இஸ்மாயீல் அலை வழியில் இன்றைய சந்ததிகள்
இறைவனின் மாபெரும் கிருபையால் 2021 ம் வருடத்தின்
துல் ஹஜ் மாதத்தில் இருக்கிறோம்,
துல் ஹஜ் என்றாலே நம்மின் நினைவுக்கு வருவது ஹஜ் மற்றும் குர்பானி
ஆகிய இரண்டும் தான். அந்த இரண்டும் இப்ராஹிம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை அவர்களின்
வாழ்வில் நடந்தவையாகும்.
இன்றைய காலகட்டத்தில் அதுவும் கொரோனா காலத்தில் நமது பிள்ளைகளை
வளர்ப்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது, அந்த சவாலை
முறியடியிக்கவேண்டும் என்றால் எப்படி இப்ராஹிம் அலை அவர்கள் இஸ்மாயீல் அலை அவர்களை
வளர்த்தார்களோ அதேபோல நாமும் நமது பிள்ளைகளை வளர்க்கவேண்டும்.
இப்ராஹீம் அலை அவர்கள் எப்படி இஸ்மாயீல் அலை அவர்களை வளர்த்தார்கள் என்று கீழ்காணும் நான்கு தலைப்பில் விளக்கலாம்.
1 இறை பொருத்தம் பெற்றவர்களாக நமது சந்ததிகளை உருவாக்குவது.
2. சந்ததிகளை இறை இல்லத்தோடு இணைப்பது.
3. பிள்ளைகளை பொறுமையார்களாக உருவாக்குவது.
4. நற்பண்புகளை நமது பிள்ளைகளிடம் விதைப்பது.
1. இறை பொருத்தம் பெற்றவர்களாக நமது சந்ததிகளை உருவாக்குவது.
இஸ்மாயீல் அலை அவர்கள் சிறு வயதில் இருந்தே இறைவனின் பொருத்தத்தை
பெறவேண்டும் என்ற சிந்தனையிலேயே வளர்ந்தார்கள். நாம் யாரை திருப்திப்படுத்தவேண்டுமே
இல்லையோ இறைவனை திருப்திப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு பிள்ளைகளை வளர்க்கவேண்டும், அப்படிதான்
இப்ராஹிம் அலை அவர்கள் இஸ்மாயீல் அலை அவர்களை வளர்த்தார்கள்.
இறைபொருத்தத்தை நாடும் தலைமுறையால மட்டுமே பெற்றோர்களை பொருந்திக்கொள்ளமுடியும்.
இந்த கருத்தை அல்லாஹ் 46:15 ல் குறிப்பிடுகிறான்.
46:15 وَوَصَّيْنَا
الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا
وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا ؕ حَتّٰٓى
اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ
اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى
وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ
ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு
நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே
அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச்
சுமப்பதும்; அவனுக்குப்
பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்:
“இறைவனே! நீ என் மீதும், என்
பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக)
நன்றி செலுத்தவும், உன்னுடைய
திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள்
பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக
(நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே
திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில்
நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று
கூறுவான்.
இந்த இறைவசனம், தாய்மையின் மகத்துவத்தையும் பெற்றோர்களின் கண்ணியத்தையும், பெற்றோர்களுக்காக எப்படி நாம் பிரார்திக்கவேண்டும், பெற்றோர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விளக்குகிறது.
அல்லாஹ் அல்லாஹ் என்ற நினைவை நித்தம் ஊட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அல்லாஹ்
தான் எல்லாம், என் வாழ்வின்
எல்லா நிலைகளையும் நிர்ணயிப்பது அல்லாஹ் மட்டுமே என்பதால் நம் சந்ததிகளை இன்பம் காணவைக்கவேண்டும்.
அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற தன் உயிரையும் அர்ப்பணிக்க தயாரானார்கள், இப்ராஹிம் அலை சொன்னவுடனேயே மறுபேச்சு பேசாமல் தன்னை அறுத்துப்பலியிட ஒப்புக்கொண்டார்கள். இப்படியாக நமது பிள்ளைகளை நாம்தயார் செய்யவேண்டும்.
