கோல்வாக்கர் ஒருமுறை சங்கம் பரவும் பெரிய அளவில் பரவும் என்றாவது ஒருநாள் இந்தியாவில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கைக்கும் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் வித்யாசம் இல்லாமல் போகும் என்பது என் நம்பிக்கை என்று சொன்னார்.
அதற்க்கான முயற்சிகளின் தன் ரெண்டாவது பிறப்பின் போது ஆர் எஸ் எஸ் ஆரம்பித்தது. ஆம் ஆர் எஸ் எஸ் ஐ தடைசெய்த போது ஆர் எஸ் ன் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தவிர வேறு யாரும் அதன் தடையை எதிர்த்து பேசவில்லை. மேலும் காந்தி படுகொலையை நடத்தியவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழ ஊன்றிப்போனது. இதன்னை நன்கு கவனித்த ஆர் எஸ் எஸ் தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுபடுத்த நினைத்தது.
அதற்க்கான அவசியம் மிகவும் அதிகமாக இருந்தது. காரணம் கம்யூனிஸ்டுகள் அந்த காலகட்டத்தில் காங்கிரசை விட மக்கள் பிரச்சனைகளை பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக வங்கதேச கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகள் அறிவு தளத்திலும் மாணவர்களிடையும் அதிகம் பிரபல்யம் ஆகினார்கள். ஆந்திரத்தில் நிலையுடைமையாளர்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி விவசாயிகளிடம் கொடுத்தனர். தொழில்சங்ககளிலும் நாடாளுமன்றத்திலும் ஊடுருவி மக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தனர். இந்த நேரத்தில் செயல்படவில்லை என்றால் மக்களிடம் இருந்து நாம் விலகி சென்றுவிடுவோம் என்று ஆர் எஸ் எஸ் நினைத்தது. அதற்க்கான வேலையை தொடங்கியது.
1948 ஜூலையில் தொடக்கி அடுத்த ஆண்டால் 1949 ஜூலை இல் முறைப்படி பதிவுசெய்யப்பட்டு உலகுக்கு அறிமுகமான இயக்கம் தான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP). இந்த வகையில் ஆர் எஸ் எஸ் முதல் குழந்தை என்று இதை சொல்லலாம். அறிவு தளத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து தொடங்கிய அமைப்பு என்று சொல்லப்பட்டது. கல்வித்துறையில் மகத்தான மறுமலர்ச்சியை அவர்களின் இலக்கு.
பல்கலைக்கழக அளவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சாதி மத மொழி வேறுபாடு இன்றி கல்லூரி பள்ளி என்று தன் எல்லையை விரிவுபடுத்தியது. குறிப்பாக குஜராத் மற்றும் பீகாரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கெல்லாம் சாதி அரசியல் புகுந்ததோ அங்கெல்லாம் ABVP புகுந்தது.
மாணவர்களின் தலைவர்கள் பெரும்பாலும் ஆர் எஸ் எஸ் ஷாகாவில் பயிற்சிபெற்றவர்கள் ஆக இருந்தார்கள். இவர்கள் அதிகப்படியான மாணவர்களை ஷாகாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். குறிப்பாக மும்பையை சேந்த யஸ்வந்த்ரோ கேல்கர் வளர்ச்சி அலுவலர் ஆக பொறுப்பேற்றவுடன் ABVP அமைப்பின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்தது.
இன்று குறைந்த பட்சம் ஒன்னரை கோடி உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் அங்கத்தினராக உள்ளனர். இந்த அளவுக்கு உறுப்பினர்களை கொண்ட அமைப்பு வேறு எதுவும் இந்தியாவில் இல்லை. ஆர் எஸ் எஸ் ஆரம்பித்தபோதே அவர்களின் நோக்கம் பத்து பன்னிரண்டு வயதினரை குறிவைத்துதான் வளர்ந்தது. சிறிய வயதில் விதைப்பது பசுமரத்தாணி போல் மனதில் பதியும் என்பதால் சிறு வயது குழந்தைகளுக்கு போதையை ஊட்டி வளர்த்தார்.
புதிய கல்வி சாலைகளை திறப்பது அடுத்த திட்டம். இது கிருஸ்துவ மிஷினரிகளுக்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மராட்டிய தலைவர் நானாஜி தேஷ்முக் என்பவரை உத்திரபிரதேச கோரக்பூருக்கு அனுப்பினார்கள். அங்கே சரஸ்வதி சிசு மந்திர் பிறந்தது. உத்திரபிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் நாடெங்கும் பரவியது. கட்டாய ஆரம்பக்கல்வியை ஊக்குவித்த இந்த நிறுவனம், ஏழை மாணவர்களை இலக்காக கொண்டு செயல்பட்டது. கிருத்துவ மிஷினரிக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு ஹிந்து ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை அளித்தது. 1977 ல் சிசு மந்திர், வித்யா பாரதி என்ற ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கூடமாக உருமாறியது. இந்தியா முழுவதும் சுமார் 20,000 பள்ளிகள், ஒரு லட்சம் ஆசிரியர்கள், 25 லட்சம் மாணவர்கள் இதில் உள்ளனர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களிடம் ஆர் எஸ் எஸ் ஐ கொண்டு சேர்க்க இந்த பள்ளிக்கூடங்கள் உதவின.
இவ்வாறு தடைக்குப்பின் தன் ஆளுகையை ஆர் எஸ் எஸ் விரிவாக்கியது.
No comments:
Post a Comment