Tuesday, February 26, 2019

13. இஸ்லாத்திலும் சாதி

ஜாதி என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு பிரிவு, குடி அல்லது சமூகம் என்று அர்த்தம். தமிழில் சாதி என்ற வார்த்தையே இல்லை, ஜாதி என்பதில் உள்ள ஜா என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு மாற்றாக தமிழ் சா என்ற வார்த்தையை பயன்படுத்தி, சாதி என்று இன்றும் எழுதப்படுகிறது. சாதி என்ற வார்த்தை இல்லாததால் தமிழ் சமூகத்தில் சாதி இல்லை என்பது புலப்படும்.

சமூகம் தான் சாதியா?

இன்று சாதி என்பது முதலில் ஒரு சமூகத்தின் பெயரையோ அல்லது அவர்கள் செய்யும் தொழிலையே அடிப்படையாக கொண்டது. பின்னர் அது சாதியாக மாறிவிட்டது என்ற குறிப்பும் உண்டு.

உதாரணமாக

பறையர்கள் - போருக்காக பறையடிப்பவர்கள்,
படையாட்சி - போருக்கான படையை ஆட்சி செய்பவர் அல்லது வழிநடத்துபவர்,
உடையார் - உடையவர்,
முதலியார் - முதல் உள்ளவர் அல்லது பணக்காரர்,
சக்கிலி - செருப்பு தைக்கும் தொழிலாளி,
வண்ணான் -  துணி துவைப்பவர்,
பரியேரி - முடி திருத்துபவர்,

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அரசர்கள் காலத்தில் அவர்கள் செய்த செயலை கொண்டு இன்று சாதிகளின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.

குடும்ப பெயரா ஜாதி?

வட மாநிலங்களில் குடும்ப பெயரையே ஜாதியாக பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு உள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுப்பது பெரும்பாலும் நடக்கும்.

குடும்ப பெயரை பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் பிடிமானம் என்பது வேறு மதத்ததுக்கு மாறினாலும் குடும்ப பெயரை விடாமல் இருப்பதே அதற்க்கான உதாரணம். இன்றும் அஹமது படேல்கள் இருக்கிறார்கள். முஸ்லிமாக இருந்தாலும் அவர்களில் குடும்ப பெயரான படேலை விடுவதில்லை.

சவூதி அராபிய போன்ற நாடுகளிலும் இந்த குடும்ப பெயரை கொண்டே மக்கள் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் அங்கே அவர்கள் அதை ஜாதியாகவோ, பிரிவாகவோ, ஏற்றத்தாழ்வாகவோ பார்ப்பதில்லை. மேலைநாடுகளில் இந்த பழக்கம் உண்டு. ஆனால் அங்கேயும் அதை ஜாதியாகவோ, பிரிவாகவோ, ஏற்றத்தாழ்வாகவோ பார்ப்பதில்லை.

பகவத் கீதையில் சாதி ?

சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்று ஆரம்பிக்கும் பகவத் கீதை சொல்லும் வசனம், நான்கு வர்ணத்தியும் நானே படைத்தேன், அதை அழியாமல் நானே பாதுகாப்பேன்  என்று இருப்பதாக குற்றசாட்டுகள் உண்டு, அதை சரியாக மறுப்பதற்கான வாதம் அவர்களிடம் இல்லை.

சாதியின் பெயரால் தீண்டாமை

வேறு எந்த நாட்டிலும் இல்லாத சாதி கொடுமை என்ற தீண்டாமை இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது. ஒருகாலத்தில் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, நிழலோடு நிழல் உரசினால் தீட்டு என்று கொடுமையிலும் கொடுமை நடந்துகொண்டு இருந்த நாடுதான் இந்தியா.

தொடுவதால் தீட்டாகிவிடும் என்று போலியோ கொடுக்காமல் முடமாகிய பிள்ளைகளின் வரலாறும் இந்திய திருநாட்டில் உண்டு. அப்படி இருந்த காலகட்டத்தில் தான் சாதியை ஒழிக்க, அல்லது குறைந்த பட்சம் தீண்டாமையை ஒழிக்க பெரியார், அம்பேத்கார், பூலே போன்றவர்கள் மிகவும் பாடுபட்டனர். அதனால் தான் இந்துத்வா சக்திகளுக்கு அவர்களை பிடிப்பதில்லை.

சாதியால் நடக்கும் ஆணவக்கொலைகளுக்கும் இங்கே பஞ்சமில்லை, அவாள் வேறு வர்ணம் என்று தண்ணீர் முதல் வேலை வரை மறுக்கப்பட்ட வரலாறும் உண்டு, அதனால் தான் பாம்பாட்டிகளின் தேசம் என்று ஆங்கிலேயர்கள் சொன்னார்களோ என்னவோ.

யாரால் சாதி ஆரம்பிக்கப்பட்டது?

தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்த சமுதாயத்தை, அந்த பெயரையே சாதியாக மாற்றிய பெருமை கைபர் வழியாக வந்த ஆரியர்களுக்கே என்றால், அதை பற்றி பிடித்து இன்றுவரை தூபமிட்டு வளர்க்கும் பெருமை தலித்தல்லாதவர்களுக்கே என்றால் மிகையாகாது.

கடவுளின் பெயரால் மக்களை முட்டாள்களாக்க ஆரபிக்கப்பட்ட சாதி மன்னர்களை கொண்டு காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்டது. எவ்வளவு தகுதியான மன்னனாலும் அரசை குருவான பார்ப்பனர்களிடமே அரசை வழிநடத்தும் அதிகாரம் இருந்தது, நாட்டு மக்கள் எல்லாம் அரசனுக்கு மரியாதை செலுத்தும் வேளையில், மன்னனே அரச குருவுக்கு மரியாதை செலுத்துவது கடமையாக்கப்பட்டது, காரணம் உயர்ந்த குலம், இறைவனின் தலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள் என்ற பொய், அந்த பொய்யை வளர்க்கும் கட்டுக்கதைகள், போலி வரலாறுகள் நடைமுறைகள் இத்யாதி, இத்யாதி.

இந்தியாவில் சாதிக்கொடுமையால் மக்களை கூறுபோட்டு வயிறுவளர்த்த பார்ப்பான் கூட்டம், அதை நியாயப்படுத்த எடுத்த ஆயுதம் தாம் இஸ்லாத்தில் சாதி. இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதி உள்ளதா? இஸ்லாத்தில் இல்லையா? கிருஸ்துவத்தில் இல்லையா? என்று எதிர்கேள்வி கேட்டு பதிலை திட்டமிட்டே மறைப்பார்கள்.

கிருஸ்துவத்தில் ஜாதி?

கிருஸ்துவ மதம் உலகில் பல நாடுகளில் இருந்தாலும் அங்கே எல்லாம் சாதிரீதியாக மக்கள் பிளவு படவில்லை, இந்தியா தவிர்த்த நாடுகளில் ஒரே மேய்ப்பவரும் ஒரே மந்தையும் தான் இருக்கிறது, அனால் இந்தியாவில்? பொதுவாக ஹிந்துக்கள் கிருஸ்துவத்திற்கு மாறும் போது தன் ஜாதியை மட்டும் விடாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமையே. நாடார் கிறிஸ்துவர், தலித் கிறிஸ்துவர் என்ற பதமெல்லாம் இன்று சர்வ சாதாரணம், ஆக இந்துமத சாதிதான் கிருஸ்துவத்திலும் தலைவிரித்தாடுகிறது.


ஷியா சுன்னி ஜாதியா?

முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வோரை சுன்னி என்றும், முஹம்மது நபியின் (ஸல்) அவர்களின் மருமகனை (அலி ரலி) தலைவராக ஏற்றோரை ஷியா என்றும் அழைக்கின்றனர். உண்மையில் ஷியா மற்றும் சுன்னி பதம் குரானில் இல்லை, முஹம்மது நபி ஸல் அவர்களை மட்டுமே பின்பற்றவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை, ஆக யாரெல்லாம் இஸ்லாமியர்கள் என்றால் இறைவனின் கட்டளையை ஏற்று முஹம்மது ஸல் அவர்களின் நடைமுறையை பின்பற்றுபவர் மட்டுமே இஸ்லாமியர்கள். ஆக ஷியா மற்றும் சுன்னி என்பது சாதி அல்ல.

இஸ்லாத்தில் ஜாதிகள் 

இன்று பலர் இஸ்லாத்தை விமர்சிக்கும் போது ஏன் இஸ்லாத்தில் ஜாதி இல்லையா என்று கேட்கிறார்கள்,  லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப்  என்று உள்ளதை சாதி என்று தவறாக நினைக்கிறார்கள், இங்கே உள்ள பிரிவு அவர்கள் செய்யும் தொழிலை சார்ந்தது (ஹிந்து மதத்திலும் அப்படியே) ஆனால் இங்கே இவர்கள் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து பெண் எடுக்கமுடியும், குறைந்த பட்சம் ஒரே பள்ளியில் தோளோடு தோள் சேர்ந்து தொழமுடியும்.

ஆனால் ஹிந்து மதத்தில் கோவிலுக்குள் செல்லமுடியாது, சென்றாலும் அர்ச்சகர் ஆகமுடியாது.

ஆக இஸ்லாத்தில் ஜாதி அல்ல, ஜாதி இல்லை , இல்லவே இல்லை.

திராவிடத்தால் வாழ்ந்தோமே

இன்று திட்டமிட்டு திராவிட கொள்கையை அழிக்க ஏற்படுகள் நடந்துகொண்டு இருக்கிறது, அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்

1. திராவிட நாடு கைவிடப்பட்ட முயற்சி
2. ஹிந்து மத எதிர்ப்பு
3. ஊழல்

திராவிடம் என்றால் என்ன?

பார்ப்பனரல்லாத மக்களை பார்ப்பனர் அல்லாதோர் என்று அழைப்பதால், நமக்கு வேறு பெயர் இல்லை என்றாகிவிடும், கூடாதே யாரை எதிர்க்கவேண்டுமோ அவர்களின் பெயரையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அதனால் பார்ப்பனரல்லாதவர்களை (தென் இந்தியர்களை) அழைக்க பயன்படுத்திய சொல் தான் திராவிடம். அதன் எதிரொலிதான் தேசிய கீதத்திலும் திராவிடம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தில் மேலும் ஒரு படி போய், தமிழ்தான் திராவிடம், அதில் இருந்து தான் மற்ற மொழிகள் வந்தது என்றும் உள்ளது. (ஆதாரம் கீழே)

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

மேலே ஒருபடி போய், ஆரியத்தை வசைபாடுகிறது தமிழ்த்தாய் வாழ்த்து,

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

அதனால் தான் என்னமோ, மேற்கண்ட இரண்டு வரிகள் இன்று பாடப்படுவதில்லை.

