Tuesday, February 26, 2019

13. இஸ்லாத்திலும் சாதி

ஜாதி என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு பிரிவு, குடி அல்லது சமூகம் என்று அர்த்தம். தமிழில் சாதி என்ற வார்த்தையே இல்லை, ஜாதி என்பதில் உள்ள ஜா என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு மாற்றாக தமிழ் சா என்ற வார்த்தையை பயன்படுத்தி, சாதி என்று இன்றும் எழுதப்படுகிறது. சாதி என்ற வார்த்தை இல்லாததால் தமிழ் சமூகத்தில் சாதி இல்லை என்பது புலப்படும்.

சமூகம் தான் சாதியா?

இன்று சாதி என்பது முதலில் ஒரு சமூகத்தின் பெயரையோ அல்லது அவர்கள் செய்யும் தொழிலையே அடிப்படையாக கொண்டது. பின்னர் அது சாதியாக மாறிவிட்டது என்ற குறிப்பும் உண்டு.

உதாரணமாக

பறையர்கள் - போருக்காக பறையடிப்பவர்கள்,
படையாட்சி - போருக்கான படையை ஆட்சி செய்பவர் அல்லது வழிநடத்துபவர்,
உடையார் - உடையவர்,
முதலியார் - முதல் உள்ளவர் அல்லது பணக்காரர்,
சக்கிலி - செருப்பு தைக்கும் தொழிலாளி,
வண்ணான் -  துணி துவைப்பவர்,
பரியேரி - முடி திருத்துபவர்,

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அரசர்கள் காலத்தில் அவர்கள் செய்த செயலை கொண்டு இன்று சாதிகளின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.

குடும்ப பெயரா ஜாதி?

வட மாநிலங்களில் குடும்ப பெயரையே ஜாதியாக பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு உள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுப்பது பெரும்பாலும் நடக்கும்.

குடும்ப பெயரை பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் பிடிமானம் என்பது வேறு மதத்ததுக்கு மாறினாலும் குடும்ப பெயரை விடாமல் இருப்பதே அதற்க்கான உதாரணம். இன்றும் அஹமது படேல்கள் இருக்கிறார்கள். முஸ்லிமாக இருந்தாலும் அவர்களில் குடும்ப பெயரான படேலை விடுவதில்லை.

சவூதி அராபிய போன்ற நாடுகளிலும் இந்த குடும்ப பெயரை கொண்டே மக்கள் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் அங்கே அவர்கள் அதை ஜாதியாகவோ, பிரிவாகவோ, ஏற்றத்தாழ்வாகவோ பார்ப்பதில்லை. மேலைநாடுகளில் இந்த பழக்கம் உண்டு. ஆனால் அங்கேயும் அதை ஜாதியாகவோ, பிரிவாகவோ, ஏற்றத்தாழ்வாகவோ பார்ப்பதில்லை.

பகவத் கீதையில் சாதி ?

சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்று ஆரம்பிக்கும் பகவத் கீதை சொல்லும் வசனம், நான்கு வர்ணத்தியும் நானே படைத்தேன், அதை அழியாமல் நானே பாதுகாப்பேன்  என்று இருப்பதாக குற்றசாட்டுகள் உண்டு, அதை சரியாக மறுப்பதற்கான வாதம் அவர்களிடம் இல்லை.

சாதியின் பெயரால் தீண்டாமை

வேறு எந்த நாட்டிலும் இல்லாத சாதி கொடுமை என்ற தீண்டாமை இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது. ஒருகாலத்தில் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, நிழலோடு நிழல் உரசினால் தீட்டு என்று கொடுமையிலும் கொடுமை நடந்துகொண்டு இருந்த நாடுதான் இந்தியா.

தொடுவதால் தீட்டாகிவிடும் என்று போலியோ கொடுக்காமல் முடமாகிய பிள்ளைகளின் வரலாறும் இந்திய திருநாட்டில் உண்டு. அப்படி இருந்த காலகட்டத்தில் தான் சாதியை ஒழிக்க, அல்லது குறைந்த பட்சம் தீண்டாமையை ஒழிக்க பெரியார், அம்பேத்கார், பூலே போன்றவர்கள் மிகவும் பாடுபட்டனர். அதனால் தான் இந்துத்வா சக்திகளுக்கு அவர்களை பிடிப்பதில்லை.

சாதியால் நடக்கும் ஆணவக்கொலைகளுக்கும் இங்கே பஞ்சமில்லை, அவாள் வேறு வர்ணம் என்று தண்ணீர் முதல் வேலை வரை மறுக்கப்பட்ட வரலாறும் உண்டு, அதனால் தான் பாம்பாட்டிகளின் தேசம் என்று ஆங்கிலேயர்கள் சொன்னார்களோ என்னவோ.

