எல்லா தீர்ப்பும் நீதியல்ல என்பதற்கு கீழவெண்மணி படுகொலைகள் சம்பவமும் பாபரி மஸ்ஜிதின் தீர்ப்பு போல ஒரு எடுத்துக்காட்டு
கூலியை அரைபடியாக உயர்த்திகேட்டு போராடியமக்களை 1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகளும் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.
கூலியை முறைப்படியாக உயர்த்திகேட்டதற்கு தண்டைனையாக நடத்தப்பட்ட படுகொலையை கீழவெண்மணி சம்பவம், சமூகநீதியை பேசிய திமுக அண்ணாதுரையின் ஆட்சியில் நடந்த அவலம்.
இந்தக் கோர சம்பவத்தை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.ராமமூர்த்தி தலைமையில் வெண்மணி கிராமத்தினுள் நுழைந்தனர். வெண்மணியில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரிகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின்மீது குறைந்தபட்ச இரக்கம்கூடக் காட்டவில்லை. கம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி வந்தனர்.
மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் வெண்மணி படுகொலைகளுக்கு எதிராக அன்றைய முதலமைச்சர் அண்ணா, கணபதியா பிள்ளை தலைமையில் தீர்ப்பாயம் அமைத்தார். ஆனாலும், அடிப்படையான ஆதாரமான உண்மை வெளிவரவில்லை. வெண்மணி சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பவர்களின் புறத்தில் இருந்த நந்தன் அவருடைய கூட்டாளிகளின் உதவியோடு 14.12.1980 தேதி கோபாலகிருஷ்ண நாயுடு இரிஞ்சூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்டார். சமூகநீதி நிலைநாட்டப்பட்டது, இதேபோல் பாபரி மஸ்ஜிதை திரும்பவும் கட்டி நீதியை நிலைநாட்டுவோம்.
No comments:
Post a Comment