1. எது திராவிட நாடு? ஏன் கைவிடப்பட்டது?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக (பார்க்க படம்) ஆகிய இன்றைய 4  மாநிலங்களை உள்ளடக்கியது தான் திராவிட நாடு. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டவுடன், எப்படி திராவிட நாட்டை உண்டாக்க முடியும் ? அதனால் தான் திராவிட நாட்டு கொள்கை கைவிடப்பட்டது, அது தெரியாமல் மூடர்கள் இன்று திராவிட நாடு கைவிடப்பட்டது என்று அதை தோல்வி போல் காட்டுகிறார்கள்.

2. ஹிந்துமத எதிர்ப்பு 

ஹிந்து என்று ஒரு மதமே இல்லை, சாதியங்களை ஒருங்கிணைத்து ஹிந்து என்ற பெயரை வைத்துக்கொண்டார்கள், இந்து என்பது எப்படி ஒரு மதமாகும்? ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு சாமியை கும்பிடுகிறார்கள், பழக்க வழக்கம் வேறு, ஏன் தாலி கூட வேறு, பிறகு எப்படி பல மதம்? என்று Riddles of Hinduism நூலில் அம்பேத்கார் கேட்டுள்ளார்.

தொட்டால் தீட்டு, பார்த்தல் தீட்டு, நிழலோடு நிழல் பட்டால் தீட்டு, பொதுக்குளத்தில் நீர் எடுத்தால் தீட்டு என்று மக்களை பிளவுபடுத்திவிட்டு, பிறகு அதே மக்களை நீங்கள் எல்லோரும் ஒரே மதம் என்று சொல்வது அறிவுடைமை அல்ல. ஆக ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை.

மதம் இல்லை என்பதை விட்டுவிட்டு, அந்த மத சடங்குகளை பார்த்தோம் என்றால் முழுக்க முழுக்க பார்ப்பன ஜாதிக்கே ஆதரவாக, சனாதன தர்மத்தை கடைபிடிப்பதற்க்காகவும் உள்ளதாகவே அமையும்.  சனாதனத்தை பற்றிப்பிடிக்க, தொடர், அதன் மூலம் வயிறுவளர்க்க பார்ப்பன கூட்டம் எடுத்த ஆயுதமே இந்து மத எதிர்ப்பு. எப்போதெல்லாம் பார்ப்பனர்களுக்கு ஆபத்து வருமோ அப்பொழுதெல்லாம் ஹிந்துமதத்திற்கு ஆபத்து என்று கூக்குரல் இடுவார்கள், அழுது புலம்புவார்கள் அதுதான் பார்ப்பன சூழ்ச்சி.

3. ஊழல்

இன்றைய உலகில் அகற்றமுடியாத படுப்பதை செயல், இதை உலகம் முழுவதும் உள்ள இயக்கங்கள், முதல் உள்ளூர் அரசியல் காட்சிகள் வரை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எதோ திராவிட கட்சி மட்டுமே உலகில் ஊழல் செய்வது போலவும், மற்ற காட்சிகள் எல்லோரும் பரிசுத்தவான்கள் என்பது போலவும் பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ளப்படாது.


ஊழல் ஒழிக்கப்படவேண்டும், ஊழல்வாதிகளுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் ஊழலை காரணம் காட்டி திராவிட இயக்கத்தை வேரறருக்க செய்வது, நம்மை நாமே குழிதோண்டி புதைப்பது போன்றது.

சாதனைகள் எளிதானவை அல்ல
நீதிக்கட்சி, தி.மு.க. ஆகியவை தங்களது ஆட்சியில் பின்வரும் சாதனைகளைச் செய்திருக்கின்றன: 
1. சமூக நீதியை நீதிக் கட்சி அறிமுகப்படுத்தியது,
 2. இந்து சமய அறநிலைய பாதுகாப்புச் சட்டம், 
3. தேவதாசி ஒழிப்புச் சட்டம்,
4. பார்ப்பனர் அல்லாதார் கல்வி கற்க ஏற்பாடு, 
5. அதிகார மையங்களில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வாய்ப்புகளைப் பெறுதல், 
6. உயர்கல்வி, அரசுப் பதவிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு வாய்ப்பு, 
7. சமஸ்கிருதம், இந்திக்கு எதிரான உணர்வை ஊட்டுதல், 
8. மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர்சூட்டியது, 
9. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், 
10. இருமொழித் திட்டம், 
11. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம், 
12. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கச் சட்டம், 
13. நீதிக் கட்சிக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை, 
14. பலதாரத் தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தி.மு.க. துணை நின்றது, 
15. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது, 
16. தமிழில் அர்ச்சனை, 
17. தமிழை ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரை படிக்க சட்டம், 
18. கல்லூரிகளில் தமிழைப் போதனா மொழியாக அறிமுகப்படுத்தியது, 
19. பொருளாதார இடஒதுக்கீடு என்பதைத் தகர்த்தது, 
20. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடுகளில் இஸ்லாமியருக்கும் அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடுகள்.
நலத்திட்டங்கள்
முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் என்பது, எம்.ஜிஆரால் விரிவுபடுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் முதலில் சென்னை நகராட்சிப் பள்ளிக்கூடங்களில் பிட்டி. தியாகராயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு காமராஜர் முதல்வரான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நண்பகல் உணவு அளிக்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார். அதற்குச் சத்துணவுத் திட்டம் என்ற பெயரும் வைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ திராவிட இயக்கத்தின் எந்த மூலக் கொள்கைகளையும் அவர்களாகவே முன்வந்து அவர்களின் ஆட்சியின்போது சாதனைகளாக நிகழ்த்திக்காட்டவில்லை.
தி.மு.க. திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கைகளைத் தாமாகவே முன்வந்து நிறைவேற்றிக்காட்டியது.
அது குறித்து வழக்குகளைச் சந்தித்தது.
நலத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. சென்னையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டன. தி.மு.கவின் அரசியல் எதிரிகளால் குடிசைகள் கொளுத்தப்பட்டன. பிறகு அவை குடிசை மாற்று வாரிய வீடுகளாக மாற்றம்பெற்றன. குடிசைகள் ஒழிக்கப்பட்டன.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 29 அணைகள் கட்டப்பட்டன. நீர் பாசனக் கால்வாய்கள், குடிநீரேற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆட்சியில் நிர்வாகக் குறைகள் இருப்பது இயல்பு. தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிர்வாகச் சீர்கேடே ஆட்சியாக இல்லை என்பதே முக்கியமானது.
நம்மைப் பொறுத்தவரை, நீதிக்கட்சியும் தி.மு.கவுமே திராவிட இயக்கம் என கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். அக்கட்சிகள் திராவிட இயக்கக் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டன என சொல்லமுடியாது. முடிந்தவரை நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், பொத்தாம்பொதுவாக அ.தி.மு.கவோடு தி.மு.கவையும் இணைத்து 'திராவிட இயக்கம்' என்று சொல்வது அனுசரணையாகுமே தவிர மெய்யாகாது.


Monday, February 18, 2019

CRPF ராணுவ வீரர்களுக்கு தாமதமாக அஞ்சலி செலுத்திய ஆர் எஸ் எஸ் வலைத்தளம்

ஜார்கண்டில் மக்கள்நலப்பணி செய்ததால் தடைசெய்யப்பட்ட இயக்கம் (PFI)  15/02/2019 அன்றே தன் இரங்களை பதிவுசெய்துள்ளது.




அதே நேரத்தில் தேசத்தந்தை காந்தியை கொன்ற கோட்ஸேவின் இயக்கமான RSS, தேசத்துக்காக பாடுபட்டு படுகொலை செய்யப்பட CRPF ராணுவ வீரர்களுக்கு 17/02/2019 தான் இரங்களை பதிவுசெய்துள்ளது.



அதனால் தான் சொல்கிறோம் இவர்களுக்கும் தேசத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று, காய் அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய விடுதலை வீரர்களுக்கு எதிராக, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக வாழ்க்கையை கழித்தவர் தான் இந்த ஆர் எஸ் எஸ் தலைவர்கள், ஆண்ட்ரியா தலைவர்களின் வழி வந்தவர்களே இன்றும் உள்ளவர்கள். இவர்களிடம் தேசப்பற்றை எதிர்ப்பார்ப்பது கல்லில் நார் உரிக்கும் செயல்.

காஷ்மீர் மாணவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த PFI வலியுறுத்துகிறது-18/02/2019






காஸ்மீர மாணவர்களும் வியாபாரிகளும் தாக்கப்படுவதாக நாட்டின்  பல பகுதிகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இதை பிபி வன்மையாக கண்டிப்பதோடுமட்டுமல்லாது, மத்திய அரசு அவர்களுக்கும் அவர்கள் உடமைகளுக்கும் தேவையான பாதுகாப்பு தரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தி தக்க தண்டனை தரவேண்டும் என்றும் PFI தலைவர் E. அபூபக்கர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். காஸ்மீர் மாணவர்களையும் மற்றும் தொழிலார்களையும் தற்கொலை படையினராக மாற்றுவது பிரிவினைவாதத்தையும், வெறியையும் தூண்டுவதாகும். இதற்க்கு நிலையான தீர்வு என்பது காஸ்மீர் மக்களிடம் பேசி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாகும்.

காஷ்மீரிகள் இல்லாமல் காஷ்மீருக்கான தீர்வை கொண்டுவர நினைப்பதை கைவிடவேண்டும், குண்டுவெடிப்பையும், துப்பாக்கி சூட்டையும் தடுத்து அமைதி திரும்ப அந்த மக்களிடம் பேச வேண்டும். இந்திராகாந்தியின் படுகொலையால் விளைந்த சீக்கிய படுகொலை உண்டாக்கிய காயத்தையே  இன்னும் மறக்கமுடியவில்லை என்றும்  அவர் நினைவு கூர்ந்தார்.

காஸ்மீர் என்பது இந்தியாவில் உள்ள மற்ற பாகம் போன்றதல்ல, அது ஒரு நிலமட்டுமல்ல, காஸ்மீர் அந்த மக்களுக்கானது. தீவிர பேரினவாத மற்றும் கடினமான வகுப்புவாத சக்திகளின் கனவு என்பது காஸ்மீரிகள் அல்லாத காஸ்மீர் ஆகும், ஆனால் அது நம் அரசிலமைப்புக்கு எதிரானதாகும். அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் காஷ்மீர சகோதர சகோதரிகளை காப்பது இந்தியானாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

காஷ்மீர் என்ற பெயரில் வலதுசாரி வகுப்புவாத குழுக்களால் ஊக்குவிக்கப்படும் வெறுப்பு அரசியல் நமது நாட்டின் உத்தமத்தன்மையையும் பாதுகாப்பையும் அழித்து வருவதாக E . அபூபக்கர் எச்சரித்தார்.

http://www.popularfrontindia.org/?q=mon-02182019-1526

CRPF வீரர்கள் இறப்பின் துக்கத்தில் PFI பங்கேற்கிறது - 15/02/2019


CRPF வீரர்கள் இறப்பின் துக்கத்தில் PFI  பங்கேற்கிறது





இன்று காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரவாத 37 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று PFI ன் தலைவர் E .அபூபக்கர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு PFI சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த தாக்குதல் மூலம் நாம் தகுதியான துணிச்சலான வீரர்களை இழந்துவிட்டோம், இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது

மேலும் அவர் அறிக்கையில், சமீபத்திய ஆண்டுகளில் J & K ல் வன்முறை சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும், தற்போதைய சம்பவத்தில், புலனாய்வு தகவல்கள் இருந்தபோதிலும் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தது வேதனைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.

