Saturday, December 22, 2018

என் புரட்சி-6-வெள்ளையர்களின் பாவக் கிடங்கு

7.வெள்ளையர்களின் பாவக் கிடங்கு


எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டேன். ஆறேழு மாதங்கள் இது நீடித்தது.
போலீசுக்குப் பயந்து, பெரும்பாலும் அறையில் கிடந்த நான் போதையில் மிதந்தேன்.
ரெஜினால்ட் வந்தான். அவனுக்கு ஒரு ‘தொழில்’ ஏற்பாடு செய்து கொடுத்தேன். திருட்டுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, கறுப்பர் தெருக்களில் விற்பதுதான் அந்தத் ‘தொழில்’.
ஒரு நாள், மேடம் ஒருவர் மூலம் ஹார்லெம் நகரின் இருட்டு முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கறுப்பர்களின் நகரில் வெள்ளையர்களின் தனிச் சிறப்பான இரவு உலகத்தை அந்த மேடம் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
விபச்சாரத் தொழில் நடத்தி வந்த அந்த மேடத்திற்கு சொந்தமாக ஒரு சூதாட்ட விடுதியும் இருந்தது. அந்த சூதாட்ட விடுதியில் எனக்கு வேலை. ஆனால் உண்மையில் ‘வாடிக்கையாளர்களை’ குறிப்பிட்ட இடங்களில் கொண்டு போய் விடுவதுதான் என்னுடைய உண்மையான வேலை. சூதாட்ட விடுதியில் இருந்த தொலைபேசி ஒலித்தது.
‘‘ரெட் உனக்குத்தான் போன்’’ வரவேற்பாளர் என்னிடம் தொலைபேசியைத் தந்தார்.
‘‘ம் சொல்லுங்க மேடம்’’ அவர் சொன்ன அடையாளங்களை கற்பனை செய்து கொண்டேன்.
‘‘ஓகே’’
பிராட்வே சாலையின் முடிவில் இருந்த ஆஸ்டர் உணவு விடுதிக்கு அருகில் சென்றேன். நான் என்னுடைய கோர்ட்டில் வெள்ளை நிறப் பூ-வை சொருகிக் கொண்டேன். இதுதான் என்னைப் பற்றி வாடிக்கையாளரிடம், மேடம் சொல்லி வைத்திருந்த அடையாளம். எனக்காக காத்திருந்தவரை, மேடம் போனில் சொன்ன அடையாளங்கள் மூலம் உறுதி செய்து கொண்டு, சைகை மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
‘‘நான், உங்க கார ஓட்டுறேன்சார்’’ எனக்குத்தானே ‘கஸ்டமர்’ இருக்கும் இடம் தெரியும் என்பதால், அவர் ஆமோதித்தார்.
இப்படியாக விபச்சாரத் தரகன் வேலையில் நான் நல்ல ஈடுபாடு காட்டி வந்தேன். நிறைய டிப்ஸ் கிடைத்தது.
மேடம் சொல்லிய இடங்களில் வெள்ளைக்கார ஆண்களையும், கறுப்பினப் பெண்களையும் கொண்டு போய் விட்டு வந்தேன்.
‘‘ரெட் நீ திறமையா வேலை செய்யுற பட்… உன்னை நான் அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்க முடியாது’’
‘‘யூஸ் பண்ணிக்க முடியாதா புரியல மேடம்’’
‘‘இல்ல ரெட், வெள்ளைக்காரிகளுக்கு கறுப்பர்களைத்தான் ரொம்ப பிடிக்கும். நீ கொஞ்சம் சிவப்பா இருக்கியா அதைத்தான் சொன்னேன்’’.
பல்லை இளித்தவனாக தலையைச் சொறிந்தேன்.
நான் ஆச்சரியப்படும் அளவிற்கு மிகப் பிரபலமான மனிதர்கள் எல்லாம் விபச்சாரிகளைத் தேடி வந்தனர். வெள்ளையர்களின் உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் நகராக ஹார்லெம் விளங்கியது.
வெள்ளைக்காரப் பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்குத் தெரியாமல், ஏதோ ஒன்றைத் தேடி அல்லது சிற்றின்பத்திற்காக கறுப்பு ஆண்களை நாடினர்.
எதிலுமே கறுப்பர்கள் சிறந்தவர்கள் அல்லர் என்பதுதானே வெள்ளையர்களின் மனப்பதிவு. ஆனால் கறுப்பர்களுக்கு இயற்கையிலேயே அளவு கடந்த ஆண்மை இருப்பதாக வெள்ளையர்கள் ஒப்புக் கொண்டனர். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை. வெள்ளைக்காரப் பெண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் கறுப்பினப் பெண்கள். அவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
அடிமைத்தனம் அதிகாரப்பூர்வமாக இருந்த காலத்தில், கறுப்பினப் பெண்களை, வெள்ளை ஆண்கள் எப்படி நடத்தினார்களோ, அதேபோலவே விபச்சார விடுதிகளில் கறுப்பின ஆண்களை வெள்ளைக்காரிகள் நடத்தினர்.
