Monday, August 2, 2021

ஸ்டான்ஸ்வாமி அவர்களின் போராட்ட வாழ்க்கை

 ஸ்டான்ஸ்வாமி

திருச்சி லால்குடி அருகே உள்ள விறகாலுர் (பூவாளூர்) கிராமத்தை சேர்ந்த லூர்துசாமி கிப்பேரியம்மாள் என்ற தம்பதிக்கு மூன்று ஆண் மூன்று பெண் குழைந்தைகளில் 26-April-1937 ல் ஐந்தாவதாக பிறந்தவர் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி என்கிற ஸ்டான்ஸ்வாமி. இவர் வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஆண்டு பாதிரியாயராகவும் துறவியாகவும் ஆனார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் BA  வரலாறு படித்தார்.பின்பு பாதிரியாருக்கான படிப்பை 14 வருடங்கள் படித்தார்.. பின்பு 15 வருடங்கள் திண்டுக்கல், மணிலா போன்ற இடங்களில் சேவையாற்றினார். 

பழங்குடியின பாதுகாப்பு, நல்வாழ்வு மேம்பாட்டுக்காக பழங்குடியினர் ஆலோசனைக்குழு அமைக்கவேண்டும் என குரல் கொடுத்தார். 

பழங்குடியினர் கிராம பஞ்சாயத்து விரிவாக்கத்திட்டம் (பெசா) 1996 கிடப்பில் போடப்பட்டது ஏன்? என்று கேட்டார்.

மக்களுக்காக போராடியதன் விளைவாக பலமுறை சிறை சென்றார். தலோஜா மத்திய சிறையில் இருக்கும் போது கைதிகளின் அவல நிலையை பற்றி இயேசு சபை சகாவுக்கு கடிதம் எழுதினார்.   

பல அப்பாவிகளுக்கு ஏன் தங்கள் சிறையில் இருக்கிறோம் என்று தெரியாமலே சிறையில் உள்ளனர் என்று அறிக்கை வெளியிட்டார். 

அவரின் அண்ணன் இருதயசாமி அவரை பற்றி கூறுகையில் வருடத்திற்கு 2-3  நாட்கள் வீட்டுக்கு வருவான், அதும் எதுவும் பிரச்னை என்றால் திருச்சி பக்கம் வரும்போது வீட்டுக்கு வருவான். அவன் சமூகநீதிக்காக பாடுபட்டது சந்தோசமான விடயமே என்கிறார்.

ஏன் கைது செய்யப்பட்டார்?

பீமா கோரேகான் வன்முறை

மஹாராஷ்டிரா புனேயில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பீமா கோரேகான். 200 வருடத்துக்கு முன் உயர்சாதி என்று அழைக்கப்பட்ட பேஷிவாவின் ஆட்சி மராட்டியத்தில் நடந்தது, அந்த நேரத்தில் பிரிட்டிஷாரின் படையில் தாழ்ந்த ஜாதி என்ற கருதப்பட்ட மஹர் இன மக்கள் இருந்தனர். 

மஹர் இன மக்கள் பேஷிவாவின் ஆட்சியில் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர். 

ஊருக்குள் நுழைந்தால் இடுப்பில் விளக்குமாறு கட்டிக்கொள்ளவேண்டும், பொதுநீர்நிலையில் நீர் எடுக்கக்கூடாது போன்ற தீண்டாமை வன்கொடுமைகளை அனுபவித்தனர். அதனால் மஹர் இனத்தவர்கள் பேஷுவாக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் படையில் சேர்ந்தனர். பிரிட்டிஷாருக்கு பேஷுவாக்களுக்கும் இடையே நடந்த போரில் பிரிட்டிஷார் வெற்றிபெற்றனர். 01-01-1818 அன்று போர் முடிவுக்கு வந்தது. அந்த போரின் நினைவாக மஹர் இனமக்கள் ஒருதூனை நிறுவி ஒவ்வொரு வருடமும் அந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 




அதன் தொடர்ச்சியாக 2018 ல் ஜனவரி 1 ந்தேதி யும் கொண்டாடினார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வெற்றியை கொண்டாடினார்கள். அதை பொறுத்துக்கொள்ளமுடியாத உயர்சாதி என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் தாக்குதலை நடத்தினார்கள். வன்முறை வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். வன்முறையை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 31-Dec-2017 அன்று ஷானிவர் வாடா என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் ஆனந்த் தெல்டும்படே பேசிய பேச்சின் காரணமாகத்தான் இந்த வன்முறை நடந்தது என்று FIR பதியப்பட்டது. அந்த வழக்கில் ஆனந்த் தெல்டும்படே அவருடன் ஸ்டாண்சாமியும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டர். 

எல்கர் பரிஷத் என்ற மாவோயிஸ்டுடன் கூடி மோடியை கொல்ல சதி செய்தார் என்று ஸ்டான்சாமி திரும்பவும் 08-Oct-2020 அன்று NIA ஆல் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட அவர்கள் பார்க்கின்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். (மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நடுக்குவாதம் என்ற நோய்). நோயுக்காக சிகிச்சை எடுக்க பிணை மறுக்கப்பட்டது. நடுக்குவாதம் காரணமாக கைகள் ஆடிக்கொண்டே இருக்கும். சரியாக நீரை கூட அருந்தமுடியாத காரணத்தால் சிப்பர் வேண்டும் என்று NIA  இடம் கேட்டார். அதை கொடுக்க 20  நாட்கள் NIA அவகாசம் கேட்டது வக்கிரத்தின் உச்சம். பலமுறை சிறையில் கீழே விழுந்துவிட்டார். கொரோனாவாலும் பாதிக்கப்பட்டபிறகும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. 84  வயதான ஸ்தான்சாமி விசாரணை என்றபெயரில் NIA  ஆல் துன்புறுத்தப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 05 -ஜூலை-2021  அன்று இறந்துபோனார். அவரின் இறப்பிற்கு காரணமான NIA மற்றும் சிறையின் அதிகாரி குர்லேகர் ஆகியோர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர். 

பாசிசம் தன்னை எதிர்ப்பவர்களை மனிதநேயம் இல்லாமல் இடையூறு செய்யும் என்பதற்கு ஸ்டான்சாமியின் கொலை சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

போராட்டத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டான ஸ்டான்சாமி அவர்களின் வாழ்க்கையில் நமக்கும் பல படிப்பினைகள் உள்ளன. 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...