இந்த தாக்குதலை எதிர்வரும் தேர்தலுக்கான ஆயுதமாக பயன்படுத்தாமல், முறையாக விசாரித்து தீர்வுகாணப்படவேண்டும், அப்படி செய்யும் பட்சத்தில் இது போன்ற துக்க சம்பவத்தை எதிர்வரும்  காலங்களில் தவிர்க்கமுடியும். இந்த தருணத்தில் காஷ்மீருக்கான நிரந்தர தீர்வை அரசியல் ரீதியாக எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

http://www.popularfrontindia.org/?q=fri-02152019-1755


பிற்சேர்க்கை

Friday, February 15, 2019

விண்ணைத் தொடும் ரஃபேல் ஊழல்!

இந்திய விமானப்படைக்கு தேவையான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பெருமளவில் ஊழல் புரிந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத மத்திய அரசு பிரச்சனையை திசை திருப்பும் நோக்கிலேயே இதுவரை பேசி வருகிறது. இந்நிலையில் தி இந்து ஆங்கில நாளிதழில் அதன் முன்னாள் முதன்மை ஆசிரியரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான என். ராம் எழுதிய இரண்டு கட்டுரைகள் ரஃபேல் ஊழல் விவகாரத்தை மீண்டும் முதல் பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளன.
1986இல் அப்போதைய ராஜீவ்காந்தி அரசாங்கம் ஸ்வீடன் நாட்டிடமிருந்து போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் புரிந்ததாக செய்தியை வெளியிட்டதும் பத்திரிகையாளர் ராம்தான். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.
இந்திய விமானப்படையை மேம்படுத்தும் நோக்கில் புதிய போர் விமானங்களை வாங்க வேண்டும் என்ற விமானப்படையின் கோரிக்கையை ஏற்று 2007இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 126 போர் விமானங்களை வாங்குவதற்காக போர் விமான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. இவற்றில் பிரான்ஸ் நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் கூட்டமைப்பான ஈரோஃபைட்டர் டைஃப்பூன் ஆகிய நிறுவனங்கள் இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்தன.
குறைந்த விலையில் விமானங்களை வழங்க டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்களை வாங்குவது என்று 2012ல் தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 126 போர் விமானங்களை வாங்குவது என்றும் அவற்றில் 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்குவது, எஞ்சியவற்றை இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாரிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. போர் விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப விவரங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் வசம் கொடுக்க வேண்டும் என்றும் இறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்திய அரசாங்கத்திற்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையே எழுந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒப்பந்தம் நிறைவேறாமல் காலம் கடந்தது.
இந்நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு புதிதாக ஒப்பந்தங்களை செய்து கொண்டது. ஏப்ரல் 10, 2015 அன்று பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி திடீரென்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 2016ல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வந்த பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செப்டம்பர் 23, 2016 அன்று ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
126 விமானங்களுக்கு பதிலாக 36 போர் விமானங்களை மட்டும் வாங்குவது என்றும் அந்த விமானங்களையும் முழுவதுமாக டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்குவது என்றும் மோடி அரசாங்கம் எடுத்த முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்னவானது, பொதுத்துறை நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய நல்வாய்ப்பை தடுத்தது ஏன் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கேள்விகளை எழுப்பினர்.
இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் விதிகளின்படி இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனம் குறிப்பிட்ட ஒப்பந்த தொகையில் 30 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க இந்த தொகை பயன்படுத்தப்படும். 7.8 பில்லியன் யூரோக்களுக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை பெற்றுள்ள டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அதில் 50 சதவிகிதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது.
பாதுகாப்புத் துறையில் அனுபவமே இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இதில் ஒரு பங்காளர் ஆக்கினார் நரேந்திர மோடி. இதன்மூலம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு 1.9 பில்லியன் யூரோக்கள் புதிய வருவாயாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40,000 கோடி கடன் உள்ள அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் சமீபத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்ததை நாம் நினைவில் கொள்வது நல்லது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்டை ஓரம்கட்டி விட்டு தனது நண்பர் அம்பானிக்கு பெரும் உதவியை இதன்மூலம் செய்துள்ளார் மோடி. நிறுவனத்தைத் தொடங்கிய பத்தே நாட்களில் இவ்வாறான ஒரு ஒப்பந்தம் அம்பானியை தவிர வேறு யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தனது எதேச்சதிகார செயல் மூலம் சலுகைசார் முதலாளித்துவத்தின் கதாநாயகன் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் மோடி. ரஃபேல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயர் மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகுதான் கொண்டு வரப்பட்டது என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே செப்டம்பர் 2018ல் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
அனில் அம்பானிக்கு ஆதரவு கரம் நீட்டியது ஏன் என்ற கேள்விக்கு பதில் கொடுக்காத மத்திய அரசாங்கம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயித்த விலையை விட ரஃபேல் போர் விமானத்தின் விலையை தற்போது அதிகரித்தது ஏன் என்ற கேள்விக்கும் முறையான பதிலை இதுவரை அளிக்கவில்லை. குறிப்பாக, ஒரு விமானத்தின் விலை என்ன என்பதை இதுவரை வெளிப்படையாக அரசாங்கம் அறிவிக்கவே இல்லை. பிரான்ஸ் அரசாங்கத்துடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விலையை வெளியே வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசாங்கம் காரணம் கூறினாலும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைதான் வெளியே தெரிவிக்கக்கூடாது, விலையை தெரிவிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது பிரான்ஸ் அரசாங்கம். இருந்தபோதும் போர் விமானத்தின் விலையில் ரகசியத்தை இதுவரை பாதுகாத்து வருகிறது மத்திய அரசு. ஆனால் எந்த விபரங்கள் வெளியே தெரியக்கூடாது என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதோ அந்த தொழில்நுட்ப விஷயங்களை அரசாங்கத்தை சார்ந்தவர்களும் அதிகாரிகளும் பல்வேறு மட்டங்களில் வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு ரஃபேல் போர் விமானத்திற்கு 2007ல் நிர்ணயித்த விலை 79.3 மில்லியன் யூரோகள். 2011ல் இந்த விலை 100.85 மில்லியன் யூரோகளாக அதிகரித்தது. டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் பேசி 2016ல் 91.75 மில்லியன் யூரோகளாக விலையை குறைத்ததாக மத்திய அரசு கூறியது. ஆனால் விமானத்தின் இறுதி விலை 2011ன் விலையை விட அதிகரித்தது!
ரஃபேல் போர் விமானத்தில் இந்தியாவிற்கு என்று பிரத்யேகமாக 13 மேம்பாடுகளை (மிஸீபீவீணீ ஷிஜீமீநீவீயீவீநீ ணிஸீலீணீஸீநீமீனீமீஸீts) கேட்டது விலை உயர்வுக்கு காரணம் என்று கூறுகிறது மத்திய அரசு. இந்த மாற்றங்களுக்கு டஸ்ஸால்ட் நிறுவனம் நிர்ணயித்த மொத்த தொகை 1.3 பில்லியன் யூரோக்கள். 36 போர் விமானங்கள் வாங்கினாலும் 126 போர் விமானங்களை வாங்கினாலும் 1.3 பில்லியன் யூரோக்கள்தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் எதற்காக மத்திய அரசாங்கம் 36 விமானங்களை மட்டும் வாங்குகிறது என்று கேள்வி எழுப்புகிறார் பத்திரிகையாளர் என். ராம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஒப்புக்கொண்ட விலையைவிட 41.42 சதவிகிதம் அதிகமான விலை கொடுத்து தற்போது பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது. இந்தியாவின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் மூவர் இந்த விலை மிகவும் அதிகமானது என்று கூறி தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். ஆனால் குழுவில் இடம்பெற்ற மற்ற நால்வரும் விலை ஏற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
விமானப் படைக்கு விமானங்கள் தேவையுள்ள நிலையில் எதற்காக 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசாங்கம் திணறிக்கொண்டு இருந்த நிலையிலேயே அடுத்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தார் பத்திரிகையாளர் ராம். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே பிரதமர் அலுவலகமும் இணை பேச்சுவார்த்தையில் (Parallel Negotiation) ஈடுபட்டது என்பது ரஃபேல் விவகாரத்தில் மற்றுமொரு அதிர்ச்சி.
நவம்பர் 24, 2015 அன்று பாதுகாப்பு அமைச்சகம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு எழுதிய குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘நமது பேச்சுவார்த்தைகளை குறைத்து மதிப்பிட்டு பிரதமர் அலுவலகம் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது’’ என்று அப்போதைய பாதுகாப்பு துறை செயலாளர் ஜி. மோகன் குமார் தனது கைப்பட எழுதி பாதுகாப்பு அமைச்சருக்கு அந்த குறிப்பை அனுப்பியுள்ளார். இதனை தி இந்து நாளிதழ் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளது.
அக்டோபர் 23, 2015 அன்று பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஜெனரல் ஸ்டீபன் ரெப் இந்தியாவின் பிரதமர் அலுவலகம் நடத்திவரும் போட்டி பேச்சுவார்த்தை விபரங்களை தனது கடிதத்தில் குறிப்பிட்ட பிறகுதான் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலாளர் ஜாவித் அஷ்ரப், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் லூயி வசியுடன் அக்டோபர் 20, 2015 அன்று தொலைபேசி மூலம் உரையாடினார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. மோகன் குமாரின் குறிப்பில் தனது கருத்துகளை பதிவு செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், ‘பிரதமர் அலுவலகமும் பிரான்ஸ் அதிபரின் அலுவலகமும் இதில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை கண்காணிப்பது போலிருக்கிறது. பாதுகாப்புச் செயலாளர் இந்த விவகாரத்தை பிரதமரின் தனிச் செயலாளர் உடன் கலந்து பேசி தீர்க்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இருந்து பரிக்கர் லாவகமாக ஒதுங்கிக் கொண்டார் என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மனோகர் பரிக்கர் முன்னர் ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்த பேரத்தில் இணைத்தது குறித்து பிரான்ஸ் அதிபர் தெரிவித்த கருத்துகளை தொடர்ந்து, ரஃபேல் விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசாங்கம் இந்தியாவின் சார்பாக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்டோபர் 2018ல் உச்சநீதிமன்றத்திடம் கூறியது. இதனை தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை எதுவும் தேவை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்காத நிலையில் இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனவரி 2016ல் தன் பங்கிற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ‘இந்தியாவின் பிரதமர் தேசத்தின் 30 ஆயிரம் கோடியை திருடி விட்டார்’ என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி இந்த ஊழலில் நேரடியாக பங்கு பெற்றுள்ளார் என்று பத்திரிகையாளர் என். ராம் கூறியுள்ளார். ‘‘மேரா பி.எம். சோர் ஹை’’ (எனது பிரதமர் திருடர்) என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நாட்டு மக்களுக்கோ எதிர் கட்சிகளுக்கோ மத்திய அரசு எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
ரஃபேல் விவகாரம் மக்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல என்ற ரீதியில் மத்திய அமைச்சர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஜேட்லி மற்றும் மனோகர் பரிக்கர் ஆகியோர் இது குறித்து வாய் திறக்காமல் இருக்க தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘பிரான்ஸ் அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது கண்காணிப்பு கிடையாது, அது தலையீடுதான்’ என்பதை நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி உணர்த்தியது.
ரஃபேல் விவகாரம் குறித்து கேள்வி எழும் போதெல்லாம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்று கேள்வி எழுப்புபவர்களை கூறி தேசப்பற்று பின்னால் வழக்கம்போல் ஒளிந்து கொள்கின்றனர் பா.ஜ.க.வினர். தான் ஊழலை ஒழிக்க வந்தவன், ஊழல் நடக்காமல் கண்காணிப்பவன் என்று செல்லும் இடங்களிலெல்லாம் வெட்கமின்று கூறி வருகிறார் பிரதமர் மோடி. ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளியே வந்த போதும் அவற்றுக்கெல்லாம் உரிய பதிலை கொடுக்காமல் தேசப்பாதுகாப்பு, தேச நலன் என்று கூறியும் தங்களின் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் பிரதமர் மோடியும் அவரது சங்பரிவார் அணியினரும்.
நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரை இழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் புரிந்தவர்கள் இவர்கள். தங்கள் தேச துரோக செயல்களை மறைக்கத்தான் இவர்கள் தேசபக்த வேஷம் போட்டு வருகின்றனர். இவர்களின் ஏமாற்று வேலைகளுக்கும் பேச்சுகளுக்கும் இனியும் பலியாகாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டியது நாட்டு மக்களின் கடமை. ‘காங்கிரஸ் கட்சி 60 வருடங்களில் செய்யாததை நாங்கள் 60 மாதங்களில் செய்தோம்’ என்று மோடி கூறுகிறார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்த ஊழலை இவர் 60 மாதங்களில் செய்துவிட்டார் என்றுதான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

