CRPF வீரர்கள் இறப்பின் துக்கத்தில் PFI பங்கேற்கிறது
இன்று காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரவாத 37 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று PFI ன் தலைவர் E .அபூபக்கர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு PFI சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த தாக்குதல் மூலம் நாம் தகுதியான துணிச்சலான வீரர்களை இழந்துவிட்டோம், இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது
மேலும் அவர் அறிக்கையில், சமீபத்திய ஆண்டுகளில் J & K ல் வன்முறை சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும், தற்போதைய சம்பவத்தில், புலனாய்வு தகவல்கள் இருந்தபோதிலும் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தது வேதனைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலை எதிர்வரும் தேர்தலுக்கான ஆயுதமாக பயன்படுத்தாமல், முறையாக விசாரித்து தீர்வுகாணப்படவேண்டும், அப்படி செய்யும் பட்சத்தில் இது போன்ற துக்க சம்பவத்தை எதிர்வரும் காலங்களில் தவிர்க்கமுடியும். இந்த தருணத்தில் காஷ்மீருக்கான நிரந்தர தீர்வை அரசியல் ரீதியாக எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
http://www.popularfrontindia.org/?q=fri-02152019-1755
பிற்சேர்க்கை
No comments:
Post a Comment