Friday, August 6, 2021

பாபரி மஸ்ஜிதுக்கு ஆதரவாக செயல்பட்ட அக்ஷ்ய் பிரம்மச்சாரி

 ராஜாஜியின் சக்கவர்த்தியின் மகன் என்ற புத்தகத்தின் படி ராமன் தசரதன் என்ற அரசனின் மகன் ஆவார். ராமனின் கதைகளை பலர் எழுதியுள்ளனர். ராமாயணம் ஏறத்தாழ 300 வகைகளை கொண்டது. அதில் ஒன்றுதான் வாலமீகி ராமாயணம். ராமனின் மனைவி சீதாவை தங்கை என்று சொல்லும் ராமாயணமும் உண்டு. முடிவாக ராமாயணம் என்பது ஒரு கற்பனை காவியமே. அந்த கற்பனை கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து மக்களை மடையர்களாக்க பலர் முயன்றனர், அதன் நீட்சிதான் பிஜேபி. கற்பனை நாயகனுக்கு கோவில் கட்ட தொடக்கி ஒருவருடம் ஆகிவிட்டது. 

இந்த நேரத்தில் 400 வருட பாரம்பரிய பாபரி மஸ்ஜிதை காப்பாற்ற பல முறை முயன்ற அக்ஷ்ய் பிரம்மச்சாரி அவர்களை நினைவு கூர்வது நமது கடமை ஆகும். இவர் காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் பிஜேபி யினருக்கு பிடிக்காது. பிஜேபி க்கு பிடிக்காத இரண்டு விடயம் ஒன்று உண்மை இரண்டாவது காங்கிரஸ். 

பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு ! என்ற புத்தகத்தில் அக்ஷ்ய் பிரம்மச்சாரி பற்றி கிடைத்த சில விடயங்கள் கீழே 



  • பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த ராம சபூத்ராவில் கோயில் கட்ட இந்து மதவெறியர்கள் முயன்ற போது அவர்களுக்கு எதிராக பைசாபாத் மாவட்ட அதிகாரியான கே.கே. நாயரிடம் புகார் மனு அளித்தார். அடுத்த நாள் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த வாசகங்களை சொல்லி சொல்லி அக்ஷய் பிரம்மச்சாரியை  உதைத்துள்ளனர், இந்து மகா சபையினர். பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த கல்லறை தோட்டத்தை இந்து மத வெறியர்கள் சிதைத்த போதும் உடனடியாக அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு போனார், அக்ஷய் பிரம்மச்சாரி. அதன் பிறகே மசூதியை காவல் காக்க அரசு இரு காவலர்களை அனுப்பியது.


  • மசூதிக்குள் சிலையை வைத்த பிறகு கே.கே.நாயர் அதற்கு உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தி உ.பியின் உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு விடாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அயோத்தியில் இருந்தே துரத்தப்பட்டார் பிரம்மச்சாரி. என்றாலும் இந்து மகா சபையின் பல்வேறு நடவடிக்கைகளை தன்னந்தனியாக எதிர்த்தார். இறுதியில், மசூதியை கோயிலாக மாற்றும் முயற்சிக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

  • அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார். அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அக்ஷய் பிரம்மச்சாரி அவர்கள் பல இன்னல்களை சந்தித்தாலும் நீதிக்காக பாடுபட்டார்கள், நாமும் நீதிக்காக போராட தயாராவோம். 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...