என் புரட்சி-22-Fruits Of Islam (FOI) தொண்டர் படை

நான் சந்தித்து வந்த இடர்களை முடிவுக்கு கொண்டு வர ஒரு வழியே இல்லையா என்பதைச் சுற்றியே என் சிந்தனை ஓடியது.
அமெரிக்க கறுப்பர்களின் பிரச்சினைக்கு தீர்வு தனி நாடும், இஸ்லாமும்தான் என்று நேஷன் ஆஃப் இஸ்லாம் பிரச்சாரம் செய்கிறது. இது தீர்வல்ல என்று கருதும், குடியுரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின தேசியவாதக் குழுக்கள் எங்கள் பிரச்சார வீச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்ந்தேன். இப்படி கறுப்பர்களின் முன்னேற்றத்துக்காக, நலனுக்காக செயல்படும் சமூக இயக்கங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு சாத்தியமே இல்லையா என்று சிந்திக்கும் போது, வழக்கம் போல வரலாற்றின் பக்கம் என் கவனத்தை திருப்பினேன்.
ஆராய்ச்சியாளனுக்கு வரலாறுதான் சிறந்த தீர்வை அளிக்க முடியும். நாம் நமது போராட்ட வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகளைச் சந்தித்தால், இது போன்ற பிரச்சினைகளை வரலாறு எவ்விதம் கையாண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் தீர்வு காணப்பட்டிருக்கலாம் அல்லவா?… அல்லது சிக்கலிலிருந்து விடுபடும் வழிகளாவது நமக்கு தென்படலாம்.
அப்படிச் சிந்திக்கும் போது, எனக்கு சற்றென நினைவுக்கு வந்தது கடந்த ஆண்டு நடைபெற்ற பாண்டூங் மாநாடுதான். 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் பிரம்மாண்டமான ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அண்மையில் சுதந்திரம் அடைந்த 29 ஆசிய,- ஆஃப்ரிக்க நாடுகள் முதன்முதலாக ஒன்றிணைந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்த மாநாடு என்னுள் ஒரு புதிய ஒளிக்கீற்றை பாய்ச்சியதோடு, இதேபோன்றதொரு ஒற்றுமை சாத்தியம்தான் என்ற நினைப்பும் என் சிந்தனையில் கனன்று கொண்டே இருந்தது.
ஹார்லெம் நகரின் எல்லாத் தெருக்களிலும் நான் இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்டேன். ‘நான் வாழ்ந்த உலகமான’ அந்த நகரத்தின் மூலை முடுக்குகளில் வசித்து வந்த கறுப்பர்கள் எல்லோரிடமும் இஸ்லாத்தையும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பையும் கொண்டு சேர்ப்பதில் எல்லா முயற்சிகளையும் எடுத்தேன்.
ஹார்லெம் நகர ஏழாம் எண் பள்ளிவாசலில் என்னுடைய உரையைக் கேட்க, கூட்டம் அதிகரித்தது. அதேசமயம், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ள கறுப்பர்கள் தயக்கம் காட்டினார்கள். அதற்கு காரணம் எங்கள் அமைப்பின் கட்டுப்பாடுகள்தான்.
அமைப்பில் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தறிகெட்ட வாழ்க்கை வாழ்வதுதான் கறுப்பர்களின் இந்த தாழ்ந்த நிலைக்கு காரணம் என்பதற்கு நானே சிறந்த உதாரணமாக இருந்தவன்.
அமெரிக்க கறுப்பர்களின் வாழ்வியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவே எங்கள் அமைப்பு உழைத்தது. நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணையும் ஒவ்வொருவரும் மிகுந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆண் உறுப்பினர்கள் Fruits Of Islam (FOI) தொண்டர் படையிலும் பெண் உறுப்பினர்கள் Muslim Girls Training (MGT) அமைப்பிலும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். Fruits Of Islam தொண்டர் படையானது இராணுவக் கட்டுப்பாடுகள் கொண்ட பிரிவாகும்.
வாரம்தோறும் திங்கள் கிழமை இரவு பள்ளிவாசலில் வைத்து, Fruits Of Islam தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆன்மீக வழிகாட்டுதலும் தற்காப்புக் கலை பயிற்சிகளும் இந்த வகுப்பில் வழங்கப்பட்டன. பள்ளிவாசலின் தலைமை இமாம் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்தாலும் Fruits Of Islam தொண்டர் படைக்கு தனிக் கேப்டன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் நேரடியாக தேசிய தலைமையின் கீழ் இயங்கிய கமாண்டருக்கு தொண்டர் படையின் செயல்பாடுகள் குறித்து பதிலளிக்க வேண்டும்.
*****
‘அட்டென்ஷன்… ’ அந்த அறை குலுங்குவது போல கட்டளையிட்டார் கேப்டன் ஜோசஃப் X. நேர்த்தியாக அணிந்த சீருடையோடு தொண்டர்கள் அணிவகுத்து, அடுத்த கட்டளையை எதிர்பார்த்து அமைதியாக நின்றனர்.
ஏழாம் எண் பள்ளிவாசலின் வெளியே, ஹார்லெம் நகரின் சாலையில் வாகனங்களின் சத்தம் குறைந்து கொண்டே வந்தது. தொண்டர்களின் பயிற்சி வகுப்பைப் பார்வையிடச் சென்றேன். நான் அங்கு சென்றதால், தொடக்கத்தில் எடுக்கப்படும் ஆன்மீக வகுப்பை என்னை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
‘இன்று நமது வகுப்பை பார்வையிட தலைமை இமாம் சகோதரர் மால்கம் வந்திருக்கிறார். அவர் உங்களுக்கு இன்று சிறப்பு வகுப்பு எடுப்பார்.’ துணைக் கேப்டன் ஜேம்ஸ் 67 X, வகுப்பைத் தொடங்க எனக்கு சைகை செய்தார்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ விரைப்பாக அணிவகுத்து நின்ற சகோதரர்களுக்கு முகமன் கூறினேன்.
‘வ அலைக்குமுஸ்ஸலாம்’ தொண்டர்களின் பதில் ஒரே குரலில் வந்தது.
‘வெள்ளையர்களைப் போன்ற இராணுவ அமைப்பு இது கிடையாது.’ நான் நேரடியாக பேச்சைத் தொடங்கினேன். ‘வெள்ளையர்கள் உயர் அதிகாரிளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடிமை மனநிலையில் இருப்பார்கள். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் சிந்தனை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. கறுப்பர்களுக்கு இப்படி ஒரு அமைப்பு, இராணுவக் கட்டுப்பாடு தேவையா என்று நீங்கள் நினைக்கலாம்.
நிச்சயமாக கறுப்பர்களுக்குத்தான் இத்தகைய இராணுவ பயிற்சியுடன் கூடிய அமைப்பு கட்டாயம் தேவை. முதலில், மனதளவில் நீங்கள் முழுமையாக அடிமை மனோபாவத்திலிருந்து வெளியே வர வேண்டும். இதுதான் Fruits Of Islam தொண்டர் படையின் பிரதான நோக்கமாகும். அமெரிக்க வெள்ளையர்கள் நம் இனத்தின் மீது பதிய வைத்திருக்கும் அடிமை முத்திரையை முதலில் நம்மளவில் நாம் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு முதல்படி, வெள்ளையன் மேன்மையானவன், அவனது செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் உன்னதானமானவை,-சிறப்பானவை என்று நம் பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள சிந்தனையை நாம் தூக்கியெறிய வேண்டும்.
என் தலையைப் பாருங்கள். காங்க் செய்யப்பட்ட தலை. இந்தத் தலையிலிருந்துதான் நம் அடிமைச் சிந்தனை தொடங்குகிறது. வெள்ளையனைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக – தலையில் அவ்வளவு வலி எடுத்த போதிலும்- சிகை அலங்காரத்தை வெள்ளைக்காரனைப் போல செய்து கொள்ள சுய அவமரியாதையைப் பொறுத்துக் கொண்டு தலையை காங்க் செய்து கொள்கிறோம்.
இப்படித்தான் உடை, நடை, பாவனை, பேச்சு, மதம் எல்லாவற்றிலும் வெள்ளையனைப் போல நடக்க கறுப்பர்கள் முயல்கிறார்கள். இந்த ‘கலாச்சார அடிமை’த்தனத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அடுத்ததாக நம் உளவியலை வெள்ளையர்கள் எவ்வாறு கட்டமைத்துள்ளார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். நாம் கறுப்பர்கள். அடிமைகள்.
கறுப்பர்களின் நிலை அமெரிக்காவில் எப்படி உள்ளது? தலைநகர்ல, வெள்ளை மாளிகைக்கு கொஞ்ச தூரத்துல, கேப்பிடல் ஹில் பகுதிக்குப் போய் பாருங்க…சொற்களில் வர்ணிக்க முடியாத நிலையில் பிச்சைக்காரர்களாக, கை வண்டி இழுப்பவர்களாக, விபச்சாரிகளாக, சூதாடிகளாக… ராத்திரில, தெரு நாய்களோடு அரை நிர்வாண கோலத்துல தூங்குறாங்க… இப்படித்தானே நம்மவர்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.
கொஞ்சம் நல்ல நிலையில இருக்கும் கறுப்பர்களும் ஹோவார்ட் யுனிவர்சிட்டி லெவல்ல படிச்சிட்டு என்ன செய்ய முடியுது? செக்யூரிட்டிகளாகவும், ட்ரைவர்களாகவும்… இப்படித்தானே வாழ்க்கையை ஓட்டுறாங்க…
வெள்ளையர்களின் சுகபோகங்களை பார்க்கும் போது நமக்கு எப்படி இருக்கு? என்ன மாதிரியான உணர்ச்சி ஏற்படுது? அப்போது உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவும், வெள்ளையர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்படும் போது ஏற்படும் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளியே வரவும் நாம் என்ன செய்கிறோம்? கறுப்பர்கள் என்ன செய்கிறார்கள்? யோசிங்க..’
கறுப்பர்களின் துயரம் தோய்ந்த வாழ்வாதார நிலைகளையும் வெள்ளையர்களின் ஆடம்பரத்தையும் அவர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி சற்று அமைதியானேன்.
‘நம்மை நாமே போதைக்கு உட்படுத்திக் கொள்கிறோம். கறுப்பு அடிமைகளான நாம போதைக்கு அடிமையாகி இருக்கிறோம். மனஉளைச்சலிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆண்டாண்டு காலமாக கறுப்பர்கள் போதையிலேயே உழலுமாறு வெள்ளையர்கள் நம் இனத்தைப் பழக்கப்படுத்தி விட்டார்கள். இந்த உண்மையை ஆழமாகப் புரிந்து கொண்டதால்தான் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு, உறுப்பினர்களுக்கு புகையிலை, மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. அதே போல பன்றிக்கறி உள்ளிட்ட உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் எதையும் உட்கொள்வதையும் தடை செய்திருக்கிறது.
குறிப்பாக விபச்சாரம்… விபச்சாரத்தின் பக்கம் நெருங்கும் நடனம் போன்ற கேலிக்கைகளும்கூட அமைப்பு உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் நமது இரு கண்கள்.’
அணிவகுத்து நின்ற சகோதரர்களின் ஊடே நடந்து சென்று அவர்களிடம், தொண்டர் படையின் உன்னத நோக்கத்தை எடுத்துரைத்தேன்.
‘நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பும், Fruits Of Islam தொண்டர் படையும் கறுப்பர்களான நமக்கு தேவையா? சொல்லுங்க…’ தொண்டர்கள் அனைவரும் ஒரே குரலில் உரத்து ‘ஆம்’ என்றனர்.
‘அடுத்ததாக… நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்தின் ஒரு பகுதிதான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது. அது மட்டுமல்ல, உடல் கட்டுக்கோப்பாகவும் திடகாத்திரமாகவும் இருந்தால்தான் வெள்ளையர்களின் அழிச்சாட்டியத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம்முடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள கோஷம் மட்டும் போட்டால் போதாது. வெள்ளையர்கள் நம்மைத் தாக்கும் போதும், நம்முடைய உடைமைகளை சேதப்படுத்தும் போதும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? கைகளைக் கட்டிக் கொண்டு, ஒரு கண்ணத்தில் அறைந்தால், இன்னொரு கண்ணத்தைக் காட்ட நமது இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுத் தரவில்லை.
‘Nobody can give you freedom. Nobody can give you equality or justice. If you’re a man, you take it.
‘ஒவ்வொரு தொண்டரும் கராத்தே, குங்ஃபூ, ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மையும் நமது அமைப்பின் உடமைகளையும் கறுப்பர் இனத்தையும் பாதுகாக்க நாம்தான் இராணுவமாக செயல்பட வேண்டும்.’
உற்சாகமூட்டும் வார்த்தைகளோடு என்னுடைய உரையை நிறைவு செய்தேன். அதன் பின்னர் தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது. தொண்டர் படையில் உடல் தகுதியின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக 16 வயது முதல் 35 வயது வரையிலான உறுப்பினர்களை கட்டாயம் தொண்டர் படையில் சேர்த்துக் கொண்டு பயிற்சிகளை வழங்கினோம். தலைவர் எலிஜா முஹம்மது கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியையும் இவர்களே கவனித்துக் கொண்டனர். அதே போல, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை கட்டுப்படுத்தும் பணியும் இவர்களின் பொறுப்பே… வெறுமனே உடற்பயிற்சி மட்டும் இங்கு போதிப்பது கிடையாது. ஆணாக ஒரு குடும்பத்தின் பொறுப்புகள், கணவனின் கடமைகள், பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், தந்தையின் அந்தஸ்தில் குழந்தை வளர்ப்பு போன்ற இஸ்லாமிய சமூக அமைப்பில் ஆண்களின் பங்கு குறித்தும் இந்த வகுப்புகளில் போதிக்கப்பட்டது.
தொண்டர் படையின் கேப்டனுக்கு வேறொரு முக்கியப் பொறுப்பும் இருந்தது. பள்ளிவாசலின் உறுப்பினர்களின் நல்லொழுக்கங்களை கண்காணித்து வர வேண்டும். விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினரை தற்காலிகமாக நீக்கி வைப்பது, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒதுக்கி வைப்பது, அமைப்பை விட்டு நீக்குதல் போன்ற தண்டனைகளை கேப்டனும், பள்ளிவாசலின் தலைமை இமாமும் &- மினிஸ்டர் – உறுதி செய்வார்கள்.

