Sunday, December 19, 2021

RSS ன் வெற்றிக்கு காரணம்.

ஆர் எஸ் எஸ் ன் பல சாதனைகளுக்கு காரணம் அவர்களின் தலைமை. முதல் தலைவர் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார், மற்றவர்கள் எந்த கேள்வியும் கேட்க்காமல் ஏற்றுக்கொள்வார்கள். 1925 ல் ஆரம்பித்த ஆர் எஸ் எஸ்க்கு இதுவரை 6 தலைவர்களே உள்ளனர்.

1.      K. B. Hedgewar 1925–1930, 

(Acting  Laxman Vasudev Paranjape   1930–1931 - ஹெட்கேவார் சிறைக்கு சென்றபோது தற்காலிக தலைவராக ஹெட்கேவரால் நியமிக்கப்பட்டவர்.) 

2. M. S. Golwalkar 1940–1973,

3. Madhukar Dattatraya Deoras 1973–1994,

4. Rajendra Singh 1994–2000,

5. K. S. Sudarshan 2000–2009,

6. Mohan Bhagwat 21 March 2009– till date,

 

இந்த முறையில் மிக முக்கியமான விடயம் தலைவர் சொன்னால் வேறு வார்த்தை இல்லை. கேட்டுவிட்டு செயல்படுவது மட்டுமே தொண்டனின் வேலை. விவாதம் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

ஆர் எஸ் எஸ் ன் அதிகார படிக்கட்டில் அடுத்துவருவது பிரச்சாரக். இவரை அதிகாரி என்று அழைக்கக்கூடாதுஅப்படி அழைப்பது தவறானது. இவரை உழைப்பாளி என்று அழைக்கவேண்டும்இவர் தேசத்துக்காக உழைப்பவர். இவருக்கு ஊதியம் கிடையாதுதேசத்துக்காக உழைப்பவருக்கு எதற்கு ஊதியம்?  சாப்பிட உடுக்க போக்குவரத்துக்கு என்ற எல்லா செலவுகளையும் சங்கமே பார்த்துக்கொள்ளும்.

 

இவர் ஷாகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார், அர்ப்பணிப்புதேசபக்திதன்னமலற்ற உழைப்புபடிப்புஆர்வங்கள்அக்கறைகள்ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்ப பொறுப்பு இல்லாத சந்நியாசியாக 25 வயதுக்கு குறைந்தவராக பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார். எப்பொழுது எங்கே பயணிக்க சொன்னாலும் பயணம் செய்ய ர்வமுள்ளவராக இருப்பார்.

 

1939ல் ஹெட்கேவார் தாதாராவ் பரமார்த் என்பவரை சென்னைக்கு பிரசாகராக அனுப்பினார். ராயப்பேட்டையில் லார்ட் கோவிந்ததாஸ் என்பவற்றின் பங்களாவில் ஆரிய சமாஜ் கூட்டம் நடைபெற்றது. அதில் சுருக்கமாக வெளிப்படையாக பேசினார். நான் ஆர் எஸ் எஸ் ஐ தமிழகத்தில் நிறுவ வந்துள்ளேன்விருப்பம் உள்ளவர்கள் என்னோடு இணையலாம். சிலர் இணைந்தனர்அவர்களை வைத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள மைதானத்தில் ஷாகா நடத்தப்பட்டது. சிறிய கைத்தடியோடு நடந்த ஷாகாவை பார்த்து பரமார்த் ஐ கைது செய்தனர். அவருக்காக வழக்காடிய வக்கீல் ராஜகோபாலாச்சாரியார் பின்னாளில்  ஆர் எஸ் எஸ் இணைந்தது மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான பி மற்றும் சி மில்ஊழியர்களை ஆர் எஸ் எஸ் ன் பரமார்த் சேர்த்தார்.

 

மில் ஊழியர்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாதுமஹாராஷ்டிராவை சேர்ந்த பரமார்த்துக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் இருந்தும் அவர்களை ஆர் எஸ் எஸ் சேர்த்தது பரமார்த் ன் சாதனை.

 

காரணம் என் மொழி அவர்களுக்கு புரியாது ஆனால் என் உணர்வுகள் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பரமார்த் சொன்னார்.

 

பரமார்த் தமிழகத்தை விட்டு சென்றபோது ஆயிரக்கணக்கான பி மட்டும் சி மில் தொழிலாளிகள் கண்ணீர்விட்டு  வழியனுப்பிய வரலாறை தமிழ ஆர் எஸ் எஸ் காரர்கள் இன்றும் சொல்வார்கள்.


உணர்வு ரீதியாக மக்களை மடையர்கள் ஆக்குவதில் வல்லவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...