காலித்
பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் செய்த ஒரு உபதேசம்
வரலாற்றிலே பதிவு செய்யப்படுகிறது.
‘நீ மரணிப்பதற்கு ஆசைப்படு, வாழ்வு உனக்கு பரிசாக கிடைக்கும்.’
நாம் வாழவேண்டுமென்றால் மரணத்திற்கு ஆசைப்பட
வேண்டும். துணிவதற்கு தயாராக வேண்டும். சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, வெற்றி பெறச் செய்வதற்கு நாம் தயாரானால்
நிச்சயமாக இறை உதவி கிடைத்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இப்படிப்பட்ட எல்லா அடிப்படைகளையும் மனதிலே கொண்டு ஒன்றிணைந்து தேசம் காப்போம்!!
இதற்காக குர்ஆனின் அடிப்படையில், ஹதீஸின் அடிப்படையில், அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை
வரலாற்றின் அடிப்படையில், கடந்தகால முஸ்லிம்களுடைய, இஸ்லாமிய வீரர்களுடைய வரலாற்றின்
அடிப்படையில் இந்த சமூகத்தை நம்பிக்கையான சமூகமாக பயிற்றுவிக்க வேண்டும். அநீதத்தை
எதிர்க்கக்கூடிய சமூகமாக பயிற்றுவிக்க வேண்டும்.
இந்த இலக்கை அடைவதற்கு உலமா சமூகம் மக்கள்
சமூகத்தை பயிற்றுவித்து, ஒன்றிணைந்து ஒரே கோட்டில் அணிவகுத்தால்
இன்றைக்குள்ள அநீதமான இந்தியாவை துடைத்தெறிந்து, நீதிமிக்க இந்தியாவை, சமத்துவமான இந்தியாவை, பயம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு
முன்வர வேண்டும். நாம் முன்வந்தால் நிச்சயமாக ஒரு நம்பிக்கையான சமூகத்தை
வார்த்தெடுக்க முடியும். குறிப்பாக, கடந்த கால வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள் எதிர்கால வளமான
வரலாற்றிற்கும் சொந்தக்காரர்களாக மாறுவார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களும்
சுபிட்சமான வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.
-சம்சுல்
இக்பால் தாவூதி
மாநில பொதுச் செயலாளர்,
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
மாநில பொதுச் செயலாளர்,
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
No comments:
Post a Comment