என் புரட்சி-21-தீவிர அழைப்புப் பணி

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் நிர்வாக வசதிக்காக, நாங்கள் நிர்மானித்த பள்ளிவாசல்களுக்கு எண்கள் வழங்கப்பட்டது.
நான் பாஸ்டன் நகரில் உருவாக்கிய மசூதியின் எண் 11. ஏறக்குறைய பாஸ்டனில் நான் ஆறு மாதங்கள் தங்கி, இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டு பள்ளிவாசலை உருவாக்கினேன். 1954-ம் ஆண்டு மார்ச் மாதம், பிலடெல்பியா பகுதிக்குச் செல்லுமாறு தலைவர் எலிஜா முஹம்மது எனக்கு கட்டளையிட்டார்.
பாஸ்டனைப் போல அல்லாமல், பிலடெல்பியா பகுதி கறுப்பர்கள் விரைவிலேயே என்னுடைய பிரச்சாரத்திற்கு பதில் அளித்தனர். வெள்ளையர்களின் வரலாற்றுத் துரோகத்தை புரிந்து கொண்ட அவர்கள், இஸ்லாம்தான் கறுப்பர்களின் பூர்வீக மதம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். மே மாத இறுதிக்குள் பிலடெல்பியாவில் 12-ம் எண் பள்ளிவாசலை உருவாக்கினேன்.
என்னுடைய ஓய்வு ஒழிச்சல் இல்லாத இஸ்லாமிய அழைப்புப் பணியின் வேகத்தைப் பார்த்த தலைவர் எலிஜா முஹம்மது, என்னை நியூயார்க் நகரத்திற்கு செல்லுமாறு பணித்தார்.
அமெரிக்காவின் அடையாளமாக நியூயார்க் நகரைச் சொல்லலாம். கல்வி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பிரதிபலிக்கும் நகரம்தான் நியூயார்க். அதேபோல அமெரிக்கச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கும் நகரமும் நியூயார்க்தான். உலகின் சோபைகள் அனைத்தும் நியூயார்க் நகரை அழகுபடுத்தினாலும், அந்த நகரின் கழிவறை போல சோபையற்று கிடக்கும் பகுதி ஹார்லெம்.
அதிர்ச்சி திருப்பங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் போல என் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன, அல்லாஹ்வின் நாட்டத்தால்…
நான் ஷைத்தானாக அலைந்து திரிந்த நரகம் ஒன்றில் இருந்து வெளி வந்து முஸ்லிமாக மாறி, மீண்டும் அதே நரகத்திற்கு -& பாஸ்டனுக்கு – இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யச் சென்றது போல, இப்போது நான் உழன்ற இன்னொரு நரகத்திற்கு- ஹார்லெம்முக்கு -& வந்திருக்கிறேன். இங்கேயும் இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்பாக, என் பழைய நண்பர்களைத் தேடி அலைந்தேன்.
கௌரவமான தொழில், வீடு, குடும்பம் என இருந்தவர்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அடியாளாக, ரவுடிகளாக வலம் வந்தவர்கள் எதிராளிகளின் தாக்குதலால் இறந்து விடுகிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது உடல் நலிந்து எந்த வேலையும் தெரியாதவர்களாக, எந்த வேலையையும் செய்ய முடியாதவர்களாக முடங்கி விடுகிறார்கள். கறுப்பர்களின் வாழ்க்கையை வெள்ளைச் சமூகம் இப்படித்தான் சூறையாடி வருகிறது.
பாஸ்டன் நகரில் ஷார்ட்டி போல, ஹார்லெம் வீதிகளில் என்னுடன் சுற்றித் திரிந்தவர் சேமி மாமா. அவரைப் பற்றி விசாரித்த போது சோகமான தகவலே எனக்கு கிடைத்தது. ஒழுக்கம் தவறிய இளம் பெண்ணை திருமணம் முடித்திருந்த அவர், மர்மமான முறையில் இறந்து விட்டதாக கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.
வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சியை தேடினேன். லாட்டரிச் சீட்டு கடைகளிலும் மது விடுதிகளிலும் ஏறி இறங்கினேன். அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, தெருக்களில் திரிந்த சிலருக்கு பணம் தந்து, தகவல் தரச் சொல்லியிருந்தேன். வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி ப்ரான்க்ஸ் பகுதியில் இருப்பதாக, வயதான சுகாதாரத் தொழிலாளி ஒருவர் தகவல் தந்தார்.
அவருடைய வீட்டிற்குச் சென்றேன். பலவீனமான நிலையில் இருந்த அவர், என்னைப் பார்த்து சில நொடிகளில் அடையாளம் கண்டு கொண்டார்.
‘ரெட்… எப்படி இருக்க… எவ்வளவு நாளாச்சி உன்னப் பார்த்து… எப்படி… எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா உன்னப் பார்த்ததுல…’
கட்டியணைத்துக் கொண்டேன். கைத்தாங்கலாக அவரை படுக்கைக்கு அழைத்துச் சென்றேன்.
‘எப்போதுமே எனக்கு உன்னைப் பிடிக்கும் ரெட்…’
‘நீங்க என்னைச் சுடுறதுக்கு துப்பாக்கியோட துரத்தினத நினைச்சா இப்பவும் நடுக்கமா இருக்கு…உண்மையிலேயே நான் ஏமாத்தல… லாட்டரில எனக்குத்தான் பணம் விழுந்துச்சி…’
‘ஆமா ரெட்… நீ தப்பு பண்ணியிருந்தா என்னை எதிர்த்திருப்பியா… அத நெனச்சி பின்னாடி நான் ஃபீல் பண்ணினேன். சரி அத விடு… அத நெனச்சி இப்ப என்ன பயன்?’
‘நீங்க அன்னிக்கு என்னை துரத்தலன்னா, இன்னிக்கு நான் மனுசனா மாறியிருக்க முடியாது. உங்களுக்கு பயந்துக்கிட்டு, ஹார்லெம்ம விட்டுப் போனதுனாலதான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானிச்சி… நான் முஸ்லிமாயிட்டேன்..’
வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சிக்கு இஸ்லாத்தைப் பற்றியும், நேஷன் ஆஃப் இஸ்லாம் பற்றியும் அறிமுகப்படுத்தினேன்.
‘நம்ம மாதிரி தெருவுல சுற்றித் திரிஞ்சவங்கல்லாம், இந்த வெள்ளைச் சமூகத்துக்கு பலியாகிப் போனவங்கதானே…
‘நான் ஜெயில்ல இருக்கும் போது, உங்க திறமையை நினைச்சுப் பார்ப்பேன்… எவ்வளவு பேருக்கு பரிசு விழும் போது, அந்த நம்பரையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருப்பீங்க… உங்களுக்கு இருந்த மூளைக்கு கணக்கோ இல்ல சையின்ஸோ நீங்க படிச்சிருந்தீங்கன்னா, எவ்வளவு பெரிய ஆளா இருந்திருப்பீங்க…’
‘ரெட்… நீ சொல்றது யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்தான்…’ கறுப்பர்களின் இயலாமையை எண்ணி பெருமூச்சு விட்டோம்.
அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து, உடம்பைக் கவனித்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்பினேன்.
——————ஹார்லெம் நகரில், கறுப்பர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஏராளமான கறுப்பின தேசியவாதக் குழுக்கள் செயல்பட்டு வந்தன. எங்கள் அமைப்பின் வளர்ச்சிக்கு இந்தக் குழுக்களே பெரும் தடையாக இருந்தன. இந்தத் தடையை உடைக்கும் விதமாக, சில பிரசுரங்களை அச்சடித்துக் கொண்டு, நானும் அமைப்புச் சகோதரர்கள் சிலரும் ஹார்லெம் வீதிகளில் சுற்றித் திரிந்து கறுப்பர்களை அழைத்தோம்.