அதேமாதிரி, தங்களிடம் சுகம் அனுபவித்த வெள்ளைக்காரிகளுக்கு எந்த மரியாதையையும் கறுப்பு ஆண்கள் தந்ததில்லை. அதற்கு நானே உதாரணம். ஆமாம், சோஃபியாவைத்தான் சொல்கிறேன்.
அந்தஸ்து, மரியாதை, பதவி இதெல்லாம் இந்த விபச்சார உலகில் கிடையாது. சில பெரிய மனிதர்களை காரில் ‘தொழிலுக்கு’ அழைத்துச் செல்லும் போது, இங்கிலாந்தின் மிகப் பிரபலமான றிக்ஷீஷீயீuனீஷீ செக்ஸ் வழக்குதான் என் நினைவுக்கு வரும். வெள்ளையர்களின் பாவக்கிடங்காக இரவு நேர ஹார்லெம் விளங்கினாலும், வெள்ளையர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்று பிதற்றுவதில் கெட்டிக்காரர்கள்! எனக்குத்தான் தெரியும் வெள்ளையர்களின் அந்தரங்க அசிங்கங்கள்.
நியூயார்க் நகரிலேயே மேட்டுக்குடி குடும்பத்தைச் சேர்ந்த மனைவிமார்களும், ஏன் தாய்மார்களும்கூட ‘தொழில்முறை அழைப்பு விபச்சாரிகளாக’ (சிணீறீறீரீவீக்ஷீறீs) இருப்பது எனக்குத் தெரியும்.
என்னைப் பார்க்க வந்திருந்த சேமி, நான் முழுநேர விபச்சாரத் தரகனாக மாறியதைக் கேள்விப்பட்டு, என்னிடம் அதை நேரடியாகக் கேட்காமல் இப்படிக் கேட்டார்:
‘‘ரெட் இன்னிக்கு அவர் உன் கார்ல வந்தார் போல’’அந்தப் பிரபலத்தைப் பற்றி இருவருக்குமே நன்றாகத் தெரியும்.
‘‘பெரிய மனுஷங்கன்னு இவங்க வெளியில சுத்திக்கிட்டு திரியுறானுங்க சேமி… ஆனா…’’ நான் இழுத்தேன். சேமி சிரித்து விட்டார். வெள்ளைக்காரப் பெண்களிடம் நன்றாக பழகி அவர்களின் வீடுகளுக்குச் செல்வது சேமியின் வழக்கம். அங்கு சென்ற பின், சாப்பாடு வாங்கி வருவதாகச் சொல்லி வெளியே கிளம்பும் போது, வெளிப்பக்கமாக வீட்டை பூட்டி விட்டுச் செல்வதாக சேமி சொல்வார்.
வரும் போது, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் கள்ளச்சாவி ஒன்றைத் தயார் செய்திருப்பார்.
அந்தப் பெண் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, பொருட்களைத் திருடி, அதில் வந்த பணத்தை அந்தப் பெண்ணுக்கே செலவழித்து, அவளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விபச்சாரத் தொழில் நடத்தி வந்தார் சேமி.
‘‘சேமி பெரிய அந்தஸ்தில் உள்ள வெள்ளைக்காரர்கள் உட்பட பல பேர் இங்க வர்ராங்க. ஆனா என் ‘தொழில்’ அனுபவத்துல, ஒரு வெள்ளைக்காரன் கூட, வெள்ளைக்கார விபச்சாரியை நாடியது கிடையாது’’
‘‘ஓஹோ இதிலயாவது வெள்ளைக்காரனும், கறுப்பனும் சமம்னு அவங்க ஒத்துக்கிறாங்களா’’
‘‘ஏன் ஒத்துக் கொள்ளனும் சேமி… வெள்ளைக்காரங்க பயங்கர அசிங்கம்’’
‘‘ம்’’ சேமி ஆமோதிப்பது போல தலையை அசைத்தார்.
‘‘சேமி இப்போ அமெரிக்காவுல புது ட்ரெண்ட் பிரபலமாகி இருக்கு பல வெள்ளைக்கார ஜோடிகள் ஒன்றாக கூடுவது வழக்கம். அவர்களின் கார் சாவியை, ஒரு தொப்பியில் போட்டு குலுக்கி விட்டு, ஆண்கள் கண்களை மூடிக் கொண்டு ஏதாவதொரு கார் சாவியை எடுக்க வேண்டும். கையில் கிடைக்கும் கார் சாவிக்கு சொந்தமான காரையும், அதன் உரிமையாளரின் மனைவியையும் அவன் தள்ளிக் கொண்டு போய் விடலாம். ஒரு நாள் இரவு முழுவதும், அவள் அவனுக்குச் சொந்தம். இந்த மாதிரி, கறுப்பர்களிடம் கூட கிடையாது… ச்சே’’
சேமி என்னைப் பார்த்து விட்டுச் சென்று விட்டார்.
வழக்கம் போல அதிகாலை நான்கு மணி அளவில் நான் அறைக்குத் திரும்பினேன். தம்பி ரெஜினால்ட் வரவில்லை. நான் மட்டும் தூங்கினேன். காலையில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தால், ஹார்லெம் நகரின் பிரபலமான கூலிப்படையினர் என்னை துவம்சம் செய்ய தயாராக இருந்தனர்.
தொடரும்…
-ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...