காஸ்மீர மாணவர்களும் வியாபாரிகளும் தாக்கப்படுவதாக நாட்டின் பல பகுதிகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இதை பிபி வன்மையாக கண்டிப்பதோடுமட்டுமல்லாது, மத்திய அரசு அவர்களுக்கும் அவர்கள் உடமைகளுக்கும் தேவையான பாதுகாப்பு தரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தி தக்க தண்டனை தரவேண்டும் என்றும் PFI தலைவர் E. அபூபக்கர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். காஸ்மீர் மாணவர்களையும் மற்றும் தொழிலார்களையும் தற்கொலை படையினராக மாற்றுவது பிரிவினைவாதத்தையும், வெறியையும் தூண்டுவதாகும். இதற்க்கு நிலையான தீர்வு என்பது காஸ்மீர் மக்களிடம் பேசி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாகும்.
காஷ்மீரிகள் இல்லாமல் காஷ்மீருக்கான தீர்வை கொண்டுவர நினைப்பதை கைவிடவேண்டும், குண்டுவெடிப்பையும், துப்பாக்கி சூட்டையும் தடுத்து அமைதி திரும்ப அந்த மக்களிடம் பேச வேண்டும். இந்திராகாந்தியின் படுகொலையால் விளைந்த சீக்கிய படுகொலை உண்டாக்கிய காயத்தையே இன்னும் மறக்கமுடியவில்லை என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
காஸ்மீர் என்பது இந்தியாவில் உள்ள மற்ற பாகம் போன்றதல்ல, அது ஒரு நிலமட்டுமல்ல, காஸ்மீர் அந்த மக்களுக்கானது. தீவிர பேரினவாத மற்றும் கடினமான வகுப்புவாத சக்திகளின் கனவு என்பது காஸ்மீரிகள் அல்லாத காஸ்மீர் ஆகும், ஆனால் அது நம் அரசிலமைப்புக்கு எதிரானதாகும். அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் காஷ்மீர சகோதர சகோதரிகளை காப்பது இந்தியானாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
காஷ்மீர் என்ற பெயரில் வலதுசாரி வகுப்புவாத குழுக்களால் ஊக்குவிக்கப்படும் வெறுப்பு அரசியல் நமது நாட்டின் உத்தமத்தன்மையையும் பாதுகாப்பையும் அழித்து வருவதாக E . அபூபக்கர் எச்சரித்தார்.
http://www.popularfrontindia.org/?q=mon-02182019-1526
No comments:
Post a Comment