2:207 وَمِنَ النَّاسِ مَنْ
يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِؕ وَ اللّٰهُ رَءُوْفٌ ۢ
بِالْعِبَادِ
2:207. இன்னும் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்)
நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
2. சந்ததிகளை இறை இல்லத்தோடு இணைப்பது.
இப்ராஹிம் அலை இறை இல்லமான காபாவை கட்டும்போது இஸ்மாயீல் அலை அவர்கள் உதவி செய்தார்கள். உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் அந்தப்பணியை இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.
இஸ்மாயில் அலை அவர்களிடம் இருந்த இறை இல்லத்தின் மீதான காதலை இன்றைய இஸ்லாமிய தலைமுறையிடம் உருவாக்கவேண்டும்
பள்ளிவாசல் என்பது தொழுவதற்கான இடமட்டுமல்ல; அது மனித வாழ்விற்க்கான வழிகாட்டி மையம்; மார்க்கத்தின் அனைத்து வழித்தடங்களை அங்கிருந்துதான் பிறக்கின்றன, அடியார்களின் அனைத்து அமல்களுக்கான அஸ்திவாரம் அங்கிருந்துதான் கற்ப்பிக்கப்படுகிறது.
நபி ஸல் அவர்கள் காலத்தில் பள்ளிவாசல்கள் அடியார்களுடைய வாழ்வியலை போதிக்கும் பாடசாலையாக திகழ்ந்தன.
இறைவனின் கலிமாவை மேலோங்கச்செய்யவும், அல்லாஹ்வின் அழகிய பெயர்களை உயர்த்தி பிடிக்கவும் பள்ளிவாசல்கள் தான் வழி ஏற்படுத்துகின்றன.
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன்.
3. பிள்ளைகளை பொறுமையார்களாக உருவாக்குவது.
இஸ்மாயில் அலை அவர்களை இப்ராஹிம் அலை அவர்கள் அறுத்து பலியிடவேண்டும் என்று சொன்னபோது பொறுமையுடன் இஸ்மாயில் அலை அவர்கள் ஏற்றுக்கொண்டது போல, நமது பிள்ளைகள் இறை பொருத்தத்திற்கு வேண்டி பொறுமை காக்கவேண்டும்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். இன்பமான நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல துன்பமான நேரத்தில் பொறுமையை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.
4. நற்பண்புகளை நமது பிள்ளைகளிடம் விதைப்பது.
அன்றாடம் பிள்ளைகளுக்கு தேவையான நற்பண்புகளை போதிக்கவேண்டும்,
நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம் என்று சொல்லி வளர்க்கவேண்டும்,
இன்றைய நட்புகள் பெரும் இழப்புகளை ஏற்படுத்திடுவதை தினமும் செய்திகளில் காண்கிறோம், கூட நட்பு கேடாய் முடியும் என்று சொல்லி வளர்க்கவேணும், பிள்ளைகளின் நண்பர்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். பிள்ளைகளிடம் தினமும் அவர்களை பற்றியும் அவர்களின் நண்பர்கள் பற்றியும் பேசி தவறான நட்புகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
இஸ்மாயில் நபி அவர்களை இப்ராஹிம் அலை அவர்கள் வளர்த்தது போல நாமும் நம் பிள்ளைகளை வளர்க்க இறைவன் உதவி புரிவானாக.
இறுதியாக இஸ்மாயில் அலை பற்றி சில செய்திகள்.
1. 130 வருடங்கள் வாழ்ந்தார்கள்
2. அரபு குதிரைகளை வீட்டு பிராணியாக அவர்கள் தான் முதன் முதலில் வளர்க்க ஆரம்பித்தார்கள்
3. நன்கு அம்பு எறியக்கூடியர்களாக இருந்தார்கள்
4. நற்பண்புகள், இறைவனை நேசித்தல், கட்டுப்படுத்தல் போன்ற சிறப்பான குணம் உள்ளவர்களாக வாழ்ந்தார்கள்.
No comments:
Post a Comment