‘கறுப்பர்களை எப்படி வெள்ளையர்கள் கடத்தி வந்தார்கள்?’
‘கறுப்பர்கள் எப்போது, எப்படி அடிமையாக்கப்பட்டார்கள்?’
‘நம் இனப் பெண்களை கற்பழித்தவர்களுக்கு என்ன தண்டனை?’
‘அறிந்து கொள்ள இந்தப் பிரசுரங்களை படியுங்கள்’ என்று அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்தோம்.
அடுத்ததாக, கறுப்பினத் தேசியவாதக் குழுக்கள், குடியுரிமை அமைப்புகள் நடத்திய கூட்டங்களுக்குச் சென்று, அங்கு வந்திருந்தவர்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்து, கூட்டத்துக்கு அழைத்தோம்.
இப்படியாக ‘ஆள் பிடித்து’ கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்த்து, ஹார்லெம் நகர கறுப்பர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினோம். இருந்தாலும், எனக்கு திருப்தி இல்லை. இன்னும் இன்னும் ஆட்களை இயக்கத்தில் சேர்ப்பது குறித்து சிந்தித்தேன்.
ஹார்லெம் நகரின் 7-ம் எண் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டங்களில் சிலர் கலந்து கொள்வதை கவனித்தேன். ஆன்மிக தேடலில் ஆர்வம் காட்டியவர்கள்தான் அவர்கள். எனக்கு ஒரு சிந்தனை உதித்தது.
தேவாலயங்களுக்குச் செல்லும் கறுப்பர்களைச் சந்தித்து, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது என திட்டமிட்டேன். அதுவும் பகட்டாக வாழ முயலும் கறுப்பர்கள் செல்லும் சர்ச்களுக்குச் செல்லாமல், சாதாரண கறுப்பர்கள் செல்லும் தேவாலயங்களுக்குச் சென்று அழைப்பு விடுத்தோம். ‘ஆள் பிடிக்கும்’ இந்த செயல்முறை நிறைந்த பலனைத் தந்தது. 7-ம் எண் பள்ளிவாசலில் ஓரளவுக்கு கூட்டம் கூடியது.
‘சகோதர, சகோதரிகளே… உங்களால் என் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்க முடியாது.’ என் பேச்சை இப்படி ஆரம்பித்ததும், ஆச்சரியமாகப் பார்த்தனர்.
‘ஆமாம்… சிறுவயதிலேயே என் கண்களில் இருந்த கண்ணீரெல்லாம் வற்றி விட்டது. அதற்கு காரணம் கிறிஸ்தவம்தான்… நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய நிறம் என்ன? நீங்கள் கடவுளாக வணங்கும் ஜீஸஸின் நிறம் என்ன?’
அவர்களின் ஆர்வத்தைத் தூண்டினேன்.
‘வெள்ளை நிற தலைமுடியும் நீல நிறக் கண்களும் உங்களுக்கு இருக்கிறதா… ஆனால் ஜீஸஸுக்கும் வெள்ளையர்களுக்கும் இருக்கிறதே?
‘உங்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் முடிந்ததும் நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று, உங்கள் வீடு, சுற்று முற்றும் பாருங்கள். அதே போல உங்கள் அருகில் இருக்கும் வீடுகளையும் சூழலையும் பாருங்கள். அப்படியே கிளம்பி, வெள்ளையர்கள் இருக்கும் பகுதிக்கு வாருங்கள். அங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். சாக்கடையும் குப்பைக் கூளங்களும் நிறைந்த கறுப்பர்களின் சேரிகளோடு ஒப்பிடும் போது, வெள்ளையர்கள் வசிக்கும் பகுதி எப்படி வளமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பார்த்து பிரமித்து விட்டு, அப்படியே நின்று விடாதீர்கள். அங்கு காவலுக்கு நிற்கும் செக்யூரிட்டி உங்களை ரொம்ப நேரம் அங்கு நிற்க விடமாட்டார்.
‘இந்த வளங்களையெல்லாம் நாம் எங்கு பெற வேண்டும் என்று நமக்கு சர்ச்-சும் வெள்ளையர்களும் போதிக்கிறார்களா?’ கேள்வியைக் கேட்டு அவர்களின் முகங்களைப் பார்த்தேன். முழித்தார்கள்.
‘வெள்ளையர்கள் இந்த உலகத்தில் வசதியாக வாழ்வார்கள். ஆனால் நாம் இந்த வசதிகளையெல்லாம் இங்கு அனுபவிக்கக்கூடாது. சொர்க்கத்தில்தான் அனுபவிக்க வேண்டும் என்று…’ நான் வார்த்தைகளை முடிப்பதற்குள் அவர்களே, ‘ஆமாம்… சர்ச்சில் இப்படித்தான் சொல்கிறார்கள்’ என்று ஆமோதித்தனர்.
இப்படி அவர்களின் கவனத்தை நிலைநிறுத்திய பின், இஸ்லாம் மற்றும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைப் பற்றி எடுத்துக் கூறி விட்டு, எலிஜா முஹம்மதுவை பின்பற்ற விருப்பம் உள்ளவர்கள் எழுந்து நிற்கலாம் என்பேன். வழக்கம் போல சொற்ப நபர்களே எழுந்து நின்றனர்.
‘நமக்காக ஏதாவது செய்ய நாமே முன்வராத வரையில், சுதந்திரத்தையும் நீதியையும் நம்மால் வெல்லவே முடியாது’ என்று கூட்டத்தை முடித்தேன்.
ஹார்லெம் நகரில் இருந்த ஏழாம் எண் பள்ளிவாசல் உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. வாரம்தோறும் புதன்கிழமை, ஏற்கனவே நான் உருவாக்கிய பிலடெல்ஃபியா பகுதி 12-ம் எண் பள்ளிவாசலுக்குச் சென்று உரை நிகழ்த்தினேன்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என் கரத்தைப் பற்றிக் குலுக்கினார், சிறையில் என்னிடம் இஸ்லாம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட ஓஸ்பேர்ன்.
‘வ அலைக்குமுஸ்ஸலாம். எப்படி இருக்கீங்க…’
‘நான் இப்ப மசாசூசெட்டஸ் மாகாணம் ஸ்பிரிங்ஃபீல்ட் பகுதியில் இருக்கிறேன். அங்கு பிரச்சாரத்துக்கு வர முடியுமா?’ உடனடியாக ஒப்புக் கொண்டேன். விரைவிலேயே சகோதரர் ஓஸ்பேர்ன் உதவியோடு, ஸ்பிரிங்கஃபீல்ட் பகுதியில் 13-ம் எண் பள்ளிவாசலைத் தொடங்கினோம்.
அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஒரு சகோதரி, ஹார்ட்ஃபோர்ட் பகுதிக்கு வர முடியுமா என்று கேட்டார். வீட்டு வேலை செய்பவர்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை தினமாகும். அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வருமாறு அழைத்தார். அங்கும் சென்று பிரச்சாரம் செய்தேன்.
இதே போல, அட்லாண்டா பகுதியில் சகோதரர் ஜேம்ஸ் எக்ஸ் மூலம், இஸ்லாமிய பிரச்சாரப் பணியைத் தொடங்கினோம். அங்கு பிரச்சாரம் செய்ய வாடகைக்கு கிடைத்த ஒரே இடம் ஈமச்சடங்கு நடைபெறும் அரங்குதான். அங்கு ஈமச்சடங்குக்கு வந்தவர்களும் எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இப்படி என்னுடைய இஸ்லாமிய அழைப்புப் பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் என் வாழ்க்கையில் குறுக்கிட்டாள்.

