இன்று திட்டமிட்டு திராவிட கொள்கையை அழிக்க ஏற்படுகள் நடந்துகொண்டு இருக்கிறது, அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்
1. திராவிட நாடு கைவிடப்பட்ட முயற்சி
2. ஹிந்து மத எதிர்ப்பு
3. ஊழல்
திராவிடம் என்றால் என்ன?
பார்ப்பனரல்லாத மக்களை பார்ப்பனர் அல்லாதோர் என்று அழைப்பதால், நமக்கு வேறு பெயர் இல்லை என்றாகிவிடும், கூடாதே யாரை எதிர்க்கவேண்டுமோ அவர்களின் பெயரையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அதனால் பார்ப்பனரல்லாதவர்களை (தென் இந்தியர்களை) அழைக்க பயன்படுத்திய சொல் தான் திராவிடம். அதன் எதிரொலிதான் தேசிய கீதத்திலும் திராவிடம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தில் மேலும் ஒரு படி போய், தமிழ்தான் திராவிடம், அதில் இருந்து தான் மற்ற மொழிகள் வந்தது என்றும் உள்ளது. (ஆதாரம் கீழே)
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
மேலே ஒருபடி போய், ஆரியத்தை வசைபாடுகிறது தமிழ்த்தாய் வாழ்த்து,
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
அதனால் தான் என்னமோ, மேற்கண்ட இரண்டு வரிகள் இன்று பாடப்படுவதில்லை.
1. எது திராவிட நாடு? ஏன் கைவிடப்பட்டது?
தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக (பார்க்க படம்) ஆகிய இன்றைய 4 மாநிலங்களை உள்ளடக்கியது தான் திராவிட நாடு. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டவுடன், எப்படி திராவிட நாட்டை உண்டாக்க முடியும் ? அதனால் தான் திராவிட நாட்டு கொள்கை கைவிடப்பட்டது, அது தெரியாமல் மூடர்கள் இன்று திராவிட நாடு கைவிடப்பட்டது என்று அதை தோல்வி போல் காட்டுகிறார்கள்.
2. ஹிந்துமத எதிர்ப்பு
ஹிந்து என்று ஒரு மதமே இல்லை, சாதியங்களை ஒருங்கிணைத்து ஹிந்து என்ற பெயரை வைத்துக்கொண்டார்கள், இந்து என்பது எப்படி ஒரு மதமாகும்? ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு சாமியை கும்பிடுகிறார்கள், பழக்க வழக்கம் வேறு, ஏன் தாலி கூட வேறு, பிறகு எப்படி பல மதம்? என்று Riddles of Hinduism நூலில் அம்பேத்கார் கேட்டுள்ளார்.
தொட்டால் தீட்டு, பார்த்தல் தீட்டு, நிழலோடு நிழல் பட்டால் தீட்டு, பொதுக்குளத்தில் நீர் எடுத்தால் தீட்டு என்று மக்களை பிளவுபடுத்திவிட்டு, பிறகு அதே மக்களை நீங்கள் எல்லோரும் ஒரே மதம் என்று சொல்வது அறிவுடைமை அல்ல. ஆக ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை.
மதம் இல்லை என்பதை விட்டுவிட்டு, அந்த மத சடங்குகளை பார்த்தோம் என்றால் முழுக்க முழுக்க பார்ப்பன ஜாதிக்கே ஆதரவாக, சனாதன தர்மத்தை கடைபிடிப்பதற்க்காகவும் உள்ளதாகவே அமையும். சனாதனத்தை பற்றிப்பிடிக்க, தொடர், அதன் மூலம் வயிறுவளர்க்க பார்ப்பன கூட்டம் எடுத்த ஆயுதமே இந்து மத எதிர்ப்பு. எப்போதெல்லாம் பார்ப்பனர்களுக்கு ஆபத்து வருமோ அப்பொழுதெல்லாம் ஹிந்துமதத்திற்கு ஆபத்து என்று கூக்குரல் இடுவார்கள், அழுது புலம்புவார்கள் அதுதான் பார்ப்பன சூழ்ச்சி.
