Thursday, February 7, 2019

பிஜேபி யினர் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உச்சநீதிமன்றத்திடமும் தேர்தல் ஆணையத்திடமும் PFI புகார்

பாபரி மஸ்ஜித் பற்றிய பிரதமர் மற்றும் மந்திரிகளின் பேச்சுக்கள் தேசத்துக்கும் அரசியலமைப்பிற்கும் எதிராக உள்ளது, மேலும் நீதித்துறைக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்து தீர்ப்பை பிஜேபி க்கு சாதகமாக வழங்க முயல்வதை தடுக்கவேண்டும் என்று PFI செயல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாபரி வழக்கு ஏழு தசாப்தங்களாக நிலுவையில் உள்ளது என்றும் கூடிய விரைவில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம் என்றும் மறைமுகமாக நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசியது மற்ற அமைச்சர்களின் பேச்சில் இருந்து வேறுபடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலதாமதம் என்பது இடிப்பதில் ஈடுபட்ட கயவர்களுக்கு கிடைக்கும் தண்டனையும் தான் என்பதை சட்ட அமைச்சர் நினைவில் கொள்ளவேண்டும்.

1949 ல் பாபர் மசூதிக்குள் சிலை நிறுவப்படத்தில் இருந்து, 1986 ல் சிலை வழிபாட்டிற்கான ஆரம்பம் வரை, மேலும் 1992 ல் அதனை இடித்தது முதல் தற்காலிகமாக வழிபாடு நடத்தும் செயல் வரை ஒவ்வொரு செயலிலும் நீதித்துறை காலதாமதம் செய்கிறது. சட்ட அமைச்சர் நீதித்துறையின் காலதாமதம் பற்றி பேசுவது நல்ல விஷயமே, அதேபோல தனது கட்சிகாரர்களும் , சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களும் நீதித்துறை மீதி நம்பிக்கை வைக்காமல் மசூதியை இடித்து தள்ளியது ஏன் என்று இந்த தேசத்துக்கு விளக்க கடமைப்பட்டுள்ளார்.


பாபரி மஸ்ஜித் - ராமர் கோவில் விவகாரம் மத அடிப்படையில் தீர்க்கப்படவேண்டிய விஷயம் அல்ல, மாறாக வரலாற்று உண்மைகளையும், பதிவுகளையும் ஆதாரமாக தீர்க்கப்படவேண்டிய விஷயம்.

மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தண்டனை வழங்கியப்பிறகும் கூட அங்கே கோவில் கட்டுவது சரியாக இருக்கமுடியாது. மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் உள்ள சூழ்நிலைக்கும் நில உரிமையாளர்களுக்கும் சம்பந்தம் இல்லை. ( மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு சுன்னி வக்பு வாரியத்தின் கீழ் இருந்தது, வழக்கின் தீர்ப்பில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது).

இந்த அரசானது எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது, எதையெல்லாம் மக்களுக்கு செய்வோம் என்றதோ அதை ஒன்றைக்கூட செய்யவில்லை. அதனால் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி, வரும் பொதுத்தேர்தலில் ஓட்டுக்களை பெற்று வெற்றிபெற முயல்கிறது. பிஜேபி, ராமர் கோவில் கட்டுவோம் என்பதை தேர்தல் கருவியாக பயன்படுத்தி பெரும்பான்மை இந்து  மக்களை ஏமாற்றுகிறது.

வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம் என்ற முழக்கத்தை PFI  நாளான 17  பிப்ரவரி அன்று நாடுமுழுவதும் கொண்டுசெல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பலமாநிலங்களின் அன்று பலவிதமான பொது நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் எம். முஹம்மத் அலி ஜின்னா, ஓஎம்ஏ சலாம், அனிஸ் அஹ்மத், கே.எம். ஷரீஃப், அபுல் வாஹித் சேத் மற்றும் ஈ எம் அப்துல் ரஹிமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


http://www.popularfrontindia.org/?q=wed-01302019-1610

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...