1983 பிப்ரவரி 18 நெல்லி படுகொலை! - ஆர் எஸ் எஸ் தீவிரவாதம் - அஸ்ஸாம்


அஸ்ஸாமின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நெல்லி, ஒரு இனப்படுகொலையின் பெயரால் உலக வரைபடத்தில் இடம் பிடித்தது. 1983 பிப்ரவரி 18ம் தேதி அஸ்ஸாமிகளான திவா, கோச் பழங்குடியினத்தைச் சார்ந்த வன்முறைக்கும்பல் வாள், பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நெல்லியில் நுழைந்து மூவாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொடூரமாக படுகொலை செய்தது.
கொலை செய்யப்பட்டவர்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் இந்த இனப்படுகொலை ஒரு அடிக்குறிப்பாக மாறியது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தகையதொரு இனப்படுகொலை நெல்லியில்தான் அரங்கேறியது. ஆனால் நெல்லியை அனைவரும் மறந்திடவே விரும்பினர்.
கலவரங்கள் உருவாக காரணம், அதுவரை கட்டமைக்கப்பட்ட அல்லது இதர வழிகளில் வலுப்பெற்ற ‘அன்னியர்’ விரோதமாகவோ மண்ணின் மீதான பேராசையாகவோ இருக்கலாம். 1970களின் இறுதியில் அஸ்ஸாம் பகுதியில் அன்னியர் துவேசம் வலுப்பெறத் துவங்கியது. அஸ்ஸாம் வம்சாவழியைச் சார்ந்த உயர்சாதியினர்தாம் ஆல் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் கீழ் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை வகித்தனர்.
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (தற்போதைய வங்காளதேசம்) பெருமளவில் குடியேற்றம் நடப்பதாக பிரச்சாரம் செய்வது இந்துத்துவ வலதுசாரிகளின் ஸ்திரமான பரப்புரை என்பதால் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது சங்பரிவார்கள் என்பதற்கு வாய்ப்பு அதிகம்.
2
1979ம் ஆண்டு போராட்டம் துவங்கப்பட்டு, 1985ம் ஆண்டு அடங்கியது. அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் போராட்டம் துவக்கத்தில் வங்காள மொழி பேசும் அனைத்து மதனத்தினருக்கும் எதிராக அமைந்தபோதிலும் பின்னர் அதில் மத வர்ணம் பூசப்பட்டது. அஸ்ஸாமிகளான முஸ்லிம்கள் துவக்கத்தில் வங்காளிகளாகவும் பின்னர் வங்காள முஸ்லிம்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்.
வங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் பார்வையிலிருந்து காணாமல் போயினர். பழங்குடியினர் மத்தியில் குடியேற்றக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தை முஸ்லிம் எதிர்ப்பு போராட்டமாக மாற்றியதில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு முக்கிய பங்குண்டு.
மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் மாறுபட்டிருந்த அஸ்ஸõம் இனத்தவர்கள் இயல்பாகவே இதனால் கிளர்ந்தெழுந்தனர். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே அஸ்ஸாம் மொழிக்கான போராட்டம் துவங்கியது. 1983ல் நீதிமன்றங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் அஸ்ஸõம் மொழியை உபயோகிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகளின் அழுத்தமே அதற்கு முக்கிய காரணம்.
கிழக்கு வங்காளத்தில் உயர்சாதி நிலக்கிழார்களின் கொடுமைகளை சகிக்க முடியாமல் ஏராளமானோர் அஸ்ஸாமில் குடியேறியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர். அவர்கள்தாம் யாரும் உபயோகிக்காத நிலத்தை விவசாய நிலமாக மாற்றினார்கள். அதற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றபோது ஆங்கிலேய அரசு அஸ்ஸாமிகளுக்கும், வங்காளிகளுக்கும் நிலப்பகுதிகளை ஒதுக்கீடு செய்தனர்.
சுதந்திரப் போராட்டக்களத்தில் இருந்த இந்திய தேசிய காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் 1930களில் அஸ்ஸாம் பகுதியில் செல்வாக்கை பெற்றிருந்தனர். இதன் மூலம் சமூக பிளவு வலுப்பெற்றது. இந்துக்கள் காங்கிரஸின் சக்தி என்றால் முஸ்லிம்கள் லீக்கை ஆதரித்தார்கள்.
1946ல் இப்பிரிவினை மோதலுக்கு வழி வகுத்தது. கேபினட் மிஷன் வந்தபோது அஸ்ஸாம் கிழக்கு வங்காளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1947ல் மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் மூலம் சில்ஹட், கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு வகுப்புவாத பிரிவினைகள் தணிந்தன. வங்காளிகளுக்கு அஸ்ஸாமிய மொழி பேசுவது எளிதாக இருந்ததால், படிப்படியாக குடியேற்றக்காரர்கள், உள்ளூர்வாசிகள் என்ற வேறுபாடு மறைந்தது.
பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறிய வங்காள இந்துக்கள், அஸ்ஸாமின் சமூகச் சூழல் மீண்டும் சீர்கெட காரணமாயினர். முஸ்லிம் குடியேற்றக்காரர்கள், வெளிநாட்டினராகவும், இந்து குடியேற்றக்காரர்கள் அகதிகளாகவும் மாறிய பாரபட்சமான அரசியல் நடைமுறை அஸ்ஸாமில் மீண்டும் மோதலுக்கு வித்திட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, பிரிவினையை மூலதனமாக கொண்டது என்ற குற்றச்சõட்டு அன்றே வலுப்பெற்றிருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் அதிகம் இருந்தனர் என்பதுதான் உண்மையாகும்.
அஸ்ஸாமி மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் 1960களில் பழங்குடியினர் மத்தியிலும், வங்காளிகளுக்கிடையேயும் பெரும் கொந்தளிப்பிற்கு வழி வகுத்தது. அன்று அஸ்ஸாமி மொழிக்காக போராடிய அஸ்ஸாம் இலக்கிய அவையின் தலைவர்களுக்கு வங்காள இந்துக்கள்தாம் முக்கிய எதிரிகள். அஸ்ஸாம் மொழிக்கான போராட்டமே பின்னர் பழங்குடியினர் செல்வாக்கு பெற்ற மேகாலயா போன்ற மாநிலங்கள் உருவாக காரணமாகும்.
70களின் இறுதியில் மொழி மற்றும் புவிப் பிரதேசத்தின் அடிப்படையிலான போராட்டம் மதரீதியான பிரிவினையாக திசை மாறியது. இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் கட்சியில் இருந்த உயர்சாதியினர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் சுயம் சேவகர்கள் வடகிழக்கு பகுதியை மையமாக கொண்டு செயல்படத்துவங்கியது பிரிவினைக்கு வலுவூட்டியது.
அஸ்ஸாம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து இளைஞர்களை தேர்ந்தெடுத்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு இளைஞர் மையங்களில் பயிற்சி அளிப்பது தொடர்பாக எம்.எஸ். கோல்வால்கர் தனது ‘Bunch of thoughts” (தமிழில் ஞான கங்கை)ல் குறிப்பிட்டுள்ளார். வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் அவர்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டன.
3
வெளிநாட்டு குடிமக்கள் என்ற அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் பிரச்சாரம், குறுகிய உணர்ச்சிகளுக்கு எரியூட்டியது. வெளிநாட்டினர் பிரச்சனையை கிளப்பியபோது அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் தாங்கள் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டனர். எனினும், அடிப்படையற்ற குற்றச்சõட்டுகளை அவர்கள் எழுப்பினர். இதனால், யாரையும் எதிரிகளாக மாற்றும் சூழல் உருவானது. தொப்பி, தாடி மற்றும் லுங்கி அணியும் முஸ்லிம்கள் அடையாள மயமாக்கலுக்கு பொருத்தமானவர்களாக இருந்தனர்.
1962ம் ஆண்டு சீனா தாக்குதல் நடத்தியபோது பல இடங்களிலும் வெளிநாட்டினர் சீன இராணுவத்தை வரவேற்க காத்திருந்ததாக அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் 1980இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளது. குவஹாத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அசோசியேசனின் பெயரால் பிரசுரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களிலும் பிரிவினையை வலுப்படுத்தும் குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனும், பின்னர் உருவான அஸ்ஸாம் கனபரிஷத்தும் நகரவாசிகளான உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்கள் தங்களது பிரிவினை அரசியல் நடவடிக்கைகளுக்கு பழங்குடியினரையும் பங்காளிகளாக்க நிலப்பிரச்சனையை கிளப்பினர். விவசாயிகளில் பெரும்பாலோர் வங்காள முஸ்லிம்கள் என்பதால், அவர்கள் கைவசமிருந்த நிலங்கள், பழங்குடியினத்தவருக்குரியது என்ற எண்ணத்தை பரப்புரை செய்வது எளிதானது.
அஸ்ஸாம் பள்ளத்தாக்கில் போடோக்களும், திவாக்களும் அத்தகையதொரு தீய பிரச்சாரத்திற்கு எளிதில் பலியானற்கு பாசிசத்தின் இத்திட்டம் காரணமாக இருந்திருக்கலாம். போடோக்கள் மற்றும் திவாக்களின் பிதாமஹ பூஜையும், அதனோடு இணைந்த சடங்குகளையும் இந்துமயமாக்குவதற்கான முயற்சிகளும் அத்தோடு சேர்த்து நடைபெற்றன. எத்தகைய வழிபாட்டு முறைகளையும் இந்து சமயத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் இந்துத்துவ சக்திகள் திறமை வாய்ந்தவர்கள்.
1983ம் ஆண்டு அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் வெளியிட்ட ஒரு துண்டு பிரசுரத்தில் பழங்குடியினர் அழிவின் விளிம்பில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. நிலங்களை இழந்ததே அதற்கு காரணம். ஆனால், பழங்குடியினர் தங்களது நிலங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் கொடிய வட்டிக்கு கடன் கொடுத்த மார்வாடி பணக்காரர்களே என்று ஜி.சி. சர்மா தாக்கூர் சுட்டிகாட்டுகிறார். (G.C Sharma thakur:Land Alienation and indebtedness in the ITDP areas of assam TRI Assam.Guwahati 1986).