3. ஊழல்
இன்றைய உலகில் அகற்றமுடியாத படுப்பதை செயல், இதை உலகம் முழுவதும் உள்ள இயக்கங்கள், முதல் உள்ளூர் அரசியல் காட்சிகள் வரை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எதோ திராவிட கட்சி மட்டுமே உலகில் ஊழல் செய்வது போலவும், மற்ற காட்சிகள் எல்லோரும் பரிசுத்தவான்கள் என்பது போலவும் பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஊழல் ஒழிக்கப்படவேண்டும், ஊழல்வாதிகளுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் ஊழலை காரணம் காட்டி திராவிட இயக்கத்தை வேரறருக்க செய்வது, நம்மை நாமே குழிதோண்டி புதைப்பது போன்றது.

சாதனைகள் எளிதானவை அல்ல
நீதிக்கட்சி, தி.மு.க. ஆகியவை தங்களது ஆட்சியில் பின்வரும் சாதனைகளைச் செய்திருக்கின்றன:
1. சமூக நீதியை நீதிக் கட்சி அறிமுகப்படுத்தியது,
2. இந்து சமய அறநிலைய பாதுகாப்புச் சட்டம்,
3. தேவதாசி ஒழிப்புச் சட்டம்,
4. பார்ப்பனர் அல்லாதார் கல்வி கற்க ஏற்பாடு,
5. அதிகார மையங்களில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வாய்ப்புகளைப் பெறுதல்,
6. உயர்கல்வி, அரசுப் பதவிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு வாய்ப்பு,
7. சமஸ்கிருதம், இந்திக்கு எதிரான உணர்வை ஊட்டுதல்,
8. மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர்சூட்டியது,
9. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்,
10. இருமொழித் திட்டம்,
11. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம்,
12. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கச் சட்டம்,
13. நீதிக் கட்சிக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை,
14. பலதாரத் தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தி.மு.க. துணை நின்றது,
15. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது,
16. தமிழில் அர்ச்சனை,
17. தமிழை ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரை படிக்க சட்டம்,
18. கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழியாக அறிமுகப்படுத்தியது,
19. பொருளாதார இடஒதுக்கீடு என்பதைத் தகர்த்தது,
20. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடுகளில் இஸ்லாமியருக்கும் அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடுகள்.
நலத்திட்டங்கள்
முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் என்பது, எம்.ஜிஆரால் விரிவுபடுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் முதலில் சென்னை நகராட்சிப் பள்ளிக்கூடங்களில் பிட்டி. தியாகராயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு காமராஜர் முதல்வரான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நண்பகல் உணவு அளிக்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார். அதற்குச் சத்துணவுத் திட்டம் என்ற பெயரும் வைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ திராவிட இயக்கத்தின் எந்த மூலக் கொள்கைகளையும் அவர்களாகவே முன்வந்து அவர்களின் ஆட்சியின்போது சாதனைகளாக நிகழ்த்திக்காட்டவில்லை.
தி.மு.க. திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கைகளைத் தாமாகவே முன்வந்து நிறைவேற்றிக்காட்டியது.
அது குறித்து வழக்குகளைச் சந்தித்தது.
நலத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. சென்னையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டன. தி.மு.கவின் அரசியல் எதிரிகளால் குடிசைகள் கொளுத்தப்பட்டன. பிறகு அவை குடிசை மாற்று வாரிய வீடுகளாக மாற்றம்பெற்றன. குடிசைகள் ஒழிக்கப்பட்டன.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 29 அணைகள் கட்டப்பட்டன. நீர் பாசனக் கால்வாய்கள், குடிநீரேற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆட்சியில் நிர்வாகக் குறைகள் இருப்பது இயல்பு. தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிர்வாகச் சீர்கேடே ஆட்சியாக இல்லை என்பதே முக்கியமானது.
நம்மைப் பொறுத்தவரை, நீதிக்கட்சியும் தி.மு.கவுமே திராவிட இயக்கம் என கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். அக்கட்சிகள் திராவிட இயக்கக் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டன என சொல்லமுடியாது. முடிந்தவரை நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், பொத்தாம்பொதுவாக அ.தி.மு.கவோடு தி.மு.கவையும் இணைத்து 'திராவிட இயக்கம்' என்று சொல்வது அனுசரணையாகுமே தவிர மெய்யாகாது.
No comments:
Post a Comment