இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதற்கு தனி சட்டம்? என்று இன்று பரவலாக கேட்கப்படுகிறது, ஆகையால் எல்லா மதத்துக்கும் பொதுவாக ஒரு பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்தினால் என்ன என்றும், இஸ்லாமியர்களுக்கு தனி சட்டம் உள்ளதால் அவர்கள் பொது நீரோட்டத்தில் இணையாமல் தனியாக உள்ளார்கள் என்றும் குற்றச்சாட்டப்படுகிறது.
உண்மையாதெனில், இந்தியாவில் எல்லா மதத்தினருக்கு தனி சட்டம் உண்டு. ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும் உள்ளது போல் இங்கே பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது. மேலும் முஸ்லிம்களாகிய நம்மைப்பார்த்து ஏன் நான்கு விசயத்துக்கு மட்டும் சிவில் சட்டத்தை தனியார் சட்டமாக பின்பற்றுகிறீர்? கிரிமினல் சட்டத்தையும் பின்பற்றலாமே என்கின்றனர். முஸ்லிமிகளாகிய நாம் கிரிமினல் சட்டத்தையும் பின்பற்ற தயார், ஆனால் முஸ்லீம் அல்லாதவர் முஸ்லிமை கொலைசெய்துவிட்டால், ஷரியாவை ஏற்கமாட்டார்கள், ஆனால் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதவரை கொலைசெய்தால் நாம் ஷரியாவை ஏற்கவேண்டும், ஒரே குற்றத்திற்கு மாறுபட்ட தண்டனை. அதனால் எல்லோருக்கும் இஸ்லாமிய ஷரியாவை கிரிமினல் சட்டத்தை கொண்டுவந்தால் ஏற்போம்.
ஸ்ரீரங்கம் யானைக்கு வடகலை நாமமா அல்லது தென்கலை நாமமா என்ற பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வு காணப்படாத போது, இறந்தவர்களை புதைப்பது அல்லது எரிப்பது போன்ற வேற்றுமைக்கு தீர்வு காணப்படாத போது, இந்தியா முழுமைக்கும் பெண்களுக்கு சொத்தில் பங்குதாராத போது (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு) எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது மூடத்தனத்தின் உச்சம்.
மேலும் போது சிவில் சட்டம் மூலம், சைவத்தையோ, அசைவத்தையோ சட்டமாக இயற்றமுடியாதபோது, பல கடவுளை வழிபடுவதை தடுத்து ஒரே கடவுளை வழிபடவைக்கமுடியாத போது எப்படி எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் முடியும்?
மாட்டை கடவுளாக (?) வழிபடும் சமுதாயத்திற்கும், வெட்டி உண்ணும் சமுதாயத்திற்கும் (ஹிந்துக்களிலேயே உண்பவர்கள் உண்டு) எப்படி ஒரே சிவில் சட்டம் செல்லும்?
மாட்டின் சிறுநீரை புனிதமாக கருதும் சமுதாயத்திற்கும், உரமாக பயன்படுத்தும் சமுதாயத்திற்கும் எப்படி ஒரே சட்டம் முடியும்?
ஆகமவிதி என்ற பெயரால் ஒரே ஒரு சமுதாயம் மட்டும் கோவிலின் கருவறை வரை செல்லும் சமுதாயத்திற்கும், கோவிலுக்குள்ளே செல்லமுடியாத சமுதாயத்துக்கும் எப்படி ஒரே சட்டம் செல்லும்? கருவறையில் விபச்சாரம் செய்யும் ஆட்களுக்கும், அதே கருவறையை கடவுளின் இடம் என்று சொல்லும் ஆட்களுக்கும் எப்படி ஒரே சட்டம் நியாயம் ஆகும்?
முதலில் இல்லாத மதமான ஹிந்துமதத்தில் உள்ளவர்களுக்கு ஒரே சட்டத்தை கொண்டுவந்துவிட்டு, பிறகு எல்லா மதத்தினருக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள், பிறகு யோசிக்கலாம்.
ஹிந்துமத்தில் உள்ள சாதிகளை அகற்றிவிட்டு, உரிமைகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு பிறகு பேசுங்கள் போது சிவில் சட்டம் பற்றி.