4
பல வேளைகளில் வனங்களை ஆக்கிரமித்த போடோக்களை சட்டரீதியாக வெளியேற்றிய அரசு, அங்கெல்லாம் அஸ்ஸாமிகளை குடியமர்த்தியதை அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் மறந்துவிட்டது. முஸ்லிம் விவசாயிகள் அன்னியர்கள் என்ற கருத்தை பரப்புரை செய்ததில் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் பங்கு முக்கியமானது. 1977ம் ஆண்டு வரை அஸ்ஸாம் வம்சா வழியினருக்கும், வங்காள முஸ்லிம்களுக்கும் இடையே நீடித்த நல்லுறவு இத்தோடு தகர்ந்துவிட்டது என்று அமெரிக்க அரசியல் அறிவியலாளர் மைரோன் வெய்னர் கூறுகிறார். (Myron weiner: sons of soil, prinecton,New Jersey 1978)
 வங்காள மொழியை கைவிடத் தயங்கிய இந்து வங்காளி மத்திய தர வர்க்கத்தின் தலையீடு அதற்கு காரணமாக இருக்கலாம். சங்பரிவாரத்தின் வலையில் அவர்கள் எளிதில் சிக்கி விடுவதால் தங்கள் மீதான துவேஷத்தை திசை திருப்ப புதிய பகைமை அவர்களுக்கு உதவியது. உயர்சாதி நிலக்கிழார்களின் குடியானவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இரு சாராருக்கிடையே அதிருப்தி வளர்ந்து வந்தது. மத்திய வர்க்க வங்காளிகள் எண்ணிக்கையில் குறைந்தது அவர்களது கவலையை அதிகரிக்கச் செய்தது.
குடியேற்றக்காரர்களில்
சோட்டா நாக்பூர் பகுதியில் இருந்து வந்த தோட்டத் தொழிலாளர்களும், இந்தி பேசும் நேபாளிகளும் இருந்த போதிலும் அன்னியமயமாக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதானமாக முஸ்லிம் வங்காளிகள் ஆவர். சூழ்நிலை மற்றும் புள்ளி விபரங்களின் பின்புலம் இல்லாத பிரச்சாரமே இனப்படுகொலையை நோக்கி நகர்த்தியது.
வங்காள வம்சாவழியைச் சார்ந்த மக்கள்தொகை நிபுணர் சுசாந்தா கிருஷ்ணதாஸ் 1951ம் ஆண்டிற்கு பிறகு அஸ்ஸாம் பிராந்தியத்தில் மக்கள்தொகை பெருக மூன்று காரணங்களை சுட்டிக்காட்டுகிறார். (Myron weiner: sons of soil, prinecton,New Jersey 1978) 1. இயல்பான வளர்ச்சி 2. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்துக்களின் குடியேற்றம் 3. இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து குடியேற்றம்.  முஸ்லிம்கள் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளார்கள் என்ற கூற்றை புள்ளி விபரங்கள்  மறுப்பதõக தாஸ் உறுதியாக கூறுகிறார்.
மற்றுமொரு வங்காள எழுத்தாளர் அமலேந்து குஹா, அன்னியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் 13 லட்சத்தை தாண்ட மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். (Amalendu Guha:Planter Raj to swaraj:freedom struggle and Electoral politics in Assam,ICHR New Delhi 1977) அஸ்ஸாம் கலாச்சாரத்தோடு கலந்து வாழ்வதில் முன்னணியில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் என்றும் அமலேந்து குஹா தெளிவுபடுத்துகிறார். ஆனால், அஸ்ஸாம் இனவாதிகள், 45 லட்சம் அன்னியர்கள் இருப்பதாக பரப்புரைச் செய்தனர்.
ஆத்திரமூட்டிய தேர்தல்
1983ம் ஆண்டு துவக்கத்தில் அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் அறிவித்தது அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்தது. 1983 ஜனவரியில் போராட்டத்திற்கு தலைமை வகித்த பிரபல குமார் மஹந்தாவும், பிறகு புகானும் கைது செய்யப்பட்டனர். பொதுத் தேர்தலை புறக்கணிக்க அஸ்ஸõம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் அழைப்பு விடுத்தது.
இதனைத்தொடர்ந்து ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. குண்டுவெடிப்புகள், ஆட்கடத்தல், தொடர்ச்சியான சõலைமறியல், கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்ததாக நெல்லி கூட்டுப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்திய திவாரி கமிஷன் பதிவு செய்துள்ளது. கமிஷன் அறிக்கையில் முழு வடிவத்தையும் அரசு இதுவரை வெளியிடவில்லை.
தலைநகரான குவஹாத்தியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நெல்லி உள்ளிட்ட பிரதேசங்கள் விவசாய கிராமங்களாகும். ஆளிவிதையும், நெல்லும் அங்கு முக்கிய விவசாயமாகும். கிராமவாசிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். எனினும் திவா  கோச் பழங்குயினரும், அஸ்ஸாம் இந்துக்களும் கணிசமாக உள்ளனர். இந்துக்களில் பெரும்பாலோர் தலித்களாவர்.
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் வாரச் சந்தையில்
விவசõயப் பொருட்கள் விற்பனையாகும். அருகில் உள்ள மலைக்குன்று பகுதிகளில் இருந்து திவா பழங்குயினர் வாரச் சந்தையில் பொருட்கள் பரிவர்த்தனைக்காக வருவார்கள். நெல்லியில் இருந்து 10 கி.மீ வடக்கே உள்ள முஸ்லிம் வசிப்பிடங்களில் தான் கூட்டுப்படுகொலைகள் நடந்தேறின.
1983 பிப்ரவரி 18 வெள்ளிக்கிழமை மிகவும் திட்டமிட்டே கூட்டுப்படுகொலைகள் நடந்தன. வெளியில் உள்ள ஏஜென்சிகளின் தலையீடு மூலமாக இனப்படுகொலை கட்டமைக்கப்பட்ட முறையில் இராணுவ ரீதியான கட்டுப்பாட்டுடன் நடந்தேறியது. வன்முறையாளர்கள் கிராமங்களை சுற்றி வளைத்து முதலில் வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். கிராமவாசிகள் அபயம் தேட எந்தவொரு கட்டிடமும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கொலைக்காரர்கள் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை கொலை செய்தனர். அம்பு, வில், கோடாரிகள்தாம் முக்கிய ஆயுதங்கள்.
அஸ்ஸõம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனுக்கு கூட்டுப்படுகொலையில் உள்ள பங்கினை குறித்து 1983 ஏப்ரல் 10ம் தேதி அன்றைய அஸ்ஸாம் முதல்வர் ஹிதேஷ்வர் ஸைக்கியா சில ஆவணங்களை வெளியிட்டிருந்தார். சிறுபான்மை சமூகத்தை குறித்த அவர்களின் யதார்த்த நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவதாக அந்த ஆவணங்கள் அமைந்தன. பத்திரிகையாளரான பார்த்தா பானர்ஜி அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் தலைவர் ஜெய்நாத் சர்மாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உடனான நெருக்கமான தொடர்பை குறித்து குறிப்பிட்டுள்ளார்.
 சிவஜாருக்கு அருகே முஸ்லிம்களை தாக்குவதற்கு அஸ்ஸாம் வம்சாவழியினருக்கு தலைமை வகித்தவர் ஜெய்நாத்தின் சகோதரரான தயா சர்மா ஆவார். (இந்தியா டுடே, மார்ச்  31, 1983). தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக முஸ்லிம் கிராமங்களின் வரைபடம் தயாரித்ததன் பின்னணியில் கலவரம் நடத்துவதையே வழக்கமாக கொண்ட சங்பரிவாரத்தின் மூளை செயல்பட்டதை உணரலாம்.
ஆறு மணிநேரத்தில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் சேகர் குப்தா இவ்வாறு விவரிக்கிறார். ஒரு துண்டு துணியால் மார்புகளை மறைத்திருந்த ஒரு பெண்மணி விடாமல் அழுது கொண்டிருந்தார். அவளுடைய மார்பகங்களில் ஆழமான காயங்கள். ஆறுமாதம் கர்ப்பிணியாக இருந்த அவருடைய மறைவான பகுதிகளில் அக்கிரமக்காரர்கள் ஈட்டியை குத்தியிருந்தனர். அவரை கடுமையாக காயப்படுத்திய பிறகு வன்முறையாளர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இரண்டு வயதேயான தனது குழந்தையை அந்த கொடூரர்கள் கண்டந்துண்டமாக வெட்டியதால் அவர் துயரத்தால் துவண்டு போயிருந்தார். நேரடி சாட்சியான ஹனான்: “அவர்கள் குழந்தையின் கால்களை இழுத்து எறிந்தனர். ஏன் அவர்கள் மரணிக்கவில்லை?” என்று கேட்கிறார். (Shekhar Gupta:Assam:A valley Divided ,Vikas New Delhi 1984). கற்களில் பொறித்தது போன்ற முஹம்மது தமீமுத்தீனின் நினைவுகள்: (பிப்ரவரி 18) காலை 8 மணிக்கும் மாலை 3 மணிக்கும் கோடாரிகள், நாட்டு துப்பாக்கிகள், லத்தி, ஈட்டிகள் சகிதமாக அவர்கள் எங்களை சுற்றி வளைத்தார்கள். முதலில் அவர்கள் குடிசைகளுக்கு தீவைத்தார்கள். பின்னர் திட்டமிட்டபடி கொலை செய்யத் துவங்கினர். எனது கிராமமான பசுந்தரியில் 1819 பேர் கொல்லப்பட்டனர். நானும், எனது சகோதரர் நூர்தீனும் ஒரு குளத்தில் ஒளிந்திருந்தோம். எனது குடும்பத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ராபிஆ பேகம் வீட்டு திண்ணையில் 17 மாதமே ஆன குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் போது கொலைக்காரர்கள் வந்தனர். குழந்தைகள் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். கணவர் சாந்த் அலி வீட்டிற்கு பின்னால் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தார். திடீரென குழந்தைகள் ஓடி வந்து பயந்தவாறு அம்மாவை சுற்றி நின்றனர். அவர்கள் முன்னால் கத்தி, பெட்ரோல், திரிசூலம் மற்றும் வாளுடன் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள் திடீரென மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு கும்பல் சாந்த் அலியை நோக்கி ஓடியது. இன்னொரு கும்பல் வீட்டை தீவைத்துக் கொளுத்தியது. மூன்றாவது கும்பல் தாயையும், குழந்தைகளையும் சரமாரியாக வெட்டி நொறுக்கினர். சாந்த் அலியின் முதுகில் திரிசூலத்தை எறிந்து கொலை செய்தனர்.  (Diganta Sharma Nellie,1983 Jorhat 2007)               

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...