யாரால் சாதி ஆரம்பிக்கப்பட்டது?

தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்த சமுதாயத்தை, அந்த பெயரையே சாதியாக மாற்றிய பெருமை கைபர் வழியாக வந்த ஆரியர்களுக்கே என்றால், அதை பற்றி பிடித்து இன்றுவரை தூபமிட்டு வளர்க்கும் பெருமை தலித்தல்லாதவர்களுக்கே என்றால் மிகையாகாது.

கடவுளின் பெயரால் மக்களை முட்டாள்களாக்க ஆரபிக்கப்பட்ட சாதி மன்னர்களை கொண்டு காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்டது. எவ்வளவு தகுதியான மன்னனாலும் அரசை குருவான பார்ப்பனர்களிடமே அரசை வழிநடத்தும் அதிகாரம் இருந்தது, நாட்டு மக்கள் எல்லாம் அரசனுக்கு மரியாதை செலுத்தும் வேளையில், மன்னனே அரச குருவுக்கு மரியாதை செலுத்துவது கடமையாக்கப்பட்டது, காரணம் உயர்ந்த குலம், இறைவனின் தலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள் என்ற பொய், அந்த பொய்யை வளர்க்கும் கட்டுக்கதைகள், போலி வரலாறுகள் நடைமுறைகள் இத்யாதி, இத்யாதி.

இந்தியாவில் சாதிக்கொடுமையால் மக்களை கூறுபோட்டு வயிறுவளர்த்த பார்ப்பான் கூட்டம், அதை நியாயப்படுத்த எடுத்த ஆயுதம் தாம் இஸ்லாத்தில் சாதி. இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதி உள்ளதா? இஸ்லாத்தில் இல்லையா? கிருஸ்துவத்தில் இல்லையா? என்று எதிர்கேள்வி கேட்டு பதிலை திட்டமிட்டே மறைப்பார்கள்.

கிருஸ்துவத்தில் ஜாதி?

கிருஸ்துவ மதம் உலகில் பல நாடுகளில் இருந்தாலும் அங்கே எல்லாம் சாதிரீதியாக மக்கள் பிளவு படவில்லை, இந்தியா தவிர்த்த நாடுகளில் ஒரே மேய்ப்பவரும் ஒரே மந்தையும் தான் இருக்கிறது, அனால் இந்தியாவில்? பொதுவாக ஹிந்துக்கள் கிருஸ்துவத்திற்கு மாறும் போது தன் ஜாதியை மட்டும் விடாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமையே. நாடார் கிறிஸ்துவர், தலித் கிறிஸ்துவர் என்ற பதமெல்லாம் இன்று சர்வ சாதாரணம், ஆக இந்துமத சாதிதான் கிருஸ்துவத்திலும் தலைவிரித்தாடுகிறது.


ஷியா சுன்னி ஜாதியா?

முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வோரை சுன்னி என்றும், முஹம்மது நபியின் (ஸல்) அவர்களின் மருமகனை (அலி ரலி) தலைவராக ஏற்றோரை ஷியா என்றும் அழைக்கின்றனர். உண்மையில் ஷியா மற்றும் சுன்னி பதம் குரானில் இல்லை, முஹம்மது நபி ஸல் அவர்களை மட்டுமே பின்பற்றவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை, ஆக யாரெல்லாம் இஸ்லாமியர்கள் என்றால் இறைவனின் கட்டளையை ஏற்று முஹம்மது ஸல் அவர்களின் நடைமுறையை பின்பற்றுபவர் மட்டுமே இஸ்லாமியர்கள். ஆக ஷியா மற்றும் சுன்னி என்பது சாதி அல்ல.

இஸ்லாத்தில் ஜாதிகள் 

இன்று பலர் இஸ்லாத்தை விமர்சிக்கும் போது ஏன் இஸ்லாத்தில் ஜாதி இல்லையா என்று கேட்கிறார்கள்,  லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப்  என்று உள்ளதை சாதி என்று தவறாக நினைக்கிறார்கள், இங்கே உள்ள பிரிவு அவர்கள் செய்யும் தொழிலை சார்ந்தது (ஹிந்து மதத்திலும் அப்படியே) ஆனால் இங்கே இவர்கள் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து பெண் எடுக்கமுடியும், குறைந்த பட்சம் ஒரே பள்ளியில் தோளோடு தோள் சேர்ந்து தொழமுடியும்.

ஆனால் ஹிந்து மதத்தில் கோவிலுக்குள் செல்லமுடியாது, சென்றாலும் அர்ச்சகர் ஆகமுடியாது.

ஆக இஸ்லாத்தில் ஜாதி அல்ல, ஜாதி இல்லை , இல்லவே இல்லை.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...