Friday, December 28, 2018

1. உயர்சாதியினரும், சங்கிகளும் பெரியாரை எதிர்ப்பது ஏன்?


சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடத்தப் பட்டது. டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் தலைமையில் பி.டி ராஜன் கொடியேற்றித் துவக்கி வைத்த அந்த மாநாட்டில் பின்வரும் கருத்துக்களைக் கொண்ட 34 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

  1. இந்தியாவுக்கு வரும் சைமன் குழுவை புறக்கணிப்பது நியாயம் இல்லை.அக்குழுவின் முன் சாட்சி சொல்ல மறுப்பது பொருத்தமற்றது.
  2. நால்வருண முறையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்களிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வேதம், சாஸ்திரம், புராணங்கள் போன்றவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  3. தீண்டாமை ஒழிக்கப் பட்டு சாலைகள், குளங்கள், கிணறுகள், பள்ளிகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில் சகலருக்கும் சம உரிமைகள் தரப்பட வேண்டும், இதை வலியுறுத்தி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
  4. மக்கள் ஜாதிப் பட்டத்தையும், வகுப்புப் பட்டத்தையும், அடையாளக் குறிகளையும் பயன்படுத்தாது ஒழிக்க வேண்டும்.
  5. பெண்களுக்கு 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்யப்பட வேண்டும்.
  6. விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சொற்ப செலவில் திருமணம், ஒரு நாள் திருமணம் போன்றவை அமுலுக்கு வர வேண்டும்.
  7. கல்வி நிலையங்களில் தாய்மொழியிலேயே கல்வி தரப்பட வேண்டும். பிறமொழிப் பாடங்களுக்குப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.
  8. பள்ளிக்குச் செல்லத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி தரப் படவேண்டும்.
  9. தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் புத்தகம், உணவு, உடை போன்றவை இலவசமாக அளிக்கப் பட வேண்டும்.
  10. பெண்களுக்குச் சம சொத்துரிமை, வாரிசு பாத்யதை, ஆண்களைப் போலவே தொழில் நடத்த சம உரிமை, ஆசிரியர் பதவியில் அதிக இடம் முதலியவை வழங்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுதும் பெண்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  11. பள்ளிகளில் மூடநம்பிக்கையுள்ள புத்தகங்களைப் பாடமாக வைக்கக் கூடாது.
  12. ஜாதி வேறுபாடு காண்பிக்கும் ஹோட்டல்களுக்கு உரிமை தரக்கூடாது.


1930ஆம் ஆண்டு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடுஈரோட்டிலும், 1931ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாட்டிலும் சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர்கள் மாநாடு ஆகியவை தனியாக நடைபெற்றன. இவற்றில் முக்கியமான பல சீர்திருத்த கருத்துக்கள் தீர்மானங்களில் முன் மொழியப் பட்டன.


1. குழந்தைத் திருமணம், தேவதாசி முறை முதலியவற்றை இப்பெண்கள் மாநாடுகள் வன்மையாகக் கண்டித்த அதே நேரம் பெண்களின் திருமண வயதை முறைப்படுத்திய சாரதா சட்டத்தை மகிழ்வுடன் வரவேற்றன.

2. சொத்தில் சம உரிமை, கார்டியனாக இருப்பது, தத்து எடுத்துக் கொள்வது போன்றவற்றில் சம உரிமை, சட்டமன்றம் மற்றும் நகர்மன்றங்களுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட ஏற்பாடு செய்வது.

3. பெண் கல்வியை 11 வயதோடு நிறுத்தாமல் 30 வயது வரை படிக்க வைத்தல், பெண்களை காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர்த்தல், அனாதை விடுதிகள் திறப்பு, ரயில் நிலையங்களில் பெண்கள் தங்குவதற்கென்று தனியறை, பெண் ஊழியர்கள் நியமனம்.

4. கள்ளுக்கடை ஒழிப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையுடன், அவர்களுக்கென தனி மாநாடு ஏற்படுத்தித் தந்த முதல் அமைப்புசுயமரியாதை இயக்கமே ஆகும்.


இப்படியெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினால் எப்படி உயர்சாதியினரும், சங்கிகளும் பெரியாரை விரும்புவார்கள்?






மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...