால்நடை வர்த்தகர்களான, மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் ஆகியோர் 8 பசுக்குண்டர்களால் கொல்லப்பட்டார்கள், அவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பிட்டது. இந்த தீர்ப்பை சட்டப்பூர்வ போராட்டத்தின் வெற்றி என்று பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எம். முகமது அலி ஜின்னா அவர்கள் பாராட்டியுள்ளார்.

பசுவை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளால் தூண்டப்பட்ட பசுக்குண்டர்களால் அப்பாவி முஸ்லிம்கள் அடித்து கொல்வது போன்ற காட்டுமிராண்டி செயல்கள் நடக்கும் மாநிலங்களில் ஜார்கண்டும் ஒன்று. இதே வருடத்தில் மார்ச் மாதம் ராம்கர்க் பகுதியை சேர்ந்த அலிமுத்தீன் அன்சாரி என்ற அப்பாவி முஸ்லீம் பசுக்குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் பிஜேபி தலைவர் உட்பட 11  பேரை கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கிலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பல சட்ட போராட்ட உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த வழக்கு வெற்றிபெற இறந்தவரின் உறவினர்கள் யாருக்கும் அஞ்சாமல் வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் வழக்கை தொடர்ந்து நடத்தியதே காரணம் என்றும் எம். முகமது அலி ஜின்னா அவர்கள் தெரிவித்தார்.

இந்த வழக்கை திரும்பப்பெற இந்துத்வ தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தொடர் மிரட்டல் வந்தபோதும் அதை முறியடித்து இந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ளனர், அதற்க்கான சட்ட உதவிகளையும் பாதுகாப்பையும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா வழங்கியது இங்கே குறிப்பிடத்தக்கது.

சட்டரீதியான போராட்டத்தில் உறுதியாக இருந்த உறவினர்களுக்கு இந்த வெற்றி ஊக்கமளிப்பதாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எம். முகமது அலி ஜின்னா கூறினார்.



No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...